புதன்

கம்ப்யூட்டர் தகவல்கள்-2

அதிவேக இண்டர்நெட் பயன்படுத்த புதிய வழிமுறை.
இண்டர்நெட் இணைப்பு கிடைக்கும் முன் வரை நமக்கு இணைப்பு வேகம் என்றால் பெரிதாக ஏதுவும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை ஆனால் பயன்படுத்திய சில நாட்களில் அல்லது சில மாதங்களில் நமக்கே தெரியும் இணைப்பு வேகம் இன்னும் வேகமாக இருந்தால் நன்றாக இருக்கும் என்று ஆனால் நாம் தேர்ந்தெடுத்து இருக்கும் இண்டர்நெட் பிளான் அன்லிமிடட் என்பதால் அதற்கு தகுந்தாற் போல் தான் குறைவாக வேகம் இருக்கும் இந்தப்பிரச்சினையை நீக்கி முழு இண்டர்நெட் வேகத்தையும் பெற செய்யும் வழி முறையை இன்று பார்க்கலாம்.

இண்டர்நெட் இணைப்பின் வேகம் நாடுகளுக்கு நாடு வேறுபட்டாலும் ஒரு சில நாடுகளில்இணையத்தின் வேகம் எல்லோருக்கும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை, இதற்காக நாம் பெரிதாக எதுவும் செய்ய வேண்டும் நம் கணினியில் ஒரு சிறிய மாற்றம் செய்து இணையத்தின் முழு வேகத்தையும் எந்தத்தடையும் இல்லாமல் பயன்படுத்தலாம்.

சாதாரணமாக அன்லிமிடட் இண்டர்நெட் ( Unlimited Internet) இணைப்பு தான் எல்லோருக்கும் கொடுக்கப்பட்டிருக்கும் இதில் இணைப்பு வேகம் குறைந்தபட்சமாக ( Limited Speed) இருக்கும் பல மணி நேரம் செலவு செய்துதான் பெரிய அளவிளான கோப்புகளை தறவிரக்க முடியும். இதைத்தவிர்த்து நம் கணினியில் ஒரு சில மாற்றம் செய்வதன் மூலம் முழு இண்டர்நெட் வேகத்தையும் பெறுவது எப்படி என்பதைப்பற்றி பார்க்கலாம். விண்டோஸ் எக்ஸ்பி ( Windows Xp ) கணினி வைத்திருப்பர்களுக்கு மட்டுமே இந்த முறை வேலை செய்யும், முதலில் Start Button -ஐ சொடுக்கி Run என்பதை தேர்ந்தெடுத்து சொடுக்க வேண்டும், Run விண்டோவில் gpedit.msc என்று தட்டச்சு செய்த்து Ok பொத்தானை சொடுக்க வேண்டும் அடுத்து வரும் திரையில் இணையத்தின் அபார வளர்ச்சி Computer Configuration என்ற மெனுவிற்கு அடியில் இருக்கும் Administrative Templates என்பதை தேர்ந்தெடுத்து அதில் வரும் sub menu -வில் Network என்பதை தேர்ந்தெடுத்து அதில் வரும் Sub menu வில் QoS Packet Scheduler என்பதை சொடுக்க வேண்டும். இதில் Limit Reservable Bandwidth என்பதை சொடுக்கி Enabled என்பதை தேர்ந்தெடுத்து அதற்கு அடியில் இருக்க்கும் Band width Limit என்பதில் 4% கொடுத்து Ok பொத்தானை சொடுக்கி சேமித்து வெளியே வரவேண்டியது தான் அடுத்து கணினியை ஒரு முறை restart செய்து பார்த்தால் இணைப்பின் வேகம் முழுமையாக தெரியும்.

வீடியோவுடன் நம் பயோடேட்டா (Resume) உருவாக்க உதவும் புதுமையான தளம்.

தொழில்நுட்பத்தின் வேகமான முன்னேற்றம் பல புதுமையான சிந்தனைகளையும் தினமும்வெளிவந்து கொண்டு தான் இருக்கிறது அந்த வகையில் இன்று வீடியோவுடன் பயோடேட்டா உருவாக்க ஒரு தளம் உதவுகிறது இதைப் பற்றித்தான் இந்தப்பதிவு.
படம் 1

மாற்றம் ஒன்றே மாற்றம் இல்லாதது என்ற சொல் சரியாக இப்போது தான் பொருந்தி வருகிறது.பயோடேட்டா உருவாக்குவதில் பல வித்தியாசமான புதுமையான ஐடியாக்களை நாளும் பல இணையதளங்கள் அறிமுகப்படுத்திக் கொண்டு தான் இருக்கின்றன அந்த வகையில் இதுவரை யாரும் யோசிக்காத வண்ணம் புதுமையான முறையில் வீடியோவுடன் நம் பயோடேட்டா உருவாக்கலாம் என்பதை ஒரு தளம் அறிமுகப்படுத்தியுள்ளது இனி இதைப்பற்றி விரிவாக பார்க்கலாம்.
இணையதள முகவரி : https://www.kareer.me
இத்தளத்திற்கு சென்று நாம் படம் 1-ல் காட்டியபடி Start Your FREE Resume Now என்ற பொத்தானை சொடுக்கி வரும் திரையில் நம் தகவல்களை முழுமையாக கொடுக்க வேண்டும், இவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு எல்லாம் பதில் அளித்த பின்னர் நம் பயோடேட்டாவே புதுமையாகவும் அழகாகவும் வடிவமைத்து நாம் எதில் திறமைசாலிகள் என்பதை பயோடேட்டா வெளிப்படையாக காட்டுகிறது. இத்துடன் நாம் நம்மைப்பற்றிய ஒரு அறிமுகத்தையும் என்னவெல்லாம் திறமை இருக்கிறது என்பதை வெப்காமிரா உதவியுடன் பதிவு செய்தும் அனுப்பலாம். நம் பயோடேட்டாவை பார்ப்பவர்கள் நம் வீடியோவையும் பார்ப்பதுடன் அவர்கள் நம் பயோடேட்டாவைப்பற்றி என்ன கருத்து சொல்கின்றனர் என்பதை பதிவு செய்யும் வசதியும் இருக்கிறது அத்துடன் நாம் உருவாக்கிய பயோடேட்டாவை எளிதில் யாருடனும் பகிர்ந்து கொள்ளும் வசதியும் இருக்கிறது. புதுமை விரும்பிகளும் வேலையில்லாத நம் நண்பர்களும் இது போல் ஒரு அழகான பயோடேட்டா உருவாக்கி எளிதில் பெரிய வேலையை பெறலாம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
 

தட்டச்சு செய்யும் வார்த்தைகளை ஒலி கோப்பாக வாசிக்கும் பயனுள்ள தளம்.

தட்டச்சு செய்த வார்த்தைகளை படிக்க நாளும் ஒரு இலவச மென்பொருளும் பல இணைய தளங்களும் வந்து கொண்டு தான் இருக்கின்றன அந்த வகையில் இன்று நாம் பார்க்க இருக்கும் தளம் நாம் தட்டச்சு செய்த வார்த்தையை அழகான தரமான ஆடியோவாக மாற்றி கொடுக்கிறது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
படம் 1
நம் பெயரை அல்லது நம் நிறுவனத்தின் பெயரை வெளிநாட்டினர் படித்தால் எப்படி இருக்கும் கூடவே நாம் பேசும்விதமும் அவர்கள் வார்த்தையை உச்சரிக்கும் விதமும் சற்றுவித்தியாசமாக இருக்கும். இன்று நாம் பார்க்க இருக்கும் தளத்தில் நாம் தட்டச்சு செய்த வார்த்தைகளை ஆண் குரலில் படித்தால் எப்படி இருக்கும் என்றும் பெண் குரலில் படித்தால் எப்படி இருக்கும் என்றும் அழகாக படித்துக் காட்டுகிறது.
இணையதள முகவரி : http://www.abc2mp3.com/convert.php
இத்தளத்திற்கு சென்று படம் 1-ல் காட்டியபடி Text to Convert என்பதில் நாம் எந்த வார்த்தையை ஒலி கோப்பாக மாற்ற வேண்டுமோ அந்த வார்த்தையை கொடுக்க வேண்டும் அதிகபட்சமாக 2000 வார்த்தைகள் வரை தட்டச்சு செய்யலாம். தட்டச்சு செய்து முடித்தபின் Email Address என்பதில் நம் இமெயில் முகவரியை கொடுக்க வேண்டும். இமெயில் மூலம் தான் நமக்கு ஆடியோ கோப்பு கிடைக்கும் அதனால் சரியான இமெயில் முகவரியை கொடுக்க வேண்டும். அடுத்து இருக்கும் Voice to Use என்பதில் ஆண் குரல் அல்லது பெண் குரல் யார் குரல் வேண்டுமோ அதையும் தேர்ந்தெடுக்க வேண்டும். அடுத்து Speed என்பதில் வார்த்தைக்கான வேகம் எவ்வளவு இருக்க வேண்டும் என்பதையும் தேர்ந்தெடுத்து பின் Sucrity image இல் இருக்கும் வார்த்தையை தட்டச்சு செய்து Submit என்ற பொத்தானை சொடுக்கினால் போதும். நாம் கொடுத்த வார்த்தைகள் ஒலி கோப்புகளாக மாற்றப்பட்டு நமக்கு இமெயில் அனுப்ப்பட்டுவிடும். கண்டிப்பாக இந்தத்தளம் எழுத்து வடிவ கோப்புகளை ஒலி கோப்புகளாக மாற்ற விரும்பும் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.
நன்றி: winmani.com
 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக