சனி

ரூ.1.50 லட்சம் முதலீடு செய்தாலே போதும். சூப்பரான பிசினஸ் டிப்ஸ்...

 உங்களுக்கு சொந்தமாக தொழில் தொடங்க வேண்டும் என்ற ஆசை, கனவு, லட்சியம் இருக்கிறதா? அப்படியென்றால் கவலையை விடுங்கள். உங்களை கோடீஸ்வரராக்கும் புதுமையான தொழில் குறித்துதான் இப்போது தெரிந்துகொள்ளப் போகிறோம்.

முகப் பொலிவு க்ரீம்களுக்கு இன்று மிகுந்த வரவேற்பு காணப்படுகிறது. இந்த க்ரீம்களை உற்பத்தி செய்யும் தொழிலில் லாபம் கொட்டுகிறது. இந்த தொழிலை தொடங்க எவ்வுளவு செலவாகும், லாபம் எவ்வுளவு கிடைக்கும் போன்ற விவரங்களை விரிவாக இங்கே தெரிந்து கொள்ளுங்கள்

சந்தை வாய்ப்புகள்

இன்றைய காலத்தில் பலரும் தங்கள் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துகிறார்கள். குறிப்பாக, சருமப் பாதுகாப்பிற்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். வயது வித்தியாசம் இன்றி, ஏழை, பணக்காரன் என எல்லாருமே தங்கள் சருமப் பாதுகாப்பிற்கு க்ரீம்களை பயன்படுத்தி வருவதை பார்க்க முடிகிறது. இதன் தேவைகள் அதிகமாக இருப்பதால், மிகப்பெரிய நிறுவனங்கள் முதல் சிறு, குறு நிறுவனங்கள் வரை பலரும் இந்த சருமப் பாதுகாப்பு தொழிலில் கோலோச்சுகின்றனர்.

நமது சருமத்தை அழகுபடுத்தும் இதுபோன்ற க்ரீம்களுக்கு நகர்ப்புறங்களில் மட்டுமல்ல, கிராமப்புறங்களிலும் அதிக வரவேற்பு உள்ளது. மேலும், இப்போது பெண்களும் அதிகமாக வேலைக்குச் செல்வதால் இந்த அழகு சாதன க்ரீம்களின் தேவையும் அதிகரித்துள்ளது. அதுமட்டுமின்றி, எங்கு பார்த்தாலும் ப்யூட்டி பார்லர்களும் அதிகமாக காணப்படுவதால், இதற்கான சந்தை மிகப்பெரியது என்பதை புரிந்து கொள்ளுங்கள். குறைவான முதலீட்டில் அதிக லாபத்தை கொட்டித் தருகிறது இந்த க்ரீம் உற்பத்தி ஆலை.

எளிமையான இயந்திரங்கள்: 

சருமத்திற்கு உபயோகப்படுத்தும் க்ரீமை தயாரிப்பதற்கு, பயன்படுத்துவதற்கு சிரமமான, சிக்கலான இயந்திரங்கள் தேவைப்படும் என பயந்துவிடாதீர்கள். அப்படியெல்லாம் எதுவும் தேவைப்படாது. இதற்கான மூலதனப் பொருட்கள் நாடு முழுவதும் மிக எளிதாக கிடைக்கின்றன. அதை ஒவ்வொன்றாக வாங்கி, இயந்திரங்களை முறையாக அமைத்து, இன்றே தொழிலை ஆரம்பியுங்கள்.

திட்ட மதிப்பீடு:

இந்த க்ரீம் உற்பத்தி ஆலை தொடங்குவதற்கான முழுமையான வரைவு திட்டத்தை வடிவமைத்துள்ளது காதி மற்றும் கிராம தொழில் ஆணையம் (KVIC). தொழில் தொடங்குவதற்கு ஆரம்ப முதலீடாக ரூ.14.95 லட்சம் தேவைப்படும். இந்த தொகையில், நீங்கள் உங்கள் கையிலிருந்து ரூ.1.52 லட்சம் மட்டும் செலவு செய்தால் போதும். மீதமுள்ள தொகையை, டெர்ம் லோனாக ரூ.4.4 லட்சமும் நடப்பு மூலதன கடனாக ரூ.9 லட்சமும் நமக்கு கிடைக்கும்.

எவ்வுளவு செலவாகும்?:

இந்த தொழில் தொடங்க நிறைய இடம் தேவைப்படாது. 400மீ சதுர அடி இருந்தால் போதும். அது சொந்த நிலமாகவோ அல்லது வாடகை இடம் என எதுவாகவும் இருக்கலாம். இயந்திரங்களுக்கும் உபகரணங்களுக்கும் ரூ.3.43 லட்சம் தேவைப்படும். மரச்சாமான்கள் போன்வற்றுக்கு ரூ.1 லட்சம் தேவைப்படும். இதர செலவுகளுக்கு என ஐம்பதாயிரம் ரூபாயை வைத்துக் கொள்ளுங்கள். நடப்பு மூலதனத்திற்கு எப்படியும் ரூ.10.25 லட்சத்தை தயாராக வைத்திருக்க வேண்டும். அவ்வுளவுதான்

எவ்வுளவு லாபம் கிடைக்கும்?

முழு திறனோடு செயல்பட்டால், தொழில் தொடங்கிய ஒரு வருடத்திலேயே எல்லா செலவுகளும் போக, ரூ.6 லட்சம் வரை லாபம் ஈட்டுவதற்கு வாய்ப்புள்ளது. மேலும், உங்கள் தொழில் விரிவாக ஆரம்பித்ததும், இதில் கிடைக்கும் வருமானங்களும் தொடர்ந்து அதிகரிக்க ஆரம்பிக்கும். குறைந்தபட்சம் தொழில் தொடங்கிய ஐந்தாவது வருடத்திலேயே ரூ.9 லட்சம் அளவிற்கு லாபம் ஈட்டலாம்.

Thanks news18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக