இரண்டு தேக்கரண்டி உப்பை ஒரு லிட்டர் இளம் சூடான நீரில் சேர்த்து, கண்களைக் கழுவினால் கண்கள் பிரகாசமாக இருக்கும்.
ஒரு சிறிய வெந்நிறத்துண்டை, மஞ்சள் நீரில் நனைத்து நிழலில் உலர்த்தி வைத்து கொள்ள வேண்டும். கண்நோய் உள்ளவர்கள் அந்த வெண்ணிறத் துண்டுகளைக் கொண்டு கண்களை துடைத்துவர கண்சிவப்பு, கண்வலி, கண்ணில் நீர்கோர்த்தல் இவைகள் சரியாகும்.
உடல் சூட்டினால் அல்லது கண்ணில் அடிபட்டதாலோ கண் சிவந்து காணப்படுவது உண்டு. இதற்கு புளியம்பூவை அரைத்து கண்களைச் சுற்றிப் பற்று போட்டு வந்தால் கண்கள் சிவப்பது சரியாகும்.
மருதோன்றி இலையை அரைத்து தலையில் தேய்த்து ஒரு மணி நேரம் கழித்து குளித்தால் கண் சிவப்பு நீங்கும்.
நந்தியாவட்டைப் பூவை கண்களில் ஒற்றிக்கொண்டால் கண்வலி நீங்கும்.
கண் பார்வைத் தெளிவு பெற கொடி முந்திரிப் பழம் சாப்பிட்டு வர வேண்டும்.
நெல்லிக்காயை அரைத்து தலையில் தேய்த்து குளித்து வந்தால் கண்கள் குளிர்ச்சிபெறும்.
மிளகு, சீரகம் இவற்றில் சிறிதளவு எடுத்து பொடி செய்து, எண்ணெயில் காய்ச்சி, அந்த எண்ணெயைத் தலையில் தேய்த்துக் குளித்தால் கண்ணிலிருந்து நீர்வடிதல் மற்றும் கண் எரிச்சல் குணமாகும்.
பொன்னாங்கண்ணிக் கீரையுடன் நெய்யையும் சேர்த்து வதக்கி அடிக்கடி சாப்பிட்டு வந்தால் கண் நரம்புகள் பலப்படும், பார்வை தெளிவடையும்.
மல்லித்தழை மற்றும் கேரட்டை தேங்காய்ப்பால் சேர்த்து அரைத்து தினமும் குடித்துவர கண் நரம்புகள் பலப்படும்.
Thanks- சிறகு இதழ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக