ஞாயிறு

ஒரே ஒரு லிட்டர் தயாரித்தாலே போதும் 30,000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம்..!

 

Mint Essential Oil Making Business Paln in Tamil:

இந்த புதினா எண்ணெய் பல வகையான அழகு சாதன பொருட்கள் தயாரிக்க ஒரு முக்கிய மூலப்பொருளாக பயன்படுகிறது. மேலும் இந்த எண்ணெயை தங்களின் அழகினை மேம்படுத்தி அப்படியேயும் பயன்படுத்துகிறார்கள். அதனால் நீங்கள் இந்த எண்ணையை தயாரித்து விற்றால் நல்ல லாபம் கிடைக்கும்.

தேவையான மூலப்பொருட்கள்:

இந்த தொழிலுக்கு தேவையான முக்கியமான மூலப்பொருட்கள் என்று பார்த்தால் நல்ல நிலையில் உள்ள புதினா, Essential Oil Extraction Machine, கண்ணாடி பாட்டில்கள் மற்றும் Packing Machine ஆகியவை தேவைப்படும்.

ஆம் நண்பர்களே நமது பதிவின் மூலம் தினமும் ஒரு அருமையான மற்றும் எளிமையான சுயதொழில் பற்றிய முழு விவரங்களையும் அறிந்து கொண்டு இருக்கின்றோம். அந்த வரிசையில் இன்றைய பதிவில் Mint Essential தயாரிக்கும் தொழில் பற்றி தான் விரிவாக காண இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து இதில் கூறியுள்ள Mint Essential எண்ணெய் தயாரிக்கும் தொழில் உங்களுக்கு ஏற்றதாக இருந்தால் அதனை தொடங்கி உங்களின் பணம் சம்பாதிக்க வேண்டும்

தேவையான முதலீடு:

1 கிலோ புதினாவின் விலை தோராயமாக 92 ரூபாய், Essential Oil Extraction Machine-ன் விலை அதன் மாடலை பொறுத்து மாறுபடும். இதன் ஆரம்ப விலை தோராயமாக 50,000 ரூபாய் ஆகும்.

அதே போல் Packing Machine-ன் விலை அதன் மாடலை பொறுத்து மாறுபடும். இதன் ஆரம்ப விலை 1,000 ரூபாய் ஆகும். கண்ணாடி பாட்டிலின் விலை தோராயமாக 10 ரூபாய் ஆகும்.

தேவையான ஆவணம் மற்றும் இடவசதி:

நீங்கள் தயாரித்து வைத்துள்ள புதினா எண்ணெயினை Online மூலமாக விற்பனை செய்ய போகிறீர்கள் என்றால் அதற்கு GST Registration கண்டிப்பாக பெற்றிருக்க வேண்டும்.

இந்த தொழில் செய்வதற்கு உங்கள் வீட்டில் நல்ல தூய்மையான 100 sq.ft இடம் இருந்தால் மட்டுமே போதும்.

என்ற ஆசையை நிறைவேற்றி கொள்ளுங்கள்.

தயாரிக்கும் முறை:

முதலில் நாம் வாங்கி வைத்துள்ள நல்ல நிலையில் உள்ள புதினா இலைகளை நன்கு சுத்தம் செய்து கொள்ளுங்கள். பின்னர் அதனை Essential Oil Extraction Machine-ல் அதற்கென்று ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் சேர்த்து மெஷினை On செய்தீர்கள் என்றால் அதுவே நமக்கு எண்ணெயை தயாரித்து தந்து விடும்.பிறகு அதனை நன்கு வடிகட்டி நாம் வாங்கி வைத்துள்ள கண்ணாடி பாட்டில்களில் ஊற்றி Packing Machine-யை பயன்படுத்தி பேக்கிங் செய்து கொள்ளுங்கள்.

விற்பனை செய்யும் முறை:

நாம் தயாரித்து பேக்கிங் செய்து வைத்துள்ள புதினா எண்ணையை எண்ணெய் கடைகள் மற்றும் அழகு சாதன பொருட்கள் தயாரிக்கும் அல்லது விற்பனை செய்யும் இடங்கள் போன்ற இடங்களுக்கெல்லாம் நீங்களே நேரடியாக சென்றும் விற்பனை செய்யலாம்.

அப்படி இல்லையென்றால் Online மூலமாகவும் விற்பனை செய்யலாம்

வருமானம்:

தோராயமாக 100 மி.லி புதினா எண்ணெயின் விலை 2,700 ரூபாய் முதல் 3,000 ரூபாய் என்று விற்பனை செய்யப்படுகிறது என்றால்1 லிட்டர் புதினா எண்ணெயின் விலை 27,000 ரூபாய் முதல் 30,000 ரூபாய் என்று விற்பனை செய்யப்படுகிறது.

அதனால் ஒரு நாளைக்கு நீங்கள் ஒரே ஒரு லிட்டர் புதினா எண்ணையினை விற்றாலே தோராயமாக 30,000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம்.

அதனால் இந்த புதினா எண்ணெய் தயாரித்து விற்பனை செய்யும் தொழில் உங்களுக்கு ஏற்றதாக இருந்தால் இதனை தொடங்கி வாழ்க்கையில் முன்னேறுங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக