புதன்

தைரொயிட் நோய்கள்

தொண்டையில் கழலை இல்லை, தைரொயிட் நோயா ?
"கை கால் உளைவு, களைப்பு, உடம்பு நோ, சோம்பல், தூக்கக் குணம், மலச்சிக்கல், உடம்பு பாரமாக இருக்கு, தசைப்பிடிப்பு ...." என்று சொல்லிக் கொண்டே போனாள்.
அந்தப் பெண்மணியின் நோய் அறிகுறிகள் தண்டவாளம் போல முடிவின்றி நீண்டு கொண்டே போயின. அவரை நோட்டமிட்டேன்.
வயது அய்ம்பது இருக்கும். 'வதனமே சந்திரபிம்பமோ' என்பது போல உருண்ட வட்ட முகம், கொழுத்த உடம்பு, வரண்ட தோல், சற்றுக் கரகரத்த குரல், அதிகம் கொட்டியதால் அடர்த்தி குறைந்த தலை முடி.

அவர் கூறிய அறிகுறிகளையும், நான் அவதானித்த குறிகளையும் இணைத்துப் பார்க்கும் போது இவருக்கு தைரொயிட் சுரப்பியின் செயற்பாடு குறைவாக இருக்கலாமோ எனத் தோன்றியது.
இவற்றுடன்
குளிர் சுவாத்தியத்தைத் தாங்க முடியாத தன்மை,
மறதி,
மனச் சோர்வு,
தசைப் பிடிப்பு போன்ற அறிகுறிகளும் சேர்ந்திருப்பதுண்டு.
நாடி பிடித்துப் பார்த்தபோது நாடித் துடிப்பு சற்றுக் குறைந்திருந்தமை எனது சந்தேகத்தை வலுப்படுத்தியது. இளம் பெண்களுக்கு மாதவிடாய்க் குழப்பங்களும் ஏற்படுவதுண்டு.
"உங்களுக்கு தொண்டையில் உள்ள தைரொயிட் சுரப்பி வேலை செய்வது குறைவு போல இருக்கு. இரத்தம் பரிசோதித்துப் பார்ப்போம்" என்றேன்.
"எனக்கு தொண்டையில் வீக்கம் ஒன்றும் கிடையாதே. ஏன் தைரொயிட் நோய் என்கிறீர்கிறீர்கள்?" என என் முடிவில் சந்தேகம் எழுப்பினார்.
தைரொயிட் என்பது எமது தொண்டைப் பகுதியில் உள்ள ஒரு சுரப்பி. இதனால் தைரொயிட் நோய் என்றாலே தொண்டைப் பகுதியில் கழலை என்பதுதான் பெரும்பாலானவர்களின் எண்ணமாயிருக்கிறது.

பள்ளிப் பாடப் புத்தகத்தில் படித்த அயடின் குறைபாட்டால் வரும் தொண்டைக் கழலை (Goitre) தான் பலரின் ஞாபகத்திற்கு வரும். எனவே அவரது சந்தேகத்தில் நியாயம் இருக்கவே செய்கிறது.

சுரப்பியில் வீக்கம் எதுவும் இல்லாமலே பல தைரொயிட் நோய்கள் வருவதுண்டு. அது
குறைவாகச் சுரப்பதால் ஏற்படும் கைபோதைரொயிடிசம் (Hypothyroidism),
அதிகம் சுரப்பதால் ஏற்படும் கைபேர்தைரொயிடிசம் (hyperthyroididm) ஆகியவை இத்தகையவே.
தொண்டையில் உள்ள தைரொயிட் சுரப்பியில் வீக்கம் (கழலை)இருந்தால் அது முன்பு குறிப்பிட்ட
அயடின் குறைபாட்டால் ஏற்படும் கட்டியாகவோ, அல்லது
நீர்க் கட்டியாகவோ (Cyst) இருக்கலாம்.
புற்று நோயாலும் அவ்விடத்தில் கட்டி தோன்றலாம்.
எனவே தைரொயிட் சுரப்பியில் பல்வேறு விதமான நோய்கள் ஏற்படலாம் என்பதை நாம் உணர வேண்டும். அவற்றிற்கு வெவ்வேறு விதமான சிகிச்சை முறைகள் இருக்கின்றன. எத்தகைய சிகிச்சை தேவையென வைத்தியர்தான் தீர்தானிக்க முடியும்.
மேற் கூறிய பெண்ணுக்கு இரத்தப் பரிசோதனைகள் செய்தபோது அது சுரப்பியின் குறைச் செயற்பாட்டால் வரும் நோய் (Hypothyroidism) என்பது தெளிவாகியது. தைரொக்சின் (Thyroxine) மாத்திரைகள் கொடுத்தபோது அறிகுறிகள் நீங்கிக் குணமாகியது.
ஆயினும் அம் மருந்தை அவர் பெரும்பாலும்
வாழ்நாள் முழுவதும் உபயோகிக்க வேண்டி நேரிடும்.
காலையில் வெறும் வயிற்றில் போட வேண்டிய மாத்திரை அது.
மூன்று அல்லது ஆறு மாதங்களுக்கு ஒரு முறை இரத்தப் பரிசோதனை செய்து மருந்தின் அளவை தீர்மானிக்க வேண்டியிருக்கும்.
தைரொயிட் நோய்கள் பலவிதம் - கட்டியில்லாமலும் கூட
"கை கால் உளைவு, களைப்பு, உடம்பு நோ, சோம்பல், தூக்கக் குணம், மலச்சிக்கல், உடம்பு பாரமாக இருக்கு, தசைப்பிடிப்பு ...." என்று சொல்லிக் கொண்டே போனாள்.
அந்தப் பெண்மணியின் நோய் அறிகுறிகள் தண்டவாளம் போல முடிவின்றி நீண்டு கொண்டே போயின.
அவரை நோட்டமிட்டேன்.
தைரொயிட் ஹோர்மோன் குறைவாகச் செயற்படல்

வயது அய்ம்பது இருக்கும். 'வதனமே சந்திரபிம்பமோ' என்பது போல உருண்ட வட்ட முகம், கொழுத்த உடம்பு, வரண்ட தோல், சற்றுக் கரகரத்த குரல், அதிகம் கொட்டியதால் அடர்த்தி குறைந்த தலை முடி.

குறைவாகச் செயற்படும் தைரொயிட்

அவர் கூறிய அறிகுறிகளையும், நான் அவதானித்த குறிகளையும் இணைத்துப் பார்க்கும் போது இவருக்கு தைரொயிட் சுரப்பியின் செயற்பாடு குறைவாக இருக்கலாமோ எனத் தோன்றியது.
இவற்றுடன்
குளிர் சுவாத்தியத்தைத் தாங்க முடியாத தன்மை,
மறதி,
மனச் சோர்வு,
தசைப் பிடிப்பு போன்ற அறிகுறிகளும் சேர்ந்திருப்பதுண்டு.
நாடி பிடித்துப் பார்த்தபோது நாடித் துடிப்பு சற்றுக் குறைந்திருந்தமை எனது சந்தேகத்தை வலுப்படுத்தியது. இளம் பெண்களுக்கு மாதவிடாய்க் குழப்பங்களும் ஏற்படுவதுண்டு.
"உங்களுக்கு தொண்டையில் உள்ள தைரொயிட் சுரப்பி வேலை செய்வது குறைவு போல இருக்கு. இரத்தம் பரிசோதித்துப் பார்ப்போம்" என்றேன்.
"எனக்கு தொண்டையில் வீக்கம் ஒன்றும் கிடையாதே. ஏன் தைரொயிட் நோய் என்கிறீர்கிறீர்கள்?" என என் முடிவில் சந்தேகம் எழுப்பினார்.
தைரொயிட் என்பது எமது தொண்டைப் பகுதியில் உள்ள ஒரு சுரப்பி. இதனால் தைரொயிட் நோய் என்றாலே தொண்டைப் பகுதியில் கட்டி அல்லது கழலை இருக்கும் என்பதுதான் பெரும்பாலானவர்களின் எண்ணமாயிருக்கிறது.

பள்ளிப் பாடப் புத்தகத்தில் படித்த அயடின் (Iodine) குறைபாட்டால் வரும் தொண்டைக் கழலை (Goitre) தான் பலரின் ஞாபகத்திற்கு வரும். எனவே அவரது சந்தேகத்தில் நியாயம் இருக்கவே செய்கிறது.

சுரப்பியில் வீக்கம் எதுவும் இல்லாமலே பல தைரொயிட் நோய்கள் வருவதுண்டு. அது
குறைவாகச் சுரப்பதால் ஏற்படும் கைபோதைரொயிடிசம் (Hypothyroidism),
அதிகம் சுரப்பதால் ஏற்படும் கைபேர்தைரொயிடிசம் (hyperthyroididm) ஆகியவை இத்தகையவே.
அதீத தைரொயிட் செயற்பாடு

தொண்டையில் உள்ள தைரொயிட் சுரப்பியில் வீக்கம் (கழலை)இருந்தால் அது முன்பு குறிப்பிட்ட
அயடின் குறைபாட்டால் ஏற்படும் கட்டியாகவோ, அல்லது
நீர்க் கட்டியாகவோ (Cyst) இருக்கலாம்.
புற்று நோயாலும் அவ்விடத்தில் கட்டி தோன்றலாம்.
எனவே தைரொயிட் சுரப்பியில் பல்வேறு விதமான நோய்கள் ஏற்படலாம் என்பதை நாம் உணர வேண்டும். அவற்றிற்கு வெவ்வேறு விதமான சிகிச்சை முறைகள் இருக்கின்றன. எத்தகைய சிகிச்சை தேவையென வைத்தியர்தான் தீர்தானிக்க முடியும்.
தொண்டையில் கழலையுள்ள தைரொயிட் (Goiter)
இது பொதுவாக கடற்கரையிலிருந்து தொலை தூரத்தில் இருக்கும் பகுதியில் அயடின் குறைவான பகுதியில் உள்ளவர்களுக்கே வருகிறது. இதைத் தடுக்கவே இப்பொழுது அயடின் கலந்த உப்பு பாவனையில் உள்ளது.
இத்தகைய கட்டி பொதுவாக
பெண்களில் அதிகமாக இருக்கும்
பொதுவாக 40 வயதிற்கு மேற்பட்டவர்களில் அதிகம்
ஒரே குடும்பத்தில் பலருக்கு வருவதற்கு வாய்ப்பு அதிகம்
உணவில் போதிய அயடின் இல்லாதவர்களுக்கு வரும்
மேற் கூறிய பெண்ணுக்கு இரத்தப் பரிசோதனைகள் செய்தபோது அது சுரப்பியின் குறைச் செயற்பாட்டால் வரும் நோய் (Hypothyroidism) என்பது தெளிவாகியது. தைரொக்சின் (Thyroxine) மாத்திரைகள் கொடுத்தபோது அறிகுறிகள் நீங்கிக் குணமாகியது.
ஆயினும் அம் மருந்தை அவர் பெரும்பாலும்
வாழ்நாள் முழுவதும் உபயோகிக்க வேண்டி நேரிடும்.
காலையில் வெறும் வயிற்றில் போட வேண்டிய மாத்திரை அது.
மூன்று அல்லது ஆறு மாதங்களுக்கு ஒரு முறை இரத்தப் பரிசோதனை செய்து மருந்தின் அளவை தீர்மானிக்க வேண்டியிருக்கும்.
டாக்டர்.எம்.கே.முருகானந்தன்
குடும்ப வைத்திய நிபுணர்
Engr.Sulthan

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக