சனி

ரத்த குழாய் அடைப்பு நீங்க

நண்பர் ஒருவருக்கு ரத்த குழாய் அடைப்பு ஏற்பட்டதால் பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய நேர்ந்தது, ஆனால் அறுவை சிகிச்சை இல்லாமல் சாதரணாமாக நாம் உண்ணும்
உணவில் (ஆயுர் வேத டாக்டர் பரிந்துரைத்த) எல்லா அடைப்புகளும் நீங்கியதுதான் ஆச்சரியம்.
தயவு செய்து கவனியுங்கள்.
உங்கள் ரத்த குழாய் அடைப்பு திறந்து கொள்ளும்.
ஆஞ்சியோவுக்கோ, பைபாஸ் அறுவை சிகிச்சைக்கோ செல்லுமுன் நம்பிக்கையுடன் இதனைச் செய்யுங்கள். நீங்கள் குணமடைவீர்கள்.
தன் இதய வலிக்காக சிகிச்சைக்குச் சென்ற நோயாளி ஒருவர்-பைபாஸ் சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டார்.
இந்நிலையில் நோயாளி ஆயுர்வேத டாக்டரை சந்தித்தார்.
தன்னுடைய ஆஞ்சியோ சோதனையில், இருதய இரத்த குழாயில் மூன்று அடைப்புகள் இருப்பதாகவும், பைபாஸ் அறுவை சிகிச்சைக்கு நாள் குறிப்பிட்டுவிட்டதாகவும்
தெரிவித்தார்.
ஒரு மாதத்திற்கு அடியிற்கண்ட பானத்தை அருந்தும்படி ஆயுர்வேத டாக்டர் நோயளிக்கு பரிந்துரைத்தார்.
மும்பையில் உள்ள இருதய மருத்துவமனையில் பைபாஸ் அறுவை ஆப்ரசேனுக்கு முதல் நாள் ரூ2,25,000த்தை டெபாசிட் செய்தார்.
நோயாளியை பரிசோதனை செய்த டாக்டர் அவருடைய முந்தைய பரிசோதனையை சரிபார்த்து வியந்தார்.
ஆச்சரியப்பட்டார். தன்னுடைய முந்தைய பரிசோதனைக்குப் பிறகு ஏதாவது மருந்து சாப்பீட்டீர்களா? என்று டாக்டர் வினவினார்.
இதனை கவனமுடன் படியுங்கள், நீங்களும் குணமடையலாம்.
இருதய இரத்தக் குழாய் அடைப்புகளை திறக்க அருந்தும் பானத்திற்கு உரிய மூலப்பொருள்கள்:
1 கப் எலுமிச்சை சாறு
1 கப் இஞ்சிச் சாறு
1 கப் பூண்டு சாறு
1 கப் ஆப்பிள் சைடர் விநிகர்.
எல்லாச் சாறுகளையும் ஒன்றாக கலக்குங்கள். இலேசான இளஞ்சூட்டில் (சிம்மரில்) 60 நிமிடம் கொதிக்க வையுங்கள். நான்கு கப் மூன்றாக குறையும். சூடு ஆறியவுடன் சாறு
இருக்கும் அளவுக்கு சம அளவு இயற்கைத் தேனை கலந்து ஜாரில் வைத்துக் கொள்ளுங்கள். நாள்தோறும் காலை உணவுக்கு முன் ஒரு டீ ஸ்புன் பானத்தை அருந்துங்கள் மகிழ்ச்சியுடன் பானத்தை அருதுங்கள்....சுவையாகவும் இருக்கும் நீங்களே உங்களை பைபாஸ் அறுவை சிகிச்சையிலிருந்து காப்பாற்றிக் கொள்ளுங்கள்.
இயற்கையாய் இயற்கையோடு வாழ..!
இயற்கை மருத்துவத்துக்கு மாறுவோம்..!

பிர்க்கை சாகுபடி சில குறிப்புகள்

பிர்க்கை சாகுபடி செய்துள்ள வீவசாயிகள் கவனத்திற்கு பீர்க்கையில் பூ பிஞ்சு வைக்கும் பொழுது தண்ணீர் கண்டிப்பாக பாய்ச்ச வேண்டும்.
வெயில் அதிகமாக இருப்பதால் காய் வெம்பி பிஞ்சு விட்டவுடன் அவை உதிர்ந்து விடும். இவ்வாறு இருப்பதற்கு போரான் சத்து அவசியம் தேவைப்படும்.
பீர்க்கங்காய் கீழ்நோக்கி நேராகத்தான் ஓரே சீராக இருக்கும். அப்படி நேராக காய்க்காமல் கோனலாக தரமில்லாமல் இருந்தால் அவை போரான் சத்து பற்றாக்குறையாகும். 
இந்த பாதிப்பு எவ்வாறு ஏற்படுகிறது என்றால் செடியில் ஆண்பூக்களின் எண்ணிக்கை அதிகமாக பூத்து பெண்பூக்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கும் அப்படி இருப்பதால் காய் கோனலாகவும், மகசூல் இழப்பு ஏற்படும் இவற்றை சந்தையில் விற்பனை செய்ய முடியாது வாங்கமாட்டார்கள்.
இதனை சரிசெய்ய ஒரு லிட்டர் தண்ணீருக்கு 2 மில்லி போரான் மாலை வேளையில் தெளித்து மகசூலை அதிகப்படுத்தலாம். நல்ல தரமான காய்களாக கிடைக்கும்.
வெயிலின் தாக்குதல் இருப்பதால் சாறுறிஞ்சும் பூச்சிகளும் அதிகமாக இருக்கும் இவை இலையில் உள்ள சாற்றை ஊறிஞ்சுவதால் இலைகள் வெளிரி இலையில் கரும்புள்ளிகள் தோன்றி இலைமுழுவதும் கருப்பாகி காய்ந்து விடும் 
இந்த சாறுறிஞ்சும் பூச்சியை கட்டுப்படுத்த மிக குறைந்த செலவிலேயே மஞ்சள் அட்டை ஒரு ஏக்கருக்கு 10 முதல் 20 இடங்களில் வைத்து கவர்ந்து அழிக்கலாம்
தொடர்புக்கு
8870392422

செவ்வாய்

நெல் வைக்கோல் காளான் படுக்கை தயாரிப்பு மற்றும் வளர்ப்பு

குடிசை மற்றும் மர நிழலில் நெல் வைக்கோல் காளானை வளர்க்கலாம். புதிய, நோயற்ற வைகோலை பயன்படுத்த வேண்டும். ஒரு படுக்கை தயாரிப்பதற்கு 10-15 கிலோ வைக்கோல் தேவைப்படும். சமீபத்திய காலகட்டத்தில், பாலித்தீன் குடிலில் வளர்ப்பதன் மூலம் 25-35 º செ வெப்பநிலை மற்றும் 75-80% ஒப்பு ஈரப்பதம் பராமரிக்கப்படுகிறது.
நெல் வைக்கோல் கட்டு முறை:
செயல்முறை:
1 மீட்டர் நீளம் மற்றும் 0.75 மீட்டர் அகலத்தில் மரக்கட்டைகளை கொண்டு பரண் அமைக்க வேண்டும்.
ஒரு கிலோ எடை கொண்ட வைக்கோலை உருளையாக கட்ட வேண்டும்.
வைக்கோல் கட்டுகளை 12-18 மணிநேரம் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும்.
கட்டுகளை வெளியே எடுத்து நீரை வடிக்க வேண்டும்
வைக்கோல் கட்டுகளின் நுனிப்பகுதி ஒரு புரம் வருமாறு பரண்மேல் வரிசையாக அடுக்க வேண்டும்.
இரண்டாம் வரிசையில் நுனிப்பகுதி முதல் வரிசையின் எதிர்புறம் வருமாறு அடுக்கவும்.
காளான் வித்துகளை தூவிய பிறகு, மேற்கூறிய படி மூன்றாம் மற்றும் நான்காம் வரிசை அமைக்க வேண்டும்.
இந்த வரிசைக்கு மேல் காளான் வித்துக்களை தூவ வேண்டும்.
இதற்கு மேல் மீண்டும் இரண்டு வரிசை வைக்கோல் கட்டுகளை அடுக்க வேண்டும்.
இவ்வாறு அடுக்கிய படுக்கைகளை பாலித்தீன் கொண்டு மூட வேண்டும். 
குறிப்பு : வைக்கோல் கட்டுகளை நன்கு ஊற வைத்தால், படுக்கை போதிய ஈரப்பதம் கொண்டிருக்கும். இல்லையெனில், பூவாளி கொண்டு நீர் தெளிக்க வேண்டும். அதிக ஈரப்பதம் காணப்பட்டால் பாலித்தீன் மூடாக்கினை சற்று நேரம் நீக்க வேண்டும். படுக்கையின் வெப்பநிலை மற்றும் ஈரப்பதத்தின் அளவை கொண்டு காளான் வளர்ப்பின் மகசூல் இருக்கும். காளான் மொட்டுகள் உருவாவதற்கு 30-35º செ மிதமான வெப்பநிலை தேவைப்படும்.
வித்துக்கள் இட்ட 6-10 நாளில் காளான் மொட்டுக்கள் படுக்கையின் எல்லா பகுதியிலும் தோன்றும். இதனை 4-5 நாட்களில் அறுவடை செய்யலாம். காளானை மொட்டுப் பருவத்தில் அறுவடை செய்ய வேண்டும். ஏனெனில் வெடித்த காளான்களில் அதிக அளவு நார் இருக்கும். 
மகசூல் : 10 கிலோ தளப்பொருளிலிருந்து தளப்பொருளிலிருந்து 1-2 கிலோ காளான் அறுவடை செய்யலாம்.
முறுக்கிய வைக்கோல் முறை:
செயல்முறை:
வைக்கோலை 5-8 மீட்டர் நீளம் மற்றும் 5-10 செ.மீ குறுக்கு அளவில் முறுக்க வேண்டும்.
முறுக்குகளை 12 மணிநேரம் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும்.
வைக்கோலை வெளியே எடுத்து நீரினை வடிக்க வேண்டும்.
வைக்கோல் முறுக்குகளை குறுக்கும் நெடுக்குமாக பரண்மேல் அடுக்க வேண்டும்.
அடுத்த அடுக்கில் வைக்கோல் முறுக்கினை முதல் அடுக்கின் எதிர்மறையாக அமைக்க வேண்டும்.
காளான் வித்துகளை இப்படுக்கையின் மீது தூவ வேண்டும்.
பின்னர் படுக்கைகளை பாலித்தீன் கொண்டு மூட வேண்டும்.