புதன்

கம்பின் அற்புத மருத்துவப் பலன்கள்

 

சிறுதானியங்களில் அதிகம் பயிரிடப்படுவது கப்பு தான். உலகில் கப்பு மட்டும் இது 55% இடத்தை பிடித்திருக்கிறது. ஆப்ரிக்க கண்டத்தில் தான் கப்பு முதல் முறையாக பயிர் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. தற்போது ஆசிய, ஆப்பிரிக்க என 40க்கும் அதிகமான நாடுகளில் கப்பு விளைவிக்கப்படுகிறது. உலகில் கப்பு கால்நடை தீவனமாகவும் மனிதனுக்கு உணவு பொருளாகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

கம்பில் உள்ள உயிர்ச்சத்துகள்

சிறுதானியங்களிலேயே 11.8 சதவிகிதம் புரோட்டீன் கம்பில் மட்டும் தான் உள்ளது. வைட்டமின் ஏ சத்துகள் கம்பில் அதிகம் நிறைந்துள்ளது.

100 கிராம் கம்பில்
42 கிராம் கால்சியம் சத்து,

1 முதல் 12 மில்லி கிராம் இரும்புச் சத்து,

பி 11 வைட்டமின் சத்து 0.38 மில்லி கிராம்,

ரைபோபிளேவின் 0.21 மில்லி கிராம்,

நயாசின் சத்து 2.8 மில்லி கிராம் உள்ளது.

மற்றும் 5 சதவிகிதம் அளவு எண்ணெய் உள்ளது. இதில் உடலுக்கும் தேவையான 70 சதவிகிதம் கொழுப்பு அமிலம் நிறைந்து உள்ளது.

கம்பு பயன்கள்

நாம் தாத்தா பாட்டி காலத்தில் காலையில் தினமும் வயல்களுக்கு சென்று வேலை செய்வர்கள். அவர்களுக்கு தினமும் காலை உணவு கம்பங்கூழ் அல்லது கம்பங்களி தான். அதனால் தான் அவர்கள் உடலை கட்டுக்கோப்பாக வைத்து கொள்ள உதவியது. நீரிழிவு நோய் உள்ளவர்கள் சர்க்கரை சத்துக்கள் நிறைந்த அரிசி போன்றவற்றை சாப்பிட கூடாது. அதற்கு பதிலாக கம்பங்கூழ் அல்லது கம்பங்களி போன்றவற்றை சாப்பிட்டு ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும்.

கம்பில் (Bajra in Tamil) நாம் உடலுக்கு தேவையான வேதிப்பொருள்கள், வைட்டமின்கள் நிறைந்துள்ளது. கம்பை தினமும் சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து நாம் உடலில் நோய் எற்படமால் நம்மை பாதுகாத்து கொள்ள உதவும்.

கம்பில் நார்சத்து அதிகம் இருப்பதால் வயிற்றில் புண் செரிமான கோளாறு உள்ளவர்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் வயிறு சம்பந்தமான அத்தனை பிரச்சனைகளும் நீங்கும்.

உடல் எடை அதிகம் இருப்பவர்கள் பசி எடுக்கிறது என்பதற்காக எதையாவது வாங்கி தின்று கொண்டே இருப்பர்கள். இதனால் உடல் எடை அதிகரித்து கொண்டே போகும். தினமும் உணவில் கம்பு சேர்த்து சாப்பிட்டு வந்தால் பசியை கட்டுப்படுத்தி உடல் எடையை குறைக்க உதவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக