ஞாயிறு

முயல் வளர்ப்புத் தொழில்

 முயல் வளர்ப்பு

அங்கோரா முயல் வளர்ப்பு

 

Rabbit

முயல்‌ வளர்ப்புக்கு ஏற்ற நல்ல முயல்களை முதலில் தேர்வு செய்ய வேண்டும்‌. அதிக லாபம் பெற தகுந்த இனங்களைத் தேர்வு செய்வது முக்கியம். வெள்ளை ஜெயண்ட்‌, சாம்பல்‌ ஜெயண்ட் மற்றும்‌ அங்கோரா இனங்கள்‌ நல்ல தேர்வாக இருக்கும்‌. இவற்றில்‌ அங்கோரா இன முயல்களை வெப்பம்‌ குறைந்த மலைப் பிரதேசங்களில்‌ மட்டும்‌ வளர்க்க வேண்டும்‌.

இனப்பெருக்கம்‌ செய்ய பயன்படும்‌ ஆண்‌ மற்றும்‌ பெண்‌ முயல்கள்‌ வெவ்வேறு இனமாக, ‌ எந்த குறைபாடும்‌ இல்லாத முயல்களை தேர்வு செய்ய வேண்டும்‌. குறைந்த எண்ணிக்கையில்‌ உள்ள முயல்களுக்கு ஒற்றை அடுக்கு கூண்டு அமைப்பு போதுமானது. அதிகளவில்‌ வளர்க்கும்‌ முயல்‌ பண்ணைகளுக்கு ஒன்று அல்லது இரண்டு அடுக்குள்ள கூண்டு அமைப்புடைய கூடாரங்களை நீங்கள்‌ அமைக்க வேண்டும்‌. முயல்‌ வளர்க்கும்‌ குடில்களை ஆஸ்பெட்டாஸ்‌ அல்லது தென்னங்கீற்று மூலம் கூரை அமைக்க வேண்டும்‌. மற்ற இரை தேடும்‌ பறவைகளும்‌ உள்ளே நுழையாதவாறு கூண்டை பாதுகாப்பாக அமைக்க வேண்டும்‌.

வெப்பநிலையைப் பொறுத்தவரையில் 10 முதல் 30 டிகிரி செல்ஸியஸ்‌ அளவும்‌ ஈரப்பதம்‌ 60 முதல் 70 சதவீதம் அளவும் இருக்கும் அளவுக்கு இடங்களைத்‌ தேர்வு செய்ய வேண்டும்‌. முயல்களுக்கு சுத்தமான நீர்‌, மின்சாரம்‌, தீவனம், மருத்துவ உதவி ஆகியவை அருகில்‌ இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்‌. ஓவ்வொரு முயலுக்கும்‌ போதுமான அளவில் இடம்‌ ஒதுக்க வேண்டும்‌. கூண்டை கிருமிகள் இல்லாமல் சுத்தமாகப்‌ பராமரிக்க வேண்டும்‌.

முயலுக்கு தீவனம்‌ மற்றும்‌ தண்ணீர்‌ கொடுப்பதற்கு சிறிய பாத்திரம்‌ கட்டிவிட வேண்டும்‌. கூண்டுகளை தினந்தோறும்‌‌ செய்ய வேண்டும்‌. முயல்கள்‌ அதிகளவில்‌ இனவிருத்தி செய்யும்‌ தன்மையுடையவை. பலதரப்பட்ட தீவனங்களை அதிகளவில்‌ உணவாக எடுத்துக்‌ கொள்வதால்‌ சிறிய தொகையை முதலீடு செய்து முயல்களை வளர்க்கலாம்‌. ஆரம்ப முதலீடு மிகவும்‌ குறைவு தான். மிக விரைவில்‌ லாபம்‌ கிடைக்கும். முயல்‌ வளர்ப்பு ஆரம்பித்த 6 மாதங்களிலேயே உங்களுக்கு வருமானம் கிடைக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக