புதன்

சித்த மருத்துவம் கூறும் இளம்பெண்களுக்கான ஊட்டச்சத்து மிக்க உணவுகள் !!

ஒரு பெண் குழந்தை பூப்படைவது, அவள் மங்கை பருவம் அடைந்ததை குறிப்பதாகும். இக்காலகட்டத்தில் உடல் மற்றும் மனதில் ஏற்படும் மாற்றங்களுக்கு தகுந்தாற்போல் சில ஊட்டச்சத்துக்களின் தேவை அதிகரிக்கிறது. இக்காலத்தில் இரும்புச்சத்து மிக மிக அத்தியாவசிய ஒன்றாகும். அத்தேவைகளை பூர்த்தி செய்யும் விதமாக மிக எளிதானதும், அதிக ஊட்டச்சத்து நிறைந்ததுமான உணவுப்பொருட்களை பற்றி சித்த மருத்துவம் குறிப்பிடுகிறது.

அவற்றில் சில - சிவப்பரிசி - எள்ளு - பனைவெல்லம் சிவப்பரிசி(Red rice) : இவ்வரிசியின் மாவில் புட்டு செய்து வழங்குவர். இதன் சிவப்பு நிறத்திற்குக் காரணமான பாலிபீனால் (polyphenol) மற்றும் ஆந்தோசயனின் (anthocyanin) நோய் எதிர்ப்பாற்றல் தன்மை உடையவை. இவ்வரிசியில், மற்ற அரிசிகளை விட இரும்புச் சத்து (Iron) மற்றும் நாகச் சத்தானது (Zinc) மூன்று மடங்கு அதிகமாக உள்ளது. 

எள்ளு(Sesame seeds) : 
இதனை வறுத்து பொடி செய்து அல்லது எள்ளுருண்டையாக செய்து வழங்குவர். இதில் வைட்டமின்கள் B & E மற்றும் தயாமின் உள்ளது. மேலும் 20% புரதச் சத்தும், 55% எண்ணெய்ச் சத்தும் நிறைந்துள்ளது. மேலும் செம்பு, நாகம், இரும்பு, கால்சியம், செலினியம், மாங்கனீஸ், மக்னிசியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற தாது உப்புக்கள் உள்ளன. 

பனைவெல்லம்(Palm jaggery) : 
இதனை தனியாகவோ அல்லது உளுந்து மாவுடன் சேர்த்துக் களியாகவோ செய்து வழங்குவர். 
பனைவெல்லத்தில், இரும்புச்சத்து (2.5mg/gm), வைட்டமின் B1 (24mg/100mg), நிகோட்டினிக் ஆசிட் (5.24 mg/100gm), ரிபோப்லெவின் (432 mg/100mg) மற்றும் வைட்டமின் C (11mg/100mg) முதலிய ஊட்டச்சத்துக்கள் உள்ளன.

1 கருத்து: