தொழில் நுட்பமும், பொறியியலும் மிகவும் நவீனமாக வளர்ந்து விட்ட படியால் அதற்கேற்றபடி பாட திட்டங்களும் கற்பிக்கும் முறையும் மாறி விட்டன. ஆகவே படிப்பின் மதிப்பு கூடித் தான் இருக்கிறது. அதை படித்தவர்களின் மதிப்பு தான் கூட வில்லை, மாறாக குறைந்திருக்கிறது.
பொறியியல் படிப்பு மதிப்பு இழந்து விட காரணங்கள்:படிப்பிலும், செய்முறையிலும் முழு ஈடுபாட்டோடு கவனம் செலுத்தாமை
இணையதளங்களிலும் திறன் பேசிகளிலும் நேரத்தை செலவழித்தல்
குறிக்கோள் இல்லாத கல்லூரி வாழ்க்கை
சரியான உள்கட்டமைப்பு இல்லாத கல்லூரிகளில் பயிலுதல்
தேர்ச்சி பெற்ற / அனுபவம் உள்ள விரியுரையாளர்கள் இல்லாமை
தேர்ச்சி பெற்ற / அனுபவம் உள்ள செய்முறை பயிற்சியாளர்கள் இல்லாமை
செய்முறை பயிற்சியில் மாணவர்களுக்கு அதிகம் ஆர்வம் இல்லாமை
வேண்டப்பட்ட மாணவ மாணவியருக்கு உள் மதிப்பீடு மதிப்பெண்களை வாரி வழங்குவது. மற்றவர்களை கண்டு கொள்ளாமல் விட்டு விடுவது. அதனால் நன்றாய் படிக்கும் மாணவர்கள் சோர்வடைந்து போவது
கடைசி பருவ திட்ட வேலை (PROJECT WORK) சமர்ப்பித்தலுக்கு கணனி மையங்களை சார்ந்திருப்பது
- மாணவ மாணவியர்கள் கடைசி வருஷத்திற்கு முந்தின வருஷத்திலிருந்தே பொறியியலுக்கு சம்பந்தமில்லாத TNPSC Gr4, SSC (+2 Level), வங்கி தேர்வு இன்னும் பல வித போட்டித் தேர்வுகளுக்கு ஆயத்தப்படுவது.
- முக்கியமான பொறியியல் பாடங்களை படித்த மாணவர்கள் அதற்கு சம்பத்தமில்லாத தகவல் தொழில் நுட்ப துறைக்கான வேலைக்கு தனியாக அர்ப்பணிப்போடு ஆயத்தப்படுவது
பொறியியல் படிப்பு தரமானதாக இருக்கிறதா என்றால் 90% இல்லை. பாட ஆசிரியர்கள் பாடத்திட்டம் தாண்டி பாடம் எடுக்கின்றனரா என்றால் அதுவும் 90% இல்லை. சரி மாணவர்களாவது கற்ற விஷயங்களை இன்னும் மெருகூட்டும் வகையில் யோசிக்கிறார்களா என்றால் அதுவும் 75% இல்லை. தொழில்நுட்ப கல்வி என்ற பெயரில் சாதாரண ITI மாணவர்களுக்கு தெரிந்த அளவு கூட தங்கள் துறையின் அடிப்படை விஷயங்கள் தெரியுமா என்றால் அதுவும் இல்லை.
இப்படி பானை முழுவதும் ஓட்டை இருந்தால் எப்படி தண்ணீர் பிடிக்க முடியும்.
உண்மையில் 99% பொறியியல் வேலைகளுக்கும் படித்த பாடத்திற்கும் சம்பந்தமே இல்லை. ஒரு பொறியியல் மாணவன் ஒரு வேலையில் சேர்ந்த பின்னர் தான் பொறியியலை கற்க ஆரம்பிக்கிறான்.
பொறியியல் படிப்பில் சில மாற்றங்கள் வேண்டும் என்று நான் ஒரு திட்டம் வைத்திருக்கிறேன் அதில் ஒரே ஒரு பாயிண்ட் மட்டும் இங்கே::::
4 ஆண்டு பொறியியல் படிப்பில் நான்கு வருடங்களும் Even Semester (2,4,6,8) களில் துறைசார் நிறுவனங்களில் வேலை செய்து அந்த துறைசார் கேள்விகளுக்கு பதிலும், துறைசார் Project கண்டிப்பாக இருக்க வேண்டும்.
இன்னொன்று அடிப்படை அறிவு இல்லாமல் தான் பலர் பொறியியல் துறைக்கு வருகிறார்கள் அதனால் கண்டிப்பாக நுழைவுத்தேர்வு வைக்க வேண்டும் அதற்கு முதலில் பள்ளி பாடத்திட்டத்தை மாற்றவேண்டும்.
ஒரு துறையில் நிபுணத்துவம் பெறும் அளவுக்கு கற்றுக்கொண்டு அதை மற்றவர்களிடம் வெளிப்படுத்தும் அளவுக்கு ஆங்கில மொழியறிவு இருந்தால் கண்டிப்பாக வேலை கிடைக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக