இயற்கையில் உங்கள் தோட்டத்தில் உள்ள களைச்செடிகள் என்று அழைக்கப்படுவனவற்றில் எவையெல்லாம் பூச்சிகளால் தீண்டப்படாமல் பளிச்சென்று காணப்படுகின்றனவோ அவற்றை நாட்டு மாட்டுக் கோமியத்தில் ஊறவைத்தால் பூச்சி விரட்டி தயார்.
சுருக்கமாக ஐயா சொல்லும் முறை:
தின்றால் கசப்பவை
உடைத்தால் பால் வருபவை
முகர்ந்தால் நாற்றம் வருபவை
உடைத்தால் பால் வருபவை
முகர்ந்தால் நாற்றம் வருபவை
படங்களில் காணப்படும் இலைகளுடன் சோற்றுக் கற்றாழை, பிரண்டை போன்றவற்றையும் பயன்படுத்து.
இவற்றை தயாரிக்க 100லி கொள்ளளவு கொண்ட பேரல் பயன்படுத்து.
பெரிய பேரலாக இருப்பதால் இலைகளை வெட்டியோ ,இடித்தோ, அரைத்தோ ஊறவைக்க தேவையில்லை.
செடிகளை வேருடன் பறித்துவந்து அப்படியே ஊறவைக்கலாம்
நாட்கள் செல்லச் செல்ல பூச்சி விரட்டியின் வீரியம் அதிகரிக்கிறது
10லி தண்ணீரில் 400மிலி கலந்து தெளிப்பான் மூலம் பயன்படுத்தலாம்
எல்லா ப் பயிர்களுக்கும் ஒரே பூச்சி விரட்டியே பயன்படுத்துகிறோம்
வீட்டில் மிச்சமாகும் புளித்த மோரையம் இதே பேரலில் சேர்த்து விடு.
சோற்றுக் கற்றாழை சேர்ப்பதால் இது வளர்ச்சி ஊக்கியாகவும் பயன்படுகிறது.
கோடை வெப்பத்திலிருந்தும் பயிர்களைக் காக்கிறது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக