ஞாயிறு

அப்பளத் தயாரிப்பு

வருடத்தின் எல்லா நாட்களிலும் தேவையாக இருக்கிற பொருள் அப்பளம்! அவசர சமையலுக்கு கை கொடுப்பதிலாகட்டும்விருந்து சாப்பாட்டை முழுமையாக்குவதில் ஆகட்டும்... அப்பளத்தின் பங்கு மகத்தானது.

‘‘இப்ப வர்ற அப்பளமெல்லாம் சுவையா இருக்கிறதில்லை. பரந்து பொரியறதில்லை. வெள்ளையா இருக்கிறதில்லை...’’ -இப்படி ஏகப்பட்ட இல்லை’ புகார்களைக் கேட்கிறோம் சமீபகாலமாக! அப்பளம் தயாராகிற சூழலைப் பற்றியும் அவ்வப்போது சர்ச்சைகள் கிளம்புவதுண்டு. ‘‘கொஞ்சம் மெனக்கெட்டா நாமளே சுகாதாரமான முறையில வீட்லயே தயாரிக்கலாம். செலவும் குறைவு. ருசியும் அதிகம்’’.


அப்பளம்வடாம் போடறதெல்லாம் அத்தைபாட்டி காலத்து வேலையாச்சே’ என நினைக்கிறவர்களும்இதை சுலபமாக செய்யலாம்

என்னென்ன தேவை

‘‘அரிசிஜவ்வரிசிஉப்புமிளகுசீரகம் உள்ளிட்ட மளிகைச் சாமான்கள்அச்சுசப்பாத்திக் கல்குழவிகொஞ்சம் பாத்திரங்கள்... 

எத்தனை வெரைட்டி என்ன ஸ்பெஷல்

‘‘அரிசி அப்பளம்மரவள்ளிக் கிழங்கு அப்பளம்டபுள் அப்பளம்,பப்படம்மிளகு அப்பளம்னு அப்பளத்துலயும்ஓமப்பொடிரிப்பன்,தட்டைஜவ்வரிசிவெங்காயம்குழம்புன்னு வடகத்துலயும் ஏகப்பட்ட வெரைட்டி இருக்கு. கடைகள்ல வாங்கறது ஒரே மாதிரியான உப்புகாரத்தோடதான் கிடைக்கும். ஆனா வீடுகள்ல பண்ணும்போதுஆர்டர் கொடுக்கறவங்களுக்கு எவ்வளவு உப்புகாரம் தேவையோ அப்படிச் செய்யலாம். கடை அப்பளங்கள்ல சோடா உப்பு சேர்ப்பாங்க. வீட்டுத் தயாரிப்புல அது கிடையாது. தேவைக்கேத்தபடி தயாரிக்கிறதாலபழைய ஸ்டாக்கை கஸ்டமர் தலையில கட்ட வேண்டிய அவசியமிருக்காது.’’


விற்பனை வாய்ப்பு லாபம்

‘‘வாய்வழி விளம்பரமே போதும். அக்கம்பக்கத்து வீடுகள்,தெரிஞ்ச ஆபீஸ்ஸ்கூல் மாதிரி இடங்கள்ல தொடர்ந்து ஆர்டர் எடுத்தாலே மாசம் முழுக்க விற்பனை இருக்கும். கடைகளுக்குக் கொடுக்க வேண்டிய அவசியமே இருக்காது. ஒரு நாளைக்கு ஒருத்தர் மட்டுமே 10 கிலோ வரைக்கும் செய்யலாம். 100 அப்பளம் போடலாம். 30 சதவீத லாபம் நிச்சயம்.’’

பூப்பூவாய் பூத்திருக்கும் அப்பளப் பூ!


விருந்துச் சாப்பாடு என்றால் நிச்சயம் அப்பளம் உண்டு. திருமண விழா, கோயில் அன்னதானம் ஆகியவற்றில் பெரிய அளவு அப்பளம் இடம் பெறும்.
அப்பளத்தை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லாருக்கும் பிடிக்கும். தமிழகத்தில் பல ஊர்களில் அப்பளம் தயாரிக்கப்படுகிறது. ஆனால் மதுரை அப்பளத்திற்கு சந்தையில் தனி இடம் உண்டு.
  அப்பளத்தில் ஒருவகை அப்பளப் பூ. வீடுகளில் மதிய உணவின்போது இடம்பெறுவது அப்பளப் பூ. இதைக் குழந்தைகள் மிகவும் விரும்புவார்கள். இத்தகைய சிறப்பு வாய்ந்த அப்பளப் பூவினை விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் உள்ள பூர்ணிமா மகளிர் மன்றத்தினர் வியாபாரரீதியில் தயாரித்து, வெற்றி
கரமாக விற்பனை செய்து வருகிறார்கள்.
இக்குழுவின் ஊக்குநர் பி.கலாமாலினி, பிரதிநிதிகள் டி.செல்வி, ஆர்.கார்த்தியாயினி ஆகியோரிடம் அப்பளப் பூ
தயாரிப்பு மற்றும் வியாபாரம் குறித்து
கேட்டோம்.
 நீங்கள் இந்தக் குழுவை எப்போது தொடங்கினீர்கள்?.
2002 ஆம் ஆண்டு இந்தக் குழுவைத் தொடங்கினோம். தொடக்கத்தில் 20 பேர் இருந்தோம். 2005-ம் ஆண்டு வரை ஒவ்வொருவரும் மாதம் ரூ.100 வீதம் செலுத்தி, அப்பணத்தை உறுப்பினர்களுக்கிடையே வட்டிக்கு கொடுத்து வாங்கிவந்தோம்.
  எப்போது அப்பளப் பூ தயாரிக்கத் தொடங்கினீர்கள்?
  20 பேரில் எட்டு பேர் குழுவைவிட்டு வெளியேறிவிட்டார்கள். மீதமுள்ள 12 பேர் சேர்ந்து 2006-ம் ஆண்டு அப்பளப் பூ தயாரிப்பைத் தொடங்கினோம்.
  இந்தத் தொழில் தொடங்க எப்படி யோசனை வந்தது?
  அருப்புக்கோட்டையில் ஆசாரிமார் தெருவில் 75 சதம் வீடுகளில் அப்பளப் பூ தயாரிப்புத் தொழில் குடிசைத் தொழில்போல நடந்து வருகிறது. குழுவில் உள்ள 12 பேரும் இதே பகுதியைச் சேர்ந்தவர்களாக இருந்ததால், அனைவரும் இணைந்து இந்தத் தொழிலைத் தொடங்கலாம் என்ற  எண்ணம் வந்தது.
தொடக்கத்தில் இதற்கு எவ்வளவு முதலீடு செய்தீர்கள்?
  12 பேரும் இணைந்து ரூ.20 ஆயிரம் முதலீட்டில் தொழிலை தொடங்கினோம். பின்னர் வங்கியில் ரூ.1.70 லட்சம், 2.50 லட்சம், 3 லட்சம் எனப் படிப்படியாகக் கடன் வாங்கினோம். சுழல் நிதி ரூ.60 ஆயிரம் கிடைத்தது. இவற்றை வைத்து எங்கள் தொழிலை விரிவாக்கினோம்.
 அப்பளத்திற்கும், அப்பளப் பூவிற்கும் என்ன வித்தியாசம்?
  மூலப்பொருள்கள் அனைத்தும் ஒன்றுதான். வடிவத்தில் மாற்றம் வரும். அப்பளம் என்றால் வட்ட அப்பளம்தான். அப்பளப் பூ என்றால் மோதிரம், சோவி, இலை வடிவங்களில் உள்ள அப்பளப்பூ என மூன்று வகை உள்ளது. இந்த மூன்று வகைகளையும் நாங்கள் தயாரிக்கிறோம்.
  இதை எப்படி சந்தைப்படுத்துகிறீர்கள்?
  இதற்கு எங்கள் குழுவில் உள்ள கார்த்தியாயினி இருக்கிறார். அவருடைய கணவர் ராஜபாண்டியன் உதவியாக உள்ளார்.
அருப்புக்கோட்டை, ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி, ராஜபாளையம் ஆகிய ஊர்களில் கடைகளில் ஆர்டர் பெற்று, தயாரிக்கப்பட்ட அப்பளப் பூவை லாரி மூலம் அனுப்பி வைத்து, வாரம் ஒருமுறை சென்று பணம் வசூலித்து வருகிறோம்.
  குழுவில் உள்ள 12 பேரில் அப்பளப் பூ தயாரிப்பில் எத்தனைபேர் ஈடுபட்டுள்ளீர்கள்?
  ஊக்குநர், பிரதிநிதிகள், உறுப்பினர்கள் உள்பட 6 பேர் இதில் ஈடுபட்டுள்ளோம். மேலும் இருவர் இட்லி மாவு தயாரித்து விற்பனை செய்து வருகிறார்கள். இருவர் சேலை வியாபாரம் செய்து வருகிறார்கள். இருவர் தனியே அப்பளப் பூ தயாரிக்கிறார்கள். குழுவில் உள்ள 12 பேரும் தொழில் செய்து வருகிறோம்.
  அப்பளப் பூ தயாரிப்பில் ஈடுபட்டுள்ள 6 பேருக்கும் மாதம் எவ்வளவு வருமானம் கிடைக்கும்?
  சராசரியாக மாதம் தலா ரூ.2500 வருமானம் வருகிறது. மேலும் நாங்கள் அப்பளப் பூ தயாரிக்க 8 பெண் தொழிலாளர்களை வேலைக்கு வைத்துள்ளோம்.
 ஒரு நாளைக்கு எவ்வளவு அப்பளப் பூ தயாரிக்கிறீர்கள்?
  தொடக்கத்தில் தினசரி 10 கிலோ தயாரித்தோம். இப்போது 40 முதல் 50 கிலோ வரை தயாரிக்கிறோம். நாங்கள் 50 கிராம், 100 கிராம், 250 கிராம், 500 கிராம் பாக்கெட் போட்டு கடைகளுக்கு அனுப்பி
வைக்கிறோம்.
  அப்பளப் பூ தயாரிக்க எங்கிருந்து மூலப்பொருள்களை வாங்குகிறீர்கள்?
  அப்பளப் பூ தயாரிக்க உளுந்தம் பருப்பு, பெருங்காயம், சோடா உப்பு, சீரகம், உப்பு ஆகியவை தேவை. இவற்றை மதுரையில் உள்ள மொத்த வியாபாரிகளிடம் வாங்குகிறோம். போன் செய்தால்போதும் சரக்கை அனுப்பிவிட்டு, பணத்தைப் பெற்றுச் செல்வார்கள்.
  ஆண்டு முழுவதும் தயாரிப்புத் தொழில் நடைபெறுமா?
  ஆண்டுக்கு 8 மாதம் வியாபாரம் நன்றாக நடக்கும். மீதம் உள்ள நான்கு மாதம் வியாபாரம் சுமாராக நடைபெறும். மழைக் காலங்களில் அப்பளப் பூவைக் காய  வைக்க இயலாது. அந்த சமயத்தில் தயாரிக்க முடியாது. மற்றபடி வியாபாரம் நன்றாக உள்ளது. பல சமயங்களில் ஆர்டர் அதிகமாக இருக்கும். சரக்கு தயாரிக்க இயலாதநிலை ஏற்படும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக