ஞாயிறு

அறியவேண்டிய விற்பனை கலை

 ஒன்றை விற்பதற்கே மிகுந்த திறமை வேண்டும். அப்படியிருக்க, ஒரு தொழிலில் நல்ல பெயரோடு நிலைத்து நிற்க, திறமை முடு;டுமன்றி வேறு பல குணங்களும், செயல்களும் தேவை. ஆனால், நிலைத்து நிற்க, முதலில் விற்கத் தெரிய வேண்டும். வாழ்வில் வெற்றி பெற விற்பனை என்பது அடிப்படையான தேவை. பிரபலமான பொருள்கள் மட்டுமல்ல, பிரபலமாக இருக்கும் மனிதர்களும் கூட, அவர்களை சரியாக விற்பனை செய்திருக்கிறார்கள் என்று நாம் புரிந்து கொள்ள வேண்டும். விற்பனை செய்வது எப்படி, எதற்கு என்பன போன்ற தயக்கத்தை, பயத்தை எல்லாம் துடைத்து எரிந்துவிட்டு, விற்பனையே வெற்றி என்று நம்பிக்கையுடுனும், துணிவுடுனும் தொடுங்குங்கள். நீங்கள் சிறப்பாக விற்பனை செய்ய, சில முறையான வழிகளை நான் இங்கே தருகிறேன். எல்லாத் துறைகளுக்கும் இவை பொருந்தும் என்றாலும், துணிக்கடை, காலணிக்கடை, பேன்ஸி ஸ்டார் போன்ற சில்லறை விற்பனைக் காட்சியகங்களுக்கு (Retail Showrooms) மிகவும் பொருத்தமானதாக இருக்கும்.

எதை விற்கிறீர்கள்..?

முதலில், நீங்கள் எதை விற்கிறீர்கள் என முடிவு செய்யுங்கள். பொருளையா, உங்கள் திறமையையா அல்லது உங்களையா என்று யோசியுங்கள். உணவுப்பொருட்கள், மருந்துகள் போன்ற சில பொருட்கள் தானாகவே விற்கும். அவற்றை ஏன் உங்களிடும் வாங்க வேண்டும் என்ற அடிப்படையில் சிந்தித்து செயல்பட்டாலே, நீங்கள் தொழிலில் வெற்றி பெற்று விடுலாம். அல்லது மிகவும் வித்தியாசமான அல்லது பிரத்தியேகமான பொருள் என்றாலும், அந்தச் சிறப்பைக் கொண்டு அதை விற்றுவிடுலாம்.

ஆனால், பெரும்பாலும், நாம்தான், நம் திறமையால் பொருட்களை விற்க வேண்டியிருக்கும். எந்தப் பொருளையும், யாரிடுமும் விற்க முடியும்…

விற்பவருக்குத் திறமையிருந்தால். தேவையே இல்லாத, அழகு சாதன கிரீம்கள், எப்படி நம் மீது திணிக்கப்பட்டன என்று யோசியுங்கள்.

விளம்பரப் பலகைகளை விற்கும் ஒருவர், வீட்டுக்குள்ளேயே நுழைய விடமல் கோபத்துடுன் துரத்திய ஒருவரிடும் கூட, விற்பனையை முடித்தாராம். எப்படி..? அவரிடும், “விற்பனையாளர்களுக்கு அனுமதியில்லை” என்று எழுதியிருந்த பலகையை விற்றுவிட்டராம். இதுதான் திறமையை விற்பது என்பது.

பல நேரங்களில், நம் பொருள், திறமை – இதெல்லாம் உதவாமல் போகலாம். ஆனால், நாம் சரியாக நடுந்து கொள்வதன் மூலம், நம் பழக்கங்கள், உறவுகள் மற்றும் நற்பெயரின் மூலம் சிறப்பாக விற்பனை செய்ய முடியும். நீங்கள் அடிக்கடி செல்லும் டீ கடை அல்லது பெட்டிக் கடையை நினைத்துப் பாருங்கள். அங்கு விற்கப்படும் பொருளின் தரம், விலை, விற்பனையாளரின் திறமை இதையெல்லாம் விட, அங்கே உள்ள யாரோ ஒரு மனிதரின் குணத்திற்காக, பழக்கத்திற்காகத்தான் அங்கு செல்வீர்கள். இதைத்தான், “உங்களை விற்பது” என்ற வகையில் கொண்டுவருகிறேன். அப்படி, உங்களையே விற்பதற்கான சிறந்த வழிமுறைகளைத்தான் இங்கே தரப்போகிறேன்.

விற்பனையின் ஏழு படிநிலைகள்:
விற்பனை என்றதுமே, உங்களிடும் வாங்க இருப்பவரை மனதில் நினையுங்கள். நீங்கள் அந்த வாடிக்கையாளராக இருந்தால், என்னவெல்லாம் எதிர்பார்ப்பீர்கள் என்பதை விதம் விதமாகக் கற்பனை செய்து, அனைத்தையும் பூர்த்தி செய்யும் வகையில் திட்டமிடுங்கள் . ஏனென்றால், எந்த ஒரு தொழிலுக்கும், வணிகத்திற்கும் வாடிக்கையாளரே முக்கியமானவர். முதலாளி இல்லாமல், தொழிலாளி இல்லாமல், அவ்வளவு ஏன்… பொருளே இல்லாமல் கூடு வணிகம் நடுக்கும். ஆனால், வாடிக்கையாளர் இல்லாமல் எந்தத் தொழிலும் நடுக்க முடியாது.

ஒரு தொழிலில், வாடிக்கையாளர் என்பவர் மட்டுமே, வரவினம் ஆவார். மற்ற எல்லாமே செலவினங்கள்தான். எனவே, வாடிக்கையாளரே வியாபாரத்தின் மையம் என்பதை உணருங்கள். அவருக்காகவே நாம் என்றும், நமக்காக அவரில்லை என்பதையும் உணருங்கள். அப்போது, அவரை மகிழ்விப்பது குறித்து சிந்திக்கத் தொடுங்குவீர்கள். அப்படி விற்பதற்கு, பொதுவாக, ஏழு படிநிலைகளை நீங்கள் பின்பற்ற வேண்டும்.

1) விற்பனைக்கு முன் – தயாரிப்பு:
முதலில் உங்கள் பலம், பலவீனங்களை அறிந்து கொள்ளுங்கள். அதற்கேற்றவாறு, விற்பனை முறைகளைத் திடு;டுமிடுங்கள். உதாரணமாக, சகோதரர்கள் இருவர் ஒரு துணிக்கடையைத் தொடுங்கினார்கள். இருவருக்குமே பெரிய அறிவோ, பேசும் திறமையோ இல்லை. அதனால் ஒரு உத்தியைக் கையாண்டுனர். இருவரில் மூத்தவர் தனக்குச் சரியாகக் காது கேட்காது போலவே, வாடிக்கையாளர்களிடும் பேசுவார். இதனால் கேள்விகள் குறையும்.

இறுதியில் வாடிக்கையாளர் விலை கேட்கும் போது, தம்பியிடும் கேட்பார் . தம்பி சொன்ன விலையைத் தான் தவறாகக் காதில் வாங்கியது போல நடித்து, அதை விடக் குறைவான விலையைச் சொல்வார். விலை குறைவாகக் கிடைக்கும் மகிழ்ச்சியில், வாடிக்கையாளரும் ஊடுனே வாங்கிச் செல்வார்.

இது தந்திரம்தான் என்றாலும், பலவீனங்களை மாற்றிக்கொள்ள முடியும் என்பதற்கான உதாரணமாக மட்டும் எடுத்துக்கொள்ளுங்கள். அறிவை விரிவு செய்யுங்கள். உங்கள் தொழில் மற்றும் சந்தை குறித்த விவரங்களை அறிந்து கொள்ளுங்கள். பிறகு, உங்கள் வாடிக்கையாளர்களின் தகுதி, எதிர்பார்ப்புகள் போன்றவற்றை அறிந்துகொள்ளுங்கள்.

எவ்வளவு தெரிந்து கொள்கிறீர்களோ, அவ்வளவு வெற்றி. நான் சொல்லி நம்பவில்லை என்றால், “பாய்ஸ்” படுத்தில் வரும் செந்திலின் கதாபாத்திரத்தைக் கவனியுங்கள். அவர் சொல்வார்… “Information is Wealth”.

2) விற்பனையின் தொடக்கம் :
வாடிக்கையாளரைக் கண்டுதுமே, எழுந்து நின்று, முகமலர்ச்சியுடுன், ஒரு உளப்பூர்வமான புன்னகையுடுன் வணங்கி வரவேற்பது மிகச் சிறந்த பண்பாகும். “வாங்க சார் (மேடம்)..! என்ன வேண்டும்..?” என்று நீங்கள் கேட்கும் விதத்திலேயே, பல விற்பனைகள் முடிந்துவிடும். நேர்மறையாகவோ அல்லது எதிர்மறையாகவோ. அவர்கள் தேவைகளைப் பொறுமையாகக் கேட்டு , அறிந்து கொள்ளுங்கள்.

அதற்கு ஏற்றாற்போலப் பொருட்களைக் காண்பியுங்கள். அவர்களின் வார்த்தைகளை மட்டுமல்லாது , கண்கள் மற்றும் உடல்மொழியைக் கவனியுங்கள். அது அவர்களின் எண்ணத்தை அறிய, உங்களுக்கு உதவும்.

3) விற்பனையின் நகர்வு:
வாடிக்கையாளர்களின் விருப்பத்தை அறிய முற்படுங்கள். அதற்கு, அவர்களின் சூழலைக் கவனியுங்கள். உதாரணமாக, கைக்குழந்தையோடு கiடுக்கு வருபவர், அதைக் கவனிப்பதிலேயே
இருந்துவிட்டு, வாங்க வந்ததை சரியாகச் செய்யமாட்டார் அப்போது, அந்தக் குழந்தைக்குப் போக்குக் காட்டியோ, ஒரு சாக்லெடு; தந்தோ, சூழலை உங்கள் வசமாக்கிக் கொள்ளுங்கள். மேலும், என்ன காரணத்திற்காக வாங்க வந்திருக்கிறார் என்பதை, நேரடியாகக் கேட்காமல் , நைசாகத் தெரிந்துகொள்ளுங்கள். அது உங்கள் விற்பனையை உயர்த்தும். உதாரணமாக, மனைவியின் பிறந்த நாளுக்காக ஒன்றை வாங்கும் கணவரிடும், அவரின் பாச உணர்வைத் தூண்டும் விதமாகத் தூண்டில் போடுங்கள்.

ஒரு நல்ல விற்பனையாளர் என்பவர், தன்னுடைய குணத்தைக் காட்டுவாராகா இல்லாமல், வாடிக்கையாளரின் குணநலனுக்கு ஒத்துப்போகக் கூடியவராக இருக்க வேண்டும். ஒரு நல்ல விற்பனையாளர், எல்லாம் தெரிந்தது போல் பேசும் வாடிக்கையாளரிடும், தன் அறிவின் பெருமையை நிலைநாட்டக் கூடாது. வாடிக்கையாளருக்கே எல்லாம் தெரியும் என்று அவரைப் புகழ்ந்து, விற்பனையை சாதிக்க வேண்டும்.

4) விற்பனை விளக்கம்:
வாடிக்கையாளரின் தேவையை நன்கு உணர்ந்த பின், உங்களிடும் இருக்கும் பொருளை அந்தத் தேவையோடு இணைக்க வேண்டும். ஏனென்றால், வாடிக்கையாளர் விரும்புவது எல்லாமே உங்களிடும் இருக்காது. அப்போது, அவரின் விருப்பத்திற்கு இணையாக உங்களிடும் உள்ள பொருளை, அவர் மகிழ்ந்து ஏற்குமாறு விளக்க வேண்டும். நகைச்சுவையாக ஒரு உதாரணம் சொல்கிறேன். எலித்தொல்லை தாங்காமல் கடைக்குச் சென்ற ஒருவர் பூனை இருக்கிறதா என்று கேட்டாராம். பூனை ஸ்டாக் இல்லாத நிலையில், அந்தக் கடைக்காரர் சொன்னாராம்… “இந்தப் பெருச்சாளியை வாங்கிச் செல்லுங்கள்..! இது பூனையையே பயந்து ஓடுச் செய்யக் கூடியது!” என்று.

வாடிக்கையாளர்கள் கேள்விகள் கேட்டால்,, பொறுமையாகப் பதிலளியுங்கள். அவர்களைத் திருப்தி செய்ய என்ன சொல்ல வேண்டும் என்பதிலேயே கவனமாக இருங்கள். உங்கள் பொருளின் பயன்கள் குறித்த விளக்கத்தைச் சொல்லி, வாடிக்கையாளரை ஈர்க்க முயலுங்கள். ஒரு பொருளின் விலையை விடு, அதன் மதிப்பு அதிகமானது என வாடிக்கையாளரை உணர வையுங்கள். இது புரிய வேண்டும் என்றால், டியோடுரன்டு, மற்றும் பர்பியூம் விளம்பரங்களைப் பாருங்கள். தங்கள் பிராண்டைப் பயன்படுத்தினால், உங்களைப் பெண்கள் சூழ்ந்துகொள்வார்கள் என்று ஆசை கொள்ள வைப்பார்கள்.

5) மறுப்புகளைச் சமாளித்தல்:
எந்த விற்பனையிலும் இருக்கும் மிகப்பெரிய சவால்… வாடிக்கையாளரின் எதிர்வினைகள் மற்றும் மறுப்புகளைச் சமாளிப்பதுதான். இதில் முதன்மையான விஷயம், வாடிக்கையாளர் எதைச் சொன்னாலும், எப்படிச் சொன்னாலும், அதை முழுமையாக, அமைதியாகக் கேட்பதுதான் . இந்த உலகிலேயே மிகச்சிறந்த அறிவாளி யார் என்று மாமன்னர் அக்பர் கேட்டாராம் .

அதற்கு பீர்பால், இரண்டு நாட்கள் அவகாசம் கேட்டு வாங்கி, ஒருவரை அழைத்து வந்தாராம். வந்தவரிடும், அக்பர் விதவிதமான கேள்விகளைக் கேட்டார் . அவரோ, எதற்குமே பதில் சொல்லாமல் மௌனமாக
இருந்தார். அக்பர் கோபத்தில் பொங்கத் தொடுங்கியதும், பீர்பால் விளக்கம் சொன்னாராம்… “மன்னா! இவர்தான் சிறந்த அறிவாளி என்றால், மற்ற அனைவரும் அவரை விட முட்டாள்கள்தானே ! அதனால்தான் அவர் மௌனமாக இருக்கிறார். ஏனென்றால், முட்டாள்களிடம் பேச, சிறந்த மொழி… மௌனம்..!” என்றாராம். நண்பர்களே..! மற்றவர்களை முட்டாள்கள் என்று காட்டுவதற்கு மட்டுமல்ல, நீங்கள் புத்திசாலித்தனமாக வெற்றிபெறக் கூட, மௌனம் உதவும் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.
அமைதியாகக் இருக்கும்போது , வாடிக்கையாளரின் வார்த்தைகளை மட்டும் புரிந்து கொள்ளாமல், அதற்குப் பின்னால் இருக்கும் அவரின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளுங்கள்.

பெரும்பாலும் மனிதர்களின் கோபமான வார்த்தைகளுக்குப் பின்னால் ஒரு ஏமாற்றம் ஒளிந்திருக்கும். அதை நீக்கி, நம்பிக்கை தரும் விதமாகப் பேசுங்கள். நிச்சயம் அவரும் செவிசாய்ப்பார். ஏனென்றால், விளம்பரத்தில் நடிகர் பிரபு சொல்வது போல “நம்பிக்கை… அதானே எல்லாம்..!”

தவறு உங்கள் பக்கம் இருந்தால், தயங்காமல் மன்னிப்புக் கேளுங்கள். வாடிக்கையாளர் தவறாகச் சொன்னால் கூடு, அவசரமாக மறுத்து விடதீர்கள்..! முதலில் அவர் சொல்வதற்கு “ஆமாம்”, “நீங்கள் சொல்வது சரிதான்!” போன்ற நேர்மறையான வார்த்தைகளைப் பயன்படுத்துங்கள். அதற்குப்பிறகு, “ஆனால்…” என்று தொடுங்கி, உங்கள் நிலையை எடுத்துரையுங்கள். வியாபாரத்தில் மட்டுமல்ல , எந்த உறவிலும், நான் சொல்லியுள்ள இந்த “ஆமாம்..! ஆனால்..,” யுத்தியைப் பயன்படுத்தினால், வெற்றி உங்களுக்கே..!

6) விற்பனையின் நிறைவு:
தேர்வுகளில் குழம்பும் வாடிக்கையாளர்களுக்கு, அவர்கள் மனம் புண்படதவாறு, ஆலோசனைகள் சொல்லலாம். ஆனால், இதில் மிகுந்த கவனம் தேவை. ஒரு ஆண் விற்பனையாளர், ஒரு பெண் வாடிக்கையாளரிடும் “இது உங்களுக்கு மிகவும் அழகாக இருக்கும்” என்று சொல்வது சிக்கலை உருவாக்க வல்லது. அதைவிடு, ஒரு ஆணிடும், “உங்கள் மனைவிக்கு இது பொருத்தமாக இருக்கும்” என்று உளறுவது, சொந்தக் காசில் சூனியம் வைத்துக் கொள்வதற்கு சமமாகும். எனவே, ஆலோசனை சொல்லும் போது, கவனமாயிருங்கள்.

நிறைய பொருள்களை எடுத்து வைத்துக்கொண்டு, தேர்ந்தெடுக்கக் குழம்புபவர்களின், தேர்வு வாய்ப்புகளைக் (Options) குறைத்துக் கொடுங்கள். இரண்டு அல்லது மூன்று, என்று எண்ணிக்கை குறையும்போது, வாடிக்கையாளரால் எளிமையாகத் தேர்வு செய்ய முடியும். விற்பனையும் நிறைவடையும். இப்போதே வாங்கிவிடுவும், கூடுதலாக வாங்கவும், நீங்கள் நினைத்ததையே வாடிக்கையாளர் தேர்வு செய்யவும், மறைமுகமாக அவரைத் தூண்டுங்கள்.

இந்த உந்தும் திறனை, ஒவ்வொரு விற்பனையாளரும், பயிற்சிகளிலிருந்தும், அனுபவத்திலிருந்தும் கற்றுத் தேர வேண்டியது அவசியம்.

7) விற்பனைக்குப் பின் – உறவு தொடர்தல் :
விற்பனை நிறைவுற்ற பின், தொடுர்புடைய மற்ற பொருடகள், சலுகைகள் மற்றும் வருங்கால அறிவிப்புகளை, வாடிக்கையாளரிடும் எடுத்துச் சொல்லுங்கள். இவை, வாடிக்கையாளரின் ஆர்வத்தைத் தூண்டும் வகையிலும், மகிழ்ச்சியைக் கூடும் வகையிலும் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். நிறைவாக, மனம் நிறைந்த நன்றியைத் தெரிவிக்க மறவாதீர்கள். “நன்றி மறப்பது நன்றன்று..!”

வாடிக்கையாளர் பற்றிய விபரங்களை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். குறிப்பிட கால
இடைவெளியில், தொல்லை தராமல், உங்கள் தொழில் தொடுர்பான முக்கியத் தகவல்கள், சலுகைகைளை அவருக்குத் தெரியப்படுத்தி வாருங்கள். பண்டிகைக் கொண்டடுங்கள், பிறந்த நாள் போன்ற தினங்களில், வாடிக்கையாளருக்கு வாழ்த்துகளைத் தெரிவியுங்கள். நினைவில் கொள்ளுங்கள்..! உறவு நல்ல முறையில் தொடுர்ந்தால், விற்பனையும் நீண்டு காலம் தொடுரும். மேம்படும்.

இந்த 7 படிநிலைகளும் பொதுவானவை. இவற்றை, உங்கள் அறிவையும், திறமையையும் கொண்டு, உங்கள் தொழிலுக்கேற்றவாறு மேம்படுத்தி, புதுமைகளைப் புகுத்திப் பயன்படுத்துங்கள். ஏனென்றால், ஒரே அளவிலான சடு;iடு எல்லாருக்கும் பொருந்தாது. நான் வழங்கியுள்ள துணியை, உங்கள் அளவுக்கேற்றவாறு, உங்களுக்குப் பிடித்த வகையில் தைத்துக் கொள்வது, உங்கள் பொறுப்பு. அப்போதுதான், அது உங்களுக்குப் பொருத்தமானதாக அமையும்.

முதல் முறை தொழில்முனைவோர் செய்யும் பொதுவானத் தவறுகள் யாவை

 பேக்கரி திறந்ததுமே பன்னு வேணும் வெண்ணை வேணுமுன்னு கூட்டம் அள்ளும்னு நினைத்து கொண்டு ஏமாறுவது. ஒரு தொழிலின் சாதக பாதகம் குறித்து உரிய ஆய்வு செய்து பின்னரே தொடங்க வேண்டும்

உங்கள் நண்பர் தன் ஊரில் ஒரு வியாபாரம் ஆரம்பித்துவிட்டார் அது வெற்றி பெற்றதால் அதே வியாபாரம் உங்களுக்கும் வெற்றிகரமாக அமையும் என்று எண்ணாதீர்..ஒவ்வொரு தொழிலின் வெற்றியும் தோல்வியும் இடம், கால நிலை, அப்பகுதி மக்களின் வாழ்க்கை முறை இன்னும் முக்கியமாக உங்கள் நிறுவனம் அல்லது கடையின் தனித்துவமான ஒரு தன்மை ( unique selling point -usp ) ஆகியவற்றை பொறுத்து மாறும்.

உங்கள் வியாபாரத்துக்கு தேவையான மூல பொருட்கள், அலுவலக மேசை நாற்காலிகள் உள்ளிட்ட மூலதன செலவுகளுக்கு மொத்த பணத்தையும் வாரி இறைத்து விட்டு சந்தை படுத்துதலுக்கு ( marketing ) எந்த நிதி ஒதுக்கீடும் இல்லாமல் உரிய வியாபாரம் இல்லாமல் முழி பிதுங்கி நிற்பது. உங்கள் மூலதன செலவுகளில் சந்தை படுத்துதலுக்கான செலவு மிக முக்கியமானது. குறைந்தது 6 மாதம் முதல் 1 வருடத்திற்கான சந்தைப்படுத்துதல் நிதி உங்கள் வங்கி கணக்கில் இருப்பது அவசியம். உங்கள் மொத்த முதலீட்டில் அதிக பட்சம் 30 சதவீதம் இதற்காக செலவிடலாம். ( தொழில் வகையை பொறுத்து )

6 மாதம் வரைக்கும் நிர்வாக செலவுகளுக்கான பணமும் உங்கள் வங்கி கணக்கில் இருக்க வேண்டும். நீங்கள் வியாபாரம் ஆர்மபித்த பின் ஏற்படும் நிதி பற்றாக்குறை உங்கள் வளர்ச்சியை வெகுவாய் பாதிக்கும்.

நிறுவனம் அல்லது வியாபாரத்தில் எல்லா வேலைகளையும் நீங்களே இழுத்துப்போட்டு செய்வது. உங்கள் வியாபாரத்தின் முக்கிய வேலைகளை எப்போது சரியாய் உங்கள் பணியாளர்களுடன் பகிர்ந்து உங்கள் வேலை பளுவை குறைத்து அடுத்த கட்டத்துக்கு நகர்வீர்களோ அதுவே உங்கள் வளர்ச்சிக்கான அடுத்த படி.

தொழில் ஆரம்பித்ததுமே செய்தி தாள்களில் விளம்பரம் செய்து பணத்தை விரயம் செய்வது. பெரும்பாலான புதிய தொழில்களுக்கு செய்தி தான் விளம்பரங்களை விட இணைய தள மற்றும் சமூக வலைதள விளம்பரங்கள் குறைந்த பொருட்செலவில் அதிக/சரியான நபர்களை சென்றடையும்.

முதலாளியாகனும்னு ஆசையா.. தொழிலதிபராக தமிழக அரசு தரும் சூப்பர் சான்ஸ்

 புதிய தொழில் தொடங்க விரும்பும் இளைஞர்களுக்கு மாவட்ட தொழில் மையம் மூலம் கடன்கள் தரப்படுகிறது. அப்படி தரப்படும் கடன்களுக்கு 25 சதவீதம் மானியமும் தரப்படுகிறது. இந்த வாய்பை தவிர விட வேண்டாம் என்று கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் தெரிவித்துள்ளார்.

படித்து முடித்துவிட்டு வேலை தேடும் இளைஞர்கள் எண்ணிக்கை கோடிக்கணக்கில் இருக்கிறது.. அத்தனை பேருக்கும் அரசால் வேலை தர முடியாது. தனியார் நிறுவனங்களில் வேலைக்கு சேரலாம். ஆனால் அதேநேரம் வேலைக்கு போகாமல் சுயமாக தொழில் தொடங்கி பலர் தொழில் முனைவோராக வர வேண்டும் என்று அரசு விரும்புகிறது.

சுயதொழில் தொடங்க ஆர்வமுள்ள தொழில்முனைவோர் மாவட்டத்தில் உள்ள தொழில் மையத்தின் பொது மேலாளரை நேரில் அணுகி ஆலோசனை பெறலாம். அதேநேரம் 36 வகையான தொழில் திட்டங்களுக்கு மானியத்துடன் கடன் உதவி பெறலாம்.. அண்மை காலங்களாக இ சேவை மையம், செல்போன் சர்வீஸ் மையம் போன்றவை அதிகமாக அமைக்கப்படுகிறது. இதேபோல் பலரும் விரும்பிய வகையில் தொழில்களை தொடங்குகிறார்கள். அப்பபடி தொழில்முனைவோர் சமர்ப்பிக்கும் விண்ணப்பம் தொழில் மையத்தின் உதவியுடன் வங்கிகள் மூலம் தொழில் கடனானது வழங்கப்படுகிறது..

பொதுவாக தொழில் கடன் தருவதற்கான வங்கிகள்,. ஒருவரின் சிபில் ஸ்கோரைப் பொறுத்து தருகின்றன,. விண்ணப்பிக்கும் நபர் தொழில் கடன் வாங்கும் தகுதி உடையவர் என உறுதி செய்யப்பட்டால், வங்கி மேலாளர் தொழில் தொடங்குவதற்கான இடம், தக்க சான்றுகளை ஆய்வு செய்த பின்னர் கடன் வழங்குவார். இதில் அரசின் பங்கு என்னவென்றால் ரூ.10 லட்சம் மதிப்புக்கு ஒரு தொழில் தொடங்கினால் , ரூ.3.5 லட்சம் மானியத் தொகையை உங்கள் வங்கிக் கணக்கில் அரசு செலுத்திவிடும். இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், வியாபாரம் சார்ந்த தொழில்களுக்கு அதிகபட்சமாக ரூ.5 லட்சம் கடன் கிடைக்கும். சேவை சார்ந்த தொழில்களுக்கு ரூ.5 லட்சமும், உற்பத்தி சார்ந்த தொழில்களுக்கு அதிகபட்சமாக ரூ.15 லட்சம் வரை வங்கிகள் மூலம் கடன் வசதி பெற முடியும்.

இத்திட்டத்தின் கீழ் பயன்பெற 12-ம் வகுப்பு தேர்ச்சி, பட்டப்படிப்பு, டிப்ளமோ, ஐடிஐ,அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தின் மூலம் தொழில்சார் பயிற்சி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கூடுதல் விவரங்கள் மற்றும் கூடுதல் வழிகாட்டுதலுக்கு பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம்,  அலுவலகத்தை நேரில் தொடர்பு கொள்ளலாம்"

ஒரு புதிய தொழில் துவங்கும் முன் அறிந்து கொள்ள வேண்டியது என்ன?

 ஏகபோகம்(Monopoly)

  • போட்டியாளர்களே இல்லாத சந்தையை தேர்ந்தெடுங்கள்
  • சிறிய சந்தையாக இருந்தாலும் போட்டி இல்லாத சந்தையை தேர்ந்தெடுங்கள். அப்பொழுது தான் நீங்கள் அதில் ஏகபோகமாக இருக்க முடியும்.
  • கூகுள், பேஸ்புக், மைக்ரோசாப்ட் போன்ற நிறுவனங்கள் இன்று மிக பெரிய அளவிற்கு வளர காரணம். அந்தந்த துறையில் அது தான் முதல் நிறுவனமாக இருந்தது.
  • எடுத்துக்காட்டாக கூகுள் 90-களில் ஆரம்பிக்கும் பொழுது அதன் சந்தை மிக சிறியது மற்றும் வேறு எந்த நிறுவனமும் அதற்கு போட்டியாக இல்லை. இது அவர்களின் மொத்த சந்தையையும் அவர்களுக்கே சொந்தமாக்கியது. இதே கதை தான் பேஸ்புக், மைக்ரோசாப்ட் மற்றும் பேபால் நிறுவனங்களின் இமாலய வளர்ச்சிக்கு காரணம்.
  • நீங்கள் தொடங்கும் தொழில் அந்த இடத்தில முதலாவதாக இருக்கட்டும். ஒரு இடத்தில் இருக்கும் 4-வது உணவகமாகவோ, 10-வது கைபேசி கடையாகவோ இருக்க முயற்சிக்காதீர்கள் .

சிறியதாக தொடங்குங்கள்

  • ஆரம்பத்தில் சிறிதாக தொடங்குங்கள்.
  • சிறிதாக தொடங்கினாலும் அதில் உங்களை விட சிறந்த பொருட்களை அல்லது சேவையை தர முடியாத அளவுக்கு சிறப்பாக இருங்கள்.
  • எடுத்துக்காட்டாக, அமேசான் நிறுவனர் ஜெப் பீசோஸ் தனது இலக்காக உலகின் மிகப்பெரிய ஆன்லைன் சில்லறை விற்பனையாளர் ஆக வேண்டும் என தீர்மானித்தார்.
  • ஆனால் அவர் எடுத்த உடனேயே அனைத்து பொருட்களையும் விற்கும் சில்லறை விற்பனையாளர் ஆகவில்லை. முதலில் புத்தகங்கள் மட்டும் விற்கும் தலமாக தான் அமேசானை தொடங்கினார். பின்னர் உலகிலேயே சிறந்த புத்தக கடையாக அதை மாற்றினார். அதன் பிறகு தான் அனைத்து பொருட்களையும் விற்கும் தலமாக அமேசானை மாற்றினார்.

புதிய சிந்தனை

  • அடுத்த பில் கேட்ஸ் ஒரு ஆப்பரேட்டிங் சிஸ்டம் உருவாக்கிக் கொண்டிருக்க மாட்டார்.
  • அடுத்த ஸுக்கர்பேர்க் ஒரு சமூக வலைத்தளத்தை உருவாக்கிக் கொண்டிருக்க மாட்டார்.
  • நாம் அவர்களை பின்பற்றினால் அவர்களிடம் இருந்து கற்றுக்கொள்ளவில்லை என்று தான் அர்த்தம்.
  • இது வரை யாரும் செய்திராத ஒரு விடயத்தை செய்யுங்கள்.
  • ஏனென்றால் ஒரே ஆற்றில் இரண்டு முறை அடியெடுத்து வைக்க முடியாது(You cannot step into the same river twice).

கடைசியாக இருங்கள்

  • ஒரு பொருள் இந்த உலகத்தில் இருந்து அழிய போகிறதென்றால், உங்கள் பொருள் தான் கடைசியாக அழிய வேண்டும் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
  • மைக்ரோசாப்ட் தான் பல ஆண்டுகளுக்கு கடைசி ஆப்பரேட்டிங் ஸிஸ்டெமாக இருந்தது.
  • கூகுள் தான் கடைசி தேடு தலமாக இருந்தது.
  • எனவே முடிவை மனதில் வைத்துக்கொண்டு தொடங்குங்கள்.

நன்றி

கவி 

நெல்லிக்காயினால் கிடைக்கும் அழகு

 நெல்லிக்காயின் சுவை பலருக்கு பிடிக்கும். அதே சமயம் அந்த நெல்லிக்காய் ஆயுர்வேத மருத்துவத்தில் அதிகம் பயன்படுத்தப்படும். அதிலும் பெரிய நெல்லிக்காய் தான் மிகவும் நல்லது. ஏனெனில் அந்த நெல்லிக்காயில் நிறைய சத்துக்கள் நிறைந்துள்ளது. மேலும் நெல்லிக்காய் சாப்பிடுவதால், உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் பற்றி அனைவருக்கும் தெரியும். ஆனால் நெல்லிக்காயில் கிடைக்கும் அழகு நன்மைகளைப் பற்றி பலருக்கு தெரியாது. ஆகவே தமிழ் போல்ட் ஸ்கை நெல்லிக்காயினால் கிடைக்கும் அழகு நன்மைகளைப் பட்டியலிட்டுள்ளது.

அதற்கு அந்த நெல்லிக்காயை சாறாகவோ அல்லது பொடியாகவே பயன்படுத்தலாம்.இப்படி பயன்படுத்துவதால், சருமத்தில் ஏற்படும் சுருக்கங்கள் குறைவது, சருமத்தின் பொலிவு அதிகரிப்பது, நரை முடி மற்றும் பொடுகு தொல்லையில் இருந்து விடுபடுவது என்று பல நன்மைகள் கிடைக்கும். அதுமட்டுமின்றி, நெல்லிக்காய் சருமத்தில் உள்ள கொலாஜன் செல்களின் உற்பத்தியை அதிகரித்து, இளமை தோற்றத்தை தக்க வைக்கும் நெல்லிக்காய் சாற்றினை தினமும் காலையில் வெறும் வயிற்றில் தண்ணீருடன் சேர்த்து குடித்து வந்தால், சருமத்தில் உள்ள நச்சுக்கள் வெளியேறி, கொலாஜன் உற்பத்தி அதிகரித்து, சரும சுருக்கம் நீங்கி, சருமம் இளமையுடன் காட்சியளிக்கும். ஒருசிலருக்கு சருமத்தில் ஆங்காங்கு கருமையான திட்டுக்கள் காணப்படும். இது வயதான தோற்றத்தைத் தரும்.

ஆகவே தினமும் நெல்லிக்காய் சாறு பருகி வந்தால், அந்த திட்டுக்கள் மறைந்து, சருமம் பொலிவோடு அழகாக காணப்படும்.அழகைக் கெடுக்கும் வகையில் உடல் எடை அதிகமாக உள்ளதா? அப்படியானால் தினமும் உடற்பயிற்சி செய்வதுடன், நெல்லிக்காய் சாற்றினையும் பருகி வர வேண்டும். இதனால் உடலின் மெட்டபாலிசம் அதிகரித்து, கொழுப்புக்கள் கரைக்கப்பட்டு, உடல் எடை குறையும் நாள்தோறும் ஒரு டம்ளர் நெல்லிக்காய் சாற்றினை பருகி வந்தால், அது உடலுக்கு மட்டுமின்றி, கூந்தலுக்கும் நல்லது. அதிலும் அதில் உள்ள வைட்டமின் சி சத்தினால், முடியின் வலிமை அதிகரித்து, முடி வெடிப்பு, பொலிவிழந்த காணப்படும் கூந்தல் போன்றவற்றை தடுத்து நிறுத்தி, நல்ல ஆரோக்கியமான கூந்தலைப் பெறலாம்.

நெல்லிக்காயின் மற்றொரு அழகு நன்மைகளில் ஒன்று தான் நரை முடி பிரச்சனை. அதற்கு தினமும் நெல்லிக்காய் சாற்றினை பருகி வர வேண்டும். இதனால் அதில் உள்ள அதிகப்படியான ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் வைட்டமின் சி நரைமுடியை தடுத்து நிறுத்தும். உலகில் இருக்கும் தொல்லையில் பெரிய தொல்லை என்றால் அது பொடுகு தொல்லை என்று தான் சொல்ல வேண்டும். அத்தகைய பொடுகு தொல்லையை நெல்லிக்காய் ஜூஸ் பருகுவதால் தடுத்து நிறுத்தலாம்.நெல்லிக்காய் சாற்றின் அதிகப்படியான வைட்டமின் சி மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் இருப்பதால், அவை இரத்தத்தை சுத்தப்படுத்தி, செரிமானத்தை அதிகரித்து, உடலில் தங்கியுள்ள நச்சுக்களை உடலில் இருந்து வெளியேற்றி, பிரச்சனை இல்லாத பொலிவான சருமத்தை தரும்.

மென்மையான மற்றும் இளமையான தோற்றத்தைக் கொடுப்பது கொலாஜன் செல்கள் தான். ஆனால் வயதாக வயதாக அந்த செல்களின் உற்பத்தி குறைவதால் தான், முதுமைத் தோற்றத்தை அனைவரும் பெறுகிறோம். ஆனால் இந்த கொலாஜன் செல்களின் உற்பத்தியை அதிகரிக்கும் திறன் நெல்லிக்காய்க்கு உள்ளது.

ஆரோக்கியமான தலைமுடியை பெற

 முடி கழிதல், சொரசொரப்பான முடி அல்லது சுருண்டு போகும் முடியால் கவலையாக உள்ளதா? இப்பிரச்சனைகளை தீர்ப்பதற்காக உங்கள் பணத்தை ரசாயனம் கலந்த பொருட்கள் வாங்குவதில் விரையம் செய்கிறீர்களா? அப்படியானால் தொடர்ந்து படியுங்கள், உங்களுக்காக தான் இது. பல வகையான தலைமுடி பிரச்சனைகளை தீர்ப்பதற்கு முட்டை பெரிதும் உதவுகிறது.

முடியின் அடர்த்தியை அதிகரிக்க, சுருள்களை குறைக்க, சொரசொரப்பை குறைக்க முட்டையை பயன்படுத்துங்கள். மலிவாக விற்கும் முட்டையின் உதவியை கொண்டு உங்கள் முடியின் ஆரோக்கியத்தை அதிகரிக்கலாம். முட்டையை கொண்டு செய்யப்படும் பேக், ஷாம்பு மற்றும் கண்டிஷனர்களை பற்றி இப்போது பார்க்கலாமா?

திடமான தலைமுடிக்கு…
தேவையான பொருட்கள்: –
– முட்டைகள் – – எக்ஸ்ட்ரா வெர்ஜின் ஆலிவ் எண்ணெய்

தயாரிக்கும் முறை:

* இரண்டு முட்டைகளை எடுத்து அதிலிருந்து மஞ்சள் கருவை தனியாக எடுங்கள். பின் நுரை வரும் வரை மஞ்சள் கருவை நன்றாக அடித்துக் கொள்ளுங்கள். அதனுடன் 2 டீஸ்பூன் எக்ஸ்ட்ரா வெர்ஜின் ஆலிவ் எண்ணெய்யை சேர்த்து நன்றாக கலக்குங்கள். கலவை அடர்த்தியாக வருவதற்கு அதனை 3-4 நிமிடங்களா வரை நன்றாக அடிக்கவும். இதோ, உங்கள் தலை முடிக்கான மாஸ்க் தயார்.

* இந்த கலவையை தலை முடியில் தடவுவதற்கு முன்பாக, தலை முடியை மிதமான ஷாம்புவை கொண்டு நன்றாக அலசிக் கொள்ளுங்கள். தலை முடி ஈரமாக இருக்கும் போது, இந்த கலவையை முடிகளின் வேர்கள், தலைச் சருமம் மற்றும் நுனிகளில் படும்படி தடவுங்கள். இப்போது தலையில் ஷவர் கேப் அணிந்து கொண்டு 20 நிமிடங்களுக்கு அப்படியே விட்டு விடுங்கள்.

அதன் பின் சாதாரண ஷாம்புவை கொண்டு தலையை அலசி, தட்டிக் கொடுங்கள். முட்டையில் உள்ள புரதம் உங்கள் முடியை திடமாகவும் மென்மையாகவும் மாற்ற உதவும். அதே போல் ஆலிவ் எண்ணெய் உங்கள் முடிக்கு நீர்ச்சத்தை அளித்து ஒரு சிறந்த கண்டிஷனராக
செயல்படும்.

பளபளப்பான தலை முடிக்கு…

தேவையான பொருட்கள்: –
– முட்டைகள் –
– எலுமிச்சை சாறு

தயாரிக்கும் முறை:

* ஒரு முட்டையை கிண்ணத்தில் போட்டு அதனோடு 2 டீஸ்பூன் எலுமிச்சை சாற்றை சேர்க்கவும். இந்த கலவை மென்மையாக மாறும் வரை அவைகளை நன்றாக கலக்கவும். பின் இந்த கலவையை உங்கள் தலை முடியில் தடவி ஒரு அரை மணி நேரத்திற்கு அப்படியே விட்டு விடுங்கள். அதன் பின் மிதமான ஷாம்புவை கொண்டு தலை முடியை அலசுங்கள். இதன் முடிவில் பளபளப்பான தலைமுடியை பெற்றிடுவீர்கள்.

* எலுமிச்சை சாறு பொடுகை தடுத்து தலைச்சருமத்தில் உள்ள வறட்சியை நீக்கும். முட்டை உங்கள் தலை முடி அமைப்பை பளபளவென மாற்றும்.

பட்டுப்போன்ற தலை முடிக்கு…

தேவையான பொருட்கள்: –

– முட்டைகள் –
– தேங்காய் எண்ணெய்
தயாரிக்கும் முறை: முட்டையின் மஞ்சள் கரு இரண்டை எடுத்து ஒரு கிண்ணத்தில் போட்டு, நுரை தள்ளும் அளவிற்கு அதை நன்றாக அடியுங்கள். பின் அதனுடன் 2 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய்யை சேர்த்து நன்றாக கலக்கவும். உங்கள் தலைமுடியை கழுவிய பின்பு, இந்த கலவையை உங்கள் முடியில் தேய்த்து 5 நிமிடத்திற்கு அப்படியே விட்டு விடுங்கள். பின் தண்ணீரை கொண்டு முடியை கழுவினால் ஆழமான கண்டிஷனிங் பயனை பெறலாம். இப்படி செய்வதால் சொரசொரப்பான மற்றும் சுருண்ட முடி பிரச்சனைகள் நீங்கி தலை முடியை மென்மையாக மாற்றும்.

ஆரோக்கியமான தலை முடிக்கு…

தேவையான பொருட்கள்: –
– முட்டைகள் –
– ஆப்பிள் சீடர் வினிகர் –
– கற்றாழை –
– மினரல் வாட்டர்

தயாரிக்கும் முறை:

* முட்டையுடன் 2 டீஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகர், 3 டீஸ்பூன் கற்றாழை ஜெல் மற்றும் அரை கப் மினரல் வாட்டரை கலக்கவும். இந்த கலவையை ஒரு கிண்ணத்தில் ஊற்றி சாதாரண ஷாம்புவை போல் பயன்படுத்தலாம்.

* ஏற்கனவே சொன்னதை போல், நம்முடைய தலைமுடிக்கு பல வகையில் உதவியாக இருக்கிறது முட்டை. ஆனால் அதிலிருந்து ஏற்படும் துர்நாற்றமே அதில் உள்ள ஒரே பிரச்சனை….!

நொச்சி இலை மருத்துவம்

Nochi Ilai Benefits in Tamil


நொச்சி இலையின் மருத்துவ குணம் என்னென்ன.? 

 பொதுவாக நம் வீட்டுத் தோட்டங்களிலும் வயல்களிலும் தானாக வளரும் மூலிகைகளில் நொச்சியும் ஒன்று. இதில் ஏராளமான மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன. அதாவது நொச்சி செடியின் வேர், பட்டை, விதை, பூக்கள் அனைத்தும் மருத்துவ குணங்கள் நிறைந்தவை. சரி இந்த கட்டுரையில் நொச்சி இலையின் மருத்துவ குணங்கள் பற்றி இன்றைய  பதிவில் தெரிந்து கொள்ளலாம் வாங்க..!!

நொச்சி இலையின் மருத்துவம் பலன் 

மலை மூலிகைகளில் நொச்சி சிறந்த மூலிகையாகும். அவர்கள் தோட்டங்கள் மற்றும் வயல்களை வைத்திருக்கலாம். நொச்சி களைகளில் ஒன்று என்று கூறப்படுகிறது. நொச்சி புதர் அல்லது மரமாக வளரக்கூடியது. நொச்சியில் குறிப்பிடத்தக்கவை வெண் நொச்சி, கரு நொச்சி மற்றும் நேரே நொச்சி. கருநொச்சி சித்ரா மருத்துவத்தில் பயன்படுகிறது. இந்த செடியின் வேர், பட்டை, விதைகள் மற்றும் பூக்கள் மருத்துவ குணங்கள் நிறைந்தவை. நொச்சி வேருக்கு பாம்பு விஷத்தை அழிக்கும் ஆற்றல் உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. சளி, காய்ச்சலுக்கு நல்ல மருந்து இந்த நொச்சி இலை! நொச்சி இலையை ஒரு பையில் வைத்து தலையணையாக பயன்படுத்தினால் சளி குணமாகும். இலைச்சாற்றை தலை, கழுத்து, கன்னம் ஆகிய இடங்களில் வெளிப்புறமாக தடவி வந்தால்… சைனஸ் வலி குறையும்.

உடல் சோர்வு, உடல் வலி நீங்கும்

 கொஞ்சம் கூட ஓய்வில்லாமல் கடுமையாக உழைக்கும் மக்களுக்கு சோர்வு, உடல்வலி, தசைப்பிடிப்பு, தசைவலி போன்ற பல வகையான பிரச்சனைகளுக்கு நொச்சி இலைகள் சிறந்த மருத்துவ சிகிச்சை அளிக்கிறது. அதாவது இரண்டு கைப்பிடி அளவு நொச்சி இலைகளை எடுத்துக் கொள்ளவும். பிறகு ஒரு பாத்திரத்தில் அவர்கள் குளிப்பதற்கு தேவையான அளவு தண்ணீரை நிரப்பி, அந்த தண்ணீரில் நொச்சி இலைகளை சேர்த்து நன்கு கொதிக்கவிடவும். வெதுவெதுப்பான நீரில் குளிப்பதால் உடல்வலி, சோர்வு, தசைப்பிடிப்பு, தசைவலி போன்றவை குணமாகும்.

உடலுக்கு புத்துணர்ச்சி அளிக்க 

 உடல் புத்துணர்ச்சி பெற, இலைகளை எடுத்து சுத்தம் செய்யவும். பிறகு தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும். தேவையான அளவு பாமாயில் சேர்த்து மிதமான வெப்பநிலையில் இந்த பானத்தை அருந்தினால் உடலுக்கு புத்துணர்ச்சி கிடைக்கும்.

சைனஸ் தலைவலி குணமாகும் 

பொதுவாக சைனஸ் தலைவலியை குணப்படுத்தும் சக்தி நொச்சி இலைகளுக்கு உண்டு. எனவே சைனஸ் தலைவலி குணமாக நொச்சி இலையை சிறிதளவு அரைத்து தலையில் தடவி வந்தால் சைனஸ் தலைவலியில் இருந்து நல்ல நிவாரணம் கிடைக்கும்.

 அதேபோல் நொச்சி இலையை நெய்யில் வறுத்து துணியில் கட்டி வந்தால் தலைவலி குணமாகும். மேலும் தேங்காய் எண்ணெயை இலைகளில் தேய்த்து குளித்தால் ஒற்றைத் தலைவலி, ஒற்றைத் தலைவலி போன்றவைகளில் இருந்து விடுபடலாம்.

ஆஸ்துமா சிகிச்சை 

 ஆஸ்துமா நோயாளிகள் நொச்சி இலையுடன் மிளகு, பூண்டு, இலவங்கப்பட்டை ஆகியவற்றை அப்படியே சாப்பிட்டு வந்தால் அல்லது கஷாயம் செய்து சாப்பிட்டால் ஆஸ்துமாவின் தீவிரம் குறையும்.

நாசி அமைப்பு 

தலைவலி மற்றும் ஜலதோஷத்தால் ஏற்படும் மூக்கடைப்புக்கு நொச்சி இலைகள் சிறந்த மருந்தாகும். அதாவது நொச்சி இலைகளை நன்கு உலர்த்தி பொடியாக்கி வைத்துக் கொள்ளவும். பிறகு ஒரு சிறிய மண் சட்டியில் கரியைப் போட்டு அதனுடன் காய்ந்த பொடியைச் சேர்த்து அதிலிருந்து வரும் புகையை சுவாசிக்க மூக்கடைப்பு குணமாகும்.

கொசுக்களை விரட்டும்… 

 நொச்சி ஒரு சிறந்த மூலிகை என்றால் மிகையாகாது. இதை ‘கொசு விரட்டி’ என்று கேள்விப்பட்டதில் இருந்து பெரும்பாலானோர் வீடுகளில் வளர்த்து வருகின்றனர். இது சிறிய மரமாக வளரும். ஆடு, மாடு உள்ளிட்ட விலங்குகள் இந்த மூலிகையை அணுகுவதில்லை. எனவே, இது வயல்களிலும், முள்ளெலிகளிலும் வளர்க்கப்படுகிறது. இந்த செடி சமவெளியில் 4 மீட்டர் உயரமும், மலைப்பகுதியில் 6 மீட்டர் உயரமும் வளரும். இந்த இலையில் பூச்சி விரட்டும் தன்மை உள்ளது. எனவே, சேமிப்புக் கொட்டகைகளில் நொச்சி இலைகளைச் சேர்ப்பதால் பாதிப்பு ஏற்படாது. இந்த இலை பழங்காலத்திலிருந்தே பயன்பாட்டில் இருந்ததை இது காட்டுகிறது.

நொச்சி இலைகளை தண்ணீரில் கொதிக்க வைத்து ஆவி (வேடு பிடல்) எடுக்க மூக்கில் அடைப்பு, மூக்கு ஒழுகுதல், சளி, தலைவலி, தலைவலி போன்ற அனைத்து பிரச்சனைகளிலிருந்தும் நிவாரணம் கிடைக்கும். அதன் பச்சை அல்லது உலர்ந்த இலைகளை தலையணையில் வைத்து தலையில் உறங்கவும். அதுமட்டுமின்றி தலைவலி, சளி, சைனஸ் கோளாறுகளை குணப்படுத்துகிறது.

காய்ச்சல் ஏற்பட்டால் நொச்சி இலையை வேகவைத்து அதன் நீராவியை சுவாசித்தால் காய்ச்சலின் தீவிரம் படிப்படியாக குறையும். வலியின் உஷ்ணத்தில் இந்த நீரை உடலில் ஊற்றினால் நல்ல நிவாரணம் கிடைக்கும்.

நொச்சி இலையில் மிளகு, பூண்டு, கிராம்பு சேர்த்து மென்று சாப்பிட ஆஸ்துமா குணமாகும். மேலும் நொச்சி இலையை சர்க்கரையுடன் சேர்த்து அரைத்து நெற்றியிலும் கன்னத்திலும் தடவ தலைவலி குணமாகும். நொச்சி இலையை வறுத்து மசாஜ் செய்து வந்தால் வலி, வீக்கம், கீல்வாதம் போன்றவை குணமாகும். வீக்கம் மட்டுமல்ல, தலை முதல் கால் வரை உடலின் எந்தப் பகுதியும் பாதிக்கப்படும். நொச்சி இலைச்சாறு அல்லது இலையை நெய்யில் கலந்து சிறிது வெதுவெதுப்பான நீரில் கொதிக்க வைத்து தலையில் தேய்த்து குளித்து அரை மணி நேரம் கழித்து தலையில் தடவி வந்தால் சைனஸ், கழுத்து விறைப்பு, கழுத்து வலி போன்றவை குணமாகும்.நரம்பு கோளாறுகள் கழுத்து வலியை உண்டாக்கும்.

கொசுக்களை விரட்ட மருந்துகள் இருந்தாலும், அவை பலனளிக்கவில்லை. மேலும் அவை பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம். எனவே, இதை மாற்று மருந்தாகப் பயன்படுத்தலாம். உலர்ந்த அல்லது பச்சையாக நொச்சி இலைகளை தீ மற்றும் புகையில் எரிப்பதால் கொசுக்களை விரட்டும். படுக்கையறையில் நெட்டில் இலைகளை வைப்பது கொசுக்களை விரட்டும். வேப்பம்பூ மற்றும் வேப்பம்பூவை புகைப்பதன் மூலமும் கொசு தொல்லையிலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ளலாம். நொச்சி இலைகளை ஆடு, மாடுகள் சாப்பிடாது என்பதால் வீடுகளைச் சுற்றி வளர்க்கலாம். அதே நேரத்தில், இது சற்று ஈரமான இடங்களில் வளரும். நொச்சி எளிதில் வளராது என்பார்கள் சிலர். ஆரம்பத்தில் ஈரமாக இருந்தால் வளர எளிதாக இருக்கும். நொச்சி வேர் முடிச்சுகளையும் நடலாம்.

நொச்சி, படுகை, நுணா இலைகளை கஷாயத்தில் சேர்த்துக் கொடுப்பதால் குழந்தைகளுக்கு மாதவிடாய் வராமல் இருக்கும். நொச்சி இலைகளின் புற்றுநோய் எதிர்ப்பு பண்புகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. நொச்சி இலையை பசுவின் சாணத்துடன் கலந்து தடவி வந்தால் முதுகு வலிக்கு நல்ல பலன் கிடைக்கும். நொச்சி இலைச்சாற்றை பாதிக்கப்பட்ட இடங்களில் தடவினால் நிவாரணம் கிடைக்கும். ஆக, நொச்சி பல வகையிலும் நல்ல மருந்து.

மலைப் பகுதிகளில் மண் அரிப்பைத் தடுக்க நொச்சியை நெருக்கமாக வளர்க்கலாம். ஆறுகள், ஓடைகள் போன்றவற்றின் கரைகளிலும் நடலாம். இது கரைகளை பலப்படுத்தும்; வெள்ளத்தின் போது கரைகள் உடையாமல் பாதுகாக்கிறது. நீர் தேங்கும் பகுதிகளில் வளரும் பாசிகள் காற்றில் பரவாது. வீடுகளின் முன் நடுவதன் மூலம் தூசியை வடிகட்டி கொசுக்களை விரட்டலாம்.