வியாழன்

வேப்பங்குச்சி, கரி தூள், மாட்டு வரட்டி மூலம் சம்பாதிக்கும் தொழில்

எந்த தொழில் செய்யலாம் உங்களிடம் நிலம் இல்லை, பெரிய முதலீடு இல்லை என்றாலும் கவலை விடுங்கள். கிராமத்தில் அங்கங்கு என்னென்ன பொருட்கள் கேட்பாரற்று இருக்கும் என ஆராயுங்கள். அவைகளில் எந்தெந்த பொருட்கள் பயன்படுத்தக்கூடியதாக இருக்கிறது என்றும் பட்டியலிடுங்கள். நான் தேடிய வரைக்கும் மாட்டு சாணம், தேங்காய் சிரட்டைகள், வேப்பங்குசிகள், வேப்ப இலைகள் மற்றும் சில இலைகள், ஒரு சில மரக்கட்டை இது போன்ற இன்னும் சில. ஒரு சில பொருட்களில் உங்களின் வேலைப்பாட்டை காட்டுவதன் மூலம் கொளுத்த லாபம் அடையலாம். நான் அறிந்த சில வழிமுறைகளை எடுத்துரைக்கிறேன். முருங்கை இலை பௌடர் முருங்கை மரங்களை கண்டிருப்பீர்கள். கிராமங்களில் அவற்றின் இலைகளை அல்லது இலை பொடிகளை யாரும் கடைகளில் சென்று வாங்க மாட்டார்கள். ஏனென்றால் அவைகள் எளிதாக கிடப்பதால். ஆனால் நகரங்களிலோ அல்லது வெளிநாடுகளிலோ நிலைமையே வேறு. இவைகள் எளிதில் கிடைக்காது. இங்குதான் உங்களின் அறிவை பயன்படுத்த வேண்டும். முருங்கை இலையில் மதிப்பு கூட்டு செய்தால் நல்ல லாபத்திற்கு விற்கலாம். அதாவது முருங்கை இலையை அலசி காயவைத்து பொடியாக்கி பொட்டலம் போட்டு விற்கலாம். அதற்கென்ற ஒரு சிறு விலையை நிர்ணயம் செய்து விற்கலாம். இதற்கான மூலப்பொருளுக்கு நீங்கள் பெரிதாக எந்த வித செலவும் செய்ய தேவையில்லை. நன்றாக விற்றால் லாபம் மட்டுமே. இது முருங்கை இலைக்கு மட்டும் உரியதல்ல. மேலும் உங்களுக்கு கிடைக்கும் மூலிகை சார்ந்த, உண்பதற்கு தகுந்த இலைகளை பொடி செய்து விற்கலாம். மாட்டு வரட்டி மாட்டு சாணம் கிராமத்தில் எளிதில் தென்படும் ஒரு பொருள். மேலும் மாட்டு சாணத்தை மொத்தமாக பேசியும் கிராமத்தில் யாரிடமிருந்தும் வாங்கி வரலாம். இதில் வறட்டியை செய்து விற்கலாம். அட என்னடா இது. இதை யார் வாங்குவார்கள் என்றுதானே நினைகிறீர்கள். “buy cow dung” என்று கூகிள் சித்து பாருங்கள். பளபள வென்று பாக்கெட்டுகளில் வறட்டிகள் அடுக்கப்பட்ட படத்துடன் இணையதள விற்பனை காணக்கிடைக்கும், இதை ஏன் நீங்கள் செய்யா கூடாது. இதற்கான மூலப்பொருளும் எளிதாகவே கிடைக்கும். உழைத்தால் மட்டும் போதும். வேறெந்த முதலீடும் இல்லை. லாபம் மட்டுமே. கரி தூள் ஒன்றுக்கும் உதவாததை நாம் குப்பை என நினைத்து எரித்துவிடுவோம். வெந்து தனித்த அந்த சாம்பல் மற்றும் கரியை நாம் சீண்ட கூட மாட்டோம். ஒரு சில சமயம் நாம் “காசை ஏன்டா கரி ஆக்குற” என்று திட்டுவதுகூட உண்டு. ஆனால் நாம் அந்த கரியையும் காசாக மாற்றலாம். இதே எப்படி என்று கேட்போருக்கு இதோ அதற்கான பதில்.