சனி

கினி கோழி

கினி கோழி





பெரிதும் நகர்ந்து செல்லக்கூடிய பறவைகள்
சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு ஏற்றது
காதம்பரி, சிதம்பரி மற்றும் ஸ்வேதாம்பரி என்ற 3 இரகங்கள் உள்ளன.
சிறப்பு குணங்கள்
கடினமாக பறவை
அனைத்து வேளாண்கால நிலைக்கும் ஏற்றது
குஞ்சுகளைத் தாக்கக்கூடிய அனைத்து வகை நோய்களுக்கும் எதிர்ப்புத் திறன் கொண்டவை
பெரிய செலவிலான பண்ணைக்கு அவசியமில்லை. நன்குமேயும் திறன் கொண்டவை
கோழித் தீவனத்திற்கு பயன்படாத அனைத்து வகையான தீவனங்களையும் கினிகோழிக்குப் பயன்படுத்தலாம்
பூசணம் மற்றும் அப்லோடாக்சின் நச்சை தாங்கவல்லது
கடினமான முட்டை ஓடு, முட்டை உடைவதைக் குறைப்பதோடு, நீண்ட நாள் வைத்துக் கொள்ளவும் உதவுகிறது
இறைச்சியில் அதிக அளவு வைட்டமின் சத்தும், குறைவான கொழுப்புச் சத்தும் உள்ளது.
உற்பத்தி பண்புகள்
8 வாரத்தில் எடை  :  500 -  500 கிராம்
12 வாரத்தில் எடை  :   900 -  1000 கிராம்
முதல் முட்டையிடும் வயது  :  230 - 250 நாட்கள்
சராசரி எடை :   38 -  40 கிராம்
முட்டை உற்பத்தி (ஒரு சுழற்சி மார்ச் - செப்டம்பர்) 100 - 120 முட்டைகள்
கருவுற்றல் 70 -  75%
கருவுற்ற முட்டைகளின் பொரிப்புத் திறன் 70 -  80%

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக