வெள்ளி

ஆலுவேரா ஜெல் எடுத்து கொள்ளுங்கள். உங்க வாழ்நாளில் பார்லர் செல்ல வேண்டிய அவசியமே இருக்காது.

அழகாக இருக்க வேண்டும் என நினைத்தால் அதற்காக பார்லர் தான் செல்ல வேண்டும் என்ற அவசியம் கிடையாது. பார்லர் சென்று அழகு படுத்திக் கொள்ள அனைவராலும் முடியாது. அதுமட்டுமின்றி பார்லர் சென்று அழகுப்படுத்திக் கொண்டாலும் ஒரு வாரம் பத்து நாள் கழித்து மறுபடியும் அதை செய்ய வேண்டும். அதற்கு அதிக அளவு பணமும் செலவழிக்க வேண்டும். இந்த ஒரு கிரீம் உங்களிடம் இருந்தால் போதும், எப்பொழுதுமே உங்கள் முகம் புது பொலிவுடன் ஜொலித்துக் கொண்டே இருக்கும். வாங்க அந்த கிரீம் எப்படி தயார் செய்வது என்று பார்க்கலாம்.

 முகத்தை அழகாகும் கிரீம் தயாரிக்கும் முறை: இந்த கிரீம் தயாரிக்க ஆலுவேரா ஜெல் எடுத்து கொள்ளுங்கள். இதற்கு கடைகளில் கிடைக்கும் ஆலுவேரா ஜெல்லியை பயன்படுத்திக் கொள்ளலாம். இதை தயாரிக்க வெள்ளை நிறத்தில் இருக்கும் ஜெல்லை தான் பயன்படுத்த வேண்டும். நிறம் சேர்த்த ஜெல்லை பயன்படுத்தக் கூடாது. ஆலுவேரா ஜெல் ஒரு ஸ்பூன் எடுத்துக் கொள்ளுங்கள். இத்துடன் அரை டீஸ்பூன் கிளிசரின் எடுத்து கொள்ளுங்கள். இது முகத்தில் உள்ள அழுக்கை எல்லாம் நீக்கி முகம் வெண்மையாக்க பயன் படும். இத்துடன் அரை டீஸ்பூன் பாதாம் ஆயில் அல்லது ஆலிவ் ஆயில் இது இரண்டும் இல்லை என்றால் சுத்தமான தேங்காய் எண்ணெய் பயன்படுத்திக் கொள்ளலாம். இதற்கு பாதாம் எண்ணெய், ஆலிவ் எண்ணெயை சேர்க்கும் போது முகத்திற்கு உடனடியாக நல்ல நிறத்தை கொடுக்கும். 

 இவையெல்லாம் கலந்த பிறகு அரை டீஸ்பூன் ரோஸ் வாட்டர் சேர்த்து, ஸ்பூன் வைத்து நன்றாக கலந்து விடுங்கள். இது ஒரு கிரீம் பதத்திற்கு வந்து விடும். இதை அப்படியே கைப்படாமல் ஒரு ஏர்டைன் கண்டைனரில் போட்டு ஃப்ரிட்ஜில் ஸ்டோர் செய்து வைத்துக் கொள்ளுங்கள். இதை வெளியிலே வைத்தால் கூட பத்து நாள் வரை கெட்டுப் போகாமல் இருக்கும். இந்த கிரீமை தினமும் இரவில் உறங்க செல்லும் உன் முகத்தை அலம்பிய பிறகு சுத்தமாக துடைத்த பிறகு, இதை முகத்தில் தேய்த்து விட்டு அப்படியே உறங்கி விடுங்கள். மசாஜ் ஏதும் செய்து கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. மறுநாள் காலையில் முகத்தை சுத்தமான தண்ணீரால் அலம்பி பாருங்கள். முகம் அவ்வளவு பிரகாசமாகவும், வெண்மையாகவும் இருக்கும். இந்த ஒரு கிரீமை நீங்கள் தயார் செய்து வைத்துக் கொண்டு தினமும் இரவு படுக்கும் முன் இதை பயன்படுத்தி வாருங்கள்.