சனி

மல்லிகை சாகுபடியில் பஞ்சகவ்யா

மல்லிகை சாகுபடியில் பஞ்சகவ்யா, அமுதக்கரைசல்களை பயன்படுத்தும்பொழுது பூக்கள் திடீரென சிவப்பு நிறமாக மாறிவிடுகின்றன. இலைகளும் கருகி விடுகின்றன. இதற்கு என்ன காரணம்?

இப்படி நேருவதற்கு காரணம், பஞ்சகவ்யா தயாரிப்பில் தவறு நிகழ்ந்திருக்கலாம். வழக்கமாக பஞ்சகவ்யா தயாரிப்பில் நெய்தான் பயன்படுத்தப்பட்டு வருகிறது. சமீபகாலமாக நெய்க்கு பதிலாக ஆமணக்கு எண்ணையை பயன்படுத்தும் முறை பரவி வருகிறது. ஆனால், அளவுக்கு அதிகமாக ஆமணக்கு எண்ணயை கலந்தால், மலர்கள் சிவப்பாவது, இலைகள் கருகவது போன்ற விளைவுகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. சாணத்துடன் நெய் அல்லது ஆமணக்கு எண்ணெய் கலக்கும்போது மூன்று முதல் ஏழு நாட்கள் வரை வைத்திருக்க வேண்டும். இப்படி செய்தால்தான் சாணத்தில் உள்ள மீத்தேன் வாயு வெளியே செல்லும். அப்படி இல்லாமல் விரைவாக பஞ்சகவ்யா கரைசல் தயாரித்திருந்தாலும், இது போன்ற விளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

மலர்களைப் பொறுத்தவரை 3-5% வரைதான் பஞ்சகவ்யா தெளிக்க வேண்டும். இந்த அளவுக்கு அதிகமா தெளித்தாலும்கூட வேறுவிதமான விளைவுகள் ஏற்படும். கரைசல் தெளித்துவிட்டு நீர்ப்பாசனம் செய்யாமல் இருப்பதும்கூட பிரச்சனைக்கு வழி வகுக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக