சனி

பித்தப் பைக்கற்கள் (Gallstone)

 பித்தப் பை (Gall bladder)எனப்படுவது எமது உடலிலே பித்தத்தை தற்காலிகமாக சேகரிக்கும் உறுப்பாகும். இவ்வாறு பித்தைப்பையிலே சேகரிக்கப்படும் பித்தமானது ஒரு குழாய் மூலம் சிறுகுடலை வந்தடைந்து உணவு சமிபாட்டிற்கு உதவும்.

பித்தத்தில் உள்ள சில பதார்த்தங்களின் சேர்க்கையால் கற்கள் உருவாகலாம். இவை பொதுவாக பித்தப்பைக் கற்கள் எனப்படும்.

இந்தக் கற்கள் பித்தப்பையினுள்ளே காணப்படலாம் அல்லது பித்தக் குழாயினுள்ளே (பித்தத்தை பித்தப் பையிலிருந்து சிறுகுடலுக்கு கொண்டு சேர்க்கும் குழாயினுள்ளே ) காணப்படலாம்.

பித்தப் பைக் கற்கள் ஏற்படும் சந்தர்ப்பத்தை அதிகமாக கொண்டவர்கள்:

1. பெண்கள்

2. உடற் பருமனானவர்கள்

3. நாற்பது வயதுக்கு மேற்பட்டவர்கள்

பித்தப்பைக் கற்கள் உள்ள எல்லோரிலும் அவை பாதிப்பை ஏற்படுத்துவதில்லை. அதாவது பித்தப்பைக் கற்கள் உள்ளவர்களில் சில பேரிலே அது பாதிப்பை ஏற்படுத்த மற்றவர்கள் வாழ்க்கை முழுவதும் சாதாரணமானவர்களாக இருப்பார்கள்.

பித்தப்பைக் கற்கள் ஏற்படுத்தக் கூடிய பாதிப்புக்கள்...

1. பித்தப்பைக் கிருமித் தோற்று

2. பித்தக் குழாய் அடைப்பு

3. சதையி அலர்ச்சி

இந்தக் கற்கள் ஏற்படுத்தும் பாதிப்பின் தன்மையைப் பொறுத்து அவற்றினால் ஏற்படும் பாதிப்புக்களும் வேறுபடலாம்.

பித்தப்பைக் கற்களினால் ஏற்படும் வலியானது வயிற்றின் வலது பக்க மேல் மூலையில் ஏற்படும். இந்த வலியானது தோற்பகுதிக்கு பரவிச் செல்லுவது போன்ற உணர்வினையும் ஏற்படுத்தும்.

பித்தப்பைக் கிருமித் தோற்று ஏற்பட்டவர்களில் காய்ச்சலும் ஏற்படும்.

பித்தப்பைக் குழாயில் பூரணமான அடைப்பு ஏற்பட்டவர்களுக்கு பித்தப் பொருளான பிலிரூபின்(bilirubin) அதிகரித்து யோண்டீஸ் (jaundice)கண் மற்றும் உடல் மஞ்சள் ஆகும் என்ற நிலையம் ஏற்படும்.

மருத்துவம்

பித்தப்பைக் கற்கள் உள்ள எல்லோருக்கும் மருத்துவம் தேவைப்படுவதில்லை. வலி அல்லது வேறு எந்த விதமான பாதிப்பும் ஏற்படாதவர்களுக்கு எந்தவிதமான மருத்துவமும் தேவை இல்லை.

பித்தப்பை கிருமித் தொற்று, அல்லது மீண்டும் மீண்டும் வலி ஏற்படுபவர்களுக்கு பித்தப்பைக் கற்கள் அகற்றப்பட வேண்டும். இதற்கான சத்திர சிகிச்சையின்போது கற்களோடு சேர்த்து பித்தப்பையும் அகற்றப்படும்.

பித்தப்பைக் குழாயின் கீழ்ப் பகுதியில் கல் உள்ளவர்களுக்கு நேரடியாக கல் மட்டுமே அகற்றப்படலாம் . இது வாய் வழியின் ஊடாக கமராவுடன் கூடிய ஒரு குழாயினை செலுத்தி செய்யப்படலாம்.

பித்தப்பை அகற்றபடும் சத்திர சிகிச்சையானது இப்போது வயிற்றை வெட்டாமல் சிறிய துளை ஏற்படுத்தி செய்யப்படும் லப்பிரஸ்கோபி (Laparascopy) மூலம் இலகுவாக செய்யப்படலாம்.

பித்தைப்பை அகற்றப்பட்ட பின்பு கூட ஒருவர் எந்தப் பாதிப்பும் இல்லமால் சாதரணமாக வாழலாம்.

நீரிழிவும் சிறு நீரகமும்

 "ஒரு வினைத்திறனான இயந்திரம் மிகவும் சிக்கனமானது. அதனால், அவசியமில்லாத எந்தவொரு பாகமும் ஒரு நல்ல இயந்திரத்தில் இருக்காது!"

  - HUGO திரைப்படத்தில் கதாநாயகன்.

large.Renal.jpg.9a391cea23bd6b9e2f3dd7b84b8861d4.jpg

எங்கள் உடலும் ஒரு வினைத்திறனான இயந்திரத்திற்கு ஒப்பிடக் கூடிய ஒன்று. கூர்ப்பின் எச்சங்களாக குடல்வால் போன்ற சில அமைப்புகள் முக்கிய தொழில்களின்றி எங்கள் மனித உடலில் தங்கி விட்டாலும், அனேகமாக எல்லா உறுப்புகளும் எங்கள் வாழ்க்கைக்குத் தேவை. இவ்வுறுப்புகளில், உயிர் உடலில் தங்கி நிற்க அவசியமான  ஐந்து உறுப்புகளை முக்கியமான உறுப்புகள் (vital organs) என்று சொல்லலாம். இதயம், மூளை, சுவாசப்பை, சிறு நீரகம், கல்லீரல் என்பனவே அந்த 5 முக்கிய உறுப்புகள். எனவே, இந்த உறுப்புகளை நேரடியாக , அல்லது மறைமுகமாகப் பாதிக்கும் நோய்கள் அனேகமாக உயிராபத்தை ஏற்படுத்தக் கூடியவை. தற்போது, உலகளாவிய ரீதியில் அதிகரித்து வரும் நீரிழிவு இந்த உறுப்புகளில் மூன்றை நேரடியாகப் பாதிக்கும் தன்மை கொண்டதால் பிரதானமான மரணம் விளைவிக்கும் தொற்றா நோயாக விளங்குகின்றது. நீரிழிவினால் கல்லீரல், சிறுநீரகம், இதயம் என்பன பாதிக்கப்படுகின்றன. இந்தக் கட்டுரையில் நீரிழிவிற்கும் சிறுநீரகத்திற்குமிடையிலான தொடர்பைப் பார்க்கலாம்.

சிறுநீரகத்தின் முதன்மைத் தொழில்

கழிவுகளை அகற்றுவதே சிறுநீரகத்தின் முதன்மையான தொழில்.  உடலினுள் உருவாகும் கழிவுகளும், நாம் உள்ளெடுக்கும் உணவுப் பொருட்களை, மருந்துகளை உடல் உடைப்பதால் வரும் கழிவுகளும் இப்படி அகற்றப்படும். இப்படி சிறுநீரகம் அகற்றும் கழிவுகளை இரத்தத்தில் அளப்பதன் மூலம் சிறுநீரகத்தின் கழிவகற்றும் செயல்பாட்டை ஓரளவு மதிப்பிட முடியும். உதாரணமாக கிரியற்றினைன் (creatinine) எனும் கழிவுப் பொருளை இரத்தத்தில்  அளந்து சிறுநீரக நலனை மதிப்பிடுவர்.

ஆனால், இந்தக் கழிவகற்றல் மூலம், உடலின் மேலும் பல தொழிற்பாடுகளுக்கும் சிறுநீரகம் பங்களிப்புச் செய்கிறது. உதாரணமாக, சிறுநீரகம் உப்பையும், நீரையும் அகற்றுவதால் எங்கள் இரத்த அழுத்தத்தை சீராக்கும் முக்கிய வேலையை மறைமுகமாகச் செய்கிறது. மேலும், சிறுநீரகத்தில் இருக்கும் ஒரு குறிப்பிட்ட பகுதி இரத்த உற்பத்திக்கு அவசியமான ஒரு ஹோமோனையும் சுரக்கிறது. எனவே, நீண்டகால சிறுநீரக செயலிழப்பினால் பாதிக்கப் பட்டோரில் இரத்தச் சோகையும் ஏற்படக் கூடும். 

நீரிழிவில் சிறுநீரகம் பாதிக்கப் படுவது ஏன்?

நாள்பட்ட சிறுநீரக வியாதி (Chronic Kidney Disease – CKD) என்று அழைக்கப்படும் சிறுநீரக செயலிழப்பிற்கு நீரிழிவு பிரதான காரணியாக இருக்கின்றது. Diabetic nephropathy என்று அழைக்கப் படும் இந்த நாள்பட்ட சிறுநீரக வியாதி அமெரிக்காவைப் பொறுத்த வரை மூன்றில் ஒரு  பங்கு நீரிழிவு நோயாளர்களில் ஏற்படுகிறதுஉலக ரீதியிலும்ஏனைய நாடுகளிலும் கூட இதே விகிதாசாரத்தில் நாள்பட்ட சிறுநீரக நோய் இருக்கக் கூடும்.

எங்கள் ஒவ்வொரு சிறுநீரகத்தினுள்ளும் சிறுநீரகத்திகள் (nephrons) என அழைக்கப் படும் நுண் அமைப்புகள் வடிகட்டிகளாக வேலை செய்த படி இருக்கின்றனஇந்த வடிகட்டிகள் 30 மணித்தியாலங்களில்எங்கள் உடலின் 5 லீற்றர் வரையான இரத்தத்தை முழுமையாக சுத்திகரிக்கும் அயராத பணியைச் செய்கின்றனநீரிழிவின் போது ஏற்படும் ஒரு முக்கியமான மாற்றம் மேலதிகமாக எங்கள் இரத்தத்தில் சுற்றித் திரியும் குழூக்கோஸ் இந்த சிறுநீரகத்திகளால் வடிக்கப் பட்டுஅதில் ஒரு பகுதி சிறுநீரோடு வெளியேற்றப் படுவதுஇதைத் தான் நாம் glucosuria என்று அழைக்கிறோம்நீரிழிவு நோயாளர்களில் இது நீண்டகாலப் போக்கில் நிகழும் போதுசிறுநீரகத்திகள் நிரந்தரமாகப் பாதிப்படைந்து அவற்றின் வடிகட்டும் தொழிலும் பாதிக்கப் படுகிறதுசேதமடைந்த சிறுநீரகத்திகளூடாகசாதாரணமாக வடிக்கப் படாத புரதங்களும் கூட வெளியேறுவதால்உடல் மேலும் புரத இழப்பையும்பின் விளைவுகளையும் எதிர் கொள்ள வேண்டியேற்படுகிறது.

குழூக்கோஸ் என்பது பக்ரீரியாக்களுக்கு மிகவும் பிடித்தமான ஒரு போசணைப் பொருள்இதனால்அதிகரித்த குழூக்கோஸ் சிறுநீரில் சேரும் போதுபக்ரீரியாத் தொற்றுக்கள் ஏற்படுவதாலும் சிறுநீரகம் பாதிக்கப் படலாம்இன்னொரு பொறிமுறைநீரிழிவு நோயாளர்களில் ஏற்படக் கூடிய உயர் குருதியமுக்கம் காரணமாகவும் சிறுநீரகங்கள் பாதிக்கப் பட்டுஅதனால் நாள்பட்ட சிறுநீரக நோய் ஏற்படலாம்எனவேஇந்த மூன்று முக்கிய பொறிமுறைகளையும் கட்டுப் படுத்துவது மூலம்நீரிழிவு நோயாளர்கள் சிறுநீரக ஆரோக்கியத்தைப் பேண முடியும்.

 பொதுவாக, 10 ஆண்டுகளுக்கு மேலாக நீரிழிவு நோயோடு வாழும் நோயாளிகளில் தான் இந்த நாள்பட்ட சிறு நீரக நோய் நிலை ஏற்படுகிறது.  ஆனாலும்மூன்றில் ஒரு நீரிழிவு நோயாளியில் தான் இந்த நிலை ஏற்படுகிறதுஎனவே இதைத் தடுக்கும் இயற்கையான பாதுகாப்பு சிலரில் இருக்கக் கூடும்இது ஏற்படும் ஆபத்து அதிகம் இருப்போரில் கூட வாழ்க்கை முறை மாற்றங்களும்முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் நாள்பட்ட சிறுநீரக நோயேற்படும் ஆபத்தை நீக்க அல்லது குறைக்க உதவுகின்றன.    

தடுப்பு முறைகள் எவை?

நாள்பட்ட சிறுநீரக நோய்க்குஇரத்த குழூக்கோஸ் எகிறுவதும்அதனால் சிறுநீரில் குழூக்கோஸ் வெளியேறுவதும் முக்கிய காரணிகள் என மேலே பார்த்தோம்எனவேநீரிழிவு நோயாளிகள் இரத்த குழூக்கோஸ் அளவை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டியது அவசியம்இதனை ஒழுங்காக நீரிழிவு மருந்துகளை மருத்துவரின் ஆலோசனைப் படி எடுத்துக் கொள்வதாலும்உணவு முறையில் கட்டுப்பாடு கொள்வதாலும்உடற்பயிற்சிகளாலும் தான் அடைய முடியும்.

உலகின் 90% ஆன நீரிழிவு  நோயாளிகளுக்கு உடலில் இன்சுலின் சுரந்தாலும் அது வேலை செய்யாத "இரண்டாம் வகைநீரிழிவு (T2D) தான் வருகிறதுஇவர்களில் அதிகம் பரிந்துரைக்கப் படும் மருந்து மெற்fபோமின் (Metformin) எனப்படும் தீவிர பக்க விளைவுகள் குறைவான மருந்தாகும்ஆனால்உடலில் தன் வேலையை முடித்த பின்னர்மெற்fபோமின் நேரடியாக சிறுநீரகத்தினால் அகற்றப் படுவதால்நாள் பட்ட சிறுநீரக நோயுடைய நோயாளிகளில் மெற்fபோமின் பயன்பாடு பிரச்சினைக்குரியதாக இருக்கிறதுசில ஆய்வுகளில்மெற்fபோமின் நாள் பட்ட சிறுநீரக நோயாளிகளில் மரணத்தைக் குறைத்ததாகவும் கண்டறிந்திருக்கிறார்கள்ஆனால்மெற்fபோமின் பாவனையினால் நாள் பட்ட சிறுநீரக நோய் உருவாவதாக நிறுவும் ஆய்வுத் தகவல்கள் இல்லைஎனவேதற்போதைய ஆய்வு முடிவுகளின் படிமோசமான நாள்பட்ட சிறுநீரக நோயுடையோரில் மட்டும் மெற்fபோமின் பாவனையைத் தவிர்க்கும் படி ஆலோசனை வழங்கப் படுகிறது.

ஏனைய  சிறுநீரகப் பாதுகாப்பு நடவடிக்கைகள் எவை?

35 - 40 வயதுக்கு மேல் அனைவரும் வருடாந்தம் மருத்துவப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்இரத்தசிறுநீர்ப்பரிசோதனைகள் இந்த வருடாந்த சோதனையில் உள்ளடங்கியிருக்க வேண்டும்.

முக்கியமாக நீரிழிவு நோயாளிகள்சிறு நீரக செயல்பாட்டை மதிப்பிடும் சில பரிசோதனைகளை வருடாந்தம் அல்லது மருத்துவர் பரிந்துரைக்கும் கால இடைவெளியில் செய்து கொள்வது அவசியம்அனேகமாக இந்தப் பரிசோதனைகளில் இரத்த கிரியேற்றினைன் மட்டம்இரத்த யூரியா நைட்ரஜன் (Blood Urea Nitrogen – BUN) மட்டம், Glomerular Filtration Rate (GFR) எனப்படும் சிறுநீரக வடிகட்டல் வேகம் ஆகிய மூன்று அளவீடுகளை மருத்துவர் கவனித்து உங்கள் சிறுநீரக நலனை மதிப்பீடு செய்வார்மேலதிகமாகசிறுநீரில் வெளியேறும் அல்புமின் புரதத்தின் அளவையும் பரிசோதிப்பார்கள் - இது நீரிழிவு நோயாளிகளில் முக்கியமானதுஇவற்றை அடிப்படையாகக் கொண்டுமருத்துவர் ஆலோசனைகளை வழங்கினால்அவற்றைக் கவனமாகப் பின்பற்றுவது உசிதம். 

நீரிழிவு நோயாளிகளில் மட்டுமன்றிஎல்லோரிலும் உப்புக் குறைந்த உணவுப் பழக்கம் சிறுநீரகத்தின் நண்பன்உப்புக் குறைந்த உணவினால் இரத்த அழுத்தம் குறையும்இதனால் சிறு நீரகம் மட்டுமன்றிஇதயமும் நன்மை பெறும்மூளை இரத்த அடைப்புக்கான (stroke) ஆபத்தும் குறையும்.

எனவேசுருக்கமாகநீரிழிவு நோயாளிகள்:

1. இரத்த குழூக்கோசைக் கட்டுப் பாட்டில் வைத்திருக்க வேண்டும்.

2. கிரமமாக சிறுநீரக நலனை மருத்துவர் மூலம் பரிசோதித்துக் கொள்ள வேண்டும்.

3. உப்பைக் குறைத்த உணவை எடுத்துக் கொள்ள வேண்டும்.

4. உயர் குருதி அமுக்கம் இருந்தால் அதைக் குறைக்கும் உணவு, மருந்து வழியான வழிகளைப் பின்பற்ற வேண்டும்.

இவ்வழிகளால் சிறுநீரக நலனைச் சிறப்பாக நீண்டகாலத்திற்குப் பேண முடியும்.

 

ஜஸ்ரின்.

மூலங்களும்மேலதிக தகவல்களும்:

1.       அமெரிக்க உணவு மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்புமெற்fபோமின் பற்றிய 2022 குறிப்புhttps://www.fda.gov/drugs/fda-drug-safety-podcasts/fda-drug-safety-podcast-fda-revises-warnings-regarding-use-diabetes-medicine-metformin-certain