ஞாயிறு

கோடை காலத்தில் உடல் சூட்டை தணிப்பதற்கு எடுத்து கொள்ளும் ஜூஸ் வகைகள்..!

 உடல் சூட்டை தணிப்பதற்கு எடுத்து கொள்ளும் ஜூஸ் 

கோடை காலத்தில் சூரியனில் தாக்கம் அதிகரித்து உடலின் ஆற்றல் நிலையை குறைத்து விடும். அதிலும்  நமது  உடலானது  உஷ்ணம் அதிகரித்து பல விதமான நோய்கள் வருகின்றன. அதாவது வயிற்று போக்கு, வயிற்று வலி, அதிகமான வியர்வை, சிறுநீரகத்தில் பிரச்சனை மற்றும் சருமத்தில் ஏற்படும்  பல விதமான நோய் பிரச்சனைகளை சந்தித்து வருகிறார்கள். அதற்காக கோடை காலத்தில் சாப்பிட கூடிய ஜூஸ்களை குடிப்பதன் மூலம் நமது உடலை குளிர்ச்சியாக வைத்து கொள்ள உதவுகிறது. அந்த வகையில் இந்த பதிவை முழுமையாக பார்த்து உடல் சூடு குறைய  எந்தெந்த ஜூஸ்களை குடிக்கலாம் என்பதை பற்றி கீழே தெரிந்து கொள்வோம் வாங்க.

 

தர்பூசணி


தர்பூசணி உடல் சூட்டை குறைப்பதற்கு மிகவும் உதவுகிறது. தர்பூசணியில் உள்ள சத்துக்கள் உடலில் ஏற்படும் சிறுநீரக பிரச்சனை மற்றும் வயிற்று வலியை குறைக்க உதவும். நம் முகத்தின் அழகை கூட்ட கூடிய பழமாக தர்பூசணி உள்ளது. அதிலும்  கோடை காலத்தில் விற்கக்கூடியது தர்பூசணி ஆகும். தர்பூசணி சாப்பிடுவதால் உடல் சூட்டை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது.

வெள்ளரிக்காய் :

கோடை காலத்தில் அதிகம் விற்கப்படும் காய்களில் ஒன்று வெள்ளரிக்காய். வெள்ளரிக்காயில் அதிகம் நீர்சத்துகள் மற்றும் நார்சத்துக்களும் நிரம்பியுள்ளது. வெள்ளரிக்காய் சருமத்திற்கு அதிகம் தேவைப்படும் பழமாக உள்ளது. முடிந்த வரை வெள்ளரிக்காயை பச்சையாக சாப்பிடுவது நல்லது. வெள்ளரிக்காயை குளிர் பானமாக குடித்து வந்தால் வாயு தொல்லை, வயிற்றுப் புண்கள், வயிற்று எரிச்சல் போன்றவை குணமாகும்.

இளநீர்

உடல் சூடு உள்ளவர்களுக்கு இளநீர் சிறந்த மருந்தாக இருக்கிறது. காலையில் இளநீர் குடித்து வருவதால் உடலை எப்பொழுதும் குளிச்சியாக வைத்துக் கொள்ள உதவுகிறது. இளநீர் உடல் சூட்டை கட்டுப்படுத்தி மலசிக்கல் மற்றும் வயிற்றுப் புண்களை குறைக்க உதவுகிறது. கோடை காலத்தில் தொடர்ச்சியாக இளநீர் சாப்பிடுவதால் உடலில் ஏற்படும் பாதிப்புகளை சரி செய்ய உதவுகிறது.

நுங்கு

பனை மரத்தில் இருந்து கிடைக்க கூடியது நுங்கு. இதில் அதிகம் நீர்ச்சத்துகள் மற்றும் கனிமச் சத்துக்கள் நிறைந்துள்ளது. கோடை காலத்தில் ஒரு சிலருக்கு எவ்வளவு தான் தண்ணீர் குடித்தாலும் தாகம் அடங்காது. ஆனால் நுங்கு சாப்பிடுவதன் மூலம் தாகம் அடங்கி விடும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக