ஞாயிறு

முதலாளியாகனும்னு ஆசையா.. தொழிலதிபராக தமிழக அரசு தரும் சூப்பர் சான்ஸ்

 புதிய தொழில் தொடங்க விரும்பும் இளைஞர்களுக்கு மாவட்ட தொழில் மையம் மூலம் கடன்கள் தரப்படுகிறது. அப்படி தரப்படும் கடன்களுக்கு 25 சதவீதம் மானியமும் தரப்படுகிறது. இந்த வாய்பை தவிர விட வேண்டாம் என்று கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் தெரிவித்துள்ளார்.

படித்து முடித்துவிட்டு வேலை தேடும் இளைஞர்கள் எண்ணிக்கை கோடிக்கணக்கில் இருக்கிறது.. அத்தனை பேருக்கும் அரசால் வேலை தர முடியாது. தனியார் நிறுவனங்களில் வேலைக்கு சேரலாம். ஆனால் அதேநேரம் வேலைக்கு போகாமல் சுயமாக தொழில் தொடங்கி பலர் தொழில் முனைவோராக வர வேண்டும் என்று அரசு விரும்புகிறது.

சுயதொழில் தொடங்க ஆர்வமுள்ள தொழில்முனைவோர் மாவட்டத்தில் உள்ள தொழில் மையத்தின் பொது மேலாளரை நேரில் அணுகி ஆலோசனை பெறலாம். அதேநேரம் 36 வகையான தொழில் திட்டங்களுக்கு மானியத்துடன் கடன் உதவி பெறலாம்.. அண்மை காலங்களாக இ சேவை மையம், செல்போன் சர்வீஸ் மையம் போன்றவை அதிகமாக அமைக்கப்படுகிறது. இதேபோல் பலரும் விரும்பிய வகையில் தொழில்களை தொடங்குகிறார்கள். அப்பபடி தொழில்முனைவோர் சமர்ப்பிக்கும் விண்ணப்பம் தொழில் மையத்தின் உதவியுடன் வங்கிகள் மூலம் தொழில் கடனானது வழங்கப்படுகிறது..

பொதுவாக தொழில் கடன் தருவதற்கான வங்கிகள்,. ஒருவரின் சிபில் ஸ்கோரைப் பொறுத்து தருகின்றன,. விண்ணப்பிக்கும் நபர் தொழில் கடன் வாங்கும் தகுதி உடையவர் என உறுதி செய்யப்பட்டால், வங்கி மேலாளர் தொழில் தொடங்குவதற்கான இடம், தக்க சான்றுகளை ஆய்வு செய்த பின்னர் கடன் வழங்குவார். இதில் அரசின் பங்கு என்னவென்றால் ரூ.10 லட்சம் மதிப்புக்கு ஒரு தொழில் தொடங்கினால் , ரூ.3.5 லட்சம் மானியத் தொகையை உங்கள் வங்கிக் கணக்கில் அரசு செலுத்திவிடும். இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், வியாபாரம் சார்ந்த தொழில்களுக்கு அதிகபட்சமாக ரூ.5 லட்சம் கடன் கிடைக்கும். சேவை சார்ந்த தொழில்களுக்கு ரூ.5 லட்சமும், உற்பத்தி சார்ந்த தொழில்களுக்கு அதிகபட்சமாக ரூ.15 லட்சம் வரை வங்கிகள் மூலம் கடன் வசதி பெற முடியும்.

இத்திட்டத்தின் கீழ் பயன்பெற 12-ம் வகுப்பு தேர்ச்சி, பட்டப்படிப்பு, டிப்ளமோ, ஐடிஐ,அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தின் மூலம் தொழில்சார் பயிற்சி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கூடுதல் விவரங்கள் மற்றும் கூடுதல் வழிகாட்டுதலுக்கு பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம்,  அலுவலகத்தை நேரில் தொடர்பு கொள்ளலாம்"

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக