சனி

திசு வாழை சாகுபடி

திசுவளர்ப்பு முறையில் உருவாக்கப்படும் வாழைக்கன்றுகள் மூலம் நல்ல விளைச்சல் கிடைத்து வருகிறது. தமிழக சூழ்நிலைக்கு கிராண்ட்-9 என்ற திசு வளர்ப்பு வாழை ரகம் ஏற்றதாக உள்ளது. ஒரு ஏக்கரில் அதிகபட்சமாக 47 டன் வரை மகசூல் எடுக்க முடியும். அனுபவம் வாய்ந்த விவசாயிகள் இந்த அளவுக்கு மகசூல் எடுத்தும் வருகிறார்கள். திசு வாழை என்றவுடன் கண்ணை மூடிக் கொண்டு கன்றுகளை வாங்கிவிடக் கூடாது. குறைந்தபட்சம் ஐந்து இலைகளுடன், 40 செ.மீ உயரம் கொண்ட கன்றுகள்தான், நல்ல மகசூல் கொடுக்கும். 7 அடி இடைவெளியில் ஒரு ஏக்கருக்கு 1,200 கன்றுகளை நடவு செய்யலாம். தரமான கன்றுகளைத் தேர்வு செய்ய, நீங்களே திசு வாழைக் கன்றுகள் உற்பத்தி செய்யும் இடத்துக்குச் சென்று வாங்கி வருவது நல்லது. பழங்கள் அதிகநாட்கள் கெடாமல் இருக்கும். சீரான முதிர்ச்சி, ஒரே சமயத்தில் அறுவடைக்கு வாய்ப்புகள் உள்ளன.
இந்த ரக வாழை, வலுவான தண்டுப் பகுதியைக் கொண்டுள்ளதால், காற்று வீசினால் முறிந்து விழாது. வாழை சாகுபடியில் பருவம் முக்கியமானது. ஜூன் மாதம் முதல் டிசம்பர் மாசத்துக்குள் நடவு செய்துவிட வேண்டும். பொதுவாக, ஜனவரி முதல் மே மாதம் வரையிலான காலகட்டத்தில், சாதரணவாழை மற்றும் திசு வாழைக்கன்றுகள் நடுவது தவறு. இந்த சமயத்தில் நோய்த் தாக்குதலுக்கு இலக்காகி கன்றுகள் வளர்ச்சி குன்றும். திசு வாழை மரங்கள் காற்றுக்கு அசையாது என்றாலும், பாதுகாப்பு கருதி, வாழைத் தோட்டத்தைச் சுற்றி சவுக்கு... போன்ற நல்ல காற்றுத் தடுப்பு மரங்களைத் தேர்வு செய்து நடலாம். தென்னங்கீற்று மூலம் படல் அல்லது கீற்றுகள் நட்டும் காற்றை திசை திருப்பலாம்.

திசு வாழை முதல் முறை 11 மாதத்தில் விளைச்சல் தரும். மறுதாம்பு வாழையை சராசரியாக 10 மாதத்தில் அறுவடை செய்யலாம். குறைந்தபட்சம் மூன்று முறை மறுதாம்பு விடலாம். முற்றிலும் இயற்கை இடுபொருட்களைப் பயன்படுத்தியும் சாகுபடி செய்ய முடியும். திசு வாழையில் ஏக்கருக்கு பல லட்சம் வருமானம் எடுக்கும் விவசாயிகள் உள்ளனர். ஒரு ஹெக்டேருக்கு `37,500/- மானியமாக வழங்கப்படுகிறது.’’

தொடர்புக்கு, செல்போன்:  98420-07125.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக