எப்பொழுதும் காலையில் எழுந்ததும் முதல் வேலையாக காலை கடன் முடிக்க வேண்டும் என்பது தான் சரியான முறையாகும். இதனால் தான் காலை கடன் என்கிற பெயரும் வந்தது. காலையில் எழுந்து மலம் கழிக்கவில்லை என்றாலே, அங்கு உடம்பில் பிரச்சனை இருக்கிறது என்பது தான் அர்த்தம் ஆகிறது. இப்படி குடல் சார்ந்த பிரச்சினைகளை முற்றிலுமாக நீக்கக்கூடிய இயற்கையாக கடைபிடிக்க வேண்டிய ஒரு வழிமுறையை தான் இந்த பதிவின் மூலம் நாம் அறிந்து கொள்ள இருக்கிறோம்.
குழந்தைகளாக இருந்தாலும் பெரியவர்களாக இருந்தாலும் காலையில் எழுந்ததும் வருகிறதோ இல்லையோ முதலில் மலம் கழிக்க பழகிக் கொள்ள வேண்டும். ஒரு டம்ளர் அளவிற்கு வெதுவெதுப்பான தண்ணீர் பருகினால் சுலபமாக காலையில் மலம் கழிக்க முடியும். அது மட்டும் அல்லாமல் உடம்பில் இருக்கும் கெட்ட கழிவுகள் அனைத்தும் வெளியேறிவிடும். எனவே காலையில் சூடாக டீ, காபி குடிக்கும் முன்பு ஒரு டம்ளர் வெதுவெதுப்பான தண்ணீரை பருகுங்கள். மலம் கழிக்கும் வரை காலை உணவை எடுத்துக் கொள்ள வேண்டாம். மலம் கழித்த பின்னர் காலை உணவை எடுத்துக் கொள்வது தான் முறையாகும். இப்படி முறை தவறி நாம் உணவு பழக்கத்தை கொண்டு வருவதால், நிறையவே பிரச்சனைகளை அனுபவிக்கிறோம். குடல் முழுவதையும் சுத்தம் செய்ய ஆறு மாதத்திற்கு ஒரு முறை குழந்தைகளுக்கு குடற்புழு நீக்கம் செய்யும் மாத்திரைகள் பள்ளிகளில் மற்றும் மருத்துவமனைகளில் வழங்கப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக