ஞாயிறு

அட்டைப் பெட்டி தயாரிக்கும் தொழில்

அட்டைப் பெட்டிகளுக்கான தேவை வெகுவாக அதிகரித்துள்ளது. கடைகளிலும் வீடு மாறுவதற்கும் இது அதிகமாகத் தேவைப்படுகிறது. சிறிய, பெரிய என அனைத்து பொருட்களையும் பேக்கிங் செய்வதற்கு ஒரு அட்டை பெட்டி தேவை. அட்டைப்பெட்டிகளுக்கு சீசன் கிடையாது. எனவே நீங்கள் வருடத்தின் அனைத்து நாட்களிலும் இதைத் தயாரிக்கலாம்; விற்பனை செய்யலாம். அதன் தேவை ஒவ்வொரு மாதமும் இருக்கும். இந்தத் தொழிலில் நஷ்டம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு. ஆன்லைன் வணிகத்திலும் இது அதிகமாகத் தேவைப்படுகிறது.

பயன்பாடு!

பயன்பாடு!

அட்டைப் பெட்டிகள் சீரான பேக்கிங் மற்றும் பாதுகாப்புக்காக பயன்படுத்தப்படுகிறது. இது புத்தகங்களை சேர்த்து வைப்பதற்கும் மற்ற தேவைகளுக்கும் பயன்படுத்தப்படுகிறது. அதன் கனமான தயாரிப்பு ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு பொருட்களை கொண்டு செல்ல பயன்படுகிறது. இதற்கு, கிராஃப்ட் பேப்பர் ஒரு முக்கிய மூலப்பொருளாக உள்ளது. இதன் சந்தை விலை கிலோ 40 ரூபாய். சிறந்த தரமான கிராஃப்ட் பேப்பர் பயன்படுத்தப்படுவதால் தரமான அட்டைப் பெட்டிகளும் தயாரிக்கப்படுகின்றன.


என்ன தேவை?

இந்தத் தொழிலைத் தொடங்க, உங்களிடம் சுமார் 5000 சதுர அடி இடம் இருக்க வேண்டும். இதுதவிர இதற்கான ஆலையும் அமைக்க வேண்டும். பின்னர், பொருட்களை வைக்க ஒரு சேமிப்புக் கிடங்கு தேவைப்படும். அட்டைப்பெட்டி உற்பத்திக்கு உங்களுக்கு இரண்டு வகையான இயந்திரங்கள் தேவை.


முதலீடு எவ்வளவு?

இதை சிறு தொழிலாக நீங்கள் ஆரம்பிக்கலாம். பெரிய அளவில் கூட ஆரம்பிக்கலாம். அது முதலீட்டைப் பொறுத்தது. இந்தத் தொழிலை பெரிய அளவில் தொடங்க வேண்டுமென்றால் குறைந்தது 20 லட்சம் ரூபாய் முதலீடு செய்ய வேண்டும். அதே சமயம் முழுக்க முழுக்க தானியங்கி இயந்திரங்கள் மூலம் தொடங்கினால் ரூ.50 லட்சம் ரூபாய் வரை செலவாகும்.


லட்சங்களில் லாபம்!

இந்தத் தொழிலில் உங்களுக்கான லாபமும் பெரிய அளவில் இருக்கும். உண்மையில், இந்த தொழிலுக்கான தேவை இப்போது அதிகமாக உள்ளது. எனவே இதில் லாபமும் அதிகமாக இருக்கும். இதை சிறந்த முறையில் செய்து நல்ல வாடிக்கையாளர்களை உருவாக்கினால், இந்த தொழிலை தொடங்கி மாதம் ரூ.10 லட்சம் வரை எளிதாக சம்பாதிக்கலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக