வெள்ளி

மூடாக்கு மந்திரம்… முத்தான லாபம்!


 
ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லிகள்… என காசை இறைத்து விவசாயம் செய்து, கண்ணீரை அறுவடை செய்வது ஒரு ரகம். கழிவுகளை இறைத்து, இயற்கை விவசாயம் செய்து காசை அறுவடை செய்வது இரண்டாவது ரகம்! இதில் இரண்டாவது ரகத்தைச் சேர்ந்தவர் – விசாகுமார். தீவிரமாக இயற்கை விவசாயம் செய்து வரும் இவர், தென்னைக்கு ஊடுபயிராக பல ரக வாழைகளையும் சாகுபடி செய்துவருகிறார்.

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் - குளச்சல் சாலையில் ஆசாரிப்பள்ளம் என்ற ஊரிலிருந்து, இரண்டாவது கிலோ மீட்டரில் இருக்கிறது, பாம்பன்விளை. தென்னை, வாழைகளுக்கு மத்தியில் பசுமையாகக் காட்சியளிக்கிறது, விசாகுமாரின் இயற்கைத் தோட்டம்.
பாடம் சொன்ன பசுமை விகடன்!
விவசாயம் எங்க குடும்பத்திற்கு பூர்விகத் தொழில், என் கூடப் பிறந்தவங்க எல்லோருமாக சேர்ந்து விவசாயம் செய்து கொண்டிருந்தோம். தனியாக வீட்டு மொட்டை மாடியிலும் தோட்டம் போட்டிருந்தேன். தோட்டத்தில் தெளிச்சது போக மிச்சமீதி இருக்கும் ரசாயனத்தை வீட்டுத் தோட்டத்தில் தெளிப்பேன். இதைப் பார்த்த என் மனைவிதான், ஏன் இப்படி ரசாயனத்தை வாரி கொட்டுறீங்க, இது உடலுக்கும் கேடில்லையா என்று அடிக்கடி கேப்பாங்க. அதனால்தான் இயற்கை விவசாயம் பற்றிய தேடல் உருவானது. அதை, யாரிடம் கற்றுக் கொள்வது என்று குழம்பிக் கொண்டிருக்கும் போதுதான் ‘பசுமை விகடன்’ அறிமுகமானது. எதார்த்தமாக ஒரு முறை பேருந்தில் போகும் போது படிக்க கிடைத்த ‘பசுமை விகடன்’ இன்றைக்கு என் சுவாசமாக மாறிப் போனது.
‘பசுமை விகடன்” நடத்திய சுபாஷ் பாலேக்கருடைய ஜீரோ பட்ஜெட் பயிற்சியிலும் கலந்து கொண்டேன். தொடர்ந்து பசுமை விகடனைப் படித்துவிட்டு, ஒவ்வொரு விஷயத்தையும் புதிதாக கத்துக் கொண்டேன். நாகர் கோவிலில் இருக்கும் ‘ரூரல் அப்லிஃப்ட் சென்டரிலும் இயற்கை விவசாயப் பயிற்சிகள் எடுத்துக் கொண்டேன். என்னதான் பயிற்சி எடுத்துக் கொண்டாலும், அனுபவ அறிவும் வேண்டுமே என்று இயற்கைக்கு மாற தீர்மானித்தேன். ஆனால், தொடக்கத்தில் கூட்டுக் குடும்பச் சொத்தாக இருந்ததால், இயற்கைக்கு மாறவேண்டும் என்று சொன்னதும், மற்றவர்கள் எல்லாம் பயந்தார்கள். பாகப் பரிவினை செய்ததும் என்னுடைய நான்கு ஏக்கரில் இயற்கை விவசாயம் செய்ய ஆரம்பித்தேன். இப்போது முழுவதுமாக இயற்கை விவசாயத்திற்கு வந்து மூன்று வருடமாகிறது.
இந்த நான்கு ஏக்கரில், மூன்றரை ஏக்கரில் தென்னையும், அரை ஏக்கரில் முந்திரியும் போட்டிருக்கிறேன். தென்னைக்கு ஊடுபயிராக மூன்று ஏக்கரில் மட்டும் வாழை சாகுபடி செய்கிறேன். இதுபோக என் தோட்டத்தில் பப்பாளி -3 , கிராம்பு -7, பலா - 7, மா - 7, தேக்கு - 10, ஆரஞ்சு – 2, சப்போட்டா – 2 என்று மரங்கள் இருக்கு. கொஞ்சம் பனை மரங்களும் நிற்கிறது. என் தோட்டத்து தென்னை மரங்களுக்கு 35 வயது ஆகிறது. 25 அடி இடைவெளியில் மரங்கள் இருப்பதால், செவ்வாழை, படத்தி, ரஸ்தாளி, கற்பூரவள்ளி, மட்டி, ஏத்தன், பூங்கதளி வாழை ரகங்களைப் போட்டிருக்கிறேன்.
நீரை சிக்கனமாக்கும் கேணி!
வாழைக்கு எட்டு அடி முதல், பத்து அடி வரை இடைவெளி விட்டிருக்கிறேன். இரண்டு தென்னைகளுக்கு மத்தியில் (12 அடி இடைவெளியில்) மூன்றடி ஆழம், ஒன்றரை அடி அகலத்திற்கு கேணி (குழி) அமைத்திருக்கிறேன். தென்னை ஓலை, மடடை என்று கழிவுகளை கேணிக்குள் போட்டுவிடுவேன். இதனால், என்னதான் அடைமழை பெய்தாலும், ஒரு சொட்டு தண்ணீர் கூட தோட்டத்தை விட்டு வெளியே போகாது. கேணியில் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை மட்டும் தண்ணீர் விடுவேன். நல்ல வெயில் அடிக்கும்போது தென்னை மர ஓலையின் நிழல், எதுவரை படுதோ, அதுவரை வேர் விட்டிருக்கும். இதனால், பனிரெண்டு அடி தள்ளியிருந்தாலும், கேணியிலிருந்து, தென்னை தண்ணீரை உறிந்து கொள்கிறது.
இந்தக் கேணிகளுக்கு பக்கத்தில்தான் வாழை இருக்கு. ஒரு ஏக்கர் என்று பார்த்தீர்கள் என்றால்… 85 தென்னையும், 125 வாழையும் இருக்கும். தோட்டம் முழுக்க சொட்டுநீர்ப் பாசனம்தான். தென்னைக்கு என்று தனியாக எந்தப் பராமரிப்பும் செய்வதில்லை. வாழைக்கு மட்டும்தான் பராமரிப்பு. தென்னையில் இரண்டு மாதத்திற்கு ஒரு முறை காய் பறிப்போம். மூன்றரை ஏக்கரில் ஒவ்வொரு வருடமும் 3 ஆயிரம் காயிலிருந்து 4 ஆயிரம் காய் வரைக்கும் மகசூல் கிடைக்கிறது.
விதைநேர்த்தி முக்கியம்!
வாழையில் எந்த ரகமாக இருந்தாலும், சாகுபடி காலம் வேண்டுமானால் மாறுமே தவிர, பராமரிப்பு ஒன்றுதான். 2 கிலோ தொழுவுரம், 16 லிட்டர் தண்ணீர், தலா 200 மில்லி சூடோமோனஸ், அசோஸ்பைரில்லம் ஆகியவற்றைக் கலந்து அதில் விதைக்கிழங்கை நனைத்து நடவு செய்ய வேண்டும். இந்த அளவு, 100 கிழங்களுக்கு சரியாக இருக்கும். நடவு செய்ததும், முதல் தண்ணீர் கொடுக்க வேண்டும். 3-ம் நாளில் ஒவ்வொரு வாழைக் கன்றுக்கும்… 100 கிராம் வேப்பம் பிண்ணாக்கு, 100 கிராம் கடலைப் பிண்ணாக்கு என்கிற கணக்கில் எடுத்துக் கொண்டு, ஒன்றாகக் கலந்து தூரைச் சுற்றி தூவி தண்ணீர் கொடுக்க வேண்டும். அதன் பிறகு, 5 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் கொடுக்க வேண்டும்.
களைகளே மூடாக்கு!
15-ம் நாளில் ஒவ்வொரு வாழைக் கன்றுக்கும் 20 கிலோ தொழுவுரம் போட்டு, சுற்றியுள்ள களைகளை வெட்டி மூடாக்காகப் போட வேண்டும். இதேபோல் 3,6,9 ம் மாதங்களிலும் களைகளை வெட்டி தொழுவுரத்தைச் சேர்த்து மூடாக்கிட வேண்டும். 5-ம் மாத இறுதியில், ஒவ்வொரு கன்றிற்கும் 100 கிராம் வேப்பம் பிண்ணாக்கு, 100 கிராம் கடலைப் பிண்ணாக்கு என்கிற கணக்கில் எடுத்துக் கொண்டு, ஒன்றாகக் கலந்து தூரைச் சுற்றி தூவி, தண்ணீர் கொடுக்க வேண்டும்.
பூச்சி, நோய் தாக்குவதில்லை!
முழுக்க இயற்கை விவசாயம் என்பதால், பூச்சி, நோய் தாக்குதல் அதிகம் இருக்காது. பழுப்பு நோய் சில நேரங்களில் எட்டிப் பார்க்கும். இந்த நோய் தாக்கிய வாழையின் இலை பழுத்துப் போயிருக்கும். இதைக் கட்டுப்படுத்த ஒரு லிட்டர் தண்ணீரில், 50 மில்லி புளித்த மோர் சேர்த்து விசைத் தெளிப்பான் மூலமாக மரம் முழுவதும் தெளிக்க வேண்டும். இதற்கும் மட்டுப்படாவிட்டால், அடுத்த 15-ம் நாளில், ஒரு லிட்டர் தண்ணீருக்கு 10 மில்லி வேப்பெண்ணெய், சிறிது காதி சோப் கலந்து தெளிப்பான் மூலமாக தெளித்தால்… பழுப்பு நோய் காணாமல் போய்விடும்.
செவ்வாழையில் ஆப்பிள் நோய் தாக்கும். இந்த நோய் குலை போடுவதற்கு முன்பு வந்தால்… அந்த மரத்தில் குலை தள்ளாது. குலை தள்ளிய பின்பு வந்தால்… காய் சிறுத்து போய்விடும். செவ்வாழைப் பழமும் நிறம் மாறி விடும். இதனால், 40% அளவிற்கு மகசூல் இழப்பு ஏற்படும். இலைகள் சிறுத்துப் போவதுதான் இந்த நோய்க்கான அறிகுறி. இந்த நோய், ரசாயன மருந்துகளுக்குக் கட்டுப்படுவதில்லை. இலை சிறுத்ததுமே தலா 100 கிராம் வேப்பம் பிண்ணாக்கு, கடலை பிண்ணாக்கு ஆகியவற்றைக் கலந்து, கலவையை வாழையின் தூரைச் சுற்றிப் போட்டு தண்ணீர்விட வேண்டும். அதில் மட்டுப்படாவிட்டால்… மீன் குணபம் (மீன் அமினோ அமிலம்) தயாரித்துத் தெளிக்கலாம். செவ்வாழை 10-ம் மாதத்தில் குலை தள்ளி, 12-ம் மாத இறுதியில் அறுவடைக்கு வரும். மற்ற ரகங்களைப் பொறுத்தவரை 9-ம் மாதத்தில் குலை தள்ளி, 11-ம் மாதத்தில் அறுவடைக்கு வரும்.
ஆண்டுக்கு ஆறு குலை!
பொதுவாக வாழைக்கு எட்டடி இடைவெளி இருந்தால் போதும். படத்தி ரக வாழைக்கு மட்டும் 15 அடி இடைவெளி விட்டிருக்கிறேன். இதில் பக்கக் கன்றை வெட்ட மாட்டேன். ஒவ்வொரு வாழையில் இருந்தும் எட்டு முதல் பத்து பக்கக் கன்றுகள் வரைக்கும் வரும். முதல் வாழையில் ஒன்பதாம் மாதம் குலை தள்ளும். அதிலிருந்து மூன்று மாதத்திற்கு ஒரு முறை என்று பக்கக் கன்றுகளில் குலை வெட்டலாம். தார் கொஞ்சம் சிறிதாக இருந்தாலும்… வருடத்தில் ஆறு தார் வரைக்கும் கிடைத்துவிடும். ஒரு தார் 250 ரூபாய் வரைக்கும் விலை போகிறது.
தார் வெட்டினதும், வாழையை அப்படியே விட்டுவிடுவேன். அது, தானா முறிந்து கீழே விழுந்து மூடாக்காகிடும். என்னுடைய தோட்டத்து மகசூலுக்கு மூடாக்குதான் மூல மந்திரம். வாழை குலை தள்ளிய உடனே, தோட்டத்துக்கே நேரடியாக வந்து விலை பேசி, ஒப்பந்தம் போட்டுகிறார்கள் வியாபாரிகள். செவ்வாழைக்கு எப்பவும் நல்ல விலை கிடைக்கிறது. ஒரு தார், 350 ரூபாயிலிருந்து 500 ரூபாய் வரைகூட விலை போகும். மற்ற ரகங்களில் ஒரு தார் 300 ரூபாய்க்கு குறையாமல் விலை போகும். எப்படிப் பார்த்தாலும்… லட்ச ரூபாய்க்கு மேல் லாபம் கிடைத்துவிடும். மூன்று ஏக்கரில் ஊடுபயிராக போடும் வாழையிலேயே இத்தனை லாபம் என்கிற… சந்தோஷமான விஷயம்தானே என்றார்.
தொடர்புக்கு
விசாகுமார், செல்போன் : 93605 - 97284
ஆதாரம்: பசுமை விகடன்

அத்திபழ ஹல்வா

அத்திபழம் – 150 கிராம்
பேரீத்தம்பழம் – 3
நெய் – 150 கிராம்
சீனி – 400 கிராம்
பாதாம் – 100 கிராம்
முந்திரி – 100 கிராம்
பிஸ்தா – 25 கிராம்
பால் – 1 1/2 லிட்டர்
பாதாம்,முந்திரி,பிஸ்தாவை பொடியாக நறுக்கி கொள்ளவும். அதில் பாதி பாதி பருப்புகளை நீளவாக்கில் நறுக்கி வைக்கவும்.
பாலை ஒரு நான்ஸ்டிக் பேனில் ஊற்றி காய்ச்சவும்.
அத்திபழம்,பேரீத்தம் பழத்தை சிறிய துண்டுகளாக்கி காய்ச்சிய பாலில் 1/2 மணி நேரம் ஊற வைத்துக்கொள்ளவும்.
பின் ஊறிய பழங்களை மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும்.
பின் அரைத்த விழுதையும் பாலில் போட்டு நன்கு காய்ச்சவும்.
பால் நல்ல வற்றி வரும் போது சீனியை சேர்த்து கிளறவும்.
பிறகு பொடியாக நறுக்கிய பருப்புகளை சேர்த்து கிளறவும்.
நல்ல கெட்டியாக வரும் போது தீயை மிதமானதாக வைத்து நெய்யை சேர்த்து கிளறி, நீளவாக்கில் நறுக்கிய பருப்புகளில் சிறிதை சேர்த்து கிளறி இறக்கவும்.
பின் ஒரு டப்பாவில் நெய் தடவி அதில் ஹல்வாவை கொட்டி பரத்தி விடவும். மேலே மீதி இருக்கும் பருப்புகளை தூவி அலங்கரிக்கவும். சுவையான,சத்தான அத்திப்பழ ஹல்வா தயார்
சில்வர் லீவ்ஸ் பேப்பர் இருந்தாலும் மேலே அலங்கரிக்கலாம். நெய் சேர்த்த பின்னாடி மேலே எல்லாம் தெரிக்கும் கவனமாக கிளறவும். தீயை மிதமானதாக வைத்தே செய்யவும்.அடிக்கடி அடியில் பிடித்துவிடாமல் கிளறி விடவும்.

திங்கள்

சீமை அத்திப்பழம்

1.தினசரி 2 பழங்களை சாப்பிட்டால் உடலில் இரத்த உற்பத்தி அதிகரிக்கும். உடலும் வளர்ச்சி அடைந்து பருமனடையும்,

2 மலச்சிக்கலை நீக்க உணவிற்குப் பிறகு சிறிதளவு அத்தி விதைகளைச் சாப்பிடலாம்,

3. நாள்பட்ட மலச்சிக்கலை குணமாக்க 5 பழங்களை இரவில் சாப்பிட வேண்டும்.

4. போதைப் பழக்கம் மற்றும் இதர வியாதிகளால் ஏற்படும் கல்லீரல் வீக்கத்தைக் குணமாக்க அத்திப்பழங்களை காடியில் (வினிகர்) ஒருவாரம் வரை ஊற வைக்க வேண்டும். அதன்பின் தினசரி இரண்டு பழங்களை ஒருவேளை சாப் பிடலாம்.

5.தினசரி இரண்டு அத்திப்பழங்களை சாப்பிட்டு வந்தால் உடல் கவர்ச்சி கரமாக வளரும். இதில் முழு அளவு ஊட்டச்சத்து இருக்கின்றது.

6.சீமை அத்திப்பழம் வெண்குஷ்டத்தை குணமாக்குகிறது. அரை கிராம் காட்டு அத்திப்பழத்தை தினசரி ஒரு வேளை சாப்பிட்டு வந்தால் வெண்புள்ளிகள், வெண் குஷ்டம், தோலின் நிறமாற்றம் ஆகியவை குணமாகும்










 
நன்றி: பசுமைபுரட்சி முகநூல்

அல்சர்!!!!!

அல்சர் எனப்படும் குடற்புண் பற்றி கோவை என்.ஜி.மருத்துவமனை சேர்மன் மற்றும் லேபராஸ்கோபி, எண்டோஸ்கோபி சிறப்பு சிகிச்சை நிபுணர் டாக்டர் மனோகரன் விளக்கமளிக்கிறார்.

சிலருக்கு நெஞ்செரிச்சல், புளித்த ஏப்பம், மேல் வயிறுவலி போன்றவை அடிக்கடி வருவதுண்டு. அவ்வாறு நேரிடும் போது மருந்து கடைக்காரர்களிடம் சென்று ஏதாவது சில மாத்திரைகளை வாங்கி உட்கொள்வார்கள். அல்லது குளிர்பான கடைக்கு சென்று சோடா வாங்கி குடிப்பர். அது மிகவும் ஆபத்தானது. நெஞ்செரிச்சல், புளித்த ஏப்பம், மேல் வயிறுவலி அடிக்கடி ஏற்படுவதால் வயிற்றில் அல்சர் இருக்க வாய்ப்பிருக்கிறது.

வயிற்றில் சில அமிலங்கள் அதிகமாக சுரந்தாலும் அல்சர் ஏற்படும். எனவே, இந்த அறிகுறி இருந்தால் உடனடியாக வயிறு தொடர்பான சிறப்பு மருத்துவர்களை அணுகி சிகிச்சை பெறுவது நல்லது. இரைப்பையும் சிறுகுடலும் சேர்ந்த செரிமான பகுதியான உட்புறத்தில் ஏற்படும் புண் குடற்புண் எனப்படுகிறது. செரிமான பகுதிகள் எப்போதும் ஈரமாகவும் மூடப்படாமலும் இருக்கின்றன. இதனால் இரைப்பையில் செரிமானத்துக்கு தேவைப்படும் ஹைட்ரோகுளோரிக் அமிலத்தால் பாதிப்புக்கு உள்ளாகின்றன.

குடற்புண் வந்துள்ள சிலருக்கு இந்த அமிலம் அதிகமாக சுரப்பதும் உண்டு. இதை அமில குடற்புண்கள் என்றும் அழைக்கிறோம். மன அழுத்தம், தவறான உணவு பழக்கம், வறுத்த உணவு, இரவில் தாமதமாக சாப்பிடுவது, இறைச்சி, கோழி உணவு, கார உணவுகள் போன்றவை அல்சருக்கு முக்கிய காரணங்கள் ஆகும். புகைபிடித்தல், புகையிலையை சுவைத்தல், மது அருந்துதல் மற்றும் சில மருந்துகள் குடல் புண் வருவதற்கு வழிவகுக்கின்றன. குடற்புண் ஏற்பட்டால் மருத்துவர் கூறிய மருத்துவ சிகிச்சையை ஒழுங்காக பின்பற்ற வேண்டும்.

குறைந்த அளவில் அடிக்கடி சாப்பிட வேண்டும். தயிரிலிருந்து தயாரிக்கப்பட்ட லஸ்ஸி போன்ற பானங்களை அதிகம் சாப்பிட வேண்டும். வயிற்றுக்கு ஒத்துவராத உணவை ஒதுக்கிட வேண்டும். மிகவும் சூடாக உணவுகளை சாப்பிடக் கூடாது. குளிரூட்டப்பட்ட உணவுகள் முக்கியமாக தயிர் முதலியன நல்லது. பச்சையான வாழைப்பழங்கள் குடல் புண்களை ஆற்றும் குணத்தை பெற்றிருக்கின்றன. தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும். வலியோ அல்லது அசவுகரியங்களோ ஏற்படும் போது ஒரு டம்ளர் நீர் குடித்தால் அமிலமானது நீர்த்துப் போய் விடுகிறது.

மருத்துவரின் ஆலோசனைப்படி படுக்கையின் தலைப்பாகத்தை சற்று உயர்த்தி கொள்ளவும். முறையாக, மன அழுத்தம் இல்லாத வாழ்வைப் பின்பற்ற வேண்டும். புகை பிடிக்கக் கூடாது. மது, காபி பானங்கள் குடிப்பதை தவிர்க்க வேண்டும். வயிற்று வலியை அதிகப்படுத்தக்கூடிய உணவு வகைகளை உண்ணக்கூடாது. அதிகமாக சாப்பிடக்கூடாது. இரவு விருந்துகளை தவிர்க்க வேண்டும்.

அல்சர் நோயாளிகள் தீவிரமான வேலைகளில் இருந்து இரண்டு மூன்று வாரங்கள் ஓய்வு எடுத்தாலே போதுமானது. சத்தான உணவுகளை குறிப்பிட்ட நேரத்தில் சாப்பிட வேண்டும். காபி, மது, பாட்டில்களில் அடைக்கப்பட்ட குளிர் பானங்களை தவிர்க்க வேண்டும். தினமும் சாப்பிடும் டீ-யின் அளவை குறைத்து கொள்ள வேண்டும்.

சிறுநீரக கல்லுக்கு எலுமிச்சை சாறு சிகிச்சை

இன்றைய இளைஞர்களும் நடுத்தர வயதுக்காரர்களும் பெரிதும் பாதிக்கப்படும் ஒரு விஷயம் சிறு நீரகக் கல்.இருபது வயது இளைஞர்கள் கூட இந்த பிரச்சனையில் சிக்கி அவதிப்படுகின்றனர். இதற்கு, கத்தியின்றி ரத்தமின்றி ஒரு சிகிச்சை இருக்கிறது. அது எலுமிச்சை!ஆம்... எலுமிச்சைச் சாறு பருகுவதால் சிறுநீரகத்தில் கற்கள் உருவாவது தடுக்கப்படுகிறது. இது ஏதோ குருட்டுத்தனமான வாதமல்ல. 100 சதவிகிதம் ஆராய்ச்சி மூலம் நிரூபிக்கப்பட்டுள்ள உண்மை!

அமெரிக்காவின் சான் டியாகோ கிட்னி ஸ்டோன் சென்டரின் இயக்குநர் ரோஜர் எல் சர் என்பவர் இதனை நிரூபித்துள்ளார்.சிறுநீரகத்தில் கல் உருவாகாமல் தடுக்க மொத்தம் ஐந்து வழிகள் உள்ளனவாம். அதில் முக்கியமானது எலுமிச்சைச் சாறு அதிகமாகப் பருகுவது. பொதுவாகவே பழச்சாறுகளை அதிகமாகப் பருகுவதன் மூலம் உடலில் உப்பு சேர்வதை தவிர்க்க முடியும். அதிலும் சிட்ரிக் அமிலத் தன்மை கொண்ட பழங்கள் அதிகம் சாப்பிட வேண்டும். எலுமிச்சையில்தான் அதிகளவு சிட்ரைட் உள்ளது. எனவே எலுமிச்சைச் சாறு மூலம் சிகிச்சை தருகிறார்கள்.

இதற்கு லெமனேட் தெரபி என்று பெயர். தேவையான அளவு எலுமிச்சையை சாறு பிழிந்து இரண்டு லிட்டர் தண்ணீரில் கலந்து, வேளைக்கு நான்கு அவுன்ஸ் வீதம் திமும் பருகுவதுதான் இந்த லெமனேட் தெரபி. செலவு அதிகம் பிடிக்காத, தொந்தரவில்லாத, சுவையான சிகிச்சை. இந்த லெமனேட் தெரபியால் சிறுநீரகத்தில் கல் உருவாவதை 1.00 லிருந்து 0.13 விகிதமாகக் குறைவது ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.சிட்ரைட் இல்லாத பழங்களை அதிகம் சாப்பிடுவதையும் தவிர்க்கச் சொல்கிறார் ரோஜர் சர். காரணம் இந்தப் பழங்களில் கால்ஷியம் சத்து அதிகம் இருக்கும். சிறுநீரகக் கல் உருவாகக் காரணமே, கால்ஷியம் ஆக்ஸலேட்தான்.பெரும்பாலானோருக்கு சிறுநீரகத்தில் சிறு சிறு கற்கள் இருந்து கொண்டுதான் உள்ளனவாம். இது அவர்களுக்கே தெரிவதில்லையாம்.

சிறுநீரகக் கல் பிரச்சினை எப்போது தெரியும்?

சிறுநீரகக் கல் பிரச்சினை இருப்பதை மூன்று அறிகுறிகள் மூலம் உணரலாம். இதுபற்றி ரோஜர் சர் கூறுகையில், "கால்சியம் வகைக் கற்கள் சிறுநீரகத்திலிருந்து, வெளியேறும் இடத்துக்கு நகரும் போதுதான் முதுகு வலி, சிறுநீரில் ரத்தம், காய்ச்சல் போன்ற அறிகுறிகளை உணர முடியும். அப்போது உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.

யூரிக் ஆசிட் வகைக் கற்களும் சிறுநீரகத்தில் உருவாகின்றன. சிறுநீரில் வெளியேறும் கழிவுப் பொருள்தான் இதுவும். ஆனால் இந்த கழிவு அதிகமாக உடலில் சேரும்போது, முழுமையாக வெளியேறாமல் சிறுநீரகத்தில் தங்கி கற்களாக உருவாகிவிடும். அதிக புரோட்டீன் உணவுகளை உண்பவர்களுக்கு இந்த மாதிரி கற்கள் உருவாகுமாம். இன்னொரு வகை சிறுநீரகக் கற்களுக்கு மான்கொம்பு கற்கள் என்று பெயர் வைத்திருக்கிறார்கள். மானின் கொம்பு போன்ற தோற்றத்தில் இந்தக் கற்கள் இருக்குமாம். கிறிஸ்டைன் என்ற வகை அரிய கற்களும் சிறுநீரகத்தில் உருவாகின்றன. ஏற்கெனவே சிறுநீரகத்தில் கற்கள் - ஆனால் தொந்தரவில்லாமல்- இருந்தால், அவர்கள் உடனடியாக முன்தடுப்பு சிகிச்சைகளில் தீவிரமாக இறங்க வேண்டும். காரணம், அடுத்த 10 ஆண்டுகளுக்குள் இன்னும் ஒரு கல் உருவாகிவிடும் வாய்ப்பு உள்ளது.

கற்கள் பெரிதாகி, வேறு வழியில்லாத நிலை தோன்றும்போது, அறுவைச் சிகிச்சைதான் வழி. லித்தோட்ரிஸ்பி (lithotripsy), பெர்குடானியஸ் நெப்ரோலிதோடமி (percutaneous nephrolithotomy) மற்றும் லேசர் லித்தோட்ரிஸ்பியுடன் கூடிய யூரேடெரோஸ்கோபி (ureteroscopy with laser lithotripsy) என மூன்று சிகிச்சைகள் உள்ளன.இந்த சிக்கல்களுக்குள் போகாமல் தவிர்த்துக் கொள்ள ஆரம்பத்திலிருந்தே எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். சிட்ரஸ் அடங்கிய பழங்கள், பழச்சாறுகள் பருக வேண்டும். "திரும்பத் திரும்ப இதுபோன்ற அறுவைச் சிகிச்சைகளில் மாட்டிக் கொள்ளாமல் நோயாளிகளைத் தடுப்பதே நமது நோக்கம்.

ஒரு முறை அறுவை செய்து அகற்றப்பட்ட கற்கள், மீண்டும் சிறுநீரகத்தில் உருவாகாமல் தடுப்பது மிக முக்கியம். இப்போது இதற்கான சாத்தியம் 50 சதவிகிதமாக உள்ளது. விரைவில் அது பூஜ்யமாக மாறும்" என்கிறார் ரோஜர் சர். அதற்காகத்தான் இதுபோன்ற இயற்கை சிகிச்சை முறைகளை ஆராய்ந்து, மக்களுக்கு சிபாரிசு செய்து வருகிறாராம் அவர்!

சிறுநீரக கல்லைக்கரைக்கும் நன்னாரி..! சித்த மருத்துவம் சிறப்பான தீர்வு..!

உடலில் தேவைக்கு அதிகமாக சேரும் நீர், உப்புகள், நஞ்சை வடிகட்டி, வெளியேற்றும் பணியைச் சிறுநீரகங்கள் செய்கின்றன. சிறுநீரில் இருக்கும் தாதுக்கள் மற்றும் அமில உப்புகள் ...படிவதால், சிறுநீரகத்தில் கற்கள் உருவாகின்றன. இந்தக் கற்கள்தான் சிறுநீரகம், சிறுநீர்ப்பை மற்றும் சிறுநீரகக் குழாயில் தோன்றுகின்றன.
குறைந்த அளவு நீர் அருந்துதல், அதிக அளவு மாமிச உணவு உண்ணுதல், குளிர்பானங்கள் அருந்துதல், வைட்டமின் 'குறைபாடு மற்றும் வெயில் காலத்தில் உடம்பிலுள்ள நீர் அதிகமாக வெளியேறுதல், சிறுநீரகத்தில் ஏற்படும் தொற்றுநோய்கள், சிறுநீரை அதிக நேரம் அடக்கிவைத்திருத்தல் போன்ற காரணங்களால் கற்கள் தோன்றலாம்.
அறிகுறிகள்:இடுப்பில் தொடங்கி அடிவயிறு, தொடை இடுக்கு வரை கடுமையான வலி எடுக்கும். குமட்டல், வாந்தி, காய்ச்சல் இருக்கும். வலியுடன் சிறுநீர் வெளியேறும். எரிச்சல், நீர்க்கடுப்பு மற்றும் அதிகப்படியான வியர்வை, சிறுநீரில் ரத்தம் () சீழ் கலந்து வெளியேறும்.
சித்த மருத்துவத்தில் எளிய தீர்வுகள்:சிறுபீளை இலைச்சாற்றை 30 மி.லி. காலை, மாலை அருந்தலாம்.
கைப்பிடி அளவு நெருஞ்சில் காய், ஒரு ஸ்பூன் கொத்தமல்லி விதை இரண்டையும் இரண்டு டம்ளர் நீர் சேர்த்துக் காய்ச்சி, அரை டம்ளராக வற்றவைத்து அருந்தலாம்.
அரை ஸ்பூன் சீரகப் பொடியை இளநீரில் கலந்து உண்ணலாம்.
வெள்ளரி விதை, சோம்பு, இவற்றைச் சம அளவு எடுத்துப் பொடித்து, அவற்றை அரை ஸ்பூன்எடுத்து நீரில் கலந்து உண்ணலாம்.
யானை நெருஞ்சில் இலைச் சாறு ஒரு டேபிள்ஸ்பூன் எடுத்து, சர்க்கரை கலந்து உண்ணலாம்.அரைக் கைப்பிடி அளவு எலுமிச்சை, துளசியை எடுத்து, இரண்டு டம்ளர் நீர் சேர்த்துக் காய்ச்சி, அரை டம்ளராக வற்றவைத்து அருந்தலாம்.
ஒரு பங்கு கொள்ளுடன் 10 பங்கு நீர் சேர்த்துக் காய்ச்சி நீரை வடித்துக் குடிக்கலாம்.ஓமம், மிளகு இவற்றைச் சம அளவு எடுத்துப் பொடித்து, வெல்லம் சேர்த்துப் பிசைந்து கொட்டைப் பாக்கு அளவு உண்ணலாம்.
மாவிலங்கபட்டைப் பொடி அரை ஸ்பூன் எடுத்து, இரண்டு டம்ளர் நீர் சேர்த்துக் காய்ச்சி, அரை டம்ளராக வற்றவைத்து அருந்தலாம்.
அருகம்புல் கைப்பிடி அளவுடன், 10 மிளகு எடுத்து நீர் சேர்த்துக் காய்ச்சி வடித்து அருந்தலாம்.கால் டம்ளர் முள்ளங்கிச் சாறில் அரை ஸ்பூன் எலுமிச்சைச் சாறு சேர்த்து, நீரில் கலந்து பருகலாம்.
ஒரு கிராம் முருங்கை வேர்ப்பட்டைப் பொடியை நீரில் கலந்து உண்ணலாம்.
மாதுளம் விதைப்பொடி அரை ஸ்பூன் எடுத்து, தேனில் கலந்து உண்ணலாம்.
ஒரு ஸ்பூன் துளசி இலைச் சாறில் தேன் கலந்து உண்ணலாம்.
அரைக் கைப்பிடி நன்னாரி வேரில் நீர் சேர்த்துக் காய்ச்சி, வடித்து அதில் கால் ஸ்பூன் கடுக்காய்த் தூள் சேர்த்து உண்ணலாம்.
கால் ஸ்பூன் வெந்தயப் பொடியில் பன்னீர் சேர்த்து அருந்தலாம்.
சுரைக்கொடியை அரைக் கைப்பிடி அளவு எடுத்து, இரண்டு டம்ளர் நீர் சேர்த்து, அரை டம்ளராகவற்றவைத்து அருந்தலாம்.
ரோஜாப்பூ இதழ், நீர்முள்ளி அரைக்கைப்பிடி அளவு எடுத்து, இரண்டு டம்ளர் நீர் சேர்த்துக் காய்ச்சி, அரை டம்ளராக வற்றவைத்து அருந்தலாம்.
சேர்க்க வேண்டியவை:
தர்ப்பூசணி, நாவல், வாழைப்பழம், அன்னாசி, எலுமிச்சை, பப்பாளி, கேரட், சுரைக்காய், பீர்க்கு, மஞ்சள்பூசணி, வெண்பூசணி, வெங்காயம், வெள்ளரி, இளநீர்,
நாள் ஒன்றுக்கு இரண்டு முதல் மூன்று லிட்டர் வரை தண்ணீர்.
தவிர்க்க வேண்டியவை:
ப்ளம்ஸ், தக்காளி, ஸ்ட்ராபெர்ரி, உருளை, பீன்ஸ், முட்டைக்கோஸ், முந்திரி, பால் பொருட்கள், இறைச்சி, மீன், முட்டை.

சனி

சித்த மருத்துவத்தில் பூவரசம் பூக்கள்!!!

சித்த மருத்துவத்தில் பூவரசம் பூக்கள்

poovarasu
பூவரசம் மரத்தில் இதய வடிவ இலைகளின் நடுவே மஞ்சள் வர்ணத்தில் பூத்துக்குலுங்கும் பூவரச மரத்தின் பூக்கள் எண்ணற்ற மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. இந்த மலர்கள் உண்பதற்கு உகந்தவை என்று சித்தமருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். பொதுவாக இந்த இலைகளை விஷத்தை போக்கும் வல்லமை உடையதால் இதனை பூச்சிக்கடி மற்றும் விஷ வண்டுகடிகளுக்கு மருந்தாக இந்த பூக்களை சித்த மருத்துவர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
நீர் பாதியாக சுண்டும் போது இறக்கி வடிகட்டி காலை மாலை வேளைக்கு இரண்டு அவுன்ஸ் குடிக்கவேண்டும். தொடர்ந்து மூன்று நாட்களுக்கு தினமும் இதுபோல புதிதாக கஷாயம் தயாரித்து குடித்து வரவேண்டும். பின்னர் மூன்று நாட்கள் இடைவெளி விட்டு, மறுபடியில் மூன்று நாட்கள் சாப்பிடவேண்டும். இதனால் விஷக்கடி மூலம் ஏற்பட்ட ஊறல், தடிப்பு, அரிப்பு, மயக்கம், சோம்பல் போன்றவை நீங்கும்.
சொறி, சிரங்கு சொறி சிரங்கினால் அவதிப் படுபவர்கள் பூவரசம் பூவை அரைத்து அவற்றின்மீது பூசிவர தோல் மென்மையாகும், சொறி சிரங்கு குணமடையும். விஷக்கடி குணமாகும் பூச்சிக்கடி, வண்டுக்கடி, காணாக்கடி போன்ற பூச்சிகள் கடித்து அதனால் தோலில் ஊறல் நோய் ஏற்படும். அவர்கள் பூவரசம் பூ 25 கிராம் எடுத்து நசுக்கி, பழகிய மண்சட்டியில் போட்டு, 200 மில்லிலிட்டர் நீர்விட்டு கொதிக்க வைக்கவும்.
இந்த கஷாயம் உட்கொள்ளும் போது எண்ணெய், கடுகு தாளிக்காமல் சாப்பிடவேண்டும். மீன், கருவாடு சேர்க்கக் கூடாது. மூட்டு வீக்கம் வயதான காலத்தில் மூட்டுப் பகுதியில் நீர் கோர்த்து வீக்கத்தால் அவதிப்படுபவர்கள், பூவரசம் பூவுடன் சமஅளவு, காய் பட்டை, எடுத்து அரைத்து நல்ல எண்ணெயில் சேர்த்துக் காய்ச்சி, மூட்டு வீக்கங்கள் மேல் பூசிவர வீக்கம் குணமடையும்….

சுய தொழில்கள்-47 ஹேர் ஆயில் தயாரிப்பு :

சுய தொழில்கள் வரிசையில் முன்பு ஹேர் ஆயில் எப்படி தயாரிப்பது என்பது பற்றி மட்டும் சொல்லியிருந்தோம். இப் பதிவினில் அதை சந்தைப் படுத்துதல் போன்ற விவரங்களைக் காண்போம்.
காசு கொழிக்கும் ஹேர் ஆயில் தயாரிப்பு :

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper


‘கூந்தல் வளர்ச்சிக்காக,  தலைக்கு மூலிகை எண்ணெய் தேய்க்கும் பழக்கம் பல பெண்களிடம்  உள்ளது. ஆண்களும் முடிகொட்டுதல் போன்ற பிரச்னைகளுக்காக மூலிகை எண்ணெய்களை

பயன்படுத்துகிறார்கள். பெரிய பிராண்ட் நிறுவனங்கள் போட்டி களத்தில் இருந்தாலும், தரமான மூலிகை எண்ணெய் தயாரித்து விற்றால் நல்ல லாபம் சம்பாதிக்கலாம்  என்று கூறுகிறார்

திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த வாளவாடியில் ஹேர் ஆயில் தயாரித்து விற்று வரும் பத்மாவதி. அவர் கூறியதாவது: எனது கணவர், மாமனார் மூலிகை எண்ணெய், தைலம்

தயாரிப்பு தொழிலில் ஈடுபட்டுள்ளனர். நான் மகாத்மா காந்தி மகளிர் சுய உதவி குழுவில் சேர்ந்தபோது, மகளிர் குழுக்களுக்கு வழிகாட்டி வரும் நேசக்கரங்கள் அமைப்பினர் மூலிகை ஹேர்

ஆயில்  தொழிலை துவங்கும்படி  கூறினர்.

அதன் பேரில்  கடந்த 3 ஆண்டு களாக மூலிகை ஹேர் ஆயில், ஓம வாட்டர், ரோஸ் வாட்டர் தயாரிப்பில் ஈடுபட்டு வரு கிறேன். அவற்றை கணவர் உதவியுடன் விற்று வருகிறேன். ஹேர்

ஆயில் 3 ஆண்டு வரை கெடாது. நீண்ட நாள் ஸ்டாக் வைத்துகூட விற்கலாம். மாதம் ரூ.2 லட்சத்துக்கு ஹேர் ஆயில் விற்று வருகிறேன். வீட்டில் இருந்தபடியே பெண்கள் செய்ய ஏற்ற

தொழில் இது. ஹேர் ஆயிலை மசாஜ் எண்ணெயாகவும் பயன்படுத்தலாம் என்பதால் நல்ல வரவேற்பு உள்ளது.


உற்பத்தி செலவு

ஹேர் ஆயில் தயாரிக்க தேவையான தேங்காய் எண்ணெய் கிலோ ரூ.180,  வெந்தயம் கிலோ ரூ.60, சீரகம் கிலோ ரூ.60, கஸ்தூரி மஞ்சள் கிலோ ரூ.110, பூலாங்கிழங்கு கிலோ ரூ.200,

வெட்டிவேர் கிலோ ரூ.140, விளாமிச்சை வேர் கிலோ ரூ.180, கருவேப்பிலை கிலோ ரூ.20, பொன்னாங்கண்ணி கிலோ ரூ.10, கீழாநெல்லி வேர் ரூ.12,  திருநீற்று பச்சிலை, கரிசலாங்கண்ணி,

சோற்று பச்சிலை, நெல்லி, சோற்று கற்றாழை ஆகியவை கிலோ ரூ.30 வரை விற்கிறது.  பாட்டில்கள் 30 மி.லி முதல் 60 மி.லி அளவு வரை ரூ.5, 100 மி.லி அளவு ரூ.5.50, 500 மில்லி

அளவு ரூ.6, ஒரு லிட்டர் அளவு ரூ.6.50க்கு கிடைக்கிறது.

 அடுப்பு எரிக்க விறகு அல்லது எரிவாயு, மூலிகை மற்றும் பச்சிலைகள், உற்பத்தி கூலி செலவு உள்பட ஒரு லிட்டர் ஹேர் ஆயில் தயாரிக்க ரூ.400 செலவாகும். ஒரு நாளில் ஒரு நபர் 20

லிட்டர் ஹேர் ஆயில் தயாரிக்கலாம். அதற்கு ரூ.8 ஆயிரம் தேவை. ஒரு மாதத்தில் 25 நாளில் 500 லிட்டர் தயாரிக்க ரூ.2 லட்சம் தேவை. வருவாய்: ஹேர் ஆயில் 30 மி.லி, 60 மி.லி, 100

மி.லி அளவுகளில் விற்பனை செய்யலாம். ஒரு லிட்டர் ரூ.525க்கு கடைக்காரர்களுக்கு விற்கப்படுகிறது. இதன் மூலம் உற்பத்தியாளருக்கு லிட்டருக்கு ரூ.125 லாபம். ஒரு மாதத்தில் 500

லிட்டர் ஹேர் ஆயில் விற்பனை மூலம் லாபம் ரூ.62,500.

கட்டமைப்பு: மூலிகை காய்ச்ச விறகு அடுப்பு அல்லது பெரிய பர்னர் உள்ள கேஸ் சிலிண்டர் அடுப்பு, தைலத்தை பாட்டிலில் ஊற்றி பேக்கிங் செய்து இருப்பு வைக்க ஒரு அறை, பச்சிலைகள்

வளர்க்க 10க்கு 10 அடி நீள, அகல காலி இடம் (வீட்டு முற்றமாக கூட இருக்கலாம்), அதே அளவில் மூலிகை பொருட்களை காய வைக்க திறந்த வெளி தேவை. மூலப்பொருட்கள்:ஆட்டு

உரல் அல்லது கிரைண்டர், மூலிகை காய்ச்ச இரும்பு சட்டி, காய்ச்சிய தைலத்தை ஊற்றி வைக்க காலி டின்கள். உற்பத்தி பொருட்கள் : ஹேர் ஆயில் பேக்கிங் செய்ய 30 மி.லி, 60 மி.லி,

100 மி.லி உள்ளிட்ட பல்வேறு கொள்ளளவுள்ள பிளாஸ்டிக் பாட்டில்கள்,  லேபிள்கள் மற்றும் உற்பத்திக்கு தேவையான மூலிகை, பச்சிலை.

கிடைக்கும் இடம் : காலி டின்கள் ஹார்டுவேர்ஸ் கடைகளிலும், மூலிகை மற்றும் பச்சிலை நாட்டு மருந்துக் கடைகளிலும் கிடைக்கும். கிராமப்புறங்கள் மற்றும் மலைபகுதிகளில் இருந்தும்

மூலிகை, பச்சிலைகளை பெறலாம். விற்பனை வாய்ப்பு: டிபார்ட்மென்ட் ஸ்டோர்கள், நாட்டு மருந்து கடைகள், மளிகை கடைகள், கூட்டுறவு கடைகள் ஆகியவற்றில் ஹேர் ஆயில்

விற்கப்படுவதால் அங்கு சப்ளை செய்யலாம். தெரிந்தவர்கள், அருகில் இருப்பவர்களிடம் நாமே நேரடியாக விற்கலாம். நல்ல தரத்தோடு தயாரிக்கும் போது பலன் நன்றாக தெரியும்.

விலையும் ஏற்றபடி இருந்தால் வாடிக்கையாளர்கள் பெருகுவார்கள். அதற்கேற்ப விற்பனை அதிகரிக்கும். நல்ல லாபம் சம்பாதிக்க முடியும். பயிற்சி தேவை இல்லை: ஹேர் தயாரிப்புக்கு

என பெரிதான பயிற்சி தேவை இல்லை.

சமையலில் பக்குவம் பார்த்து சமைக்கும் பெண்கள், எளிதில் ஹேர் ஆயில் தயாரிக்கும் முறை கற்றுக் கொள்வார்கள். சில முறை பார்த்தாலே போதும். மகளிர் சுய உதவிக்குழுக்கள்,

வாழ்ந்து காட்டுவோம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் மூலம் பெண்களுக்கு சுய தொழில் துவங்க வழிகாட்டப்படுவதால், அவற்றின் மூலம் மூலிகை எண்ணெய் தொழிலை மேற்கொள்ள

வங்கி கடன் பெற வாய்ப்புள்ளது.

தயாரிப்பது எப்படி?

தலா 50 கிராம் வெந்தயம், சீரகம், கஸ்தூரி மஞ்சள், பூலாங்கிழங்கு, வெட்டி வேர், விளாமிச்சை வேர் ஆகியவற்றை 24 மணி  நேரம் ஊறவைத்து, தண்ணீர் வடித்து எடுத்து கொள்ள

வேண்டும். தலா 50 கிராம் கருவேப்பிலை, திருநீற்று பச்சிலை, பொன்னாங்கண்ணி, கீழாநெல்லிவேர், கரிசலாங்கண்ணி, நெல்லி சாறு, செம்பருத்தி ஆகியவற்றை சுத்தமாக கழுவி தண்ணீர்

இல்லாமல் எடுத்து கொள்ள வேண்டும். 50 கிராம் கற்றாழை ஜெல் எடுத்து கொள்ள வேண்டும். அனைத்தையும் ஆட்டு உரல் அல்லது கிரைண்டரில் போட்டு தண்ணீர் விடாமல் அரைத்து

எடுக்க வேண்டும். உளுந்த மாவு பதத்துக்கு வந்தவுடன் அதை வடை போல் தட்ட வேண்டும்.

இரும்பு சட்டியில் ஒரு லிட்டர் தேங்காய் எண்ணெயை ஊற்றி காய்ந்தவுடன் அதில் வடை போல் தட்டியதை போட வேண்டும். அவை எண்ணெயில் வெந்து உதிரும். சாறு முழுவதும்

எண்ணெயில் இறங்கி கலந்து விடும். எண்ணெய் ஈரப்பதம் இல்லாத நிலைக்கு மாறிவுடன் தீயை அணைத்து விட வேண்டும். சூடு ஆறியதும் எண்ணெயை வடிகட்டி தகர டின்னில்

ஊற்றினால் ஹேர் ஆயில் தயார். எண்ணெயை தேவையான அளவுள்ள பாட்டில்களில் அடைத்து, லேபிள் ஒட்டி விற்கலாம்.

பக்குவம் முக்கியம்: கொதிக்கும் எண்ணெயில் வடைபோல் போட்டவற்றை முறுகும் வரை வேக வைத்து விட்டால், வடையின் துகள்களே எண்ணெயை உறிஞ்சி கொள்ளும். எண்ணெய்

அளவு குறைந்து விடும். முறுகாமல் இருக்க வேண்டும் என்பதற்காக சீக்கிரமே தீயை அணைத்து விட்டால் முழுமையான மூலிகை எண்ணெயாக மாறாது.  எண்ணெய் முழுவதும் மூலிகை

எண்ணெயாக மாறிவிட்டதை அறிய, வடை வெந்து கொண்டிருக்கும் போது, ஒரு திரியை சட்டியில் உள்ள எண்ணெயில் நனைத்து பற்ற வைக்க வேண்டும். எண்ணெய் ஈரப்பதமாக

இருந்தால் சடசடவென சத்தம் வரும். சரியாக எரியாது. திரி சத்தமில்லாமல் எரிந்தால் மூலிகை எண்ணெய் பக்குவத்திற்கு வந்து விட்டது என்பதை அறிந்து உடனே தீயை அணைத்து

விடலாம்.  காசு கொழிக்கும் ஹேர் ஆயில் தயாரிப்பு : உடுமலை எஸ்.கண்ணன்

‘கூந்தல் வளர்ச்சிக்காக,  தலைக்கு மூலிகை எண்ணெய் தேய்க்கும் பழக்கம் பல பெண்களிடம்  உள்ளது. ஆண்களும் முடிகொட்டுதல் போன்ற பிரச்னைகளுக்காக மூலிகை எண்ணெய்களை

பயன்படுத்துகிறார்கள். பெரிய பிராண்ட் நிறுவனங்கள் போட்டி களத்தில் இருந்தாலும், தரமான மூலிகை எண்ணெய் தயாரித்து விற்றால் நல்ல லாபம் சம்பாதிக்கலாம்  என்று கூறுகிறார்

திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த வாளவாடியில் ஹேர் ஆயில் தயாரித்து விற்று வரும் பத்மாவதி. அவர் கூறியதாவது: எனது கணவர், மாமனார் மூலிகை எண்ணெய், தைலம்

தயாரிப்பு தொழிலில் ஈடுபட்டுள்ளனர். நான் மகாத்மா காந்தி மகளிர் சுய உதவி குழுவில் சேர்ந்தபோது, மகளிர் குழுக்களுக்கு வழிகாட்டி வரும் நேசக்கரங்கள் அமைப்பினர் மூலிகை ஹேர்

ஆயில்  தொழிலை துவங்கும்படி  கூறினர்.

அதன் பேரில்  கடந்த 3 ஆண்டு களாக மூலிகை ஹேர் ஆயில், ஓம வாட்டர், ரோஸ் வாட்டர் தயாரிப்பில் ஈடுபட்டு வரு கிறேன். அவற்றை கணவர் உதவியுடன் விற்று வருகிறேன். ஹேர்

ஆயில் 3 ஆண்டு வரை கெடாது. நீண்ட நாள் ஸ்டாக் வைத்துகூட விற்கலாம். மாதம் ரூ.2 லட்சத்துக்கு ஹேர் ஆயில் விற்று வருகிறேன். வீட்டில் இருந்தபடியே பெண்கள் செய்ய ஏற்ற

தொழில் இது. ஹேர் ஆயிலை மசாஜ் எண்ணெயாகவும் பயன்படுத்தலாம் என்பதால் நல்ல வரவேற்பு உள்ளது.


உற்பத்தி செலவு

ஹேர் ஆயில் தயாரிக்க தேவையான தேங்காய் எண்ணெய் கிலோ ரூ.180,  வெந்தயம் கிலோ ரூ.60, சீரகம் கிலோ ரூ.60, கஸ்தூரி மஞ்சள் கிலோ ரூ.110, பூலாங்கிழங்கு கிலோ ரூ.200,

வெட்டிவேர் கிலோ ரூ.140, விளாமிச்சை வேர் கிலோ ரூ.180, கருவேப்பிலை கிலோ ரூ.20, பொன்னாங்கண்ணி கிலோ ரூ.10, கீழாநெல்லி வேர் ரூ.12,  திருநீற்று பச்சிலை, கரிசலாங்கண்ணி,

சோற்று பச்சிலை, நெல்லி, சோற்று கற்றாழை ஆகியவை கிலோ ரூ.30 வரை விற்கிறது.  பாட்டில்கள் 30 மி.லி முதல் 60 மி.லி அளவு வரை ரூ.5, 100 மி.லி அளவு ரூ.5.50, 500 மில்லி

அளவு ரூ.6, ஒரு லிட்டர் அளவு ரூ.6.50க்கு கிடைக்கிறது.

 அடுப்பு எரிக்க விறகு அல்லது எரிவாயு, மூலிகை மற்றும் பச்சிலைகள், உற்பத்தி கூலி செலவு உள்பட ஒரு லிட்டர் ஹேர் ஆயில் தயாரிக்க ரூ.400 செலவாகும். ஒரு நாளில் ஒரு நபர் 20

லிட்டர் ஹேர் ஆயில் தயாரிக்கலாம். அதற்கு ரூ.8 ஆயிரம் தேவை. ஒரு மாதத்தில் 25 நாளில் 500 லிட்டர் தயாரிக்க ரூ.2 லட்சம் தேவை. வருவாய்: ஹேர் ஆயில் 30 மி.லி, 60 மி.லி, 100

மி.லி அளவுகளில் விற்பனை செய்யலாம். ஒரு லிட்டர் ரூ.525க்கு கடைக்காரர்களுக்கு விற்கப்படுகிறது. இதன் மூலம் உற்பத்தியாளருக்கு லிட்டருக்கு ரூ.125 லாபம். ஒரு மாதத்தில் 500

லிட்டர் ஹேர் ஆயில் விற்பனை மூலம் லாபம் ரூ.62,500.

கட்டமைப்பு: மூலிகை காய்ச்ச விறகு அடுப்பு அல்லது பெரிய பர்னர் உள்ள கேஸ் சிலிண்டர் அடுப்பு, தைலத்தை பாட்டிலில் ஊற்றி பேக்கிங் செய்து இருப்பு வைக்க ஒரு அறை, பச்சிலைகள்

வளர்க்க 10க்கு 10 அடி நீள, அகல காலி இடம் (வீட்டு முற்றமாக கூட இருக்கலாம்), அதே அளவில் மூலிகை பொருட்களை காய வைக்க திறந்த வெளி தேவை. மூலப்பொருட்கள்:ஆட்டு

உரல் அல்லது கிரைண்டர், மூலிகை காய்ச்ச இரும்பு சட்டி, காய்ச்சிய தைலத்தை ஊற்றி வைக்க காலி டின்கள். உற்பத்தி பொருட்கள் : ஹேர் ஆயில் பேக்கிங் செய்ய 30 மி.லி, 60 மி.லி,

100 மி.லி உள்ளிட்ட பல்வேறு கொள்ளளவுள்ள பிளாஸ்டிக் பாட்டில்கள்,  லேபிள்கள் மற்றும் உற்பத்திக்கு தேவையான மூலிகை, பச்சிலை.

கிடைக்கும் இடம் : காலி டின்கள் ஹார்டுவேர்ஸ் கடைகளிலும், மூலிகை மற்றும் பச்சிலை நாட்டு மருந்துக் கடைகளிலும் கிடைக்கும். கிராமப்புறங்கள் மற்றும் மலைபகுதிகளில் இருந்தும்

மூலிகை, பச்சிலைகளை பெறலாம். விற்பனை வாய்ப்பு: டிபார்ட்மென்ட் ஸ்டோர்கள், நாட்டு மருந்து கடைகள், மளிகை கடைகள், கூட்டுறவு கடைகள் ஆகியவற்றில் ஹேர் ஆயில்

விற்கப்படுவதால் அங்கு சப்ளை செய்யலாம். தெரிந்தவர்கள், அருகில் இருப்பவர்களிடம் நாமே நேரடியாக விற்கலாம். நல்ல தரத்தோடு தயாரிக்கும் போது பலன் நன்றாக தெரியும்.

விலையும் ஏற்றபடி இருந்தால் வாடிக்கையாளர்கள் பெருகுவார்கள். அதற்கேற்ப விற்பனை அதிகரிக்கும். நல்ல லாபம் சம்பாதிக்க முடியும். பயிற்சி தேவை இல்லை: ஹேர் தயாரிப்புக்கு

என பெரிதான பயிற்சி தேவை இல்லை.

சமையலில் பக்குவம் பார்த்து சமைக்கும் பெண்கள், எளிதில் ஹேர் ஆயில் தயாரிக்கும் முறை கற்றுக் கொள்வார்கள். சில முறை பார்த்தாலே போதும். மகளிர் சுய உதவிக்குழுக்கள்,

வாழ்ந்து காட்டுவோம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் மூலம் பெண்களுக்கு சுய தொழில் துவங்க வழிகாட்டப்படுவதால், அவற்றின் மூலம் மூலிகை எண்ணெய் தொழிலை மேற்கொள்ள

வங்கி கடன் பெற வாய்ப்புள்ளது.

தயாரிப்பது எப்படி?

தலா 50 கிராம் வெந்தயம், சீரகம், கஸ்தூரி மஞ்சள், பூலாங்கிழங்கு, வெட்டி வேர், விளாமிச்சை வேர் ஆகியவற்றை 24 மணி  நேரம் ஊறவைத்து, தண்ணீர் வடித்து எடுத்து கொள்ள

வேண்டும். தலா 50 கிராம் கருவேப்பிலை, திருநீற்று பச்சிலை, பொன்னாங்கண்ணி, கீழாநெல்லிவேர், கரிசலாங்கண்ணி, நெல்லி சாறு, செம்பருத்தி ஆகியவற்றை சுத்தமாக கழுவி தண்ணீர்

இல்லாமல் எடுத்து கொள்ள வேண்டும். 50 கிராம் கற்றாழை ஜெல் எடுத்து கொள்ள வேண்டும். அனைத்தையும் ஆட்டு உரல் அல்லது கிரைண்டரில் போட்டு தண்ணீர் விடாமல் அரைத்து

எடுக்க வேண்டும். உளுந்த மாவு பதத்துக்கு வந்தவுடன் அதை வடை போல் தட்ட வேண்டும்.

இரும்பு சட்டியில் ஒரு லிட்டர் தேங்காய் எண்ணெயை ஊற்றி காய்ந்தவுடன் அதில் வடை போல் தட்டியதை போட வேண்டும். அவை எண்ணெயில் வெந்து உதிரும். சாறு முழுவதும்

எண்ணெயில் இறங்கி கலந்து விடும். எண்ணெய் ஈரப்பதம் இல்லாத நிலைக்கு மாறிவுடன் தீயை அணைத்து விட வேண்டும். சூடு ஆறியதும் எண்ணெயை வடிகட்டி தகர டின்னில்

ஊற்றினால் ஹேர் ஆயில் தயார். எண்ணெயை தேவையான அளவுள்ள பாட்டில்களில் அடைத்து, லேபிள் ஒட்டி விற்கலாம்.

பக்குவம் முக்கியம்: கொதிக்கும் எண்ணெயில் வடைபோல் போட்டவற்றை முறுகும் வரை வேக வைத்து விட்டால், வடையின் துகள்களே எண்ணெயை உறிஞ்சி கொள்ளும். எண்ணெய்

அளவு குறைந்து விடும். முறுகாமல் இருக்க வேண்டும் என்பதற்காக சீக்கிரமே தீயை அணைத்து விட்டால் முழுமையான மூலிகை எண்ணெயாக மாறாது.  எண்ணெய் முழுவதும் மூலிகை

எண்ணெயாக மாறிவிட்டதை அறிய, வடை வெந்து கொண்டிருக்கும் போது, ஒரு திரியை சட்டியில் உள்ள எண்ணெயில் நனைத்து பற்ற வைக்க வேண்டும். எண்ணெய் ஈரப்பதமாக

இருந்தால் சடசடவென சத்தம் வரும். சரியாக எரியாது. திரி சத்தமில்லாமல் எரிந்தால் மூலிகை எண்ணெய் பக்குவத்திற்கு வந்து விட்டது என்பதை அறிந்து உடனே தீயை அணைத்து விடலாம். 

கண் பார்வைக்கு ஜாதிக்காய்!!!!!

கண் பார்வைக்கு ஜாதிக்காய்
கண் பார்வை மங்கலாக இருந்தால் அதற்கு கண்ணாடி போடுவது, மாத்திரைகள், காய்கறிகள் சாப்பிடுவது என்று எல்லோரும் பல முறைகளை கையா‌ள்வா‌ர்க‌ள்.

பொதுவாக க‌ண்க‌ளி‌ல் ஏ‌ற்படு‌ம் ‌சி‌றிய ‌பிர‌ச்‌சினைகளை உடனடியாக ‌தீ‌ர்‌க்க வே‌ண்டியது‌ ‌மிகவு‌ம் மு‌க்‌கிய‌ம். ஏனோ தானோ வெ‌ன்று ‌வி‌ட்டு‌வி‌ட்டா‌ல்தா‌‌ன் க‌ண் பா‌ர்வை‌க்கே ‌பிர‌ச்‌சினையா‌கி‌விடு‌கிறது. 

கண் பார்வை மங்கலாக இருப்பவர்கள், ஜாதிக்காயை பசும்பாலில் இழைத்து இரவில் கண்ணை சுற்றி பற்றுப் போட்டு காலையில் கழுவி விடவும்.

இதனுடன் திரிபலா சூரணத்தை தேனில் கலந்து உட்கொண்டு வர கண்பார்வை விரைவில் தெளிவடையும்.

கண் பார்வை சீராக இருக்க ஜாதிக்காய் பெருமளவு பயன்படுகிறது.

மேலும், கண்ணை சுற்றி இருக்கும் கருவளையத்தையும் நீக்க இது போன்று ஜாதிக்காயைப் பயன்படுத்தலாம்.

எலுமிச்சையின் 13 அற்புதமான நன்மைகள்

தினமும் உண்ணும் உணவில் ஏதேனும் ஒரு பழ வகையை சேர்த்து கொள்ளுதல் மிகவும் சிறந்தது. ஏனெனில் பழங்களானது உடலுக்கு ஆரோக்கியம் அளிக்கக்கூடிய கடவுள் தந்த ஒரு பெரிய வரப்பிரசாதம். அதே போல் எலுமிச்சை பழமும் உடலுக்கு பல நலன்களை கொடுக்க கூடியது ஆகும். மேலும் இது விலை மலிவான பழமும் கூட. மஞ்சள் நிறத்தில் மங்களகரமாய் காணப்படும் இப்பழம், பூஜைக்கு மட்டுமல்ல, உணவில் அவசியம் சேர்த்து கொள்ள வேண்டிய, நன்மைகள் பல நிறைந்த ஒரு பழ வகையாகும்.உணவில் ஃபிரஷ்ஷான எலுமிச்சையை சேர்த்து கொள்ளாதவரும் கூட, இங்கு கூறப்படும் எலுமிச்சை, எலுமிச்சை சாறு, அதன் சதை பகுதி மற்றும் அதன் தோல் ஆகியவற்றின் நலன்களை அறிந்து கொண்டு, எலுமிச்சையை உணவில் சேர்த்து கொள்ளலாமா என்று மறுபரிசீலனை செய்வர். எலுமிச்சை என்றாலே அனைவருக்கும் அதன் புளிப்புச்சுவை தான் நினைவுக்கு வரும். ஆனால் அந்த புளிப்புச்சுவை நிறைந்த சாற்றில் நிறைய மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. மேலும் எலுமிச்சை உடல் நலத்தை மட்டுமல்லாமல் சரும அழகையும் பாதுகாக்க கூடியது. இப்படி பல மருத்துவ பயன்பாடுகளை உள்ளடக்கிய எலுமிச்சையின் சில நன்மைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. அதைத் தெரிந்து, இனிமேல் அதனை உணவில் அதிகம் சேர்த்து, உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுங்கள்.
 
 
 
1. குடலை சுத்தப்படுத்துதல்: எலுமிச்சையின் கசப்பு சுவை, குடல் தசையின் இயக்கம் திறனை அதிகரித்து, குடலில் இருந்து கழிவை அகற்றும் முறையை மேம்படுத்துகிறது. அதற்கு எலுமிச்சையின் சாற்றை ஒரு டம்ளர் தண்ணீரில் கலந்து, தினமும் காலையில் முதல் வேலையாக குடிக்க வேண்டும்.
 
2. புற்றுநோய்: லிமொனின் (Limonene) உட்பட 26 வகை புற்றுநோய் எதிர்ப்பு கலவைகள் எலுமிச்சையில் உள்ளன. இவற்றில் இயற்கையாகவே இருக்கும் எண்ணெய், உடலில் புற்றுநோய் கட்டிகள் வராமல் தடுக்கின்றன. எலுமிச்சையில் உள்ள ஃப்ளேவோனால் க்ளைகோசைட் (Flavonal Glycoside) புற்று கட்டியில் உள்ள அணுக்கள் அதிகரிக்காமல் தடுக்கின்றன.

3. ஜலதோஷம் மற்றும் காய்ச்சல்: எலுமிச்சையில் வைட்டமின் சி மற்றும் ஃப்ளேவோனாய்டு (Flavanoid) அதிகம் உள்ளன. இவைகள் நோய் தொற்றுக்கு எதிரான கலவைகள். ஆகவே எலுமிச்சையை அதிகம் சேர்த்தால், ஜலதோஷம் மற்றும் காய்ச்சலை தடுக்கலாம்.
4. கல்லீரல் பிரச்சனைகள்: ஒரு டம்ளர் அளவு தண்ணீரில் எலுமிச்சை சாற்றை கலந்து, காலையில் குடித்து வந்தால், கல்லீரலில் இருக்கும் நச்சுதன்மை நீங்கும்
5. ஊட்டச்சத்துக்கள்:  எலுமிச்சையில் நிறைய சத்துக்கள் நிறைந்துள்ளன. அவை வைட்டமின் சி, சிட்ரிக் அமிலம், ஃப்ளேவோனாய்டுகள், பி காம்ப்ளக்ஸ் வைட்டமின், கால்சியம், தாமிரம், இரும்பு, மெக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், நார்ச்சத்து போன்றவை.
6. உடல் வேதியியல் இருப்புகள்: எலுமிச்சை அதிக அமிலத்தன்மை உடையது என்பதால், ஜீவத்துவ பரிணாமத்துடன் சேர்ந்து உடல் திரவங்களின் கார நிலையை சமன்படுத்துகிறது.
7. ஒவ்வாமை/அலர்ஜி: எலுமிச்சையில் உள்ள பைட்டோ நியூட்ரியன்ட்டுகள், உடலில் ஏற்படும் அலர்ஜி அறிகுறிகளை தடுக்க உதவுகிறது என்று ஆய்வின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.
 
8. மூளை மற்றும் நரம்பு மண்டல சீர்குலைவுகள்: எலுமிச்சையின் தோல் பகுதியில் உள்ள பைட்டோ நியூட்ரியன்ட்டு டாங்கரெட்டின் (Phytonutrient Tangeretin) பார்கின்சன் நோய் (Parkinson's Disease) போன்ற மூளை கோளாறுகளை சரிசெய்வதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
 
9. கண் / பார்வை கோளாறுகள்: எலுமிச்சையில் காணப்படும் இரசாயன கலவையான ருட்டின் (Rutin), நீரிழிவால் ஏற்படும் விழித்திரை நோயை கூட குணபடுத்தும்.
 
10. ஆன்டி வைரஸ் (Anti Virus): எலுமிச்சை ஜலதோஷம் மற்றும் காய்ச்சலுக்கு எதிராக இருப்பதைத் தவிர, அதில் இருக்கும் டெர்பின் லிமினாய்டு (Terpin Liminoids) எனப்படும் தாவர இரசாயனங்கள் மற்ற வகை வைரஸ்களுக்கு எதிரானவை என்று ஆய்வில் நிரூபிக்கப்பட்டுள்ளது
11. நீரிழிவு நீரிழிவு: நோயால் ஏற்படும் கண் கோளாறுகளை குணப்படுத்துவது மட்டுமல்லாமல், எலுமிச்சையில் இருக்கும் ஹேஸ்பரெட்டின் (hesperetin) இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கும் போது, அதை குறைக்க உதவுகிறது.
12. பித்தப்பை மற்றும் சிறுநீரக கற்கள்: எலுமிச்சையில் காணப்படும் சிட்ரிக் அமிலம் பித்தப்பை கற்கள், கால்சியம் படிகங்கள் மற்றும் சிறுநீரக கற்களை கரைக்க உதவுகின்றது.
 
13. முதுமை தடுக்கும்: எலுமிச்சையில் உள்ள வைட்டமின் சி, முதுமையை ஏற்படுத்தும் அணுக்களை சமன்படுத்தி, இளமையை நீண்ட நாட்கள் தக்க வைக்கும்

ஞாயிறு

தக்காளி ஜாம் தயாரிப்பு

தர்மபுரி மாவட்ட வேளாண் விற்பனை மற்றும் வணிகப் பிரிவும் இணைந்து, தக்காளியில் மதிப்புக்கூட்டல் தொழில்நுட்பத்தைச் சொல்லிக் கொடுப்பதற்காக கடந்த மாதம் பயிற்சி முகாமுக்கு ஏற்பாடு செய்திருந்தன. வேளாண் அறிவியல் மைய இணைப் பேராசிரியர் ஜான்சிராணி, தக்காளியைக் கொண்டு ஜாம், ஊறுகாய், கெச்சப், ஸ்குவாஷ், சாஸ், ஜூஸ், வடகம், தக்காளி பவுடர்... மதிப்புக் கூட்டல் பொருட்களைத் தயாரிக்கும் விதங்களை செய்முறை விளக்கத்துடன் சொல்லிக் கொடுத்தார். 

இனி பயிற்சியில் இருந்து... 

''தக்காளிக்கு வருஷம் முழுசும் கட்டுப்படியான விலை கிடைக்கறதில்லை. கணக்குப் பாத்தா, பல நேரங்களில் நஷ்டம்தான் அதிகமா இருக்கும். விவசாயிகளைப் பொறுத்தவரைக்கும் விளைஞ்சதை அப்படியே சந்தையில வித்துடணும்னுதான் நினைக்கறாங்க. அதுக்கு மேல யோசிக்கறதேயில்லை. இந்த மனநிலைதான் நஷ்டத்துக்குக் காரணம். விலை குறையறப்ப சாலையில கொட்டி வீணாக்குறதுக்குப் பதிலா... கொஞ்சம் மெனக்கெட்டு அதை ஊறுகாயாகவோ, ஜாமாகவோ... மாத்தினா நஷ்டம் வர்றதுக்கு வாய்ப்பே இல்லை. 

கிலோவுக்கு 30 ரூபாய்! 

உதாரணமா, ஒரு கிலோ தக்காளியில சில பொருட்களை சேர்த்து ஊறுகாய் தயாரிச்சா, 750 கிராம் ஊறுகாய் கிடைக்கும். இன்னிக்குச் சந்தையில 250 கிராம் தக்காளி ஊறுகாய் 22 ரூபாயிலிருந்து 30 ரூபா வரைக்கும் விக்குது. குறைஞ்சபட்சம் 20 ரூபாய்னு வெச்சுகிட்டாலும், 750 கிராம் ஊறுகாய்க்கு 60 ரூபாய் கிடைக்கும். இதுக்கான தயாரிப்புச் செலவுக்காக 30 ரூபாயைக் கழிச்சிட்டாலும், மீதி 30 ரூபாய் இருக்கும். பெரிய நிறுவனங்களோட தொடர்பு வெச்சுக்கிட்டா, தொடர்ந்து விற்பனை வாய்ப்பு கிடைக்கும்'' என்று நிறுத்திய ஜான்சிராணி, 

''இப்ப சொல்லுங்க, கிலோ 3 ரூபாய்க்கு தக்காளி விக்குதேனு கீழ கொட்டாம... கொஞ்சம் யோசிச்சா ஒரு கிலோ தக்காளிக்கு 30 ரூபா கிடைக்குமில்ல!'' எனக் கேட்க... வியப்பில் விழிகள் விரித்தனர் எதிரே அமர்ந்திருந்த விவசாயிகள். 

தொடர்ந்து, தக்காளி மட்டுமல்லாமல்... மிளகாய், கொய்யா போன்றவற்றிலும் மதிப்புக்கூட்டுவது பற்றி பயிற்சி அளிக்கப்பட, ஆர்வத்தோடு அவற்றில் பங்கெடுத்தனர் விவசாயிகள். அவர்கள் குறிப்பெடுத்துக் கொண்ட விஷயங்களில் இருந்து தக்காளி ஊறுகாய் மற்றும் ஜாம் தயாரிப்பு முறைகள் இங்கே இடம்பிடிக்கின்றன. 
-------- 
1) தக்காளி ஊறுகாய்! 

தேவையான பொருட்கள்: 

நன்றாகப் பழுத்தத் தக்காளி - ஒரு கிலோ, மிளகாய்த்தூள் - 2, டேபிள் ஸ்பூன், வெந்தயம் - 1 ஸ்பூன், ரீஃபைண்ட் ஆயில் - 250 மில்லி, பூண்டு - 20 பல், பெருங்காயத்தூள் - 1 ஸ்பூன், கடுகு - 1 ஸ்பூன், உளுத்தம் பருப்பு- 1 ஸ்பூன், உப்பு - தேவையான அளவு 

தக்காளியை நன்றாக சுத்தம் செய்து மிக்ஸியில் நன்கு கூழாகும் வரை அரைக்க வேண்டும். இதனுடன் உப்பு, மிளகாய்த்தூள் ஆகியவற்றைச் சேர்த்து வாணலியில் இட்டு அடுப்பில் வைத்துச் சூடாக்க வேண்டும். நன்கு கொதிக்கும் நிலையில் நீர்வற்றி கெட்டியாக மாறும். அப்போது சூடு படுத்திய எண்ணெயை தக்காளியுடன் சேர்த்து கிளறிக்கொண்டே இருக்க வேண்டும். அடுப்பு மிதமாக எரியும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். தக்காளிக் கலவை கொதி வந்த பிறகு, கலவையில் உள்ள எண்ணெய் முழுவதும் பிரிந்து வரும் வரை வேகவிட்டு, பின்பு இறக்க வேண்டும். 

பிறகு, வறுத்துத் தூளாக்கிய வெந்தயம், கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயம் தாளித்து பூண்டை சேர்த்து நன்றாக வேகும் வரை வதக்கி தக்காளிக் கலவையில் சேர்த்து, நன்றாக ஆறவிட்டு, ஈரம் இல்லாத பாட்டில்களில் நிரப்பி மூடி வைக்க வேண்டும். இது, சாதாரண நிலையிலேயே ஒரு வாரம் வரை கெடாமல் இருக்கும். குளிர்சாதனப் பெட்டிகளில் பாதுகாத்தால் நீண்டநாட்களுக்கு வைத்திருக்கலாம். இதை, அனைத்து உணவுகளுக்கும் தொட்டுச் சாப்பிட பயன்படுத்தலாம். 
------------ 
2) தக்காளி ஜாம்! 

தேவையான பொருட்கள்: 

தக்காளி பழக்கூழ் - ஒரு கிலோ. சர்க்கரை - 750 கிராம். சிட்ரிக் அமிலம் அல்லது எலுமிச்சை சாறு - அரை தேக்கரண்டி. 

தக்காளியைச் சுத்தம் செய்து தோல், விதைகளை நீக்கி சதைப்பகுதிகளைச் சேகரித்துக் கொள்ள வேண்டும். அவற்றை மிக்ஸி மூலம் கூழாகும் வரை அரைத்து வடிகட்ட வேண்டும் (இதுதான் தக்காளி பழக்கூழ்). கொஞ்சம் போல தண்ணீர் எடுத்து, அதில் சிட்ரிக் அமிலத்தைக் கரைத்து வைத்துக் கொள்ள வேண்டும். தக்காளிக் கூழை பாத்திரத்தில் இட்டு, சிறிது நேரம் வேகவிட்டு ஒரு கொதி வந்தவுடன் சர்க்கரையைச் சேர்த்து, அடுத்து சிட்ரிக் அமிலம் கலந்த தண்ணீரை ஊற்ற வேண்டும். 

நன்றாகக் கொதித்துக் கொண்டிருக்கும் கலவையை ஒரு ஸ்பூனில் சிறிதளவு எடுத்து ஒரு தட்டில் ஊற்றிப் பார்த்தால்... கெட்டியாக விழ வேண்டும். அதுவரை கலவை வேக வேண்டும். இந்தப் பதம் வந்தபின் பாத்திரத்தை இறக்கி வைத்து கொஞ்சம் மட்டும் ஆறவிட்டு, வாய் அகன்ற கண்ணாடி பாட்டில்களில் சூடாகவே நிரப்பி வைக்க வேண்டும். இந்த நிலையிலேயே முழுவதும் ஆறவிட்டு, அதன்பிறகு பாட்டில்களை மூடி வைக்க வேண்டும். சூடானக் கலவையை பாட்டில்களில் நிரப்பும்போது பாட்டில்களை தரை மீது வைப்பதைத் தவிர்த்து, மரப்பலகை மீது வைத்துக் கொண்டால், சூட்டின் மூலம் பாட்டில்கள் உடைந்து போகாமல் தடுக்க முடியும். 

விற்பனைக்கு அணுகலாம்! 

மதிப்புக்கூட்டல் தொழிலுக்கான கடனுதவிகள் பற்றி விளக்கமாக விவசாயிகளுக்கு எடுத்துச் சொன்ன மாவட்ட வேளாண் வணிகம் மற்றும் விற்பனைப் பிரிவின் வேளாண் அலுவலர் தாம்சன், ''தக்காளி மட்டுமன்றி... மா, பப்பாளி, கொய்யா, பச்சைமிளகாய் என அனைத்துப் பயிர்களுமே ஆண்டு முழுக்க மாறி மாறி இந்த மாவட்டத்தில் விளைவிக்கப்படுகின்றன. அந்தந்தப் பருவத்துக்கு ஏற்றபடி அவற்றையெல்லாம் மதிப்புக்கூட்டி, நல்ல லாபம் பார்க்கலாம். 

நாம் மதிப்புக்கூட்டும் பொருட்களை விற்பனை செய்வதற்காக கவலைப்படத் தேவையில்லை. பெரிய வணிக நிறுவனங்கள், தாங்கள் விரும்பும் தரத்துடன் தயாரித்துக் கொடுக்கப்படும் ஜாம், சாஸ் உள்ளிட்ட பொருட்களுக்கு நல்ல விலை கொடுக்கத் தயாராக இருக்கின்றன. அந்த நிறுவனங்களில் விற்பனை வாய்ப்பை ஏற்படுத்தித் தர வேளாண் வணிகம் மற்றும் விற்பனைப் பிரிவை விவசாயிகள் தயக்கமின்றி அணுகலாம்'' என்று அழைப்பு வைத்தார். 

தொடர்புக்கு: வேளாண் அறிவியல் நிலையம், பாப்பாரப்பட்டி, தொலைபேசி: 04342-245860. வேளாண் வணிகம் மற்றும் விற்பனைப் பிரிவு அலுவலர் அலைபேசி: 94435 -63977.