சனி

463-வயது, 130-அடி உயரம் #கன்னிமாரா” #தேக்குமரம்

பல்லுயிர் பெருக்கத்தின் அமைவிடமாய் உள்ள மேற்குத்தொடர்ச்சி மலையின் ஆனைமலை புலிகள் காப்பகத்தின் வழியாக பரம்பிக்குளம் புலிகள் காப்பகத்திற்கு சென்றால், முழுவதும் தேக்குமரங்கள் நிரம்பிய மலைக்காடுகளை காணமுடியும்.
இந்த காடுகளில் தான் இந்தியாவின் மூத்த வயதுடைய மரங்களுள் ஒன்றான “கன்னிமாரா” தேக்கமரமும் உள்ளது. தூனக்கடவு, பெருவாரிப்பள்ளம், ஆழியாறு என்ற மூன்று அணைகளும் அமைந்துள்ள இந்த காட்டுப்பகுதியில், ஏராளமான புலிகளும், கரடிகளும் வசித்து வருகின்றது.
கேரளா அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த பகுதிக்கு கேரளாவிலிருந்து வர முடியாது. தமிழகத்திலுள்ள பொள்ளாச்சி, ஆனைமலை, டாப்சிலிப் ”Topslip” வழியாகத்தான் போக முடியும்.
கேரளா மாநில எல்லையிலுள்ள ஆனைப்பாடி என்ற இடத்திற்கு அந்தப் பக்கம் அங்கே குடியிருக்கும் மலைவாழ் மகளித்தவிர வேறு பொதுமக்கள் தனியாக செல்ல தடைசெய்யப்பட்டுள்ளது.
பரம்பிக்குளம் புலிகள் காப்பகத்தின் சார்பில் இயக்கப்படும் வேன்களில் சென்றால், தூனைக்கடவு அணையிலிருந்து வலதுபக்கம் எட்டு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது “கன்னிமாரா” தேக்கமரம்.
மலையாளத்தில் “கன்னிமாரா” என்பதை ஆங்கிலத்தில் virgin tree என்று கூறியுள்ளனர். Virgin என்பது இலத்தின் மொழியில், வான் மண்டலத்திலுள்ள ஆராவாது நட்சத்திர கூட்டத்தை குறிக்கும். கையில் நெற்கதிருடன் இருக்கும் பெண்ணின் படம் இதற்க்கு அடையாளமாகும். இதன்படி தமிழில் “இளமை மாறாத மரம்” என்று பொருள் கொள்ளலாம்.
2011-ம் ஆண்டு கணக்கின்படி இந்த மரத்திற்கு சுமார் 460- வயது இருக்கும் என கணக்கிட்டுள்ளனர். அப்போதைய உயரம் 39.98-மீட்டர். சுற்றளவு, 7.02-மீட்டர். அதற்கு பிறகும் மரம் குறைவான வேகத்தில்  வளர்ந்து கொண்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைகளில் கண்டுகொள்ளப்பட்ட மரங்களில் இதுதான் அதிக வயதுடைய மரம் என்று கூறும் வனத்துறையினர் இப்போது இந்த மரத்தின் உயரம்:- 130-அடிக்கு மேலிருக்கும் என்கின்றனர். மரத்தி சுற்றி நின்று ஐந்து பேர் கைகளையும் சேர்த்து பிடித்தால் தான் இந்த மரத்தை கட்டிப்பிடிக்க முடியும். மேற்கு தொடர்ச்சி மலையிலுள்ள இயற்கையின் அதிசயங்களில் இதுவும் ஓன்று

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக