வேக வேகமாக இயங்கிக் கொண்டிருக்கும் இந்த உலகத்தில் ஆரோக்கியத்தின் மீது அக்கறை காட்டுபவர்களுடைய எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருகிறது.
இரவு உணவிற்கு பின் செய்ய வேண்டியது என்ன? இரவு சாப்பிட்ட பிறகு சிறிது நேரம் கூட கேப் கொடுக்காமல், சில பேர் அப்படியே படுத்து உறங்கி விடுவார்கள். இது ஆரோக்கியத்திற்கு ரொம்ப ரொம்ப கேடு விளைவிக்கும் விஷயம். சாப்பிட்ட பிறகு சிறிது நேரமாவது நடை பயிற்சி செய்ய வேண்டும். வெறும் பத்து நிமிடம் இருந்தால் கூட போதும். இரவு உணவிற்கும், தூங்கும் நேரத்திற்கும் இடையே நீங்கள் செய்யக்கூடிய இந்த சின்ன நடை பயிற்சி நிறைய அளவில் நன்மையை கொடுக்கும். அது என்னென்ன நன்மைகள் என்று இந்த பதிவை படித்து தெரிந்து கொள்வோம் வாருங்கள்.
வயிறு உப்புசம் மற்றும் மலச்சிக்கலை தவிர்க்க: இரவு சாப்பிட்ட பின்பு நடப்பதன் மூலமாக நமக்கு செரிமானம் சீர்படுத்தப்படுகிறது. நாம் சாப்பிட்ட உணவில் இருந்து கிடைக்கப்பெற்ற ஊட்டச்சத்துக்கள் அனைத்தும் சரியான வகையில் ரத்தத்தை சென்றடையும். இதனால் வயிறு சம்பந்தப்பட்ட எந்த ஒரு பிரச்சனையும் வராமல் இருக்கும். செரிமானம் ஆகாமல் வயிறு உபாதைகள் எதுவும் ஏற்படுவதற்கு வாய்ப்பே இல்லை. தேவையற்ற எடை குறைய: சாப்பிட்ட பிறகு நடப்பதால் உடலில் மெட்டபாலிசம் அதிகரிக்கும். கல்லூரிகள் குறையும். இதனால் உடம்பில் இருக்கும் தேவையற்ற கொழுப்புகள் சுலபமாக கரையும். அதிக எடை உள்ளவர்கள் சாப்பிட்ட பிறகு தூங்க செல்லக்கூடாது. சரியான அளவு எடை கொண்டவர்கள் சாப்பிட்ட பிறகு தினமும் தூங்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டால், சீக்கிரம் குண்டாவதற்கு வாய்ப்பு உள்ளது. இரவு சாப்பிட்ட பிறகு நடப்பதன் மூலம் தேவையற்ற எடையை குறைப்பதற்கும் ஒரு வழி கிடைக்கும்.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க: இரவு சாப்பிட்ட பிறகு நடப்பதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதாகவும் நமக்கு சொல்லப்பட்டுள்ளது. காரணம் நாம் இரவு சாப்பிட்ட பின்பு நடக்கும்போது, நம் உடலில் இருக்கும் நச்சுக்கள் வெளியேற்றப்படுவதால் உள் உறுப்புகள் எல்லாம் சரியான முறையில் செயல்படும். ரத்த ஓட்டம் சீராகும். இதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கப்படும். சீக்கிரமாக காய்ச்சல், சளி, இரும்பல் என்று நோய்வாய்ப்படாமல் உங்களை நீங்கள் பாதுகாத்துக் கொள்ளலாம்.
சர்க்கரை நோய் வராமல் தடுக்க: இன்று சர்க்கரை நோய் இல்லாதவர்களே இந்த உலகத்தில் இல்லை என்ற சூழ்நிலை வந்துவிடும் போல. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை வயது வரம்பு இல்லாமல் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். நாம் உணவு சாப்பிட்ட அடுத்த அரை மணி நேரத்தில், உடம்பில் ரத்தத்தில் சர்க்கரையின் அளவுகள் அதிகமாக ஆரம்பித்து விடும். ஆகவே சாப்பிட்ட பிறகு இரவு நேரத்தில் நீங்கள் நடைப்பயிற்சியை மேற்கொண்டால் ரத்தத்தில் இருக்கும் குளுக்கோஸின் அளவு கட்டுக்குள் வரும். இதன் மூலம் சர்க்கரை நோயை வரவிடாமல் தடுக்கவும் வாய்ப்பு உள்ளது.
மன அழுத்தம் நீங்க: பொதுவாகவே இன்றைய சூழ்நிலையில் இரவு மன அழுத்தம் காரணமாக படுத்தவுடன் நல்ல தூக்கம் வராமல் அவதிப்பட கூடிய நிலைமை நிறைய பேருக்கு உள்ளது. இப்படி இரவு சாப்பிட்ட பிறகு நடப்பதால் உடலுக்கு ஆரோக்கியம் கிடைப்பதோடு சேர்த்து, மனதிற்கு அமைதியும் புத்துணர்ச்சியும் கிடைக்கும். ஒரே கல்லில் இரண்டு மாங்காய். இரவில் சரியாக ஆழ்ந்த தூக்கம் வராதவர்கள் கூட, ஒரே ஒரு நாள் மட்டும் இரவு உணவு சாப்பிட்டுவிட்டு 10 லிருந்து 15 நிமிடங்கள் நடந்து விட்டு, வந்து தூங்கி பாருங்களேன். உங்களுடைய மன அழுத்தம் குறைந்து, இரவில் நல்ல தூக்கம் கிடைக்கும். நிம்மதியான ஆழ்ந்த தூக்கத்திற்கு, இரவு நடை பயிற்சி நிச்சயம் உங்களுக்கு கை கொடுக்கும்.
நள்ளிரவில் வரும் பசியை குறைக்க: சில பேர் நடுராத்திரியில் கூட எழுந்து சாப்பிடுவார்கள். நடுராத்திரி பசிக்கும் போது ஸ்னாக்ஸ் சாப்பிடும் இந்த பழக்கம் ரொம்ப ரொம்ப தப்பு. நடு ராத்திரி எழுந்து ஸ்னாக்ஸ் சாப்பிடவே கூடாது. அதுவும் உடல் ஆரோக்கியத்திற்கு தேவையில்லாத ஒரு பிரச்சனையை கொண்டு வரும். இப்படி சாப்பிடுவதன் மூலம் உடல் எடையும் அதிகரிக்க தான் செய்யும். இரவு சாப்பிட்ட பிறகு சிறிது நேரம் நடந்து விட்டு தூங்கச் சென்றால், நல்லிரவில் வரும் பசியை கூட கட்டுப்படுத்த முடியும் என்று சொல்லப்பட்டுள்ளது.
முயற்சி செய்து பாருங்கள். இரவு சாப்பாட்டுக்கு பிறகு நடப்பதன் மூலம் இவ்வளவு நன்மைகள் இருப்பது உங்களுக்கு புரிந்ததா. இதையும் படிக்கலாமே: நல்லபடியாக குழந்தை பிறக்க, கர்ப்பிணி பெண்கள் எந்த திசையில் தலை வைத்து தூங்க வேண்டும்? பிரசவ காலத்தில் பிரச்சனை வராமல் இருக்க, இந்த தவறுகளை கர்ப்பிணி பெண்கள் செய்யவே கூடாது. நிச்சயம் இது உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். எந்த ஒரு பழக்கத்தையும் செய்ய தொடங்குவதற்கு முன்பு தான் சிரமம் தெரியும். சிரமம் பார்க்காமல் இந்த நடை பயிற்சியை மேற்கொண்டு வாருங்கள். நிச்சயம் நிறைவான ஆரோக்கியத்தை பெறுவீர்கள் என்ற தகவலோடு இன்றைய பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.
Good
பதிலளிநீக்கு