உடல் எடை அதிகரிப்பால் பல்வேறு வகையான நோய்களுக்கும் தள்ளப்படுகிறோம். ஒருமுறை உடல் எடை கூடி விட்டால் மீண்டும் அதனை குறைப்பதற்குள் போதும் போதும் என்று ஆகிவிடும். என்னவெல்லாமோ ட்ரை பண்ணிட்டேன் ஆனால் உடல் எடை மட்டும் குறைந்த பாடில்லை என்பவர்கள் ஆயுர்வேத மூலிகைகளை இப்படி பயன்படுத்தி பாருங்கள்.
வெந்தயம்:
ஒரு டம்ளர் முழுக்க தண்ணீரை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் அரை டீஸ்பூன் மட்டும் வெந்தயத்தை கழுவி சேர்த்துக் கொள்ளுங்கள். இதை இரவு முழுவதும் ஊற விட்டுவிட்டு மறுநாள் காலையில் வெந்தயத்துடன் அப்படியே சேர்த்து தண்ணீரையும் வெறும் வயிற்றில் குடித்து விட வேண்டும். இதனால் உடல் எடையானது படிப்படியாக குறைய ஆரம்பிக்கும். வெந்தயம் செரிமானத்திற்கு உதவுவதால் கொழுப்புகளை தங்க விடாமல் பாதுகாக்கும். பொய் பசியை உண்டாக்காமல் தடுக்கும். வளர்சிதை மாற்றத்தின் விகிதத்தை அதிகரிக்கும். இதில் இருக்கும் கேலக்டோமைன் உடல் எடையை குறைக்க உதவுகிறது.
திரிபலா:
திரிபலா என்பது தான்றிக்காய், கடுக்காய் மற்றும் நெல்லிக்காய் இந்த மூன்றையும் குறிப்பது ஆகும். இந்த மூன்றும் உடலில் இருக்கும் நச்சுக்களை வெளியேற்றி, உடலை சுத்தப்படுத்துகிறது. மேலும் செரிமானத்தை அதிகரிக்க செய்து எடை இழப்பை ஏற்படுத்துகிறது. வெதுவெதுப்பாக இருக்கக்கூடிய வெந்நீர் அரை டம்ளர் எடுத்துக் கொள்ளுங்கள். அதனுடன் அரை டீஸ்பூன் அளவிற்கு திரிபலா பொடியை சேர்த்து அப்படியே கலந்து காலையில் வெறும் வயிற்றில் குடித்து விட வேண்டும். திரிபலா சூரண பொடி நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்.
சாதவரி:
ஆயுர்வேத மருத்துவர்களின் பரிந்துரைப்படி சாதவரிப் பொடியை எடுத்துக் கொள்ள வேண்டும். இதை வெதுவெதுப்பாக இருக்கக்கூடிய தண்ணீர் அல்லது ஒரு டம்ளர் பாலில் கலந்து பயன்படுத்த வேண்டும். இதனால் உடல் எடை கணிசமாக குறைய ஆரம்பிக்கும். நோய் எதிர்ப்பாற்றல் அதிகரிக்கும்.
அஸ்வகந்தா:
அஸ்வகந்தா ஆயுர்வேத மூலிகைகளில் மிகச் சிறந்த பலன்களை கொடுக்கக்கூடிய ஒரு அற்புதம் வாய்ந்த பொருளாக இருக்கிறது. இதை மாத்திரை மற்றும் பொடி வடிவங்களில் கிடைக்கிறது. எடை குறைப்பிற்கு பயன்படுத்துபவர்கள் மருத்துவரின் ஆலோசனையை கேட்டு தாராளமாக பயன்படுத்தலாம். பாக்டீரியா, அலர்ஜி எதிர்ப்பு பண்புகள் உள்ளதால் எப்பொழுதும் உடம்பை புத்துணர்ச்சியாக வைத்துக் கொள்ளும். மன அழுத்தத்தை தடுக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக