ஞாயிறு

நோயணுகாமல் இருக்க கடைபிடிக்கும் விதிகள்

1) உணவு உண்ணும் பொழுது கொதிக்க வைத்து சுருக்கிய, ஆறிய நீரைப் பருக வேண்டும்.
2) இரவில் பசுவின் பாலை அருந்த வேண்டும்.
3) முழுவதுமாக உறைந்த தயிரை மட்டுமே உண்ண வேண்டும். உறையாத தயிரை உண்ணக்கூடாது.
4) தயிருடன் நீர் சேர்த்து கடைந்து வெண்ணெய் நீக்கிய மோரை பயன்படுத்தவும்.
5) நெய்யை எப்பொழுதும் உருக்கி திரவ வடிவில் உணவுடன் சேர்த்து உண்ண வேண்டும்.
6) கலவியல் உறவை மாதத்தில் ஒரு முறை மட்டும் வைத்துக் கொள்ள வேண்டும்.
7) மூத்த மாதரை புணரக்கூடாது. அப்படியென்றால் பெண்களும் தன் வயதில் குறைந்த ஆணிடம் புணரக்கூடாது.
8) பகற்பொழுதில் புணர்ச்சியும், துயிலும் கூடாது.
9) எண்ணெயிட்டுத் தலை முழுகும் போதெல்லாம் வெந்நீரில் குளிக்க வேண்டும்.
10) மலசலங்களை அடக்ககூடாது. உடன் கழித்தல் வேண்டும். ஆறுமுறை சிறுநீர் கழித்தல், மும்முறை மலம் கழித்தலும், வியர்வை வெளியேறுமாறு, உடல் உழைப்பும் வேண்டும்.
11) இளம் வெயிலில் காயகூடாது. மாலை வெயிலே சிறந்தது.
12) மூலநோய்களுக்கு காரணமான, மலச்சிக்கலை உண்டாக்கும் உணவுகளை உண்ணக்கூடாது.
13) பழைய உணவுகளை அமுதுக்கு ஒப்பெனினும் உண்ணக்கூடாது.
14) பசித்தாலொழிய உண்ணக்கூடாது. நாள் ஒன்றுக்கு இருமுறை உணவு மிக நன்று.
15) உண்ட பின்பு சிறிது தூரம் குறுநடை கொள்ள வேண்டும்.
16) தினந்தோறும் குளித்தல், சுத்தமான ஆடைகளை உடுத்தல், மந்திரங்கள் ஓதுதல், தினம் 30 நிமிட நேரம் தென்றல் காற்று உடம்பில் படுமாறு ஓய்வெடுத்தல் என்பது மிக அவசியமானது.
17) அதிக தூசிகள், குப்பைகள், பழைய பொருட்கள் உள்ள இடங்களில் இருக்காமல் பார்த்துக் கொள்ளுதல் நன்று.
18) நீண்ட நகம், முடிகள் உடலில் இல்லாதிருத்தல் நலம். அதை கத்தரிக்கும் பொழுது உடலில் படக்கூடாது.
19) உறக்கம், உணவு, மலநீர்க்கழிவு, புணர்ச்சி, அழுக்காடை, மயிரை சீவுதல் ஆகியவைகளை மாலைக்காலத்தில் விலக்க வேண்டும்.
20) பகல் தூக்கத்தை தவிர்த்து, சிறிது நேரம் 20 நிமிடம் சவாசன நிலையில் படுக்கலாம்.
21) உறங்கும் பொழுது, இடது பக்கமாக உறங்குதல் நலம்.
22) நடு இரவில் வாசனை பொருள்களையும், பூக்களையும் முகரக்கூடாது.
23) மருத்துவத் துன்பத்தை பொறுத்து, மருந்துகளை வணங்கி எடுக்க வேண்டும்.
24) மருந்து எடுத்து கொண்ட பிறகு தாம்பூலத்துடன் தேன், உலர் திராட்சை பழம், கிராம்பு, ஒரு சிட்டிகை பச்சை கற்பூரத்தூள் சேர்த்து மென்று சாப்பிடுவது மிக சிறந்த முறையாகும். தாம்பூலம் என்பது வெற்றிலை, களிப்பாக்கு, சங்கு சுண்ணாம்பு. சங்கு சுண்ணாம்பை பயன்படுத்துவதால் வாய் சிவக்காது. மேலும் இயற்கையான கால்சியம் சத்தை அளிக்கக்கூடியது (கிடைக்கும் இடம்: பல்ஸ் ஹெல்த் கிளினிக்). 25) மற்றவர்களிடம் அன்பு, மரியாதை, உதவும் தன்மையும், மற்ற உயிர்களிடம் பரிவும் தேவை.
26) சித்த மருத்துவ முறையில், ஆறு மாதத்திற்கு ஒரு முறை வாந்தி மருந்தும், நான்கு மாதத்திற்கு ஒரு முறை பேதி மருந்தும், மூன்று நாளைக்கு ஒரு முறை உடல் முழுவதும் எண்ணெய் தேய்த்து குளித்தலும், தினமும் கண்களுக்கு மையிடுதலும் போன்ற ஒழுக்கங்கள் அன்றாட வாழ்க்கை முறையில் மிகவும் அவசியமானவைகள்.

ஆதார நூல்: சித்த மருத்துவாங்கச் சுருக்கம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக