சனி

காடை வளர்ப்பு

காடை வளர்ப்பு தமிழ்நாட்டில் பிரபலமாகிக் கொண்டு வருகின்றது. காடைகள் பெரும்பாலும் இறைச்சிக்காக வளர்க்கப்படுகின்றன. டெல்லி, சென்னை, பெங்களூரு, திருச்சி, மதுரை மற்றும் கோவை போன்ற மாநகரங்களிலும் தமிழகத்தின் ஏனைய நகரங்களிலும் காடை வளர்ப்புப் பண்ணைகள் பெருமளவில் நடத்தப்படுகின்றன.
இறைச்சிக் காடை வளர்ப்பின் முக்கிய அம்சங்கள்
மிகக் குறைந்த இடத்தில் அதிக எண்ணிக்கையில் ஜப்பானிய காடையை வளர்க்கலாம். கோழிவளர்ப்பினைப் போன்று, அதிக அளவில் முதலீடு தேவையில்லை. இத்தொழிலில் குறைந்த மூலதனத்துடன் சிறிது பயிற்சி பெற்ற யாரேனும் ஈடுபடலாம். ஜப்பானிய காடைகளுக்கு நோய் எதிர்ப்புத் திறன் அதிகம். இதனால் எந்த ஒரு தட்பவெப்ப நிலையிலும் காடைகள் நன்கு வளர்கின்றன. கோழிகளைப் போல் பல தடுப்பூசிகள் அளிக்கவேண்டிய அவசியம் இல்லை. ஜப்பானியக் காடைகள் ஐந்து முதல் ஆறு வாரத்திற்குள் விற்பனைக்குத் தயாராகி விடுகின்றன. இதனால் முதலீடு செய்த குறைந்த நாட்களிலேயே லாபத்தைப் பெற முடியும். ஜப்பானியக் காடை ஆறுவார காலத்தில் அதிகபட்சமாக 500 கிராம் அளவே தீவனம் உட்கோள்வதால் தீவனச் செலவு அதிகமின்றி குறைந்த முதலீட்டில் காடை வளர்ப்பை மேற்கொள்ள முடிகின்றது.
ஜப்பானியக் காடை இறைச்சி
சுத்தம் செய்யப்பட்ட காடை இறைச்சியின் எடை உயிருள்ள காடை எடையில் சுமார் 65 முதல் 70 சதவிகிதம் வரை இருக்கும். சுமார் 140 கிராம் எடை உள்ள காடையைச் சுத்தம் செய்தால் 100 கிராம் எடையுள்ள இறைச்சி கிடைக்கும். காடை இறைச்சி மிகவும் சுவையாக இருப்பதால் நல்ல விற்பனை விலை கிடைக்கின்றது. காடை இறைச்சியில் அதிகப் புரதமும் (20.5 சதவிகிதம்) குறைந்த அளவு கொழுப்பும் (5.8 சதவிகிதம்) இருப்பதால் குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் ஏற்ற உணவாய் கருதப்படுகின்றது.
ஜப்பானியக் காடை விற்பனை
ஒரு காடை வளர்ப்புக்கு ரூ. 7 வீதம் செலவாகும். ஒரு நாள் காடை குஞ்சு ரூ. 2 ஆகும். தீவனம் அதிகபட்சமாக 450 கிராம் கொடுக்க வேண்டியிருப்பதால் ரூ. 5 ஆகும். மற்றைய செலவு 50 காசு ஆக மொத்தம் ரூ. 7.50 ஒரு காடையை உற்பத்தி செய்து ரூ. 9க்கு விற்கலாம். ஆகவே ஒரு காடை வளர்ப்பு மூலம் ரூ. 1.50 கிடைக்க வாய்ப்புள்ளது. காடையை இறைச்சிக்காக விற்பனை செய்தால் அதிக இலாபம் கிடைக்கும்.
காடை வளர்ப்பு



ஜப்பானியக் காடை கடந்த சில வருடங்களாக நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. நாடு முழுவதும் முட்டை மற்றும் கறிக்காக பல காடை பண்ணைகள் உருவாகியுள்ளன.  தரமான இறைச்சிக்கான விழிப்புணர்வே இதற்கு காரணம்.
கீழ் கண்ட காரணிகள், காடை வளர்ப்பை பொருளாதார ரீதியாகவும், தொழில்நுட்ப ரீதியாகவும் எளிமையாக்கி உள்ளனமிகக் குறைவான சந்ததி இடைவெளிஅதிக நோய் எதிர்ப்பு திறன் கொண்டவைதடுப்பூசி தேவையில்லைகுறைவான இடவசதி இருந்தால் போதுமானதாகும்கையாளுவற்கு எளிமைகுறுகிய காலத்தில் பருவமடைதல்அதிக அளவில் முட்டையிடும் திறன் - பெண் காடைகள் 42 நாட்களில் முட்டையிட துவங்குகின்றன
கரி-உத்த ம்மொத்த முட்டை பொரிப்புத்திறன்  :   60 - 76%4 வார எடை   :   150 கிராம்5 வார எடை :   170 - 190 கிராம்4 வாரத்தில் தீவனத்திறன்  :  2.515 வாரத்தில் தீனவ திறன் :   2.80அன்றாடம் உட்கொள்ளும் தீவன அளவு : 25 - 28 கிராம்
கரி-உஜாவால்
மொத்த முட்டைகளின் பொரிப்பு திறன்     :   65%4 வார எடை  :   140 கிராம்5 வார எடை :   170 - 175 கிராம்4 வாரத்தில் தீவனத்திறன்  :   2.93அன்றாடம் உட்கொள்ளும் தீவன அளவு : 25 - 28 கிராம்கரி-ஸ்வேதாமொத்த முட்டைகளின் பொரிப்பு திறன்  :  50-60 %4 வார எடை    :   135 கிராம்5 வார எடை :   155-165  கிராம்4 வாரத்தில் தீவனத்திறன்   :  2.855 வாரத்தில் தீனவ திறன்  :   2.90அன்றாடம் உட்கொள்ளும் தீவன அளவு : 25 கிராம்கரி-பியர்ல்மொத்த முட்டைகளின் பொரிப்பு திறன்  :    65 - 70 %4 வார எடை   :    120 கிராம்அன்றாடம் உட்கொள்ளும் தீவன அளவு : 25 கிராம்50% முட்டை உற்பத்தி வயது :    8 - 10 வாரம்முட்டை உற்பத்தி      :    285 - 295 முட்டைகள்காடை வளர்ப்பின் முக்கிய அம்சங்கள்

மிகக் குறைந்த இடத்தில் அதிக எண்ணிக்கையில் காடையை வளர்க்கலாம்.குறைந்த முதலீட்டில் தொடங்கலாம்.காடைகளுக்கு நோய் எதிர்ப்பு திறன் அதிகம்.காடைகளை 5 முதல் 6 வாரங்களில் விற்பனை செய்யலாம்.மிகக் குறைந்த அளவு தீவனமே போதுமானது.காடை இறைச்சியில் அதிக அளவு புரதமும் 22% குறைந்த அளவு கொழுப்பும் 5 % இருப்பதால் குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் ஏற்ற உணவாகும்.ஊட்ட சத்து நிறைந்த முட்டை.
கொட்டகை அமைப்பு.

1.ஆழ்கூள முறை இம்முறையில் ஒரு சதுர அடியில் 6 காடைகள் வரை வளர்க்கலாம்.காடைகள் முதல் இரண்டு வாரம் வரை ஆழ்கூள முறையில் வளர்த்துப் பின்கூண்டுகளுக்கு மாற்றி ஆறு வாரம் வரை வளர்க்கலாம். இதனால் வளரும்பருவத்தில் அதிகம் அலைந்து திரிந்து, உட்கொண்ட தீனியின் எரிசக்தி வீணாகிகுறைந்த எடைகொண்டதாக உருவாவதை தடுக்கலாம்.2. கூண்டு முறை -
 கூண்டு முறை வளர்ப்பில் காடைகள்வயதுகூண்டின் அளவுகாடைகளின் எண்ணிக்கை
முதல் 2வாரங்களுக்கு3x2 1/2x1 1/2அடி100
3 முதல் 6வாரங்களுக்கு4x2 1/2x1 1/2அடி50
கூண்டின் அடிப்பகுதி மற்றும் பக்கவாட்டு கம்பிவலை 1.5 க்கு 1.5 செ.மீ.உள்ளதாக இருக்க வேண்டும்.கூண்டுகளை 4 முதல் 5 அடுக்குகளாக அமைக்கலாம். ஒவ்வொரு கூண்டுக்கும்கீழே தகடுகள் பொருத்தி கழிவுகளை தினமும் அப்புறப்படுத்தலாம்.
தீவனப் பாரமரிப்பு

காடைகளுக்கு தீவனங்களை கீழ்கண்டவாறு தயாரிக்கலாம்

தீவனப் பொருட்கள்குஞ்சுப் பருவம்வளரும் பருவம்
0-3 வாரங்கள்4-6 வாரங்கள்
மக்காச்சோளம்2731
வெள்ளைச் சோளம்1514
எண்ணெய் நீக்கிய அரிசி தவிடு88
கடலை பிண்ணாக்கு1717
சூரிய காந்தி புண்ணாக்கு12.512.5
சோயா மொச்சை தூள்8-
மீன் தூள்1010
தாது உப்புகள்2.52.5
கிளிஞ்சல் தூள்-5

காடை தீவனம் மிக சிறிய துகள்களாக இருப்பது மிகவும் அவசியம்.ஐந்து வார வயது வரை ஒரு காடை 500 கிராம் தீவனத்தை உட்கொள்ளும்.ஆறு வார வயதிற்கு மேல் உள்ள காடைகளுக்கு நாள் ஒன்றுக்கு 30-35 கிராம்தீவனத்தை அவற்றின் முட்டை உற்பத்திற்கு ஏற்ப அளிக்க வேண்டும்.காடைகளின் தீவன மாற்று திறன் 12 முட்டை இடுவதற்கு 400 கிராம் தீவனம்உட்கொள்கிறது.தீவனம் தயாரிக்க முடியாத போது, இறைச்சிக் கோழிக்கான ஆரம்பக்காலதீவனத்தை 75 கிலோ வாங்கி அதனுடன் 5 கிலோ பிண்ணாக்கு தூளை கலந்துகொடுக்கலாம். தானியத்தின் அளவு பெரிதாக இருப்பின் மீண்டும் ஒருமுறைஅரைத்து தூளின் அளவை குறைத்து உபயோக்கிலாம்
காடை பண்ணை பாரமரிப்பு முறைகள்


         காடை குஞ்சுக்கொட்டகை

 6 வார வயதில் பெண் காடைகள் 175-200 கிராம் எடையும் ஆண் காடை 125-150கிராம் எடையும் இருக்கும்.காடைகள் 7 வார வயதில் முட்டையிட ஆரம்பிக்கும். மாலை நேரத்தில் காடைகள் முட்டையிடும்.காடைகள் 22 வது வயது வரை முட்டை இடுகின்றன.காடை முட்டை எடை சுமார் 9 கிராம் இருக்கும்.ஆண் காடைகளின் மார்பு குறுகலாகவும், பழுப்பு வெள்ளை நிறமும் கலந்து ஒரே சீராக இருக்கும். பெண் காடைகளின் மார்பு பகுதி விரிந்ததும் பழுப்பு நிறத்துடன் கறுப்பு சாம்பல் நிற புள்ளிகள் கழுத்து, முகம் மற்றும் மார்பு பகுதிகளில் காணப்படும். நான்கு வாரங்களுக்கு பிறகே ஆண், பெண் காடைகளை இனம்கண்டறிய முடியும்முட்டைக்காக காடைகள் வளர்க்கும்போது 4 வது வாரத்திலேயே ஆண் காடைகளை பெட்டை காடைகளிடமிருந்து பிரித்து வளர்க்க வேண்டும்.முட்டையிடும் காடைகளுக்கு 16 மணி நேரம் வெளிச்சம் அவசியம் இருக்கவேண்டும்
காடைக்குஞ்சு பராமரிப்பு முறைகள்

காடைக்குஞ்சுகள் பொரித்தவுடன் அளவில் மிகச்சிறியவையாக 8-10 கிராம் வரைஎடையுள்ளதாக இருக்கும். இதனால் கோழிக்குஞ்சுகளை விடக் காடைக்குஞ்சுகளுக்கு அதிகம் வெப்பம் தேவைப்படும். போதுமான வெப்பம் மின்விளக்கின் மூலம் கிடைக்காவிட்டால் அவை கூட்டமாக ஒன்றின் மீது ஒன்று ஏறி நெருக்கி மூச்சுத்திணறி குஞ்சுகளில் இறப்பு அதிகம் காணப்படும். வேகமான குளிர் காற்று வீசும் போதும் சன்னல் கதவுகள் திறந்து வைக்கப்பட்டிருந்தாலும், கொட்டகையில் பக்கவாட்டில் தொங்க விடப்பட்டுள்ள மறைப்பு விலகி விட்டாலும், மின்சாரத்தடை ஏற்படும் போதும் காடைக்குஞ்சுகள் ஒன்றுடன் ஒன்று நெருக்கி இறப்பு ஏற்பட வாய்ப்புண்டு
இனப்பெருக்கம்




காடை முட்டைகாடைகள் 7 வார வயதில் முட்டையிட ஆரம்பித்து, 8 வது வாரத்தில் முட்டைஉற்பத்தி 50 விழுக்காடு நிலையை அடையும்.கருவுட்ட முட்டை பெற வேண்டுமெனில் பெட்டை காடைகளே ஆண் காடைகளுடன் 8 - 10 வார வயதில் சேர்க்க வேண்டும். 5 பெண் காடைகளுக்கு ஒரு ஆண்காடை என்ற விகித்த்தில் வளர்க்கலாம்.அடைவைத்த 18 வது நாள் காடைக்குஞ்சுகள் வெளிவரும்.500 பெண் காடைகளைக் கொண்டு வாரத்திற்கு 1500 காடை குஞ்சுகளை உற்பத்திசெய்யலாம்.கோழிக் குஞ்சுப் பொரிப்பகத்தை சரியான படி மாற்றம் செய்தால் அதிக காடைமுட்டைகளை அடைவைக்கலாம்.காடைகளில் ஏற்படும் நோய்கள்முட்டையிடும் காடைகளுக்கு போதுமான தாது உப்புகளும், வைட்டமின்களும்போதுமான அளவில் அளிக்கப்படாததால் குஞ்சுகள் பொரிக்கும் போது அவற்றின் கால் வலுவிலந்தும், நோஞ்சானாகவும் இருக்கும். இதனை தவிர்க்க இனப்பெருக்கம் செய்யும் காடைகளுக்கு போதுமான அளவு தாதுஉப்புகளும்,வைட்டமின்களும் கிடைப்பதை உறுதி செய்யவேண்டும்கோழிகளைவிட காடைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகமிருப்பதால்நோய்களுக்கு எதிராக தடுப்பூசி அளிக்கத் தேவையில்லை.முறையான காடைக்குஞ்சு பராமரிப்பு, பண்ணைகளில் முறையான கிருமி நீக்கம்,எப்பொழுதும் காடைகளுக்கு தூய்மையான குடிநீர், தரமான கலப்புத்தீவனம்போன்றவற்றை கையாண்டால் காடைகளில் இறப்பினை தடுக்கலாம்
காடை இறைச்சி
சுத்தம் செய்யப்பட்ட காடை இறைச்சியின் எடை உயிருள்ள காடையின் எடையில் சுமார் 70 முதல் 73% வரை இருக்கும். 140 கிராம் எடையுள்ள காடையிலிருந்து 100 கிராம் எடை இறைச்சி கிடைக்கிறது
காடை வளர்ப்பில் உள்ள சிரமங்கள்
ஆண் காடைகளின் கூவும் சத்தம் ரொம்ப இடையுறாக இருக்கும். ஆண் பெண் காடைகளை சேர்த்து வளர்க்கும் போது ஆண் காடைகள் மற்றகாடைகளை கொத்தி குருடாகவும் சில சமயம் இறக்கவும் செய்கின்றன.கூண்டுகளை தினமும் சுத்தம் செய்யாவிட்டால் துர்நாற்றம் வீசும்.

ஞாயிறு

நன்னாரி ( மூலிகை ) வேர்

நன்னாரி (Hemidesmus indicus ஆங்கிலத்தில் பொதுப்பெயர்: Indian Sarsaparilla) என்னும் தென்னிந்தியாவில் வளரும் நிலைத்திணை (தாவரம்) படரும் ஒரு கொடி இனம் ஆகும்.

இதன் கெட்டியான வேர் மணம் மிக்கது். இக் கொடியின் இலைகள் மாற்றிலை அமைப்பு கொண்டது. இலைகள் நீண்டு கண் அல்லது மீன் வடிவில் இருக்கும். இக்கொடியின் தண்டு மெல்லியதாகவும், குறுக்குவெட்டு வட்டமாகவும் இருக்கும்.
*
இக்கொடியின் பூக்கள் வெளிப்புறம் பசுமையாகவும், உள்புறம் கத்தரிப்பூ நிறத்திலும்(செம்மை கலந்த ஊதா நிறம்) இருக்கும். இச்செடி ஒரு மருத்துவ மூலிகையாகும்.
*
நன்னாரியின் சாறில் இருந்து ஒருவகையான பருகும் நீருணவு செய்வர். நன்னாரி சர்பத் என்று கூறப்படும். நன்னாரி சாறு இந்திய மருத்துவத்திலும் பயன்படுகின்றது. ஆயுர்வேத மருத்துவ முறையில் இதன் பெயர் அனாதமூலா (Anantmula.).
*
நன்னாரி குடிப்பதற்கு இதமாகவும், உடல் வியர்வையைக் கூட்டுவதற்கும், சிறுநீர் போக்கை கூட்டுவதற்கும் குருதியை தூய்மைப்படுத்துவதற்கும் பயன்படும் ஒரு பொருளாக கருதப்படுகின்றது. இது சிபிலிஸ் (syphilis), மூட்டுவலி, உடல் சூடு, மேல் பூச்சான தோல் நோய்களுக்கும் தீர்வாக பயன்படும் என்று கருதப்படுகின்றது.

ஆயுர்வேதத்தில் -நன்னாரியை சாரிப என்று கூறப்படுகின்றது.
மருத்துவ குணங்கள்:
1. மூலச்சூடு, மேக அனல், மேக வெட்டை, நீர்க்கடுப்பு, நீர்ச்சுருக்கு, வறட்டு இருமல் குணமாக...
*
2. பச்சை நன்னாரி வேர் 5 கிராம் எடுத்து அரைத்து 200 மில்லியளவு காய்ச்சிய பாலில் கலந்து 2 வேளை குடித்து வர மூலச்சூடு, மேக அனல், மேக வெட்டை, நீர்க்கடுப்பு, நீர்ச்சுருக்கு, வறட்டு இருமல் குணமாகும். தொடர்ந்து குடித்துவர இளநரை, பித்த நரை முடி மாறும். நன்னாரியில் மேலே உள்ள தோல், உள்ளிருக்கும் நரம்பு இவற்றை நீக்கிவிட்டு, வெளுத்த நிலையில் உள்ள சதையை மட்டும் 100 கிராம் எடுத்து, அதேயளவு மஞ்ஜிட்டி (இது நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும்) எடுத்து இரண்டையும் தண்ணீர் விட்டு நன்றாக அரைத்து 750 மில்லி நீரில் கலந்து அத்துடன் நல்லெண்ணெய் 1 1/2 கிலோ சேர்த்து சிறு தீயில் பதமாகக் காய்ச்ச வேண்டும். நல்லெண்ணெய் பொங்கி வரும். எனவே அடியில் பிடித்துள்ள கல்பத்தையும் திரும்பத் திரும்ப கிளறிக்கொண்டே இருக்கவேண்டும். கிளறாமல் இருந்தால் அடியில் பிடிக்கும். தீ அதிகமானால் பொங்கும். கவனமாகக் கையில் ஒட்டாமல் தங்கம் போல் திரண்டு வரும் சமயத்தில் இறக்கி வடிகட்டி அத்துடன் வெள்ளை குங்குலியம் 100 கிராம் எடுத்து இடித்துப் பொடி செய்து போட்டு, தேன் மெழுகு 100 கிராம் கூட்டிக் கலக்கி, நன்றாக ஆறிய பின்னர் கண்ணாடிப் புட்டியில் பாதுகாப்பாக வைக்கவும். நகச் சுற்று வந்தவர்களுக்கு இதை ஊற்ற, உடனே குணமாகும். 3 வருடம் வரை கெட்டுப் போகாமல் இருக்கும்.
*
3. பாரிச வாதம், தோல் நோய்கள், செரியாமை, பித்த குன்மம் குணமாக-நன்னாரி வேரை 20 கிராம் எடுத்து ஒன்றிரண்டாக இடித்து அரை லிட்டர் நீரில் போட்டு 200 மில்லியாக வற்றக் காய்ச்சி வடிகட்டி 100 மில்லியளவு 2 வேளையாகக் குடித்து வர நாள்பட்ட வாதம், பாரிச வாதம், தோல் நோய்கள், செரியாமை, பித்த குன்மம் குணமாகும்.
*
4. சிறு நஞ்சு, நீரிழிவு, வெட்டைச் சூடு, கிரந்தி, சொறி, சிரங்கு, தாகம், அதிபசி, மேகநோய் குணமாக-நன்னாரி பச்சை வேரை 20 கிராம் எடுத்து ஒன்றிரண்டாக இடித்துப் போட்டு 200 மில்லி நீரில் ஒரு நாள் முழுவதும் ஊறப்போட்டு பின்னர் வடிகட்டி 100 மில்லியளவு 2 வேளை குடித்து வரப் பித்த நோய், சிறு நஞ்சு, நீரிழிவு, வெட்டைச் சூடு, கிரந்தி, சொறி, சிரங்கு, தாகம், அதிபசி, மேகநோய் குணமாகும்.

*
5. நன்னாரி நீர் “தோன்றும் மழலைகள் உத்தாமணி வேரால், தோல் நோய்கள் மடிவது நன்னாரி வேரால்” என்பதன் மூலம் நன்னாரியின் நற்பண்பை நவிலலாம். நூறு மில்லி நீரில் ஐந்து கிராம் நன்னாரி வேரை நசுக்கிப் போட்டு கொதிக்க வைத்து காய்ச்சி வடிகட்டிய கருமை நிற கஷாயத்தை காய்ச்சிய பாலில் கலந்து இனிப்பு சேர்த்து உபயோகிக்கவும்.

*

6. சிறுநீர் நன்றாகப் பிரிய, வியர்வையைப் பெருக்கி உடலில் உஸ்ணத்தைத் தணித்து உடம்பை உரமாக்கக்கூடிய தன்மை உடையது. ஒற்றைத் தலைவலிக்கு, செரிமானம், நாட்பட்ட வாத நோய், பித்த நீக்கம், மேக நோய், பால்வினை நோய் ஆகியவற் ற்றை சரிசெய்யும் .

*

7. பச்சை நன்னாரி வேர் 5 கிராம் நன்கு அரைத்து 200 மி.லி. பாலில் சாப்பிட்டு வர மூலச்சூடு, மேக அனல், மேகவேட்டை, நீர்கடுப்பு, நீர் சுருக்கு, வறட்டு இருமல் ஆகியவை தீரும். நீண்ட நாள் சாப்பிட நரை மாறும்.

*
8. பச்சைவேரை 20 கிராம் சிதைத்து 200 மி.லி. நீரில் ஒரு நாள் ஊறவைத்து வடிகட்டி 100 மி.லி. வீதம் காலை, மாலை குடித்து வரப் பித்த நோய், சிறு நஞ்சு, நீரிழிவு, வேட்டைச்சூடு, கிரந்தி., சொறிசிரங்கு, தாகம், அதிக பசி, மேக நோய் தீரும். பத்தியம் அவசியம்.

*
9. வேர் 20 கிராம் அரைலிட்டர் நீரில் போட்டு 200 மி.லி. யாக்கி 100 மி.லி. வீதம் காலை, மாலை சாப்பிட்டு வர நாட்பட்ட வாதம், பாரிசவாதம். தொல்நோய்கள்,செரியாமை, பித்த குன்மம் தீரும்.

*

10. ஆண்மை பெருக நன்னாரி வேர் குடிநீரை இழஞ் சூடாக அருந்தி வரவேண்டும். வியர்வை நாற்றம் நீங்க மிளகு. உப்பு. புளி இவைகளுடன் நன்னாரியின் இலை, பூ, காய், கொடி, வேர் முதலியவற்றுடன் நெய்சேர்த்து வதக்கி 90 நாட்கள் உட்கொள்ள வேண்டும்.

*
11. குழந்தைகளின் உடலை தேற்ற -நன்னாரி வேர்ப் பட்டையை நீரில் ஊறவைத்து தேவையான அளவு பாலும், சர்க்கரையும், கலந்து குழந்தைகளுக்குக் கொடுக்க, உடலைத் தேற்றுவ தோடு நாட்பட்ட இருமலும், கழிசலும் நிற்கும்.

*
12. சிறு நீரகநோய்கள் தீர -நன்னாரிவேரை வாழையிலையில் வைத்துக் கட்டி எரித்து சாம்ப லாக்கி அதனுடன் தேவையான அளவு சீரகமும், சர்க்கரையும் பொடித்துக் கலந்து அருந்திவர சிறு நீரகநோய்கள் அனைத்தும் விலகும்.

*

13. வயிறு நோய்கள் தீர -நன்னாரி வேர் பொடியுடன் சமளவு கொத்துமல்லியைத் தூள் செய்து சேர்த்து அருந்திவர பித்த சம்பந்த மான கோளாருகள் நீங்கும். தவிர செரியாமை, பித்த குன்மம் தீரும்இவைகளில் உண்டாகும் நோய்கள் குணமாகும்.

*
14. விஷக் கடிக்கு -நன்னாரி வேர்ப் பொடியுடன் சோற்றுக் கற்றாழை சோறு சேர்த்து உண்ண விஷக் கடிகளால் உண்டாகும் பக்க விளைவுகள் நீங்கும்.

*

15. கல்லீரல் நோய் குணமாக -பெரு நன்னாரிக் கிழங்கை ஊறுகாய் செய்து சாப்பிடும் வழக்கம் உண்டு. இது கல்லீரலைக் குணப்படுத்தும், காமாலையும் குணமாகும், ஜீரண சக்தியையும் உண்டாக்கும். உடம்பு சூட்டைக் குறைக்கும், ஒவ்வாமைக்குச் சிறந்த மருந்து.
*
16. குணங்களில் -நீர் பெருக்கும்,உடலுக்கு குளிர்ச்சி தரும் ,பசி தூண்டும் ,காய்ச்சலை குறைக்கும் ,வெள்ளை படுதலை சரியாக்கும்.

*
17. உடல் குளிர்ச்சி அடைய வெயில் காலங்களில் நன்னாரி வேரை நன்றாக அலசி பச்சையாகவோ அல்லது நிழலில் உலர்த்திக் காயவைத்தோ மண்பானையில் போட்டு சுத்தமான நீரை அதில் ஊற்றி வைத்திருந்து அந்த நீரைக் குடித்தால், உடல் குளிர்ச்சி அடையும்.
18. குறிப்பு:
ரோட்டோரத்தில் கிடைக்கும் நன்னாரி சர்பத்தில் நன்னாரி எசன்சு மட்டுமே உள்ளது-இது நல்லதில்லை.
thanks விக்கிபீடியா.

நன்னாரி--கோடை வறட்சியை சமாளிக்க இயற்கை மருந்து
நன்னாரி

சுட்டெரிக்கும் வெயில் காலங்களில், நம் உடல் வியர்வை மூலம் நீரை இழந்து விடுகிறது. உடலில் வறட்சி ஏற்பட்டு, பசி மந்தப்பட்டு விடுகிறது. இழந்த நீரை ஈடுகட்ட அதிக அளவு தண்ணீரை குடிப்பதுடன், உடல் வறட்சியை நீக்க நாம் நாடுவது சில்லென்று குளிரூட்டப் பட்ட குளிர்பானங்களைத்தான். இந்த சில பானங்கள் ஜீரணசக்தியை மேலும் மந்தப்படுத் துவதுடன் சளி, இருமல், தொண்டைப்புண் போன்ற பிரச்சினைகளையும் தோற்றுவித்து விடும். உடலின் வறட்சியால் ரத்தத்தில் நீரின் அளவும்குறைந்து விடும். சிறுநீரின் அளவும் குறைந்துவிடும். நீர்எரிச்சல், நீர்சுருக்கு போன்ற பிரச்சினைகளும் தோன்றும்.
கோடை வறட்சியை சமாளிக்க இயற்கை பல மருந்துகளை நமக்கு அளித்துள்ளது. அதில் முக்கியமான ஒன்று நன்னாரி. நன்னாரியின் வேர்தான் மருத்துவத்திற்கு பயன்படுத்தப்படு கிறது. உலக நாடுகள் பலவற்றில் நன்னாரி வேர் பயன்படுத்தப் படுகிறது. இதன் வேர் தூள் செய்யப்பட்டு டீயாக பயன்பாட்டில் உள்ளது. நமது பரம்பரிய மருந்துகள் பலவற்றில் நன்னாரி வேர் பயன்படுகின்றது. நன்னாரியில் ஏராளமான மருத்துவ குணங்கள் நிறைந் துள்ளது. `சப்போனின்' என்ற உடலை தூய்மை செய்யும் பொருள் இதில் அதிகம் உள்ளது. உடல் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தன்மை உள்ளதால், நோய் எதிர்ப்பு சக்தி குறைவால் ஏற்படக்கூடிய முடக்கு வாதம், செதில் உதிர் தல் நோய் எனப்படும் சோரியா ஸிஸ், கரப்பான் போன்ற தோல் நோய்களுக்கு, இது சிறந்த மருந்து. சிறுநீரக நோய்கள் உடல் சூட்டால் பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதல் மற்றும் பால்வினை நோய் களுக்கு இது சிறந்த மருந்து.
உடலுக்கு உடனடியாக சக்தியளிக்க கூடிய இயற்கை ஸ்டீராய்டுகள் நன்னாரியில் நிறைந்து உள்ளதால் வெளிநாடுகளில் விளையாட்டு வீரர்கள் நன்னாரி டீயை அதிகம் விரும்பி பருகுகிறார்கள். உடற்பயிற்சி செய்வதால் உடலில் ஏற்படும் வெப்பம் தணிவதுடன் உடலுக்கு உடனடி சக்தியளிப்பதால் வீரர்களால் அதிகம் நன்னாரி பயன்படுத்தப்படுகிறது.
கோடையை குளிர்ச்சியாக கொண்டாட நன்னாரி பானம், நன்னாரி சர்பத் பருகி உடல் நலத்தை காத்து கொள்வோம்.
நன்னாரி பால்:
1. நன்னாரி - 200 கிராம்
2. சுக்கு - 50 கிராம்
3. ஏலக்காய் - 25 கிராம்.
செய்முறை:- நன்னாரியை இடித்து நடுவில் உள்ள நரம்பை நீக்கி கொள்ள வேண்டும். சுக்கின் மேல் தோலை நீக்கி கொள்ள வேண்டும். பின்பு எல்லா பொருட்களையும் மிக்சியில் இட்டு பொடி செய்து கொள்ள வேண்டும்.
தேவைப்படும் பொழுது 2 தேக்கரண்டி பொடியை 100 மி.லி நீரில் நன்கு கொதிக்க வைத்து வடிகட்டி அத்துடன் 100 மி.லி பால், 1 தேக்கரண்டி பனங்கற்கண்டு கலந்து பருகி வரலாம். காபி, டீ, அதிகம் பருகுபவர்கள் அதை தவிர்த்து இந்த நன்னாரி பாலை தினம் இரு வேளை பருகி வரலாம். நீரிழிவு நோயாளிகள் ஆவாரம்பூ (காய்ந்தது) 100 கிராம் கலந்து அரைத்து பயன்படுத்தினால் உடல் குளிர்ச்சி உண்டாகும். உடல் கழிவுகள் வெளியேறும். உடலுக்கு புத்துணர்ச்சி உண்டாகும். தோல் நோயால் துன்பப்படுபவர்கள் தினம் இதை பருக விரைவில் நல்ல குணம் தெரியும்.

நன்னாரி சர்பத்:
நன்னாரி - 200 கிராம்.
தண்ணீர் - ஒரு லிட்டர்.
சர்க்கரை - 1 கிலோ.
எலுமிச்சம்பழம் - 6 (சாறு எடுத்து கொள்ளவும்).
செய்முறை:
1. நன்னாரி வேரை நன்கு இடித்து வைத்துக் கொள்ளவும்.
2. ஒரு பாத்திரத்தில் நீரை நன்கு கொதிக்க வைத்து இடித்து வைத்துள்ள நன்னாரியை அதில் இட்டு, அடுப்பை அணைத்து இறுக்கமாக மூடி எட்டு மணி நேரம் வைத்து விடவும்.
3. எட்டு மணி நேரம் கழித்து நீரை வடிகட்டி அத்துடன் சர்க்கரை கலந்து நன்கு கம்பி பதம் வரும் வரை காய்ச்சி, ஆற வைத்து கொள்ளவும்.
4. ஆறிய பின் எலுமிச்சை சாறு கலந்து ஒரு பாட்டிலில் ஊற்றி கொள்ளவும்.
5. எலுமிச்சம் சாறு தேவைப்பட்டால் சேர்க்கலாம். நன்னாரி மட்டுமே கூட நல்ல சுவை மற்றும் மனம் நிறைந்து இருக்கும்.
தேவைப்படும் பொழுது குளிர்ந்த நீரில் 2 தேக்கரண்டி சர்பத் கலந்து பருகி வந்தால், வியர்வையால் உண்டாகும் நம் உடலின் நீர் இழப்பை ஈடுகட்டுவதுடன், நம் உடல் கழிவுகளும் சிறந்த முறையில் வெளியேறி உடலுக்கு புத்துணர்ச்சி உண்டாக்கும். நன்னாரி வேர் மருந்து கடைகளில் கிடைக்கும்.
இணையத்திலிருந்து திரட்டியவை

ஜோரான லாபம் தரும் சோப் தயாரிப்பு

ஆர்.பி.கருணாகரன் : சோப் பவுடர், சோப் ஆயில்  போன்ற வை இருந்தாலும் பலர் துவைப்பதற்கு சோப்பு கட்டிகளையே பயன்படுத்து கின்றனர்.  அதிக கிராக்கி இருக்கும் சலவை சோப்புகளை தயாரிக்க கற்றுக் கொண்டால் நல்ல லாபம் பார்க்கலாம் என்று கூறுகிறார் கோவை உடையாம்பாளையத்தில் பாண்டியன், சேரன் ஆகிய பெயர்களில் சலவை சோப் தயாரித்து வரும் லதா. அவர் கூறியதாவது: நகர பகுதிகளில் பெரும்பாலான மக்கள் வாஷிங் மெஷின் மூலம் வாஷிங் பவுடர் அல்லது சோப் ஆயில் பயன்படுத்தி சலவை செய்கின்றனர். வாஷிங்மெஷினில் துவைத் தாலும் சட்டைகளின் காலர் போன்ற இடங்களில் உள்ள அழுக்கு முழு வதுமாக  போவதில்லை. இதனால் மீண்டும் சோப் போட்டு துவைக்கின்றனர். கிராமங்களை பொறுத்தவரை மக்கள்  துவைப்பதற்கு சோப் களையே அதிகளவில் பயன்படுத்துகின்றனர்.
தமிழகத்தில் 100க்கும் மேற்பட்ட பிராண்ட்களில் சோப்கள் கிடைக்கின்றன. இதில் குறிப்பிட்ட பிராண்ட் கள் பிரபலமானவை. மீதமுள்ள பிராண்ட்கள் தயாரிக்கப்படும் பகுதியில்  பிரபலமாக இருக்கும். நன்றாக விற்கும். இந்த அடிப்படையில்தான் நாங்கள் சோப் தயாரிக்கும் தொழிலை தொடங்கினோம்.எங்கள் தயாரிப்பு கொங்குமண்டல பகுதிகளில் நன்றாக விற்கிறது.  போட்டி அதிகம் இருப்பதால் சோப் தயாரிப்பில் தரத்தை கடைபிடிப்பது முக்கியம். அதேபோல குறைந்த லாபத்தில் விற்க வேண்டும். அப்போதுதான், ஒருமுறை வாங்கியவர்கள் நம்மிடம் வாடிக்கையாக வாங்குவார்கள். பின்னர் விலையை சற்று கூட்டினாலும் ஏற்றுக் கொள்வார்கள். 2002ல்  தொழிலை துவக்கினேன். உற்பத்தி, கொள்முதல் மற் றும் விற் பனையை கணவர் பார்த்து கொள் கிறார். நிர்வாகத்தை நான் பார் த்து கொள் கிறேன். துவக்கத்தில் கணவரும் நானும் தொழிலாளியாக களத்தில் இறங்கி உழைத் தோம். இதனால் உற்பத்தி செலவு குறைந்தது. குறைந்த விலைக்கு விற்க முடிந்தது. இப்போது  சோப் போடு சலவை பவுடர், பாத்திரம் துலக்கும் சோப், பவுடர் ஆகியவை யும் தயாரித்து விற்கி றோம்.  புதிதாக தொழில் துவங்குபவர்கள் முதலில் குடும்பமாக உழைத்து, உற்பத்தி செலவை குறைத்து, குறைந்த விலையில் விற்றால்தான் இப்போதைய போட் டிக்கு தாக்கு பிடிக்க முடியும்.
தயாரிப்பது எப்படி?
சோப் தயாரிக்கும் இயந்திரம் கலவை, பிளாடர், கட்டிங் ஆகிய 3 பகுதிகளை கொண்டது. கலவை இயந்திரம் ஓட துவங்கியதும் அதில் வாஷிங் சோடா 12 கிலோ, சிலரி ஆயில் 20 கிலோ, டினோபால் பவுடர் 50 கிராம், தண்ணீர் 2 கிலோ ஆகியவற்றை கொட்ட வேண்டும், 10 நிமிடத்துக்கு பின், களிமண் பவுடர் 5 கிலோ, கால்சைட் (கல்மாவு) 48 கிலோ, சிலிகேட் 5 கிலோ ஆகியவற்றை ஒன்றன்பின் ஒன்றாக 7 நிமிட இடைவெளிகளில் கொட்ட வேண்டும். அதில் எஸ்டிபிபி 5 கிலோ, சென்ட் 200 மி.லி, நீல நிற பவுடர் 50 கிராம் ஆகியவற்றை கொட்டி 29 நிமிடம் கழித்து இயந்திரத்தின் இயக்கத்தை நிறுத்த வேண்டும். இப்போது கலவை இயந்திரத்தில் நீல நிறத்தில் பேஸ்ட் உருவாகியிருக்கும். அதை பிளாடரில் செலுத்தினால், அச்சு வழியாக நீளமான சோப் பார் வரும். அது தேவையான அளவு கட் செய்யப்பட்டு வெளியேறும். இவற்றை டிரேயில் அடுக்கி, லேபிள் மூலம் கவர் செய்தால் சோப் விற்பனைக்கு தயார். மணிக்கு 100 கிலோ வீதம் உற்பத்தி செய்யலாம்.

கட்டமைப்பு: 2500 சதுர அடி ஷெட் அட்வான்ஸ் ரூ.50 ஆயிரம், மின் இணைப்பு 5 எச்பி ரூ.5 ஆயிரம், சோப் தயாரிக்கும் இயந்திரம் ரூ.5 லட்சம், சோப் கட்டி அடுக்க டிரே 50 ரூ.2 ஆயிரம்,  10 கேன் ரூ.2 ஆயிரம்,  இதர பொருட்கள் ரூ.1000. அடிப்படை கட்டமைப்பு செலவு ரூ.5.6 லட்சம், முதல் மாத உற்பத்தி செலவு ரூ.5.77 லட்சம், மொத்த முதலீடு ரூ.11.37 லட்சம்.
உற்பத்தி செலவு (மாதத்துக்கு): ஒரு நாளைக்கு 800 கிலோ சோப் வீதம் மாதம் 25 நாளில் 20 டன் தயாரிக்கலாம். ஒரு டன் சோப் தயாரிக்க கெமிக்கல் செலவு ரூ.27 ஆயிரம் வீதம் 20 டன்னுக்கு ரூ.5.4 லட்சம். கட்டிட வாடகை ரூ.5 ஆயிரம், மின் கட்டணம் ரூ.2 ஆயிரம், 6 பேர் சம்பளம் ரூ.30 ஆயிரம் என மாத நிர்வாக செலவு ரூ.37 ஆயிரம். மொத்த உற்பத்தி செலவு ரூ.5.77 லட்சம். ஒரு டன் சோப் தயாரிக்க ரூ.28,850 செலவாகிறது.
வருவாய்: ஒரு டன் சோப்பை ரூ.30 ஆயிரத்துக்கு டீலர்களுக்கு விற்கலாம். டன்னுக்கு ரூ.1150 வீதம் 20 டன்னுக்கு மாத லாபம் ரூ.23 ஆயிரம். நேரடியாக கடைகளுக்கு சப்ளை செய்தால் லாபம் இரு மடங்காகும். உற்பத்தியை அதிகரித்தால் அதற்கேற்ப லாபம் கூடும்.
தேவையான பொருட்கள் : சோடா (டன் ரூ.21 ஆயிரம்), சிலரி ஆயில் (டன் ரூ.95 ஆயிரம்), டினோபால் பவுடர் (கிலோ ரூ.1350), க்ளே (டன் ரூ.5 ஆயிரம்), கால்சைட் (டன் ரூ.3 ஆயிரம்), சிலிகேட்(டன் ரூ.8 ஆயிரம்),  எஸ்டிபிபி பவுடர் (டன் ரூ.90 ஆயிரம்), சென்ட் (கிலோ ரூ. 1000), நீல நிற பவுடர் (கிலோ ரூ.100).
கிடைக்கும் இடங்கள் : சோடா - கோவை, சிலரி ஆயில் -  புதுவை, டினோபால் பவுடர் - மும்பை, க்ளே - கேரளா, கால்சைட் -  சேலம், சிலிகேட் - கோவை, எஸ்டிபிபி பவுடர், சென்ட், புளூ கலர் பவுடர் - கோவை உள்ளிட்ட இடங்களில் கிடைக்கும். மொத்தமாக வாங்கினால் குறைந்த விலையில் கிடைக்கும்.
சந்தை வாய்ப்பு
குறிப்பிட்ட பகுதிக்கு டீலர்கள் நியமித்து சோப்களை விற்கலாம். டீலர்களிடம் தொகை பெற்றுக்கொண்ட பின், ஆர்டரை தயாரித்து கொடுக்கும் அளவுக்கு கிராக்கி உள்ளது. சில்லரை கடைகளுக்கு வாகனங்கள் மூலம் கொண்டு சென்று விற்கலாம்.கடைகளில் வினியோகித்த சோப்களுக்கு, அடுத்த வினியோகத்தின் போது தொகை கிடைக்கும். இது தாமதமானாலும் கூடுதல் லாபம் உள்ளது. புதிதாக தொழில் துவங்குபவர்கள் முதலில் சில்லரை கடைகளில் வியாபாரத்தை பெருக்கி, பின்னர் டீலர்களுக்கு விற்கலாம். உற்பத்தி அதிகரித்தால் சலவை சோப்களை கைகளால் பேக்கிங் செய்வதற்கு பதிலாக பேக்கிங் மெஷினை பயன்படுத்தலாம். இதன்மூலம் குறைந்த நேரத்தில், அதிகளவில் உற்பத்தி செய்ய முடியும். பேக்கிங் மெஷினுக்கு மட்டும் கூடுதல் முதலீடு தேவை.
சலவை சோப் உற்பத்தியோடு சலவை பவுடரையும் தயாரிக்கலாம். சோப் உற்பத்தி செய்வதை விட சலவை பவுடர் உற்பத்தி எளிதானது. சலவை பவுடரை சாஷே ஆட்டோமேடிக் பேக்கிங் இயந்திரம் மூலம் பேக்கிங் செய்து விற்கலாம். இதில் சாஷே பேக்கிங் இயந்திரத்துக்கு கூடுதல் முதலீடு தேவை. தற்போது பாத்திரம் துலக்கும் சோப் மக்களிடையே பிரபலமாகி வருகிறது.  சலவை சோப் தயாரிக்கும் இயந்திரத்தில் பாத்திரம் துலக்கும் சோப்பும் தயாரிக்கலாம். அதற்குரிய கெமிக்கல்கள் மட்டும் மாறுபடும். தயாரிப்பு முறை சலவை சோப் தயாரிப்பது போன்றதுதான். பாத்திரம் துலக்கும் சோப்புடன் பாத்திரம் துலக்கும் பவுடரும் தயாரிக்கலாம். 

சோப் ஆயில் தயாரிப்பு


வீட்டில் இருந்தபடியே குறைந்த முதலீட்டில் இயந்திரங்கள் எதுவும் இல்லாமல் சோப் ஆயில் தயாரிக்கலாம். இதன் மூலம் நன்றாக சம்பாதிக்கலாம் என்கிறார் கோவை காளம்பாளையத்தில் ஹக் புராடக்ட்ஸ் சோப் ஆயில் தயாரிக்கும் ரமணன். அவர் கூறியதாவது: கோவையில் தேசிய பஞ்சாலை கழக தரக்கட்டுப்பாட்டு பிரிவில் உதவி ஸ்பின்னிங் மாஸ்டராக 28 ஆண்டுகள் பணிபுரிந்தேன். 7 ஆண்டுக்கு முன்பு விருப்ப ஓய்வு பெற்றேன். மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்ற என் போன்றவர்களை, கோவையில் உள்ள சிறு தொழில் சேவை மையத்தினர் சுய தொழில் செய்வதற்கான பயிற்சிக்கு அழைத்தனர்.
அங்கு ஒரு மாதம் நறுமண சொட்டு நீலம், பினாயில், சோப் பவுடர் போன்றவை தயாரிக்க கற்றுக் கொடுத்தனர். ரூ.5ஆயிரம் முதலீட்டில் சோப் ஆயில் தயாரிப்பதற்கான தொழிலை துவக்கினேன். நானே முதலாளியாகவும்,தொழிலாளியாகவும் இருந்து மாதம் 200 லிட்டர் சோப் ஆயில் தயாரித்து விற்கிறேன். சோப் ஆயில் தயாரித்து விற்பவர்கள் பலர் இருந்தாலும், தரமாக தயாரித்து விற்பதால் ஆர்டர் தொய்வு இல்லாமல் கிடைக்கிறது. தினசரி 5 மணி நேரம் உழைத்தால் 10 லிட்டர் சோப் ஆயில் தயாரிக்க முடியும். 20நாள் உழைப்பு, 10 நாள் விற்பனை என்று செயல்படுகிறேன். லாபகரமாக போகிறது.
ஊராட்சி, பேரூராட்சி நிர்வாகம் சார்பில் மகளிர் சுய உதவி குழுக்களை சேர்ந்தவர்களுக்கு சோப் ஆயில் தயாரிப்பு குறித்து ஒருநாள் பயிற்சி முகாம்களை நடத்துகிறேன். என்னதான் தரமாக தயாரித்தாலும், அதை நம்ப வைக்க வேண்டும். அதற்கு சோப் ஆயிலை சாம்பிள் கொடுத்து தரத்தை அறிய செய்யலாம். அப்படி கிடைக்கும் வாடிக்கையாளர்கள் நிரந்தரமாக ஆர்டர் கொடுப்பார்கள். இவ்வாறு ரமணன் கூறினார்.
பயிற்சிக்கு
பல்வேறு கிளீனிங் பவுடர், ஆயில்கள் தயாரிப்பு குறித்து மாவட்டங்களில் உள்ள சிறு தொழில் சேவை மையங்கள்,மாவட்ட தொழில் மையம், மகளிர் திட்டம், வாழ்ந்து காட்டுவோம் திட்டம் மற்றும் வேளாண் பல்கலைக்கழகம் போன்றவற்றின் மூலம் தொழில் முனைவோர் பயிற்சியும்,சான்றிதழும் அளிக்கப்படுகிறது. தொழில் தொடங்க வங்கி கடனுதவிக்கும் பரிந்துரைக்கப்படுகிறது.
தயாரிப்பது எப்படி?
ஒரு பிளாஸ்டிக் வாளியில் 4 லிட்டர் வடிகட்டிய நல்ல தண்ணீரில் காஸ்டிக் சோடா 100 கிராம் போட வேண்டும். தண்ணீர் சூடாகும். மற்றொரு வாளியில் 4 லிட்டர் வடிகட்டிய நல்ல தண்ணீரில் சோடா ஆஷ் (வாஷிங் பவுடர்) ஒரு கிலோ போட வேண்டும். அதுவும் சூடாகும். இன்னொரு வாளியில் 2லிட்டர் நல்ல தண்ணீரில் யூரியா ஒன்றரை கிலோ போட வேண்டும். தண்ணீர் குளிர்ந்து போகும். 3 வாளி நீரையும் ஒரு மணி நேரம் அப்படியே வைக்க வேண்டும். அவை சம வெப்ப நிலையை அடையும். 3 வாளிகளில் உள்ள நீரை ஒரு கேனில் கொட்டி கலக்க வேண்டும்.
இன்னொரு வாளியில் சிலரி ஒரு கிலோ, ஒலிக் ஆசிட் 100கிராம் கலக்க வேண்டும். அதை கேனில் உள்ள கலவையில் கொட்டி சில்வர் கரண்டியால் நன்கு கலக்க வேண்டும். நுரை பொங்கி வரும். 2 மணி நேரம் காத்திருந்தால் நுரை வற்றி,சோப் ஆயில் கிடைக்கும். அதில் நறுமண லிக்விட் 15 மிலி கலந்தால் சோப் ஆயில் தயார். இதன் மூலம் 10 லிட்டர் சோப் ஆயில் கிடைக்கும்.
உபயோகிக்கும் முறை: 200 மிலி சோப் ஆயிலில் 10 லிட்டர் தண்ணீர் கலந்து பயன்படுத்த வேண்டும். 10 முதல் 15 துணி வரை அரை மணி நேரம் ஊறவைத்து கையாலோ,வாஷிங்மெஷின் மூலமோ துவைக்கலாம். துணி துவைக்க மட்டுமல்ல, பாத்திரம் கழுவ, தரை, கழிப்பறை, பாத்ரூம்,வாகனங்களை சுத்தம் செய்யவும் பயன்படுத்தலாம். இதை பயன்படுத்துவதால் சருமத்துக்கு எவ்வித கேடும் ஏற்படாது.
சந்தை வாய்ப்பு
ஓட்டல்கள், லாட்ஜ்கள், மருத்துவமனைகள், பள்ளி, கல்லூரி விடுதிகள், வீடுகளுக்கு நேரில் விற்கலாம். இதன் மூலம் தினசரி 50 லிட்டர் எளிதில் விற்று விடலாம். சோப் ஆயில் தரத்தை வாடிக்கையாளர் அறிந்துவிட்டால், தொடர்ந்து ஆர்டர் கொடுப்பார்கள். மார்க்கெட்டில் பிராண்டட் சோப் ஆயில்களை விட பல மடங்கு விலை குறைவாகவும், பிராண்டட் சோப் ஆயில்களை போல் தரமானதாகவும் இருப்பதால் அதிகமானோர் வாங்குகிறார்கள்.
மத்திய, மாநில அரசு நிறுவனங்கள், அலுவலகங்களுக்கு ஒரு ஆண்டுக்கு தேவையான சோப் ஆயில் உள்ளிட்ட கிளீனிங் பொருள்கள் கொள்முதல் செய்ய டெண்டர் விடுவார்கள். அதிலும் விண்ணப்பித்து டெண்டர் பெற்று சப்ளை செய்யலாம். அதற்கேற்ப உற்பத்தி அளவையும் பெருக்கி கொள்ளலாம். சோப் ஆயிலோடு பினாயில், சோப் பவுடர், சொட்டு நீலம்,கிளீனிங் பவுடர் உள்ளிட்ட பொருட்களை சப்ளை செய்தால் லாபம் அதிகரிக்கும்.
என்னென்ன தேவை?
சிலரி, காஸ்டிக் சோடா, சோடா ஆஷ், யூரியா, ஒலிக் ஆசிட்,பெர்ப்யூம், தண்ணீர். இவை அனைத்தும் கெமிக்கல் கடைகளில் கிடைக்கிறது. ரூ.10 ஆயிரம் போதும் இந்த தொழில் செய்ய பெரிய அளவில் இடம் தேட வேண்டிய அவசியம் இல்லை. மூலப் பொருட்கள், தயாரித்த சோப் ஆயில்கள் இருப்பு வைக்க வீட்டுக்குள் பாதுகாப்பான சிறு இடம், சோப் ஆயில் தயாரிக்க வீட்டு பின்புறம் அல்லது ஒதுக்குப்புறமான சிறு இடம் போதுமானது. ரூ.10 ஆயிரம் முதலீட்டில் தளவாட சாமான்கள்,ஒரு மாத சோப் ஆயில் உற்பத்திக்கு தேவையான கெமிக்கல்களை வாங்கி விடலாம்.
தளவாட சாமான்கள்

50 லிட்டர் கேன் 1, 25 லிட்டர் பிளாஸ்டிக் வாளி 1, 20 லிட்டர் வாளி 3, மக் 2, தண்ணீர் வடிகட்டி 1, சில்வர் கரண்டி, புனல் 1,பாட்டில் கழுவும் பிரஷ் 1, மற்றும் 2, 5 லிட்டர் காலி பாட்டில்கள், கேன்கள்.
உற்பத்தி செலவு
சிலரி ஒரு கிலோ ரூ.120, காஸ்டிக் சோடா 100 கிராம் ரூ.4,சோடா ஆஷ் ஒரு கிலோ ரூ.30, யூரியா ஒன்றரை கிலோ ரூ.12, ஒலிக் ஆசிட் 100 கிராம் ரூ.10, பெர்ப்யூம் 15 மில்லி ரூ.25, லேபிள் 200 ரூ.10, காலி பாட்டில்கள் ரூ.10 என ரூ.221செலவாகும். இதர செலவுகள் உட்பட 10 லிட்டர் தயாரிக்க ரூ.230 வரை செலவாகும்.
வருவாய்
ஒரு லிட்டர் தயாரிக்க ரூ.23 செலவாகிறது. அதை உள்ளூரில் ரூ.35க்கும், வெளியூர்களில் ரூ.45க்கும் விற்கலாம். இதன் மூலம் ஒரு லிட்டருக்கு லாபம் ரூ.12க்கு குறையாமல் கிடைக்கிறது. ஒரு நாளில் 50 லிட்டர் வரை தயாரிக்கலாம் என்பதால் ரூ.12 வீதம் 50 லிட்டருக்கு ரூ.600 லாபம் கிடைக்கும். மாதம் 25 நாள் வேலை செய்தால் ரூ.15 ஆயிரம் லாபம் கிடைக்கும். வெளியூர்களில் விற்கும்போது போக்குவரத்து செலவு ஏற்படும். ஆனால் லாபம் அதிகமாக இருக்கும்.இணைய தளத்திலிருந்து

தக்காளியில் ,ஊறுகாய் மற்றும் தக்காளி ஜாம் தயாரிப்பது எப்படி

தர்மபுரி மாவட்ட வேளாண் விற்பனை மற்றும் வணிகப் பிரிவும் இணைந்து, தக்காளியில் மதிப்புக்கூட்டல் தொழில்நுட்பத்தைச் சொல்லிக் கொடுப்பதற்காக கடந்த மாதம் பயிற்சி முகாமுக்கு ஏற்பாடு செய்திருந்தன. வேளாண் அறிவியல் மைய இணைப் பேராசிரியர் ஜான்சிராணி, தக்காளியைக் கொண்டு ஜாம், ஊறுகாய், கெச்சப், ஸ்குவாஷ், சாஸ், ஜூஸ், வடகம், தக்காளி பவுடர்... மதிப்புக் கூட்டல் பொருட்களைத் தயாரிக்கும் விதங்களை செய்முறை விளக்கத்துடன் சொல்லிக் கொடுத்தார்.
இனி பயிற்சியில் இருந்து...
''தக்காளிக்கு வருஷம் முழுசும் கட்டுப்படியான விலை கிடைக்கறதில்லை. கணக்குப் பாத்தா, பல நேரங்களில் நஷ்டம்தான் அதிகமா இருக்கும். விவசாயிகளைப் பொறுத்தவரைக்கும் விளைஞ்சதை அப்படியே சந்தையில வித்துடணும்னுதான் நினைக்கறாங்க. அதுக்கு மேல யோசிக்கறதேயில்லை. இந்த மனநிலைதான் நஷ்டத்துக்குக் காரணம். விலை குறையறப்ப சாலையில கொட்டி வீணாக்குறதுக்குப் பதிலா... கொஞ்சம் மெனக்கெட்டு அதை ஊறுகாயாகவோ, ஜாமாகவோ... மாத்தினா நஷ்டம் வர்றதுக்கு வாய்ப்பே இல்லை.
கிலோவுக்கு 30 ரூபாய்!
உதாரணமா, ஒரு கிலோ தக்காளியில சில பொருட்களை சேர்த்து ஊறுகாய் தயாரிச்சா, 750 கிராம் ஊறுகாய் கிடைக்கும். இன்னிக்குச் சந்தையில 250 கிராம் தக்காளி ஊறுகாய் 22 ரூபாயிலிருந்து 30 ரூபா வரைக்கும் விக்குது. குறைஞ்சபட்சம் 20 ரூபாய்னு வெச்சுகிட்டாலும், 750 கிராம் ஊறுகாய்க்கு 60 ரூபாய் கிடைக்கும். இதுக்கான தயாரிப்புச் செலவுக்காக 30 ரூபாயைக் கழிச்சிட்டாலும், மீதி 30 ரூபாய் இருக்கும். பெரிய நிறுவனங்களோட தொடர்பு வெச்சுக்கிட்டா, தொடர்ந்து விற்பனை வாய்ப்பு கிடைக்கும்'' என்று நிறுத்திய ஜான்சிராணி,
''இப்ப சொல்லுங்க, கிலோ 3 ரூபாய்க்கு தக்காளி விக்குதேனு கீழ கொட்டாம... கொஞ்சம் யோசிச்சா ஒரு கிலோ தக்காளிக்கு 30 ரூபா கிடைக்குமில்ல!'' எனக் கேட்க... வியப்பில் விழிகள் விரித்தனர் எதிரே அமர்ந்திருந்த விவசாயிகள்.
தொடர்ந்து, தக்காளி மட்டுமல்லாமல்... மிளகாய், கொய்யா போன்றவற்றிலும் மதிப்புக்கூட்டுவது பற்றி பயிற்சி அளிக்கப்பட, ஆர்வத்தோடு அவற்றில் பங்கெடுத்தனர் விவசாயிகள். அவர்கள் குறிப்பெடுத்துக் கொண்ட விஷயங்களில் இருந்து தக்காளி ஊறுகாய் மற்றும் ஜாம் தயாரிப்பு முறைகள் இங்கே இடம்பிடிக்கின்றன.
--------
1) தக்காளி ஊறுகாய்!
தேவையான பொருட்கள்:
நன்றாகப் பழுத்தத் தக்காளி - ஒரு கிலோ, மிளகாய்த்தூள் - 2, டேபிள் ஸ்பூன், வெந்தயம் - 1 ஸ்பூன், ரீஃபைண்ட் ஆயில் - 250 மில்லி, பூண்டு - 20 பல், பெருங்காயத்தூள் - 1 ஸ்பூன், கடுகு - 1 ஸ்பூன், உளுத்தம் பருப்பு- 1 ஸ்பூன், உப்பு - தேவையான அளவு
தக்காளியை நன்றாக சுத்தம் செய்து மிக்ஸியில் நன்கு கூழாகும் வரை அரைக்க வேண்டும். இதனுடன் உப்பு, மிளகாய்த்தூள் ஆகியவற்றைச் சேர்த்து வாணலியில் இட்டு அடுப்பில் வைத்துச் சூடாக்க வேண்டும். நன்கு கொதிக்கும் நிலையில் நீர்வற்றி கெட்டியாக மாறும். அப்போது சூடு படுத்திய எண்ணெயை தக்காளியுடன் சேர்த்து கிளறிக்கொண்டே இருக்க வேண்டும். அடுப்பு மிதமாக எரியும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். தக்காளிக் கலவை கொதி வந்த பிறகு, கலவையில் உள்ள எண்ணெய் முழுவதும் பிரிந்து வரும் வரை வேகவிட்டு, பின்பு இறக்க வேண்டும்.
பிறகு, வறுத்துத் தூளாக்கிய வெந்தயம், கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயம் தாளித்து பூண்டை சேர்த்து நன்றாக வேகும் வரை வதக்கி தக்காளிக் கலவையில் சேர்த்து, நன்றாக ஆறவிட்டு, ஈரம் இல்லாத பாட்டில்களில் நிரப்பி மூடி வைக்க வேண்டும். இது, சாதாரண நிலையிலேயே ஒரு வாரம் வரை கெடாமல் இருக்கும். குளிர்சாதனப் பெட்டிகளில் பாதுகாத்தால் நீண்டநாட்களுக்கு வைத்திருக்கலாம். இதை, அனைத்து உணவுகளுக்கும் தொட்டுச் சாப்பிட பயன்படுத்தலாம்.
------------
2) தக்காளி ஜாம்!
தேவையான பொருட்கள்:
தக்காளி பழக்கூழ் - ஒரு கிலோ. சர்க்கரை - 750 கிராம். சிட்ரிக் அமிலம் அல்லது எலுமிச்சை சாறு - அரை தேக்கரண்டி.
தக்காளியைச் சுத்தம் செய்து தோல், விதைகளை நீக்கி சதைப்பகுதிகளைச் சேகரித்துக் கொள்ள வேண்டும். அவற்றை மிக்ஸி மூலம் கூழாகும் வரை அரைத்து வடிகட்ட வேண்டும் (இதுதான் தக்காளி பழக்கூழ்). கொஞ்சம் போல தண்ணீர் எடுத்து, அதில் சிட்ரிக் அமிலத்தைக் கரைத்து வைத்துக் கொள்ள வேண்டும். தக்காளிக் கூழை பாத்திரத்தில் இட்டு, சிறிது நேரம் வேகவிட்டு ஒரு கொதி வந்தவுடன் சர்க்கரையைச் சேர்த்து, அடுத்து சிட்ரிக் அமிலம் கலந்த தண்ணீரை ஊற்ற வேண்டும்.
நன்றாகக் கொதித்துக் கொண்டிருக்கும் கலவையை ஒரு ஸ்பூனில் சிறிதளவு எடுத்து ஒரு தட்டில் ஊற்றிப் பார்த்தால்... கெட்டியாக விழ வேண்டும். அதுவரை கலவை வேக வேண்டும். இந்தப் பதம் வந்தபின் பாத்திரத்தை இறக்கி வைத்து கொஞ்சம் மட்டும் ஆறவிட்டு, வாய் அகன்ற கண்ணாடி பாட்டில்களில் சூடாகவே நிரப்பி வைக்க வேண்டும். இந்த நிலையிலேயே முழுவதும் ஆறவிட்டு, அதன்பிறகு பாட்டில்களை மூடி வைக்க வேண்டும். சூடானக் கலவையை பாட்டில்களில் நிரப்பும்போது பாட்டில்களை தரை மீது வைப்பதைத் தவிர்த்து, மரப்பலகை மீது வைத்துக் கொண்டால், சூட்டின் மூலம் பாட்டில்கள் உடைந்து போகாமல் தடுக்க முடியும்.
விற்பனைக்கு அணுகலாம்!
மதிப்புக்கூட்டல் தொழிலுக்கான கடனுதவிகள் பற்றி விளக்கமாக விவசாயிகளுக்கு எடுத்துச் சொன்ன மாவட்ட வேளாண் வணிகம் மற்றும் விற்பனைப் பிரிவின் வேளாண் அலுவலர் தாம்சன், ''தக்காளி மட்டுமன்றி... மா, பப்பாளி, கொய்யா, பச்சைமிளகாய் என அனைத்துப் பயிர்களுமே ஆண்டு முழுக்க மாறி மாறி இந்த மாவட்டத்தில் விளைவிக்கப்படுகின்றன. அந்தந்தப் பருவத்துக்கு ஏற்றபடி அவற்றையெல்லாம் மதிப்புக்கூட்டி, நல்ல லாபம் பார்க்கலாம்.
நாம் மதிப்புக்கூட்டும் பொருட்களை விற்பனை செய்வதற்காக கவலைப்படத் தேவையில்லை. பெரிய வணிக நிறுவனங்கள், தாங்கள் விரும்பும் தரத்துடன் தயாரித்துக் கொடுக்கப்படும் ஜாம், சாஸ் உள்ளிட்ட பொருட்களுக்கு நல்ல விலை கொடுக்கத் தயாராக இருக்கின்றன. அந்த நிறுவனங்களில் விற்பனை வாய்ப்பை ஏற்படுத்தித் தர வேளாண் வணிகம் மற்றும் விற்பனைப் பிரிவை விவசாயிகள் தயக்கமின்றி அணுகலாம்'' என்று அழைப்பு வைத்தார்.
தொடர்புக்கு: வேளாண் அறிவியல் நிலையம், பாப்பாரப்பட்டி, தொலைபேசி: 04342-245860. வேளாண் வணிகம் மற்றும் விற்பனைப் பிரிவு அலுவலர் அலைபேசி: 94435 -63977