சனி

பிர்க்கை சாகுபடி சில குறிப்புகள்

பிர்க்கை சாகுபடி செய்துள்ள வீவசாயிகள் கவனத்திற்கு பீர்க்கையில் பூ பிஞ்சு வைக்கும் பொழுது தண்ணீர் கண்டிப்பாக பாய்ச்ச வேண்டும்.
வெயில் அதிகமாக இருப்பதால் காய் வெம்பி பிஞ்சு விட்டவுடன் அவை உதிர்ந்து விடும். இவ்வாறு இருப்பதற்கு போரான் சத்து அவசியம் தேவைப்படும்.
பீர்க்கங்காய் கீழ்நோக்கி நேராகத்தான் ஓரே சீராக இருக்கும். அப்படி நேராக காய்க்காமல் கோனலாக தரமில்லாமல் இருந்தால் அவை போரான் சத்து பற்றாக்குறையாகும். 
இந்த பாதிப்பு எவ்வாறு ஏற்படுகிறது என்றால் செடியில் ஆண்பூக்களின் எண்ணிக்கை அதிகமாக பூத்து பெண்பூக்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கும் அப்படி இருப்பதால் காய் கோனலாகவும், மகசூல் இழப்பு ஏற்படும் இவற்றை சந்தையில் விற்பனை செய்ய முடியாது வாங்கமாட்டார்கள்.
இதனை சரிசெய்ய ஒரு லிட்டர் தண்ணீருக்கு 2 மில்லி போரான் மாலை வேளையில் தெளித்து மகசூலை அதிகப்படுத்தலாம். நல்ல தரமான காய்களாக கிடைக்கும்.
வெயிலின் தாக்குதல் இருப்பதால் சாறுறிஞ்சும் பூச்சிகளும் அதிகமாக இருக்கும் இவை இலையில் உள்ள சாற்றை ஊறிஞ்சுவதால் இலைகள் வெளிரி இலையில் கரும்புள்ளிகள் தோன்றி இலைமுழுவதும் கருப்பாகி காய்ந்து விடும் 
இந்த சாறுறிஞ்சும் பூச்சியை கட்டுப்படுத்த மிக குறைந்த செலவிலேயே மஞ்சள் அட்டை ஒரு ஏக்கருக்கு 10 முதல் 20 இடங்களில் வைத்து கவர்ந்து அழிக்கலாம்
தொடர்புக்கு
8870392422

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக