சனி

கொளுத்தும் வெயிலுக்கு என்ன சாப்பிடலாம்?


கோடை விடுமுறை வந்துவிட்டாலே நமது மனம் கொண்டாட்ட 'மூடு' க்கு மாறிவிடும். உறவினர்களோடு அரட்டை, கூச்சல் கும்மாளத்தோடு டி.வி.யில் படம் பார்ப்பது, சீட்டுக் கச்சேரி என களை கட்டும் கோடை விடுமுறையில், பல குடும்பங்களில் பிக்னிக்கும் கட்டாயம் இடம் பெறும் 

ஆனால் இந்த கொண்டாட்ட நிகழ்ச்சிகளில் மட்டுமல்லாது, பிக்னிக் பேக்க்குகளிலும் நம்மவர்களின் மிக விருப்பமான நொறுக்கு தீனிகளாக சிப்ஸ் பாக்கெட்டுகளும், சாக்லேட்டுகளும், தாகம் தணிக்கும் பானங்களாக குளிர்பானங்களும் பயண பைகளுக்குள் கட்டாயம் திணிக்கப்பட்டிருக்கும். 



ஆனால் இந்த இடத்தில்தான் எச்சரிக்கை மணி அடிக்கின்றனர் ஊட்டச்சத்து நிபுணர்களும், மருத்துவர்களும்! 

இதுபோன்ற சிப்ஸ் மற்றும் சாக்லேட்டுகளுக்கு பதிலாக பழங்கள்,காய்கறி சாலட்டுகள் போன்றவற்றை நிறைய எடுத்துக் கொள்ளலாம் என்று அறிவுறுத்துகின்றனர். 

வழக்கமான உணவுகள் மற்றும் முறையான உடற்பயிற்சிகளோடு, மேற்கூறியபடி காய்கறி மற்றும் பழங்களை எடுத்துக் கொண்டால், கோடை கொண்டாட்ட குதூகலத்தில், உடல் எடை அதிகரிப்பதை தடுக்க முடியும் என்கின்றனர்.

தாகத்தை தணிக்க தண்ணீர்: 

கோடையில், குறிப்பாக வெயிலில் சுற்றி வந்தால் நாக்கு வறண்டு தாகம் அதிகமாக எடுப்பது சகஜம்தான். இந்த சமயத்தில் நம்மில் பலர் உடனடியாக தாகத்தை தணிக்க பாட்டிலில் அடைக்கப்பட்ட குளிர் பானங்களை வாங்கிக் குடிக்கிறார்கள்.இவ்வாறு செயற்கையாக தயாரிக்கப்படும் குளிர்பானங்களை வாங்கி குடித்தால், அது நமது உடலுக்கும் உபாதைகளை ஏற்படுத்துவதோடு, பர்ஸ்-க்கும் வேட்டு வைக்கிறது. 

அதற்கு பதிலாக தாகத்தை தணிக்க தண்ணீரே போதுமானது.அது நமது உடலை குளுமைபடுத்துவதோடு,உடலில் நீரிழப்பு ஏற்படுவதையும் தடுக்கிறது.மேலும் தேவையற்ற கூடுதல்கலோரிகள் உங்கள் உடலில் சேருவதையும் அது தடுக்கிறது.செயற்கை குளிர் பானங்கள் நமது உடலில் தேவையற்ற அதிக கலோரிகளை உருவாக்கி விடுகிறது.

ஒருவேளை சிலருக்கு வெறும் தண்ணீரை அருந்த விருப்பமில்லாமல் இருந்தால், அதற்கு பதிலாக புதிதாக தயாரிக்கப்பட்ட எலுமிச்சை பழ ஜூஸ், இளநீர் அல்லது மோர் போன்றவற்றை அருந்தலாம். இவை கோடையின் சிறந்த தாகம் தணிப்பு பானங்கள் என்றே சொல்லலாம்.


உணவில் பழங்கள்,காய்கறிகள்:

மற்ற காலங்களில் எப்படியோ கோடையில் கட்டாயம் உங்களது உணவில் குறைந்தது இரண்டு காய்கறிகள் மற்றும் இரண்டு வகை பழங்களாவது இடம்பெறுமாறு பார்த்துக் கொள்ளவேண்டும். 

ஒவ்வொரு சீசனிலும் ஒவ்வொரு வகை பழங்கங்கள் சந்தைக்கு விற்பனைக்கு வரும். அதுபோன்று கோடைக்கென்றே வரும் சில வகை பழங்கள் உள்ளன.தர்ப்பூசணி, வெள்ளரி பழம் போன்றவை தாகத்தை தணித்து, உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ளும் என்றால், மாம்பழம் போன்றவற்றை மில்க் ஷே செய்து அருந்தினால் அது உடலுக்கு ஏக தெம்பை கொடுக்கும். 

உணவை தவிர்க்காதீர்கள்: 

சிலர் கோடை விடுமுறையில் உடல் எடையை குறைத்து காட்டுகிறேன் பேர் வழி என்று சாப்பாட்டை தவிர்ப்பது உண்டு.ஆனால் மிக மோசமான ஆரோக்கிய கேடு என்பதோடு, பின் விளைவுகளையும் ஏற்படுத்தக் கூடியது என்று எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள் .உணவு அருந்தாமல் இருந்தால் உடலில் கலோரிகளை எரிக்கும் 'மெடோபாலிசம்' செயல்பாடு மந்தமாகி விடும்.எனவே சிறிது சிறிதாகவேனும் உணவை ஆறு வேளையாகவது எடுத்துக் கொள்ளுங்கள். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக