தேவைப்படும் பொருட்கள்: பசு சாணம் – 5 கிலோ, நெய் – அரை லிட்டர், 5 நாள் புளித்த தயிர் – 2 லிட்டர், பால் – 2 லிட்டர், மாட்டு மூத்திரம் – 3 லிட்டர், கரும்பு வெல்லம் – கால் லிட்டர், இளநீர் – 2, தண்ணீர் – 3 லிட்டர், ஒரு கை அளவு பயிர் செய்யும் நிலத்தின் மண், ஒரு கை அளவு சுண்ணாம்பு
குறிப்பு: தயாரிக்கும் கலனை / பிளாஸ்டிக் பாத்திரத்தை நன்கு கழுவ வேண்டும்.
தயாரிக்கும் முறை: 1. முதல் நாள் – சாணம் 5 கிலோ, நெய் அரை லிட்டர், ஒரு கையளவு பயிர் செய்யும் நிலத்தின் மண், ஒரு கையளவு சுண்ணாம்பு இந்த மூன்றையும் நன்கு பிசைந்து 5 நாள், கலன் / பிளாஸ்டிக் பாத்திரத்தின் வாயை ஈரத்துணியால் மூடவேண்டும்...
2. 6ம் நாள் – 2 லிட்டர் பாலில் மோர் கலந்து 2 லிட்டர் தயிராக புளிக்க வைக்க வேண்டும்.
3. 10ம் நாள் தனியாக வேறொரு வாளியில், கீழ்கண்டவைகளை ஊறவைக்க வேண்டும்.2ல் உள்ள புளித்த தயிர்-2 லிட்டர், பால் -2 லிட்டர், மாட்டு மூத்திரம்-3 லிட்டர், கரும்புவெல்லம்-கால் லிட்டர், இளநீர்-2, தண்ணீர்-3 லிட்டர். இவற்றையெல்லாம் வேப்பம் குச்சியைக் கொண்டு தினமும் காலை, மாலை இரண்டுதரம் 3 நிமிடங்கள் வரை (6 நாட்கள்) கலக்கிவிட வேண்டும்...
4. 10ம் நாளில் இந்த கலவையுடன் வாழைப்பழங்கள் (சுமார் 5 எண்ணிக்கை அழுகிய பழங்கள்) இதனுடன் கிடைத்தால் வேப்பம்பழங்கள், பலாப்பழம் ஆகியவற்றை சேர்த்து ஒரு துணியில் கட்டி இந்த கலவையினுள் தொங்கவிட வேண்டும். வேப்பம்பழம் கிடைக்கவில்லையென்றால் வேப்பங்கொட்டøயை இடித்து சேர்த்துக்கொள்ளலாம்.
ஆ) தொங்கவிட்டிருந்த பழங்கள் கொண்ட துணியை திறந்து பழங்களை கலவையில் நன்கு கலந்திட வேண்டும்.
21ம் நாள் முடிவில் கிடைப்பது பஞ்சகவ்ய கரைசல் ஆகும். பயன்படுத்தும் அளவு – ஒரு லிட்டர் பஞ்சகவ்ய கரைசலை 30 முதல் 50 லிட்டர் நீரில் கலந்து பஞ்சகவ்யமாக பயன்படுத்தலாம்...
பஞ்சகவ்யம் தயாரிக்கும்போது கவனிக்க வேண்டியவை:
1. தயாரிக்கும்போது பயன்படுத்தப்படும் கலன்கள், பாத்திரங்கள் கண்டிப்பாக மண்/பிளாஸ்டிக் பாத்திரங்களாகவோ அல்லது சிமென்ட் தொட்டியாகவோதான் இருக்க வேண்டும். முக்கிய குறிப்பு: பாத்திரங்களை நன்கு கழவி பயன்படுத்த வேண்டும்.
2. பாத்திரங்களின் வாய்பகுதி எப்பொழுதும் திறந்து துணியால் மூடியதாக இருக்க வேண்டும். தயாரிக்கும் வேளையில், காற்றிலுள்ள பிராணவாயு தேவைப்படுகிறது. கரைசலில் இருந்து மீத்தேன் போன்ற நச்சு வாயுக்கள் வெளியேறுகிறது. இவை நுண்ணுயிர் வளர்ச்சிக்கு உகந்தவையல்ல. எனவே இவைகள் வெளியேற தடைகள் ஏதும் இருக்கக்கூடாது.
3. மூலப்பொருட்கள் நன்கு கலக்கப்பட வேண்டும். தினம் காலை, மாலை 2 வேளை3 நிமிடங்கள் வேப்பம் குச்சியைக் கொண்டு கலக்க வேண்டும். இதன்மூலம் நுண்ணுயிர்கள் அதிகரிக்கின்றன.
4. மூலப்பொருட்கள் கலந்த பாத்திரத்தை நிழலில் வைக்க வேண்டும். இது மிக முக்கியமானது.
5. கண்டிப்பாக நாட்டு மாட்டின் வாயிலாக கிடைக்கும் சாணம், பால், கோமியம், நெய் மூலம் தான் தயாரிக்கப்பட வேண்டும்...

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக