பேக்கரி திறந்ததுமே பன்னு வேணும் வெண்ணை வேணுமுன்னு கூட்டம் அள்ளும்னு நினைத்து கொண்டு ஏமாறுவது. ஒரு தொழிலின் சாதக பாதகம் குறித்து உரிய ஆய்வு செய்து பின்னரே தொடங்க வேண்டும்
உங்கள் நண்பர் தன் ஊரில் ஒரு வியாபாரம் ஆரம்பித்துவிட்டார் அது வெற்றி பெற்றதால் அதே வியாபாரம் உங்களுக்கும் வெற்றிகரமாக அமையும் என்று எண்ணாதீர்..ஒவ்வொரு தொழிலின் வெற்றியும் தோல்வியும் இடம், கால நிலை, அப்பகுதி மக்களின் வாழ்க்கை முறை இன்னும் முக்கியமாக உங்கள் நிறுவனம் அல்லது கடையின் தனித்துவமான ஒரு தன்மை ( unique selling point -usp ) ஆகியவற்றை பொறுத்து மாறும்.
உங்கள் வியாபாரத்துக்கு தேவையான மூல பொருட்கள், அலுவலக மேசை நாற்காலிகள் உள்ளிட்ட மூலதன செலவுகளுக்கு மொத்த பணத்தையும் வாரி இறைத்து விட்டு சந்தை படுத்துதலுக்கு ( marketing ) எந்த நிதி ஒதுக்கீடும் இல்லாமல் உரிய வியாபாரம் இல்லாமல் முழி பிதுங்கி நிற்பது. உங்கள் மூலதன செலவுகளில் சந்தை படுத்துதலுக்கான செலவு மிக முக்கியமானது. குறைந்தது 6 மாதம் முதல் 1 வருடத்திற்கான சந்தைப்படுத்துதல் நிதி உங்கள் வங்கி கணக்கில் இருப்பது அவசியம். உங்கள் மொத்த முதலீட்டில் அதிக பட்சம் 30 சதவீதம் இதற்காக செலவிடலாம். ( தொழில் வகையை பொறுத்து )
6 மாதம் வரைக்கும் நிர்வாக செலவுகளுக்கான பணமும் உங்கள் வங்கி கணக்கில் இருக்க வேண்டும். நீங்கள் வியாபாரம் ஆர்மபித்த பின் ஏற்படும் நிதி பற்றாக்குறை உங்கள் வளர்ச்சியை வெகுவாய் பாதிக்கும்.
நிறுவனம் அல்லது வியாபாரத்தில் எல்லா வேலைகளையும் நீங்களே இழுத்துப்போட்டு செய்வது. உங்கள் வியாபாரத்தின் முக்கிய வேலைகளை எப்போது சரியாய் உங்கள் பணியாளர்களுடன் பகிர்ந்து உங்கள் வேலை பளுவை குறைத்து அடுத்த கட்டத்துக்கு நகர்வீர்களோ அதுவே உங்கள் வளர்ச்சிக்கான அடுத்த படி.
தொழில் ஆரம்பித்ததுமே செய்தி தாள்களில் விளம்பரம் செய்து பணத்தை விரயம் செய்வது. பெரும்பாலான புதிய தொழில்களுக்கு செய்தி தான் விளம்பரங்களை விட இணைய தள மற்றும் சமூக வலைதள விளம்பரங்கள் குறைந்த பொருட்செலவில் அதிக/சரியான நபர்களை சென்றடையும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக