புதன்

தீராத மூக்கடைப்பால் அவதிப்படுகிறீர்களா?

 சுவாச பிரச்சனைகள் பெரும்பாலும் தீர்வதற்கு எளிய யோகா போன்றவற்றை மேற்கொண்டால் நல்ல பலன் கிடைக்கும். நீண்ட நாள் பிரச்சனைகளும் தீர்வதற்கு ஒரே வழி இதுதான் என்று கூற முடியும். தொடர்ந்து கபாலபாதி என்னும் பிராணயாமத்தை மேற்கொண்டு வந்தால் சுவாச பிரச்சனைகள், மூக்கடைப்பு, அலர்ஜி போன்றவற்றிற்கு நிரந்தரமாக தீர்வு காணலாம். தினமும் காலையில் எழுந்ததும் இந்த பயிற்சியை ஒரு பத்து நிமிடம் மேற்கொண்டால் போதுமானது.




கால்களை கிராஸாக பத்மாசனம் செய்வது போல மடித்து வைத்துக் கொள்ள வேண்டும். நேராக நிமிர்ந்து அமர்ந்து கொள்ள வேண்டும். முதுகு தண்டுவடம் வளையாமல் நேராக இருக்க வேண்டும். கண்களை மூடி, தோள்களை லேசாக விட்டு, இரண்டு கைகளையும் கால் மூட்டின் மீது வைத்து தியானம் செய்வது போல அமர்ந்து கொள்ள வேண்டும். பின் மூச்சை இழுக்கும் பொழுது மிக மிக மெதுவாகவும், மூச்சை விடும் பொழுது சற்று வேகமாகவும், சீராகவும் விட வேண்டும். இதுபோல தினமும் பத்து நிமிடம் செய்த பிறகு நீங்கள் அன்றாட வேலைகளை செய்யலாம். உங்களுடைய உடலில், வாழ்க்கை முறையில் நீங்கள் பல பெரிய மாற்றங்களை சந்திக்கலாம்.
அடிக்கடி மூக்கு துவாரங்கள் அடைத்துக் கொண்டு மூச்சு விடுவதில் சிரமங்கள் ஏற்படுகிறதா? சளி தேக்கம் இருக்கிறதா? சட்டுனு ஒரு சின்ன வெங்காயத்தை கையில் எடுங்கள். தோல் உரித்து அதனுடன் ஒரு இரண்டு மிளகை வைத்து கடித்து மென்று சாப்பிடுங்கள். இரண்டு பக்கமும் வைத்து சுவைக்க வேண்டும். இதனால் அதனுடைய சாறு மற்றும் நெடியானது மூக்கு துவாரங்களுக்குள் செல்லும். மூக்கை லேசாக மூடி கொள்ளுங்கள். காற்று வெளியில் போகக்கூடாது. சாப்பிட்டு முடித்ததும் திறந்து விடலாம். இதனால் மூக்கடைப்பு ஒரே நொடியில் நிவாரணம் காணும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக