ஞாயிறு

மாடு வளர்ப்பு :: தீவனப் பராமரிப்பு

 கன்றுகளுக்கு சீம்பால் ஊட்டம்

ஊட்டப்பராமரிப்புகள் கன்றிலிருந்தே தொடங்க வேண்டும். கன்று ஈன்றவுடன் பசுவிலிருந்து சுரக்கும் முதல் பால் சீம்பால் எனப்படுகிறது. இளம்கன்றிற்கு இது மிகவும் அவசியம். நாளொன்றிற்கு 2-21/2 லிட்டர் வீதம் முதல் 3 நாட்கள் கண்டிப்பாக சீம்பால் அளிக்கப்பட வேண்டும். இது கன்றின் செரிக்கும் தன்மையையும் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகப்படுத்துகிறது. முடிந்தால் எஞ்சிய பாலை சேகரித்து சிறிது இடைவெளி விட்டு கன்றிற்கு ஊட்டச்செய்யலாம்.

பசுவின் சாதாரண பாலில் உள்ளதை விட சீம்பாலில் புரதச்சத்து மிகவும் அதிகம். இதன் புரதத்தில் உள்ள குளோபுலின் கால்நடைகளைத் தாக்கும் நோய் கிருமிகளை எதிர்த்துத் தாக்கும் சக்தி கொண்டது. இதில் காமா - குளோபுலின் அளவு 0.97 மி.கி. / மி.லி கன்று ஈன்ற உடனும் 16.55 மி.கி. / மி.லி அளவு கன்று ஈன்ற 2 மணி நேரத்திலும் இரண்டாவது நாளில் 28-18 மி.கி. / மி.லி அளவாகவும் உள்ளது.

cattle_colustrumFeeding_2
சீம்பால் ஊட்டம்
  • சீம்பாலில் புரதம் 3 மடங்கும், காப்பர், இரும்புச்சத்து, மெக்னீசியம் மற்றும் மாங்கனீஸ் ஆகியவையும் உள்ளன.
  • சாதாரண பசும்பாலை விட 5-15 மடங்கு அதிகவிடடமின் ‘ஏ’ சீம்பாலில் உள்ளது. இது பசுவுக்கு சினைத்தருணத்தில் அளித்த உணவைப் பொறுத்து அமையும்
  • இது தவிர ரிபோஃபிளோவின், குளோரின், தையமின் மற்றும் பேன்டோதொனிக் அமிலம் ஆகியவையும் அதிகம் உள்ளன.
  • இது செரித்தலை துரிதப்படுத்துகிறது

பசும்பால் ஊட்டம்

  • முடிந்த அளவு தாய்ப்பசுவின் பாலை ஊட்டச்செய்யவும்
  • பால் கறந்த உடனே கன்றை ஊட்டவிட வேண்டும்
  • முதல் ஒரு வாரத்திற்கு நாளொன்றுக்கு 3-4 முறையும் அதன் பின்பு 2 முறையும் பாலூட்டுவதைப் பழக்கப்படுத்தலாம்

கொழுப்புச்சத்து நீக்கிய பால்

பெரும்பாலான பண்ணைகளில் இப்போது கொழுப்பு நீக்கிய பாலையே கன்றுகளுக்குக் கொடுக்கின்றனர். சரியான அளவு கொழுப்பு நீக்கிய பாலையும் சீரான இடைவெளியில் அளிக்கலாம்.

மோர், தயிர்த் தெளிவு, கொழுப்பு, நீக்கி உலர்த்திய பால்: (Dried skim milk, whey/butter milk):


மேற்கண்ட அனைத்தையும் கலந்து 1கி-9கி அளவு நீருடன் கலந்து கொழுப்பு அற்ற பாலாக கன்றுகளுக்குக் கொடுக்கப்படுகிறது. இதில் செரித்தல் எளிதாகிறது.

அடர்தீவனம் (calf starter):

இதில் கம்பு, சோளம், கேழ்வரகு, உடைத்த கோதுமை, அரிசி போன்ற தானயங்களை அரைத்து கலந்து பயன்படுத்தப்படுகிறது. சில (2) வாரங்களுக்குப் பிறகு தாய்ப்பால் ஊட்டத்தை நிறுத்திவிட வேண்டும். அடர்தீவனத்தை பால் ஊட்டியபின்பு கன்றின் வாயில் தேய்க்க வேண்டும்.

பின்பு கன்று அதை சாப்பிட்டு பழகிவிடும். கன்று வளர தானியங்களின் விகிதத்தை அதிகரித்துக் கொள்ளலாம்.

cattle_Calffeeding
கொழுப்பு, நீக்கி உலர்த்திய பால் ஊட்டம்

கலப்புத்தீவனம்

தாய்ப்பாலை நிறுத்திவிட்டால் கன்றிற்கு சரியான தீவனம் அளித்தல் அவசியம். அடர்தீவனத்தில் கலந்துள்ள தானியங்களுடன் மேலும் பிண்ணாக்கு வகைகள், தவிடு வகைகள், பருப்பு நொய், வெல்லப்பாகு, உப்பு, தாது உப்புக்கலவை ஆகியவற்றைத் தேவையான விகிதத்தில் சரியாகக் கலந்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

பாலூட்டத்தை நிறுத்தும் முன்பே இத்தீவனத்தை ஊட்டச் செய்ய வேண்டும். பாலூட்டம் இருக்கும்போது அதிக புரதம் உள்ள தானியங்களை எடுத்துக்கொள்ளக் கூடாது. ஏஎனனில் ஏற்கனவே பாலில் புரதம் அதிகம் உள்ளது. மேற்கூறிய தானியங்களில் ஓட்ஸ் - 35%, லின்ஸீடு புண்ணாக்கு - 5%, தவிடு - 30%, பார்லே - 10%, கடலைப்பிண்ணாக்கு - 20%, கலவை சிறந்தது. அல்லது அரைத்த சோளம் 2 பங்கு கோதுமைத்தவிடு 2 பற்கு என்ற அளவினும் கலந்து அளிக்கலாம்.
((ஆதாரம்: டாக்டர்.சி.பால் பிரின்ஸ்ஸி ராஜ்குமார், வேளாண் கல்லூரி, மதுரை)

6 மாதம் வரை கன்றுகளின் தீவன அட்டவனை

கன்றின் வயதுஉடல்எடைபாலின் அளவு (கி.கி)கன்று அடர் தீவன அளவு (கிராமில்)பசும்புல் (கி.கிமில்)
4 நாள்முதல் 4 வாரம் வரை252.5சிறிய அளவுசிறிய அளவு
4-6 வாரம்303.050-100சிறிய அளவு
6-8 வாரம்352.5100-250சிறிய அளவு
8-10 வாரம்402.0250-300சிறிய அளவு
10-12 வாரம்451.5350-5001-0
12-16 வாரம்55-500-7501-2
16-20 வாரம்65-750-10002-3
20-24 வாரம்75-1000-15003-5

தகவல்: கேரளா - வேளாண் பல்கலைக்கழகம்

கன்று நன்கு வளர்ச்சி அடையும் வரை அடர்தீவனம் அவசியம். மேலும் இக்கலப்பு தீவனத்தில் எல்லா சத்துக்களும் சரியான அளவில் கலந்திருக்க வேண்டும். முக்கியமாக நிறைய புரதச்சத்து இருக்க வேண்டும். மீன் கழிவு (fish meal) போன்றவற்றிலிருந்து எடுக்கப்பட்ட விலங்கும் புரதங்களும் சேர்த்தல் சிறந்தது. யூரியாசேர்த்தல் கூடாது.

அட்டவணை 2:


6 மாதத்திலிருந்து தீவன அளவு

வயது (மாதங்களில்)சராசரி உடல் எடை (கி.கிராமில்)கலப்பு தீவனம் (கி.கி)புல் அளவு (கி.கிராமில்)
6-970-1001.5-1.755-10
9-10100-1501.75-2.2510-15
15-20150-2002.25-2.5015-20
20க்கு மேல்200-3002.50-2.7515-20

அட்டவணை 3:

பரிந்துரைக்கப்பட்ட கலப்பு தீவன அளவு: (சராசரியாக 15% DCF, 70% TDN)       

வ.எண்
பொருட்கள்அளவு (கி.கில்)

1.

கடலைப் புண்ணாக்கு
எள் புண்ணாக்கு
(அரிசித் தவிடு) நெல் தவிடு
உலர்ந்த மரவள்ளி செதில்கள்
தாதுக்கலவை
உப்பு

32
5
25
35
2
1

2.

கடலைப் புண்ணாக்கு
தேங்காய் / பருத்தி புண்ணாக்கு
நெல் தவிடு
மஞ்சள் சோளம்
தாதுக்கலவை
உப்பு

30
10
30
27
2
1

3.

கடலைப் புண்ணாக்கு
நெல் தவிடு
தோல் உரித்த புளிக்கொட்டை
உலர்ந்த மரவள்ளிக் கிழங்கு செதில்
தாதுக்கலவை
உப்பு

33
30
10
24

2
1

4.

எள் புண்ணாக்கு
தேங்காய் புண்ணாக்கு
மஞ்சள் சோளம்
கோதுமை தவிடு
தாதுக்கலவை
உப்பு

20
15
32
20
2
1

5.

சூரியகாந்தி புண்ணாக்கு
பருத்தி புண்ணாக்கு
கம்பு
கோதுமை தவிடு
தாதுக்கலவை
உப்பு

25
15
25
32
2
1

6.

கடலைப் புண்ணாக்கு
ரப்பர் விதை புண்ணாக்கு
மஞ்சள் சோளம்
கோதுமை தவிடு
மரவள்ளிக் கிழங்கு
தாதுக்கலவை
உப்பு

20
20
27
15
15
2
1

அட்டவணை 4:

கறவை மாடுகளுக்கான தீவன அட்டவணை


கலப்பினமாடுகள்

வ.எண்
கறவையின் பால் உற்பத்தித்திறன்தீவன அளவுபசுந்தீவனம்உலர் தீவனம்அடர்தீவனம்
1.6-7 லிட்டர் பால் நாளொன்றுக்குபால் தரும் நாட்களில்20-255-63-3.5
 இதர நாட்களில்15-206-70.5-1.0
2.8-10 லிட்டர் பால் நாளொன்றுக்குபால் தரும் நாட்களில்25-304-54-4.5
 இதர நாட்களில்20-256-70.5-1.0

(ஆதாரம்: தேசிய கால்நடை மேம்பாட்டுக் கழகம்.)

கறவை மாடுகளின் தீவனம்


பால் கறக்கும் மாடுகளுக்கு எந்த அளவு சரியான தீவனம் அளிக்கிறோமோ அந்த அளவே பால் கிடைக்கும். புண்ணாக்கு போன்ற புரதச்சத்துள்ளவைகளையும் தவிடுகள், தானியங்கள் போன்றவை கலந்த சரிவிகித உணவு மிக அவசியம்.

cattle_feeding2மாடுகளின் தீவனம்

அட்டவணை 5

முதிர்ந்த மாடுகளுக்கான தீவனங்கள்: (உடல் எடை 250 கி.கி. வரை)

பசுந்தீவனம் அதிகளவு இருந்தால்

வைக்கோல் அதிகம் இருந்தால்

பிரிவுஅடர்தீவனம்பசும்புல் கி.கில்அடர் தீவனம் (கி.கி)பசும்புல் (கி.கி)Paddy straw (கி.கி)
பால் வற்றிய மாடுகள்-25-301.255-05-6
பால் கறக்கும் மாடுகள்1 கி.கி ஒவ்வொரு 2.5-3 கி.கி பாலுக்கும்301.25 + 1கி.கி ஒவ்வொரு 1.5கி.கி பாலுக்கும்5-05-6
சினை மாடுகள்சாதாரண அளவு + 1-1.5 கி.கி 6வது மாதத்திலிருந்து25-30பராமரிப்பு + உற்பத்தி +1-1.5கி.கி 6வது மாதத்திலிருந்து5-05-6

கால்நடைகளுக்குத் தேவையான உலர்தீவன அளவு அதன் உடல் எடையில் 3% ஆகும். சில உற்பத்தித்திறன் அதிகம் கொண்ட மாடுகளுக்கு அதற்கு மேலும் தீவனங்கள் அளிக்கலாம். தட்ப வெப்பநிலை தீவனத்தயாரிப்பு முறை, மற்றும் செரிமானத்திறன் அடிப்படையில் உட்கொள்ளுவதை உணவின் அளவு வேறுபடும். ஒரு சாதாரண அளவுடையுள்ள பசுவுக்கு 6% பண்படா புரதம்தேவைப்படும். அதோடு நிறைய பயிறு வகைப் பசும்புல்லும் கொடுத்தால் 3-4 கி.கி பால் பெறமுடியும்.

காளைகளின் தீவனம்

இனவிருத்திக்கென வளர்க்கப்பட்டு வரும் காளைகளுக்கு பசுவை விட அதிக நுண்ணூட்டச் சத்துக்கள் மிகுந்த தீவனங்களை அளிக்க வேண்டும்.

அட்டவணை 6

உடல் எடை (கி.கில்)
அடர்தீவன அளவு (கி.கில்)பசும்புல் (கி.கில்)

400-500

2.5-3

20-25

இனவிருத்திக் கலப்பில் ஈடுபடுத்தப்படும் மாடுகளுக்கு சரியான அளவு உலர் தீவனம் முறையாக அளிக்கப்படவேண்டும். அதிக அளவு தீவனம் காளைமாடுகளின் எடையை அதிகரித்து செயல்திறனைக் குறைத்து விடும்.
தகவல்: கேரளா வேளாண் பல்கலைக்கழகம்

கன்று ஈனும் தொழுவங்கள்


கன்று ஈனும் தொழுவமானது மாட்டுக் கொட்டகை அருகில் இருக்க வேண்டும். பெரிய பண்ணைகள் மொத்தம் பரப்பில் 5% அளவானது இருக்க வேண்டும். ஒவ்வொரு கன்று ஈனும் கொட்டகையிலும் 3 x 4 மீ அளவுடைய கொட்டில்களும் அருகே 4 x 5 மீ திறந்த வெளி அமைப்புகளும் அமைத்தல் வேண்டும். சிமென்ட்டாலான தளங்களோடு இருத்தல் நலம். மூடப்பட்ட தளமானது (covered area) 1.25 மீ கொண்ட சுவர்களும் 1.2 மீ கதவு ஒருபுறமும் கொண்டிருக்க வேண்டும். ஒவ்வொரு கொட்டிலும் நீர், தீவனத் தொட்டி, மின்சார வசதிகள் சரிவர அமைத்திருத்தல் வேண்டும். இந்தக் கொட்டகையானது விவசாயி (அ) ஆட்களின் இருப்பிடத்திற்கு அருகில் இருக்கவேண்டும்.

(ஆதாரம்: பால் பிரின்ஸ்ஸி ராஜ்குமார், வே.க. மதுரை.)

நுண்ணூட்டச் சத்துக்களின் தேவை


கறவை மாடுகள் தீவனமுறை

  • கறவையின் உற்பத்தித் திநனுக்கேற்ற கலப்பு தீவனம் அவசியம்
  • நல்ல தரமுள்ள உலர்தீவனம் கலப்புதீவன அளவைக் குறைக்கும். தோராயமாக 20 கி.கி புற்கள் (கினியா, நேப்பியர்) அல்லது 6-8கி.கி பயிறு வகை (லியூசர்ன்) அளிப்பதன் மூலம் 1 கி. அடர்தீவனத்தைக் குறைக்க முடியும்
  • 1கி.கி வைக்கோல் 4-5 கிலோ புல் தேவையைக் குறைக்கும். இதன் மூலம் புரோட்டீன் பற்றாக்குறையைப் போக்கலாம்
  • முறையான தீவனமளிப்பு முக்கியமாகும். காலை, மாலை இருவேலைகளும் அடர்தீவனத்தைப் பிரித்து பால்கறக்கும் முன்பு அளிக்கவேண்டும். அதேபோல் உலர்தீவனமும் காலையில் பால்கறந்த நீர் அளித்த பின்பும், மாலையில் பால்கறந்த பின்பும் அளிக்க வேண்டும். அதிக பால் தரும் மாடுகளுக்கு நாளொன்றுக்கு 3 வேளை உணவு அளிக்கலாம்
  • சரியான அளவு இடைவெளி அதன் செரிக்கும் திறனையும் பாலின் கொழுப்புச் சத்து அளவையும் அதிகரிக்கும். அதிக உலர்தீவனம் அளித்தால் மாடுகளின் செரிக்கும் தன்மை குறையலாம்
  • தானிய வகைகள் சரியான அளவு அரைத்துக் கொடுக்க வேண்டும்
  • நேப்பியர் போன்ற கடின தண்டுகொண்ட தீவனங்களை சிறிது துண்டாக வெட்டி அளிக்கலாம்
  • வைக்கோலுடன் பயிறு வகை மற்றும் சிறிய ஈரப்பதமுள்ள புற்களைக் கலந்து அளிக்கலாம்
  • அடர் அல்லது கலப்பு தீவனம் நீருடன் கலந்து அளிக்கலாம்
  • பதப்படுத்தப்பட்ட பசுந்தீவனங்களை பால் கறந்த பின்பு அளிக்கலாம்
  • தீவன வேமிப்புக் கிடங்கு நல்ல காற்றோட்டத்துடன் உலர்ந்து சுத்தமாக இருக்க வேண்டும். பூஞ்சான் தாக்கிய கெட்டுப்போன தீவனங்களை கால்நடைகளுக்கு அளிக்கக் கூடாது
  • நல்ல பால் உற்பத்தி கொண்ட மாடுகளுக்கு அடர் உலர் தீவன விகிதம் 60:40 அளவில் இருக்க வேண்டும்

அட்டவணை 7

கால்நடைகளின் நுண்ணூட்ட அளவு. கால்நடை 1க்கு/நாளொன்றுக்கு (வளர்ச்சி விகிதம் 55கி/நாள்)

எடையளவு (கி.கி)
உலர்தீவனம் (கி.கி)செரிக்கக்கூடிய (குரூடு) புரோட்டீன் பண்படாத (கி.கி)செரிக்கக்கூடிய நுண்ணூட்டிகள் (கி.கி)கால்சியம் (கி.கி)பாஸ்பரஸ்(கி.கி)
2504-51402.22517
3005-61682.652517
3506-71953.102517
4007-82233.552520
4508-92504.003123
5009-102784.453123
55010-113104.903123
60011-123365.353123

பசும்புல் இல்லாத நிலையில் உலர் / அடர் தீவனம் கொடுக்கலாம். பால் கறவை வற்றிய பின்பும் அடர்தீவனம் தவிர மற்ற பசும்புல் உலர் தீவனங்கள் கொடுக்க வேண்டும்.

இளம் கலப்பு இன மாடுகளின் வளர்ச்சிக்கேற்ப நிறைய தீவனம் அளிக்க வேண்டும். அதன் வளர்ச்சியை அதிகப்படுத்த முதல் கறவையில் 1 கி.கிமும் 2ம் கறவையில் 0.5 கி.கிமும் அதிக அடர் தீவனம் அளிக்க வேண்டும். கறவை மாடுகள் எப்போதும் சுதந்திரமாக உலவவும் நீர் அருந்தவும் அனுமதிக்கப்பட வேண்டும்.

அட்டவணை 8


இந்தியத் தரக்கட்டுப்பாட்டு வாரியத்தின்படி கால்நடைகளுக்கான தாதுக்களின் தேவை:

வ.எண்
கலைவைப் பண்புகள்வகை I (உப்புடன்)வகை II (உப்பின்றி)
1.ஈரப்பதம் - நிறை சதவீத அளவு (அதிகளவு)55
2.கால்சியம் நிறை சதவீதம் அளவு குறைந்தது1823
3.பாஸ்பரஸ் நிறை சதவீதம் அளவு குறைந்தது912
4.மெக்னீசியம் நிறை சதவீதம் அளவு குறைந்தது56.5
5.உப்பு (குளோரை, சோடியம் குளோரைட் நி.ச.அ. குறைந்தது)22-
6.இரும்பு நி.ச.அ. குறைந்தது0.40.5
7.அயோடின் (பொட்டாசியம் அயோடைடு) நி.ச.அ.0.020.026
8.காப்பர், நி.ச.அ. குறைந்தது0.060.077
9.மாங்கனீசு நி.ச.அ. குறைந்தது0.100.12
10.கோபால்ட் நி.ச.அ. குறைந்தது0.0090.012
11.யூபுளோரின், நி.ச.அ. குறைந்தது0.050.07
12.ஜிங்க் நி.ச.அ. குறைந்தது0.300.38
13.சல்ஃபர் நி.ச.அ. அதிகளவு0.400.50
14.கரையாத சாம்பல் அமிலம், நி.ச.அ.3.002.50

(ஆதாரம்: www.vuatkerela.org)

மாடு வளர்ப்பு :: கவனிப்பும் பராமரிப்பும்

 கன்றுகளின் கவனிப்பும் பராமரிப்பும்


நல்ல தரமான கன்றுகளை பெற நல்ல தீவனமும் முறையான கவனிப்பும் அவசியம். கன்றுகள் பிறப்பதற்கு முன்பிருந்தே நன்கு மாட்டை கவனித்தல் வேண்டும். இல்லையெனில் கவனிப்பற்ற மாடுகள் ஈனும் கன்று மெலிந்து பலவீனமானதாக இருக்கும். எனவே கன்று ஈனுவதற்கு 6-8 வாரங்களுக்கு முன்னிருந்தே சினைமாட்டிற்கு சிறந்த கவனிப்பு அவசியம்.

பிறந்த கன்றின் கவனிப்பு

  • கன்று பிறந்த உடனே அதன் வாயிலும் மூக்கிலும் போர்த்தியுள்ள கண்ணாடி போன்ற ஆடையை (mucous) சுத்தம் செய்ய வேண்டும்.
  • தாய் மாடானது அதன் நாக்கினால் கன்றின் உடல்முழுவதும் சுத்தம் செய்யும். அவ்வாறு செய்யாவிடில் அல்லது குளிர்காலத்தில் ஈரமற்ற துணி (அ) சணல் பை கொண்டு கன்றினை சுத்தம் செய்து கன்றிற்கு சீரான சுவாசம் கிடைக்கச் செய்ய வேண்டும்
  • அதன் வயிற்றிலும், நெஞ்சிலும் சிறிது கையினால் அழுத்திவிட்டால் கன்று எளிதாக சுவாசிக்க இயலும்
  • தொப்புள் கொடியை வயிற்றிலிருந்து 2 லிருந்து 5 செ.மீ நீளம் விட்டு அறுத்து விட்டு அயோடின் அல்லது டிஞ்சர் தடவி முடிந்துவிட வேண்டும்.
  • குட்டி தானாக எழுந்து சென்று தாய்ப்பால் அருந்த முடியவில்லை எனில் அதை தூக்கி விட்டு உதவி செய்யலாம்
  • முடிந்தவரை 30 லிருந்து 45 நிமிடங்களுக்குள் எழுந்து சென்று தாய்பால் குடிக்கச் செய்ய வேண்டும். ஆறு மணி நேரத்திற்குள் சீம்பால் குடிக்கச் செய்ய வேண்டும்
  • பிறந்த கன்றின் எடையை அளவிட வேண்டும்
  • மாட்டின் காம்பினை நன்கு நீரினால் கழுவிச் சுத்தம் செய்ய வேண்டும்
  • கொட்டிலில் உள்ள திரவங்களை அகற்றி அதை சுத்தப்படுத்த வேண்டும்
  • கன்றிற்குத் தேவையான படுக்கை வசதி அமைத்துத் தர வேண்டும். குளிர்காலமாக இருந்தால் அதை குளிரிலிருந்து பாதுகாக்க வேண்டும்
cattle_calves careகன்றுகள் ஊட்டம்

சீம்பால் ஊட்டம்

  • கன்று பிறந்தவுடன் மாட்டிலிருந்து வரும் முதல் பாலை சீம்பால் என்பர். இது கெட்டியான மஞ்சள் நிறத்திரவம்
  • இதில் விட்டமின் ‘ஏ் மற்றும் நோய் எதிர்ப்புத்திறன் அதிகமாக இருக்கும். பிறந்த 10 முதல் 12 மணி நேரம் வரை கன்றுகளின் சிறுகுடல் சவ்வுகள் நோய் எதிர்ப்புச் சக்திப் பொருட்களை உட்கிரகிப்பதற்கு பசதியாக அமைந்திருக்கும். இச்சமயத்தில் சீம்பாலை உட்கொள்ளச் செய்தல் சிறந்தது
  • பிறந்த முதல் மூன்று நாட்களுக்கு கன்றிற்குத் தவறாமல் சீம்பால் தரவேண்டும். ஒரு நாளைக்கு 2 வேளை கொடுக்கலாம். கன்று பலவீனமாக இருந்தால் 3 முறை குடிக்கச் செய்யலாம். இது கன்றின் உடல் வெப்பத்தை உயர்த்தி வெதுவெதுப்படையச் செய்கிறது
  • ஒரு மாதம் கழித்து கன்றுக்கு நல்ல தரமுள்ள பசுந்தீவனமும் 4 மாதத்திற்குப் பிறகு உலர்தீவனம் அளிக்கலாம்
cattle_coluctrum Feeding
சீம்பால் ஊட்டம்

பிற பராமரிப்புகள்

  • கன்றுகளை அடையாளம் காண நிரந்திர அல்லது தற்காலிக அடையாளக் குறிகளைப் பயன்படுத்தாலம். காதின் அடிப்பகுதியில் எண்களையும், எழுத்துக்களையும் பச்சை குத்தியும், உலோகக் காதணிகளை அணிவித்தும் செயல் படுத்தலாம். கழுத்தில் அடையாளக் குறித்தகடுகளைத் தொங்கவிடலாம்
  • பிறந்து 7 முதல் 10 நாட்களுக்குள் கொம்புக் கருத்தை நீக்கி கொம்பு வளர்வதைத் தடுக்கலாம். இதை காய்ச்சிய இரும்பு அல்லது காஸ்டிக் குச்சிகள் மற்றும் மின்சார முறையிலும் செய்யலாம். நீக்கய உடன் கொம்பின் மேல் வாசலின் களிம், வேப்பெண்ணெய் போன்ற வற்றைத் தடவவேண்டும்
  • கன்றுகளுக்கு முறையாகக் குடற்புழு நீக்க மருந்தை அளிக்க வேண்டும் அவைகளுக்கு மாதம் ஒருமுறை அளித்தல் நல்லது
  • பிறந்த இரண்டாவது வாரத்திலிருந்து தூய தண்ணீரை குடிப்பதற்கு அளிக்கலாம்.
  • கன்றுகளை 3 மாதங்கள் வரை தனித்தனிக் கொட்டிலில் பராமரிக்க வேண்டும். 3 லிருந்து 6 மாதம் வரை குழுவாக வளர்க்கலாம். 6 மாதங்களுக்குப் பிறகு காளைக்கன்றுகள் மற்றும் கிடாரிகளைத் தனித்தனியாகப் பிரித்து வளர்க்க வேண்டும்
  • கன்றுகளின் வளர்ச்சி வீதத்தை அறிய 6 மாதங்கள் வரை வாரம் ஒருமுறையும் அதன் பின்பு மாதம் ஒருமுறையும் எடை பார்த்தல் நலம்
  • கன்றுகளின் முதல் மாத்தில் வயிற்றுப்போக்கு, குடற்புழு மற்றும் காய்ச்சல் போன்றவற்றால் இறப்பு விகிதம் அதிகமாக இருக்கும். எனவே அதனை நல்ல வெதுவெதுப்பான சுகாதாரமான இடத்தில் வளர்த்தல் இழப்பைக் குறைக்கும்.
  • கிடாரிக்கன்றில் 4ற்கும் மேற்பட்ட காம்புகள் இருப்பின் அதை பிறந்த முதல் இரு மாதங்களுக்குள் நீக்கி விடுதல் வேண்டும்
  • காளைக் கன்றுகள் 8 அல்லது 9 மாதத்தில் ஆண்மை நீக்கம் செய்யப்படவேண்டும்
  • கன்றுகளை தாய்ப்பசுவிடமிருந்து பிரித்து தனியே வளரப் பழக்க வேண்டும்
cattle_tagging
அடையாளக் குறியிடுதல்

cattle_calfPen
தனிக் கொட்டில்

கிடேரிப் பராமரிப்பு

தரமான நல்ல கன்றுகளைப் பெற கீழ்க்காணும் கிடேரிப் பராமரிப்புகள் அவசியமாகின்றது.

  • பசுவின் வளர்ச்சி அது சாப்பிடும் பசுந்தீவனத்தைப் பொறுத்தே அமையும். அதே சமயம் தேவையான அளவு உலர்தீவனடும் கொடுத்தல் அவசியம். அதன் முந்தைய பேறுகாலங்களில் கொழுப்பை விட புரோட்டீன் அதிகம் தேவைப்படுகிறது
  • திறந்த வெளிக் கொட்டில் அமைப்பே கிடேரிக்கு மிகவும் ஏற்றது
  • கிடேரி கருத்தரிக்கும்போது அதன் வயதை விட எடை மிக முக்கியம். ஏனெனில் வயதான கிடேரிகள் கூட நல்ல கன்றுகளை ஈனும். அதனால் மெலிந்த  கிடேரிகள் கன்று ஈனுவதற்கு மிகவும் சிரமப்படும். மேலும் அதன் கன்றுகளும் நல்ல உடல்நலமுடையதாக இருக்காது
  • ஆனால் வயதான மாடுகளில் உற்பத்தித் திறன் குறைவாகவே இருக்கும். முதல் நான்கு பருவங்களில் பால் உற்பத்தி அதிகமாக இருக்கும்.
  • எனினும் எந்த அளவு அதிக சதைப்பற்றுடனும், எடையடனும் இருக்கிறதோ அந்தளவுக்கு பால் அதிகமாக உற்பத்தி செய்ய முடியும்
  • கன்று ஈனுவதற்கு 6 வாரங்களுக்கு முன்பாகவே கிடேரி தனிக் கொட்டிலில் பராமரிக்கப் பட வேண்டும்
  • மாட்டிற்கு அது சாப்பிடும் அளவிற்கு பசுந்தீவனமும் வாரத்திற்கு 2-3 கிலோ அடர்தீவனமும் அளித்தல் அவசியம்
  • ஒரு சுகாதாரமான இடததில்தான் நல்ல வளர்ச்சி சாத்தியம் எனவே சரிவிகித உணவுடன் நோய்த்தடுப்பிற்குத் தேவையான பொருட்களையும் முன்கூட்டியே செய்து கொள்ளதல் நலம்
  • முதல் கன்று ஈனும் மாடுகளுக்குத் தனிக்கவனம் செலுத்த வேண்டும்
cattle_dairy managrment
கிடேரிகள்

கறவைமாடுகளின் பராமரிப்பு

  • அதிக பால் உற்பத்தி மூலம் நல்ல இலாபம் பெற கீழ்க்காணும் வழிமுறைகளைக் கையாளலாம்.
  • கறவை மாடுகளு்குத் தீவனம் மிக முக்கியம். அதற்கு நிறைய பசுந்தீவனமும் உட்கொள்ளுமளவு உலர் தீவனம் அல்லது வைக்கோல் அளிக்கலாம்
  • கறவை மாட்டின் தீவனம் குறைந்தால் உடனே பால் அளவு குறையும். எனவே 2.5 லிடடருக்கு மேல் கறக்கும் மாடுகளுக்கு ஒவ்வொரு 2 லிட்டருக்கும் 1 கிலோ கலப்புத் தீவனம் கடடாயம் அளிக்க வேண்டும்
  • கறவை மாடுகளை மென்னையாகக் கையாளுதல் வேண்டும். அவை பயந்தால் பால் உற்பத்தி குறையும்
  • கன்று ஈண்ட 16வது நாளிலேயே அதன் சூடு வெளிப்படும். அதை அலட்சியப்படுத்தாமல் அதற்கேற்றவாறு பராமரிக்க வேண்டும். கரு அழிந்தால் இவ்வாறு நேரலாம். சரியான நேரம் பார்த்து அடுத்த கருத்தரிப்புக்குத் தயார் செய்தல் வேண்டும்
  • பால் உற்பத்தி அளவை ஒவ்வொருமுறையும் பதிவேடுகளில் பதிவு செய்தால் அதன் உற்பத்தி திறனை அறிந்துகொள்ள உதவும்
  • ஒவ்வொரு கறவை மாட்டிற்கும் தனித்தனிப் பதிவேடுகள் அவசியம்
  • கலப்பு தீவனத்தை பால் கறக்கும் முன்பும் அடர் தீவனத்தை பால் கறந்த பின் அளித்தல் சிறந்தது
  • ஒரு சீரான இடைவெளியுடன் தண்ணீர் வழங்க வேண்டும். வைக்கோல் போன்ற உல் தீவனங்கள் பால் உற்பத்தியை அதிகரிக்கும்
  • தினசரி பால் கறப்பது அவசியம் ஆகும். ஒரு நாளைக்கு 3 முறை கறப்பது பால் உற்பத்தியை அதிகரிக்கும். கறக்காமல் மடியிலேயே விடப்படும் பால் அதிக பால் சுரப்பதைக் குறைக்கிறது
  • முடிந்தவரை முழு கையையும் பயன்படுத்திப் பால் கறக்க வேண்டும். இதண்டு விரல் (பெரு விரல் அல்லது ஆட்காட்டி கொண்டு கறப்பது சீராக இல்லாமல் காம்புகளில் அதிக அழுத்தம் கொடுக்கும். இதனால் காம்பில் வலி உண்டாகிறது.
  • கன்று ஊட்டாமலேயே பசு பால் (சுரக்குமாறு) கறக்குமாறு பழக்க வேண்டும். அப்போதுதான் கன்றைப் பசுவிடமிருந்து விரைவில் பிரிக்க முடியும்
  • திறந்த வெளிக் கொட்டில் அமைப்பே கறவை மாடுகள் சுதந்திரமாக உணர வைக்கும்
  • Grooming of cows: எருமை மாடுகளை பால் கறக்குமுன் நன்கு கழுவினால் சுத்தமான பால் கிடைக்கும். தினசரி எருமை மற்றும் மாடுகளை குளிப்பாட்டுதல் உதிர்ந்த முடியை நீக்க உதவும்
  • ஏதேனும் வித்தியாசம் இருந்தால் அதை அறிந்து நீக்குதல் வேண்டும். உதாரணமாக அடிக்கடி உதைத்தல், நக்குதல் போன்றவை இருப்பின் அதன் காரணமாகச் சரிசெய்ய வேண்டும்
  • ஒவ்வொரு கறவைப் பருவத்திற்கும் இடையே 60-90 நாட்கள் இடைவெளி வேண்டும். அவ்வாறு இல்லையெனில் பால் தரும் நாட்கள் குறையும்
  • சரியான நேரத்தில் தடுப்பூசிகள் போடப்படவேண்டும்
  • ஒவ்வொரு கறவை மாட்டிற்கும் அடையாள எண் இட்டு அதன் பால் அளவு கொழுப்புச்சத்து அளவு உணவு உட்கொண்ட அளவு கன்று ஈனும் பருவங்கள் பதிவு செய்யப்படவேண்டும்

கருத்தரித்த சினை மாடுகள் பராமரிப்பு

  • சினை மாடுகளின் சிறந்த பராமரிப்பு நல்ல கன்றுகளையும் மேலும் பால் உற்பத்தித் திறனையும் அதிகரிக்கும்.
  • சினை மாடுகளுக்கு 1.25 யிலிருந்து 1.75 கி.கி கலப்புத்தீவனம் அதிகமாகக் கொடுக்க வேண்டும்.
  • நல்ல தரமான பயிறு வகைகள் , அதன் தொழில்களையும் தீவனமாக அளிக்கலாம். சினைமாடானது மிகவும் ஒல்லியாகவும் மேலும் குண்டாகவும் இருத்தல் கூடாது
  • சூட்டிலிருந்து பாதுகாக்க தூய குளிர்ந்த நீரை அருந்த அளிக்கலாம்
  • நோய் பாதித்த கால்நடைகளுடனோ, கரு(தரித்து), சிதைந்துவிட்ட மாடுகளுடனோ இதை சேர்த்து உலவ அனுமதிக்கக்கூடாது
  • எப்போதும் கட்டி வைக்காமல் உலவ விடுதல் நலம்
  • மற்ற மாடுகளுடன் முட்டிக் கொள்ளவோ நாய் போன்ற விலங்குகள் துரத்தாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்
  • சினை மாட்டுத் தொழுவத்தின் தரை வழுக்குமாறு இருக்கக் கூடாது
  • சரியான கருத்தரித்த தேதி அட்டவணைகள் பராமரித்து வந்தால் அதன் மூலம் கன்று ஈனும் தேதியை கணித்து சில வாரங்களுக்கு முன்னதாகவே தனி தொழுவத்தில் நல்ல படுக்கை வசதியுடன் பாதுகாக்க வேண்டும்
  • கடைசி 8 வார சினைதருணத்தில் மேலும் 1கி.கி அடர்தீவனமும், கோதுமைத்தகடு, கடலைப் புண்ணாக்கு போன்ற தீவனங்களை கன்று ஈன்ற 5 நாட்களுக்குப் பின்பும் தருதல் வேண்டும்
  • சினை மாதம் முதலில் வயிறு புடைத்தல், மடி பெருத்தல் போன்ற அறிகுறிகளை கவனித்து தேவைப்படின் கால்நடை உதவிகளை அளிக்கலாம்
  • கன்று வெளிவந்த 2-4 மணி நேரங்களில் நஞ்சு வெளிவந்து விடும். அதை கவனித்து அப்புறப்படுத்த வேண்டும்
  • கால்சியம் போன்ற தாதுக்களை அளித்து கன்று ஈனும் முன்பு வரும் பால் காய்ச்சலைத் தவிர்க்கலாம்
  • சில நேரங்களில் கன்று ஈனும் முன்பு, மடி வீங்கிவிடும் சிறிது பாலை கறந்து விட்டால் சரியாகிவிடும்
  • கருச்சிதைவை தடுக்க அனைத்து பராமரிப்புகளையும் முறையாக மேற்கொள்ளுதல் முக்கியம் ஆகும்

காளை மாடுகளின் பராமரிப்பு

ஒரு வெற்றிகரமான இனவிருத்திக்கு காளைகளைச் சரியாகப் பராமரித்துத் தகுந்த ஊட்டமளிக்க வேண்டும். அதுவும் காளைகளை இனவிருத்திக்காகப் பராமரிக்கும் போது

  • பால் உற்பத்தி மற்றும் மூதாதையரின் உற்பத்தித் திறன்
  • உடலியல் மற்றும் உடற்கூறு தோற்றம் முதலியவற்றைக் கருத்தில் கொள்ள வேண்டும்

ஒரு வருட வயதிலேயே காளைக் கன்றுகளை மற்ற கன்றிலிருந்து பிரித்து நல்ல புரோட்டீன் தாதுக்கள் மற்றும் விட்டமின்கள் கொண்ட தீவனங்களை சரியான அளவில் அளித்து வரவேண்டும்

இனவிருத்திக் காளைகள் மிகவும் அதிக எடையுடன் இருந்தால் அது சிறந்த விந்துக்களை உற்பத்தி செய்யாது. பெரிய தலையுடன் திடகாத்திரமான உடம்புடன் பரந்த மார்பு இருக்க வேண்டும். மாடுகளில் காளைகள் 16 முதல் 18 வயதில் பருவம் அடையும் காளைகள் எருமைமாடுகளில் 4 முதல் 6 மாதங்கள் காலதாமதமாகவே பருவமெய்துகின்றன. கதளையின் எடை 300 கிலோவிற்கு இருக்க வேண்டும். 30 மாத வயதில் விந்து உற்பத்தி நன்கு வெளிப்படும். அதிகபட்சம் 3 வருடங்கள் விந்துசேகரிக்கலாம். எருமைகளுக்கு 31/2 வருடங்கள் ஆகும். நாளொன்றுக்கு இருமுறை கலப்பு செய்யலாம்.

விந்து சேகரிப்பு செய்வதனால் வாரம் இருமுறை என ஆண்டுக்கு 100 முறை தரமான வித்து சேகரிக்கலாம். காளைகளுக்கு நோய்கள் ஏற்படாவண்ணம் பராமரித்தல் அவசியம்.

எருதுகளின் பராமரிப்பு


எருதுகள் என்பவை பொதுவாக வேளாண் தொழிலில் வேளைத் திறனுக்காகப் பயன்படுத்தப்படுபவை. அவற்றை நல்ல திடகாத்திரத்துடன் வளர்த்தல் அவசியம். எருதுகளின் வேலை நேரங்கள்

சாதாரண நிலையில்
 - 6 மணிநேரம் வண்டி இழுத்தல் 4 மணி நேர ஏர் ஓட்டுதல்

பலமான எருதுகள்
 - 8 மணிநேரம் வண்டி இழுத்தல் 6 மணி நேர உழவு

எருதுகளுக்கு 8-12 மாதத்தில் மூக்கு வளையம் அணிவிக்க வேண்டும். 2-21/2 அங்குலம் கொண்ட வளையம் போதுமானது. மேலும் வயது ஆக ஆக பெரிய வளையத்தை உபயோகித்துக் கொள்ளலாம். மூக்கு வளையம் அணிவிக்கும் போது நோய்த்தொற்றைத் தவிர்த்துப் புண்களை ஆற்ற டிஞ்சர், அயோடின் உபயோகிக்கலாம் . அதிகம் வளர்ந்த குளம்புகளை நீக்கிச் சீர் செய்ய வேண்டும். நன்கு பராமரிக்கப்படாத குளம்புகள் வலியை ஏற்படுத்தும்.
எருதுகளை தனித் தொழுவத்தில் போதுமான இட வசதியுடன் சுதந்திரமாக வளர்க்க வேண்டும் நல்ல தண்ணீர், 2 கி.கி அடர் தீவனம் போன்றவை வேளைநேர இடைவெளியில் அளிக்கலாம்.


(ஆதாரம்: http://bieap.gov.in/DairyAnimalManagementTheory.pdf)

ஆடுகளை பாதிக்கும் நோய்கள்

 நச்சுயிரி நோய்கள்


கோமாரி நோய்


அறிகுறிகள்

  • நாக்கு, மடி மற்றும் குளம்புகளுக்கிடையில் கொப்புளமும் புண்ணும் காணப்படுதல், தீவனம் எடுக்க இயலாமை, காய்ச்சல், குட்டிகளில் இறப்பு, சினை ஆடுகளில் கருச்சிதைவு ஏற்படுதல்.

சிகிச்சை

    1. சமையல்சோடா உப்புக் கலந்த நீரில் கால் மற்றும் வாய்ப்புண்களை கழுவி மருந்திடுதல்.
    2. போரிங் பவுடருடன் கிளிசரின் கலந்து வாயில் தடவவேண்டும்.

வெக்கை சார்பு நோய்

  • இது செம்மறியாடு மற்றும் வெள்ளாடுகளைத் தாக்கும் மிகக்கொடிய தொற்றுநோய் ஆகும்.

அறிகுறிகள்

  • வாய்ப்புண், மூச்சுத்திணறல், கழிச்சல், கண் மற்றும் மூக்கிலிருந்து நீர் வடிதல், காய்ச்சல்.

தடுப்பு முறை

  • தடுப்பூசி போடுதல் அவசியம்.

 ஆட்டு அம்மை

  • வெள்ளாடுகளை விட செம்மறியாடுகளையே அதிகம் தாக்குகிறது.

அறிகுறிகள்

  • உதடு, மூக்கு, கண் இமை, காது, காலின் அடிப்பகுதி, மடி, இனப்பெருக்க உறுப்பு போன்ற இடங்களில் முத்துப்போன்ற அம்மைக் கொப்புளங்கள் காணப்படுதல், காய்ச்சல், உணவு உட்கொள்ளாமை.

நீலநாக்கு நோய்ள

அறிகுறிகள்

  • காய்ச்சல், சளி, தும்மல், இருமல், சுவாசிப்பதில் சிரமம், சளி கொட்டியாவதால் மூக்கடைப்பு ஏற்படுதல், நான்கு நாட்களில் உதடு, மூக்கு, நாக்கு, குளம்பின் மேல் பகுதி மற்றும் கீழ்த்தாடை வீங்குதல், நாக்கு நீல நிறமாக மாறுதல், தீவனம் உட்கொள்ளாமை மற்றும் ஒரு வாரத்தில் இறந்து விடுதல்.

சிகிச்சை

  • போரிங் பவுடரைத் தேங்காய் எண்ணெயில் கலந்து புண்ணுக்கு தினம் இரு முறை போடவேண்டும்.
  • நோய் எதிர்ப்பு மருந்துகள் 5 நாட்களுக்குள் கொடுக்கவேண்டும்.
  • மென்மையான தீவனங்களை கொடுக்கவேண்டும்.

நுண்ணுயிரி நோய்கள்

அடைப்பான்


அறிகுறிகள்

  • எந்தவித நோய் அறிகுறிகளும் இல்லாமல் திடீர் இறப்பு, இறந்தபின் ஆசனவாய், மூக்கு, காது போன்றவைகளிலிருந்து உறையாத கருஞ்சிவப்பு இரத்தம் வெளியேறுதல்.

தடுப்பு முறை

  • இறந்த ஆடுகளை ஆழமாகக் குழிவெட்டி சுண்ணாம்புத் தூள் தெளித்து மூடிவிடவேண்டும். தடுப்பூசி போடுதல் அவசியம்.

தொண்டை அடைப்பான்

அறிகுறிகள்

  • பாதிக்கப்பட்ட ஆடுகளில் அதிகக் காய்ச்சல், மூச்சுவிட சிரமம், இருமல், கீழ்த்தாடையில் வீக்கம், திடீரென இறந்து விடுதல்.

சிகிச்சை

  • ஆரம்பகால நோய்க்கு நோய் எதிர்ப்பு மருந்து கொடுத்தல் மற்றும் நோய் தீர்க்கும் முன் தடுப்பூசி போடுதல் அவசியம்.

துள்ளுமாரி நோய்

  • எல்லா வயது ஆடுகளையும் பாதிக்கும். ஆனால் இளம் வயது ஆடுகளே பெரும்பாலும் பாதிக்கப்படுகின்றன. மழைக்குப்பின் புதிதாக முளைத்த பசுமையான புல்வெளியில் மேய்ச்சலுக்குச் செல்லும் ஆடுகளுக்கு இந்நோய் ஏற்படும்.

அறிகுறிகள்

    1. ஆடுகள் மேயாமல் சோர்ந்து வயிற்று வலியால் பற்களைக் கடிக்கும்.
    2. சாணம் இளகி, இரத்தம் கலந்திருக்கும்.
    3. ஆடுகள் நடக்கும் போது கால்கள் பின்னி, கழுத்து விரைத்து, கண்கள் பிதுங்கி, மயங்கி தலை சாய்ந்து கீழே விழும்.
    4. இறப்பதற்கு முன் வலிப்பு ஏற்பட்டு துள்ளி விழும்.

தடுப்பு முறைகள்

  1. சூரிய உதயத்திற்குப் பின் ஆடுகளை 1 மணி நேரம் கழித்து மேய்ச்சலுக்கு அனுப்பவேண்டும்.
  2. பருவமழைக்கு முன் தடுப்பூசி போடுதல் அவசியம்.

ஒட்டுண்ணி நோய்கள்

அக ஒட்டுண்ணிகள்


பரவுதல்

  • மேய்ச்சலின் போது ஆடுகளின் வயிற்றுக்குள் செல்கின்றன.

அறிகுறிகள்

  • இரத்தசோகை, பசியின்மை, எடை குறைதல், தள்ளாடி நடத்தல், தாடை வீங்குதல், உரோமம் கொட்டுதல், வயிற்றுப்போக்கு.

தடுப்பு முறைகள்

  • குடற்புழு நீக்கம் செய்தல்
  • சாணத்தை அப்புறப்படுத்தி, தரையைக் கழுவுதல்
  • கிருமி நாசினி மருந்தைப் பயன்படுத்தி சுத்தம் செய்தல்.

புற ஒட்டுண்ணிகள்

உண்ணி, பேன், தெள்ளுப்பூச்சி மற்றும் சிற்றுண்ணிகள் (mite) ஆகும்.

பாதிப்புகள்

  1. தோல் தடித்தல், சொறி உண்டாகுதல், முடி உதிர்தல், இரத்த சோகை, இரத்த ஒட்டுண்ணிகள் பரவுதல், தேய்த்துக் கொள்ளுதல், கடித்துக் கொள்ளுதல், அஜீரணம், இளைத்து எடைக்குறைதல் போன்றவையாகும்.
  2. மருந்துக் குளியல், தெளித்தல் (அ) தூவுதல் முறை, இவற்றிற்கு கீழ்க்கண்ட மருந்துகளில் ஒன்றைப் பயன்படுத்தலாம்.
  3. மாலத்தியான்  0.5 சதவிகிதம் சுமித்தியான் 1/100 (தெளிக்கும்  முறை)
  4. பியூட்டாக்ஸ் 0.02 சதவிகிதம் லிண்டேன் 0.03 சதவிகிதம்
  5. ஐவர்மெக்டின் 0.2 மி.கி / கி.கி உடல் எடைக்கு

ஒரு செல் நுண்ணுயிரி நோய்கள்

இவற்றில் ஆட்டுக் குட்டிகளை அதிகம் தாக்கும் இரத்தக் கழிச்சல் நோய் முக்கியமானதாகும்.

அறிகுறிகள்

  • காய்ச்சல்
  • சளி மற்றும் இரத்தத்துடன் கழிச்சல்
  • வாலைத் தூக்கி முக்குதல்.

தடுப்பு முறை

  • தரை ஈரமில்லாமல் உலர்ந்த நிலையில் இருக்கவேண்டும்.
  • குட்டிகளுக்கு பாலில் ஆம்பரோலியம் கலந்துக் கொடுத்தல்
  • குட்டிகள் சானத்தை நக்காமல் பார்த்துக் கொள்ளவேண்டும். 10 விழுக்காடு அம்மோனியாவை கொட்டிலில் தெளித்துக் கட்டுப்படுத்தலாம்.
  • கன்று வீச்சு நோய்
  • டெட்டானஸ்
  • சுழல் நோய்

ஆடுகளின் எடை அதிகரிப்பதற்கும், குட்டிகளில் இறப்பை தவிர்க்கவும் குடற்புழு நீக்கம் செய்வது அவசியம்.

குடற்புழு நீக்க அட்டவணை

ஆடுகளின் வயது
பரிந்துரைகள்
2வது மாதம்நாடாப்புழுக்களுக்கான மருந்து
3வது மாதம்நாடாப்புழுக்களுக்கான மருந்து
4வது மாதம்நாடாப்புழுக்களுக்கான மருந்து
5வது மாதம்உருண்டைப்புழுக்களுக்கான மருந்து
6வது மாதம்உருண்டைப்புழுக்களுக்கான மருந்து
9வது மாதம்உருண்டை / நாடாப்புழுக்களுக்கான மருந்து
12வது மாதம்தட்டைப் புழுக்களுக்கான மருந்து

ஆறு மாதம் வரை ஆட்டுக்குட்டிகளுக்கு மாதம் ஒரு முறை குடற்புழு நீக்கம் செய்யவேண்டும். ஆறு மாதத்திற்கு பிறகு மூன்று மாதங்களுக்கு ஒரு முறை அதாவது பருவமழைத் தொடங்குவதற்கு முன்பு ஒரு முறையும், பருவ மழையின் போது ஒரு முறையும், பருவ மழைக்குப்பின் இருமுறையும் கொடுக்கவேண்டும்.

மாதம்
பரிந்துரைகள்
ஜனவரி - மார்ச்தட்டைப்புழுவிற்கான மருந்து
ஏப்ரல் - ஜீன்உருளை / நாடாப்புழுக்களுக்கான மருந்து
ஜீலை - செப்டம்பர்தட்டைப் புழுவிற்கான மருந்து
அக்டோபர் - டிசம்பர்உருளை / நாடாப்புழுக்களுக்கான மருந்து

ஆடுகளுக்கு குடற்புழு நீக்கம் செய்யும் போது கவனிக்க வேண்டியவை.

  1. ஆடுகளுக்கு தகுந்த குடற்புழு மருந்தைத் தேர்வு செய்யவேண்டும்.
  2. தூள் மருந்தைப் பயன்படுத்தும் பொழுது வெதுவெதுப்பான நீரில் கலந்து, சிறிது கரையாத மருந்துத் துகள்களும் இருக்குமாறு கொடுக்கவேண்டும்.
  3. அதிகாலையில், வெறும் வயிற்றுடன் உள்ள ஆடுகளுக்கு குடற்புழு நீக்கம் செய்யவேண்டும்.
  4. மருந்துக் கலவையை வாயின் வழியாக ஊற்றும் பொழுது புரையேறாமல் பார்த்துக் கொள்ளவேண்டும்.
  5. குடிநீரில் குடற்புழுநீக்க மருந்தும் நோய் எதிர்ப்பு மருந்தும் ஒன்றாக கலந்துக் கொடுக்கக்கூடாது.
  6. குடற்புழுக்களின் வகைகளையும் முட்டைகளையும் அறிந்து மருந்து கொடுப்பது சிறந்தது.
  7. தொடர்ந்து ஒரே மருந்தைக் கொடுக்காமல் மாற்றித் தருவது அவசியம்.

வெள்ளாடுகளுக்கான தடுப்பூசி அட்டவணை

வ.
எண்

நோய் மற்றும் தடுப்பூசியின் பெயர்

முதல் தடுப்பூசி

தொடர் தடுப்பூசிகள்

சிறப்புக் கவனம்

1.பிபிஆர் நோய் (பெஸ்ட்டெஸ்பெட்டிட்ஸ் ரூமினென்ட்ஸ்)3-4 மாதம்ஆண்டுக்கு ஒரு முறைதகுந்த நோய்ப் பாதுகாப்பு நோய் கட்டுப்பாட்டு முறைகளைக் கையாள வேண்டும்.
2.கோமாரி நோய் தடுப்பூசி (திசு வளர் கோமாரித் தடுப்பூசி)2 மாத வயதில்ஆண்டுக்கு ஒரு முறைநோய்க்கிளர்ச்சியின் போது பாதிக்கப்படாத ஆடுகளுக்கும் அண்டைக் கிராமகால்நடைகளுக்கும் தடுப்பூசி அளித்தல் அவசியம்.
3.துள்ளுமாரி நோய் தடுப்பூசி (துள்ளுமாரி நோய் தடுப்பூசி : துள்ளுமாரி டாக்சாய்டு ஊசி)6 வார வயதில்ஆண்டுக்கு ஒரு முறைமழைக்காலத்திற்கு முன்னரும், குட்டி ஈனும் பருவங்களில் தாய் ஆடுகளுக்கும் தடுப்பூசி அளித்தல் அவசியம்.
4.ஆட்டம்மை தடுப்பூசி (வீரியம் குறைக்கப்பட்ட ஆட்டம்மை உயிர்த் தடுப்பூசி)3-6 மாத வயதில் (நோய் காணும் பகுதிகளில்)ஆண்டுக்கு ஒரு முறை (நோய்க் காணும் பகுதிகளில் மட்டும்)கோடைக்காலத்திற்கு முன்னர் நோய் காணும் பகுதிகளில் ஒரு தடுப்பூசி அவசியம்.
5.அடைப்பான் நோய் தடுப்பூசி
(அடைப்பான் ஸ்டோர் தடுப்பூசி)
நோய்க் கிளர்ச்சியின் போது மட்டும் 6 மாத வயதில்நோய் அடிக்கடி தோன்றும் பகுதிகளில் வருடம் ஒரு முறை, மற்ற பகுதிகளில் தேவையில்லை.நோய்க்காணும் பகுதிகளில் மழைக்காலத்திற்கு முன்னர் தடுப்பூசி போடவேண்டும்.
6.டெட்டனஸ் ஜன்னி
தடுப்பூசி (டெட்டனஸ் டாக்சாய்டு தடுப்பூசி)
குட்டி ஈன 6-8 வாரத்திற்கு ஒரு முறை-குட்டிகள் பிறந்து 48 மணி நேரத்திற்கு பின்.
7.தொண்டை அடைப்பான் தடுப்பூசி (பார்மலின் வழி செயலிழக்கப்பட்ட தொண்டை அடைப்பான் தடுப்பூசி)6 மாத வயதில் நோய் காணும் பகுதிகளில் மட்டும்)ஆண்டுக்கு ஒரு முறைமழைக்காலத்திற்கு முன்னர் ஒரு தடுப்பூசி அளித்தல் அவசியம்.
                                                             

வெள்ளாடுகள் கவனிப்பும் பராமரிப்பும்

 சினை ஆடுகள் பராமரிப்பு

  1. சினை ஆடுகளை மந்தையிலிருந்து பிரித்துத் தனியே பராமரித்தல் வேண்டும்.
  2. சரிவிகித ஊட்டச்சத்துக்கள், எளிதில் செரிக்கக்கூடிய தீவனமளித்தல்.
  3. சினை ஆடுகள் ஒன்றை ஒன்று முட்டிக் கொள்ள அனுமதிக்கக்கூடாது.
  4. சினையுற்றபின் கரு கலைந்த ஆடுகளுடன் சினை ஆடுகள் எக்காரணம் கொண்டும் கலந்து விடுதல் கூடாது.
  5. குட்டி ஈனுவதற்கு முன்பு ஆட்டின் பின்பாகத்தில் மடியைச் சுற்றிலும் உள்ள முடியையும் வாலையும் வெட்டி விடுதல் நல்லது.
  6. அடுத்த குட்டி ஈனுவதற்கு 6-8 வாரங்கள் முன்பே பால் கறப்பதை நிறுத்தி விடவேண்டும்.

Goat_care&mgt

பிறந்த குட்டிகளின் பராமரிப்பு

    • குட்டி பிறந்தவுடன் பஞ்சு அல்லது பழைய துணி கொண்டு குட்டியின் வாயையும் மூக்கையும் நன்கு துடைக்கவேண்டும். குட்டி மூச்சுவிட எளிதாகுமாறு வாயைச்சுற்றயுள்ள திரவத்தை அகற்றவேண்டும்.
    • பின்னங்கால்களையும் பிடித்து தலைகீழாக இருக்குமாறு குட்டியை சில நொடிகள் பிடித்திருக்கலாம். இது மூச்சுக் குழல் பாதையை சுத்தம் செய்ய உதவும்.
    • குட்டி பிறந்த அரை மணிக்குள் தானாகவே எழுந்து தாயிடம் பால் குடிக்கவேண்டும். இல்லாவிடில் அது எழுந்து நடக்க உதவி செய்தல் வேண்டும்.
    • தாய் ஆட்டுக்குட்டியை நாக்கினால் தடவி விட அனுமதிக்கவேண்டும்.  தடவி விடுவதால் குட்டியின் மேலுள்ள உறை போன்ற திரவத்தை எடுத்து விடும்.
    • தொப்புள் கொடியின் மறு நுனியை டின்ச்சர் (அ) அயோடின் கொண்டு நனைத்தல் வேண்டும். இவ்வாறு 12 மணி நேரம் கழித்து மீண்டும் ஒரு முறை செய்யவேண்டும்.
    • முதல் அரை மணி நேரத்திற்குள் குட்டியை சீம்பால் குடிக்க வைக்க வேண்டும். குட்டி தானாக குடிக்க முடியாவிட்டால் காம்பை எடுத்து வாயில் வைத்துப் பாலை பீய்ச்சி விடுதல் நலம்.
    • புதிதாகப் பிறந்த குட்டிகளைத் தனியே வைத்துப் பராமரிக்க வேண்டும்.
    • தொப்புள் கொடியை சிறிது நேரம் விட்டு நறுக்கிப் பின் உடனே அயோடின் அல்லது டிஞ்சர் போன்ற தொற்று நீக்கிகளைத் தடவி விடவேண்டும்.
    • முதல் இரண்டு மாதங்கள் குளிர் மழை எந்த ஒரு பாதிப்புமின்றி குட்டிகளைக் கவனமாகப் பாதுகாத்தல் வேண்டும்.
    • முதல் இரண்டு வாரங்களில் கொம்பு நீக்கம் செய்தல்.
    • கிடா குட்டிகள் இனச்சேர்கைக்குத் தேவையானவை போக மீதமுள்ள வற்றை காயடித்து விட டவேண்டும்.
    • சரியான தடுப்பூசிகளைத் தவறாமல் தகுந்த நேரம் போடுதல் வேண்டும்.
    • 8 வார வயதில் தாயிடமிருந்து குட்டியைப் பிரித்துத் தனியே வளர்க்கப் பழக்கவேண்டும்.

குட்டிகளைத் தனியே தரம் பிரித்து அதன் எடைக்கேற்ப சரியான தீவனமளித்தல் அவசியம் அதோடு பண்ணைப் பதிவேடுகளில் அடையாளமிட்டுக் குட்டிகள் பற்றிய அனைத்துத் தகவல்களையும் முறையாகப் பராமரிக்கவேண்டும்.

Goat_care&mgt_2
ஆட்டுக்குட்டியை நாக்கினால் தடவி விடல்

பால் கறக்கும் போது கவனிக்க வேண்டியவை

பால் கறக்கும் பெட்டை ஆடுகளைக் கிடாக்களின் அருகே விடாமல் தனியே பராமரிக்கவேண்டும். ஒரு நாளைக்கு 2 முறை கறக்கலாம். காம்புகள் காயம் படுமாறு அழுத்தாமல் கவனமாகக் கறக்கவேண்டும். கறப்பதற்கு முன், மடி மற்றும் காம்புகளை நன்கு கழுவி உலர வைக்கவேண்டும். காம்பின் எல்லா இடங்களிலும் அழுத்தம் சீராகப் பரவுமாறு, கறக்கும் போது கைவிரல்களை நன்கு மடித்துக் கறக்கவேண்டும். பால் வருவது சிறிதளவாகக் குறையும் வரை கறக்கலாம்.

இளம் பெட்டை ஆடுகளின் பராமரிப்பு

நல்ல தரமுள்ள பசும்புல் மற்றும் அடர் தீவனங்களை சரியான சமயத்தில் அளித்து வருதல் நல்ல சினை ஆடுகளைத் தயார் செய்ய உதவும்.கலப்புச் செய்ய வேண்டிய ஆடுகளை வாரா வாரம் சரிபார்த்துப் பதிவேட்டில், குறித்துக் கொள்ளவேண்டும்.ஒவ்வொரு 18-24 நாட்களுக்கு ஒரு முறை பெட்டை ஆடு சூட்டிற்கு வரும். இந்தச்சூடானது 2-3 நாட்கள் வரை இருக்கும். சராசரி சினைக்காலம் 151+3 நாட்கள் ஆகும்.

செய்யக்கூடாதவை

வலியுடன் கூடிய வாயில் தடுப்பு மருந்து கொடுத்தல்


ஆட்டின் வாயில் ஏதேனும் காயமோ, வலியோ இருக்கும் போது தடுப்பு மருந்து அளிக்கக்கூடாது. பண்ணையில் உள்ள கால்நடைகளில் ஏதேனும் ஒன்றுக்கு வாயில் ஏதேனும் வலி இருந்தால் தடுப்பூசி (அ) தடுப்பு மருந்து அளிக்கும் போது வலி அதிகரிக்கும். எனவே இவ்வாறு வாய் பிரச்சனை உள்ள ஆடுகளைக் கவனித்து 3 வாரங்களுக்குப் பின் தடுப்பு மருந்து அளிக்கலாம்.

கால் நகங்களை வெட்டுதல்

கால் நகங்களை வெட்டும் போது நன்கு கவனித்து தேவையின்றி வளர்ந்த நகங்களை மட்டுமே நறுக்கவேண்டும். அதிகமாக வெட்டினாலும் காலில் வலி ஏற்படும். வெட்டாமல் விட்டாலும் கீழே, காலை உரசும் போது புண் (அ) ஏதேனும் கிருமித் தொற்று ஏற்படும் நோய் பரவ வாய்ப்புள்ளது.

குட்டி ஈனும் போது பிரச்சனை

சினை ஆடுகளைத் தனியே வைத்துப் பராமரிக்க வேண்டும். அதன் குட்டி ஈனும் காலத்தை தோராயமாகக் கணித்து அதற்கேற்றவாறு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளவேண்டும். பொதுவாக குட்டி ஈனும் தருணத்தில் இரத்தம் விஷமாதல், கருக்கலைதல் (அ) குட்டி இறந்து பிறத்தல் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம். இவற்றைத் தடுக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் நலம்.

சினைத்தருண விஷத்தன்மை

இப்பிரச்சனை தாமதமாக கலப்புச் செய்வதால் ஏற்படுகிறது. சினையின் கடைசி மாதம் அல்லது கடைசி இரு வாரங்களில் ஏற்படலாம். பல குட்டிகள் ஈனும் ஆடுகளில் இதன் பாதிப்பு அதிகம். கடைசி இரு மாதங்களில் குட்டியின் எடை 70 சதவிகிதம் அதிகரிக்கிறது. அதற்கென குட்டிகளுக்கு அதிக ஆற்றல் தேவைப்படுகிறது. ஆனால் ஆடோ அதன் வயிறு கொள்ளும் அளவு மட்டுமே தீவனம் உட்கொள்ள முடியும். குட்டிகள் தனக்குத் தேவையான ஆற்றலைத் தாயின் உடலில் உள்ள கார்போஹைட்ரேட்டை கரைத்து எடுத்துக் கொள்கின்றன. இதனால் ஆட்டின் உடல் இரத்தத்தில் கீடோன் கலப்பதால் அது விஷத்தன்மை அடைகிறது.

இதன் அறிகுறிகள்

பசியின்மை, எழுந்திருக்கவோ நடக்கவோ முடியாதிருத்தல், கால் வீங்குதல், மூச்சுக்காற்று நாற்றத்துடன் வெளிவருதல், மிக மெதுவாக நடத்தல் போன்றவை. இந்த நோய் தாக்கியிருப்பது தெரிந்தால் உடனே ஆட்டிற்கு ‘புரப்பைலின் கிளைக்கால்’ என்ற மருந்தை நாளொன்றுக்கு 2 முறை என்ற வீதம் வழங்கவும், அல்லது 60 சிசி அளவு எடுத்து அதில் ஆட்டைக் குளிப்பாட்டவும் அல்லது 30 சிசி சோடியம் பை கார்பனேட் மருந்தை நீருடன் கலந்து அளிக்கவும்.ஆடானது எழுந்து நடக்க முடியாதிருப்பின், உதவவேண்டும். நன்கு பராமரித்தால், வருடத்திற்கு 2 முறை குட்டிகள் ஈனும்.

வெள்ளாடு வளர்ப்பு

 மிகக்குறைந்த செலவில் பசு, எருமை போன்ற கால்நடைகளில் வளர்க்க முடியாத சூழலில் கூட வெள்ளாடுகளை வளர்க்கலாம். இதற்கு முதலீடு மிகவும் குறைவு. மேலும் வெள்ளாடுகள் மழை அளவு குறைவாக உள்ள வறண்ட நிலங்களில் கூட வளர்த்தல் எளிது. எனவே தான் வெள்ளாடுகளை “ஏழைகளின் பசு” என்று அழைக்கின்றனர்.

வெள்ளாடுகள் (மாமிசம்) இறைச்சி மற்றும் பால் தேவைக்காக வளர்க்கப்படுகின்றன. நிலமற்ற மற்றும் குறுநில ஏழை விவசாயிகளுக்கு வாழ்வுக்கு சிறந்த வழிகாட்டியான ஆடுகள் அதிக ஊட்டச்சத்துள்ள பாலை வழங்குகின்றன. வெள்ளாடுகள் ஆங்காங்கு இருக்கும் புதர்ச்செடிகளில் மேயும். அசாதாரமாண தட்பவெப்ப சூழ்நிலைகளையும் தாண்டி கிடைக்கும் புல் பூண்டுகளைக் கொண்டே உயிர் வாழக்கூடியது. உலகில் மாட்டுப் பாலை விட சில இடங்களில் ஆட்டுப்பாலையே விரும்பி அருந்துகின்றனர். அது போல் ஆட்டு இறைச்சியும், ஒரு முக்கிய உணவாகும். உலக சுகாதார நிறுவனப் கருத்துப்படி பசும்பாலை அருந்துவதால் வயிறு, தோல், காது போன்றவற்றில் வரும் ஒவ்வாமை 70 சதவிகிதம் பசும்பாலினால் வருவதில்லை. வரலாற்றுக்கூற்றுப்படி ஆடுகளே முதன் முதலில் வளர்க்கப்பட்ட மிருகம் ஆகும். பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் முன்பிருந்தே மனிதர்கள் ஆட்டின் பால், இறைச்சி, முடி, தோல், போன்றவற்றைப் பயன்படுத்தி வந்துள்ளனர்.

Goat_flock

வெள்ளாடு வளர்ப்பின் நன்மைகள்

  1. வெள்ளாடு வளர்ப்பில் முதலீடு மிகவும் குறைவு.
  2. இவை அளவில் சிறியதாக உள்ளதால் கொட்டகைப் பராமரிப்புச் செலவு குறைவு.
  3. ஆடுகள் மிக்குறைந்த காலத்தில் 10-12 மாதங்களில் பருவ வயதை அடைந்து விடும். இவை 16-17 மாதங்களில் குட்டி ஈன்று விடும்.
  4. பொதுவாக ஆடுகள் ஒரு தருணத்தில் 2 குட்டிகள் மட்டுமே போடும். 3 அல்லது நான்கு குட்டிகள் போடுவது மிகவும் அரிது.
  5. வறண்ட நிலங்களில் மற்ற கால்நடையை விட வெள்ளாடு வளர்ப்பே சிறந்ததாகும்.
  6. ஆடுகள், பலவகைப்பட்ட பயிர்களையும் உண்பவை. இவை முட்புதர்கள், பூடுகள், வேளாண் பயிர்க்கழிவுகள் மேலும் வேளாண் உப விளைப்பொருட்கள் போன்ற அனைத்தையும் உண்பதால் தீவனப் பராமரிப்புக் குறைவு.
  7. ஆட்டு இறைச்சியில் பன்றி இறைச்சியை விட கொழுப்பு குறைவாகவே உள்ளது. மேலும் இதன் குளிர்ச்சி மற்றும் மென்று உண்பதில் எளிதாகையால் வெயில் காலங்களுக்கு மிகவும் ஏற்றது.
  8. பசும்பாலை விட வெள்ளாட்டுப்பால் எளிதில் செரிக்கக்கூடியது. இதில் ஏதும் ஒவ்வாமை ஏற்படுவதில்லை. மேலும் வெள்ளாட்டுப்பாலில் சிறிய கொழுப்பு திரள்களே உள்ளன. பாக்டீரியா, பூஞ்சை எதிர்ப்பொருட்கள் அதிகளவு உள்ளதால், நோய் எதிர்ப்பாற்றல் குறைவு.
  9. வெள்ளாடு செம்மறி ஆட்டுடன் ஒப்பிடும் போது 2.5 மடங்கு பொருளாதார அளவில் மிதவெப்பம் பகுதிகளுக்கு ஏற்றவை.
  10. ஆட்டிலிருந்து கிடைக்கும் தோல், முடி ஆகியவையும் பதனிடு தொழிற்சாலைகளில் பயன்படுகின்றன.

கிராமப்புறப் பகுதிகளில் கூலி வேலை செய்வோர் மற்றும் ஏழை மக்களுக்கு இவ்வளர்ப்பு மிகவும் உகந்தது. கிராமங்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் பால் பொருட்கள் சம்பந்தமான குடிசைத் தொழில்களின் வளர்ச்சிக்கு இந்த ஆடு வளர்ப்பு பெரும் உதவி புரிகின்றது.

வெள்ளாட்டு இனங்களின் தெரிவு
மலபாரி (டெல்லிச்சேரி) அட்டபாடி, சேனன் மலபாரி கலப்பு இனங்கள் அதிகம் காணப்படுகின்றன.

வயது முதிர்ந்த ஆடுகள் வாங்கும் போது அதன் பால் உற்பத்தித் திறனை அறிந்த பின் வாங்குதல் நலம். ஒரு நாளின் உற்பத்தி அளவு என்பது அடுத்தடுத்த இரண்டு கறத்தலில் பாலின் அளவு 0.5 கிகி அதிகமாக இருப்பதாகும். இந்த அளவுக் குட்டிகள் ஊட்டியது போல மீதமுள்ள அளவாகும்.

இளம் ஆடுகளை வாங்கும் போது அதன் குட்டி ஈனும் உற்பத்தி அளவைப் பார்த்து வாங்குதல் வேண்டும். அதோடு ஆடு எந்த ஒரு உடல் குறைபாடும் இன்றி இருக்கவேண்டும்.

ஆடுகளின் 120 நாள் பால் உற்பத்தி அளவை வைத்தும், 2 வருட வயதில் அது ஈன்ற குட்டிகள் எண்ணிக்கையை வைத்தும் ஆட்டின் செயல்திறனைக் கணிக்கலாம்.

(Thanks: Kerala Agricultural University)

வியாழன்

மாதம் 1 முறை இதை குடித்தால் நாட்பட்ட கழிவுகளும் உடலிலிருந்து வெளியேறி உடல் சுத்தமாகும் தெரியுமா?

இன்றைய நவீன யுகத்தினருற்கு மிகப்பெரிய ஆரோக்கிய பிரச்சனை என்றால் அது மலச்சிக்கல் தான். மலச்சிக்கல் தொந்தரவு இருப்பவர்கள் நாளடைவில் மற்ற பல்வேறு நோய்களுக்கும் உட்படுத்தப்படுகின்றனர். உடலில் இருந்து கழிவுகள் சரியாக வெளியேறாமல் இருந்தால், உடலானது வேறு வேறு பிரச்சனைகளை கொடுக்க ஆரம்பித்துவிடும். ஆரோக்கியமான உடலைக் கொண்டவர்கள் அதிகாலையில் எழுந்ததும் முதல் வேலையாக காலை கடன்களை முடித்து விட வேண்டும். இப்படி செய்பவர்கள் ஆரோக்கியமாக இருக்கிறார்கள் என்பது அர்த்தமாகிறது. எனவே மலச்சிக்கல் இருப்பவர்கள் அதிலிருந்து விடுபட சுலபமாக எந்த வழியை கையாள்வது? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம். மலச்சிக்கல் பிரச்சனையை இன்று பலரும் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. ஆனால் அதனால் வரும் பின் விளைவுகள் மிகவும் மோசமானதாக அமைந்து விடுகிறது. உடலில் இருக்கும் கழிவுகள் வெளியேறாவிட்டால் ரத்தம் சுத்திகரிப்பு செய்வதில் பாதிப்புகள் உண்டாகிறது. உடலும் சோர்ந்து போய்விடுகிறது. ஒருவர் சரியான அளவில் உணவை எடுத்துக் கொள்வது மிக மிக முக்கியம். - Advertisement - நீங்கள் தொடர்ந்து அதிகமாக உணவு எடுத்துக் கொண்டால் உங்களுடைய குடலும் அதற்கேற்றாற் போல் விரிவடைந்து விடும். அதன் பிறகு நீங்கள் குறைவாக சாப்பிட்டால் பசி உணர்வு ஏற்படும். அதனால் அதிகம் சாப்பிட்டு விரைவிலேயே உடல் பருமன் அடைந்து விடுகிறார்கள். அதே போல் தான் தொடர்ந்து குறைவாக உணவு எடுத்துக் கொள்பவர்களுக்கும், குடலானது சுருங்கி விடும். அதற்கு பிறகு நீங்கள் எவ்வளவு தான் சாப்பிட நினைத்தாலும் உங்களால் சாப்பிடவே முடியாது. வயிறு நிரம்பியது போல் ஒரு உணர்வு ஏற்படும். இதனால் தான் உணவு சரியான அளவில் இருப்பது அவசியமாகிறது. மலச்சிக்கலுக்கு முறையற்ற உணவு பழக்கம் முதன்மை காரணமாக கூறப்படுகிறது. அன்றைய காலத்தில் நம் முன்னோர்கள் எடுத்துக் கொண்ட உணவிற்கும், இப்பொழுது நாம் சாப்பிடும் உணவிற்கும் நிறையவே மாற்றங்கள் உள்ளன என்பதை நம்மால் உணர முடிகிறது. இந்த உணவு முறை மாற்றத்தின் விளைவாக நாம் ஆரோக்கிய சீர்கேட்டை பரிசாக வாங்கிக் கொண்டிருக்கிறோம் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

ஆரோக்கியமான மனிதன் சரிவிகித உணவு எடுத்துக் கொண்டால், அவன் நீண்ட நாட்கள் ஆயுளுடன் வாழ முடியும். மலச்சிக்கலால் பெரும்பாலானோர் தாங்க முடியாத வயிற்று வலியை சந்தித்திருப்பார்கள். உணவு முறை மாற்றம் மட்டுமல்ல, முறையற்ற உறக்கமும் இதற்கு முக்கிய காரணம். சரியான நேரத்தில் தூங்க முடியாமல் இருப்பவர்கள், இந்த பிரச்சனையை சந்திப்பார்கள். உணவு எவ்வளவு முக்கியமோ! அதே அளவிற்கு உறக்கமும் முக்கியம். உறக்கமின்மை நாம் சாப்பிடும் நேரத்தையும், உணவையும் முறையற்றதாக மாற்றி விடுகிறது.

sleepless

இந்த பிரச்சனை எல்லாம் தீர்வதற்கு நல்ல தீர்வு உண்டு. நம் உடலில் இருக்கும் நாட்பட்ட கழிவுகளை கூட சுத்தம் செய்து உடலை புத்துணர்வுடன், சுறுசுறுப்புடன் வைத்துக் கொள்வதற்கு நிச்சயமாக பயன் தரும். மாதம் ஒருமுறை இதை செய்வது மிகவும் நல்லது. முதலில் தேன் ஒரு டீஸ்பூன் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதனுடன் விளக்கெண்ணெய் ஒரு டீஸ்பூன், ஆலிவ் ஆயில் ஒரு டீஸ்பூன் கலந்து காலையில் நீங்கள் எழுந்தவுடன் முதல் வேலையாக வெறும் வயிற்றில் இதனைக் குடித்து விட வேண்டும். இதை செய்யும் பொழுது அதிகாலையில் எழுவது மிக மிக நல்லது. காலையில் ஆறு மணிக்குள் இதை செய்து விடுவது கூடுதல் பலன் தரும்.

honey 1

இதனால் உடலில் தேங்கியுள்ள கழிவுகள் அனைத்தும் சுத்தமாக வெளியேறிவிடும். நன்கு பசி எடுக்கத் துவங்கும். ஆரோக்கியமான, குளிர்ச்சியான உணவு வகைகளை அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். சீதோஷ்ண நிலைக்கு ஏற்ப சட்டென உணவு பழக்கத்தை மாற்றி விடக்கூடாது. உங்கள் உடல் உஷ்ண நிலைக்கு ஏற்ப தான் உணவை எடுத்துக் கொள்வது நல்லது. உடல், அழுத்தமின்றி இலேசாக உணர்வீர்கள். எப்போதும் இல்லாத சுறுசுறுப்பு உங்களிடம் தொற்றிக் கொள்வதை நீங்களும் காண முடியும். உற்சாகமான மனநிலையே ஒரு நாளை நமக்கு சிறப்பாக மாற்றித் தருகிறது. எனவே மலச்சிக்கல் பிரச்சனை தீர்வதற்கு இந்த எளிய வழிமுறையை பின்பற்றி பயன் பெறுங்கள்.


வறுத்த பூண்டு பயன்கள் | வறுத்த 6 பூண்டுகளை சாப்பிட்டால் என்ன பலன்

 

வறுத்த பூண்டு நன்மைகள் 


இதை பச்சையாக சாப்பிடுவதால் நமக்கு அதிகமாகவே ஆரோக்கியத்தை தரும் தன்மை வாய்ந்தது. தினமும் 6 வறுத்த பூண்டு சாப்பிட்டால் நமக்கு அதிக அளவு நன்மையை தருகிறது.பூண்டு நன்மைகள்: பூண்டு ஒரு மருத்துவ குணமுடையது என்று அனைவருக்கும் தெரியும். நாம் தினமும் 6 வறுத்த பூண்டு சாப்பிடுவதால் நமக்கு வாய்வு பிரச்சனைகள் வராது. இதை அன்றாட உணவில் அதிகமாகவே சேர்த்துக் கொள்ளலாம்.

நாட்டு வைத்திய குறிப்புகள்:

 

தீப்புண் குணமாக:

தீப்புண் குணமாக தினமும் வாழை தண்டை எரித்து அந்த சாம்பலை தேங்காய் எண்ணெயுடன் கலந்து தீப்புண் உள்ள இடத்தில் போட்டால் தீப்புண், சீல்வடிதல் மற்றும் காயங்கள் விரைவில் குணமாகும்.

தொடர் விக்கல் நிற்க:-

தொடர்ந்து விக்கல் எடுக்கும் சிலருக்கு நெல்லிக்காய் சாறு எடுத்து தேன் கலந்து தினமும் சாப்பிட்டு வந்தால் விக்கல் குணமாகும்.

உள்நாக்கு வளர்ச்சிக்கு நாட்டு வைத்தியம்:

உள்நாக்கு வளர்ச்சிக்கு உப்பு, தயிர் மற்றும் வெங்காயம் ஆகியவற்றை கலந்து சாப்பிட்டால் உள்நாக்கு வளர்ச்சி பிரச்சனைகள் குணமாகும்.

வாயு பிரச்சனை சரியாக:-

வாயு பிரச்சனைக்கு வேப்பம் பூவை உலர்த்தி அதை நன்றாக அரைத்து தினமும் வெண்ணீரில் கலந்து சாப்பிட்டு வந்தால் வாயு பிரச்சனைகள் குணமாகும்.

வயிற்று வலி குணமாக:

வயிற்று வலிக்கு வெந்தியத்தை நெய்யில் வறுத்து நன்றாக அரைத்து தினமும் ஒரு ஸ்பூன் சாப்பிட்டு வந்தால் வயிற்று வலி பிரச்சனைகள் குணமாகும்.

செவ்வாய்

தைராய்டு நோய் காரணங்களும் அறிகுறிகளும்..

உடல் சோர்வு, எப்போதும் பதட்டம், முடி உதிர்வு, எல்லாமே பயம், உடல் எடையில் திடீர் மாற்றம், தூக்கமின்மை, கவலை, பயம் என்று விடா மல் பற்றிக்கொண்டிருக்கு இவையெல்லாம் தைராய்டின் அறிகுறிகளே...

தைராய்டு பிரச்சனைகளால் இன்று பெண்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். தைராய்டு என்பது நமது உடலின் கழுத்து பகுதியில் வண்ணத்துப்பூச்சி வடிவில் இருக்கும் ஒரு நாளமில்லா சுரப்பி. இதில் சுரக்கும் ஹார்மொனின் அளவு அதி கமாக இருந்தாலும் குறைவாக இருந்தாலும் இரண்டுமே உடலில் பல்வேறு பிரச்சனைகளை உண்டாக்கும்.

தைராய்டு பணி
தைராய்டு தைராக்ஸின் டி4 மற்றும் டிரியோடோதைரோனின் டி3 போன்ற ஹார்மோன்களை உற்பத்தி செய்கிறது. இந்த ஹார்மோன்கள் ரத்தத்தின் வழியாக உடலில் வளர்சிதை மாற்றத்திலும், செரிமான மண்டல உறுப்புகளிலும், இதயத்திலும், மூளை வளர்ச்சியிலும் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஆரோக்கியமாக இந்த உறுப்புகளை செயல்பட வைக்க சீரான அள வில் தைராய்டு சுரப்பது அவசியமாகிறது.


தைராய்டு சுரப்பியில் குறைபாடுஇயல்பாகவே நோய் எதிர்ப்பு சக்தி பிரச்சனை இருப்பவர்கள், தொற்றுகளால் எளிதில் பாதிக்கப்படுபவர்கள், ம்ன அழுத் தம், பரம்பரை, ஹார்மோன் சமநிலையின்மை அனைத்துமே தைராய்டு சுரப்பியில் ஏற்றத்தாழ்வுகளை உண்டாக்கும்.

தைராய்டு பிரச்சனை அல்லது தைராய்டு நோய் என்பதில் இரண்டு வகை உண்டு. ஒன்று ஹைப்பர் தைராய்டு, மற் றொன்று ஹைப்போ தைராய்டு ஆகும். உடலுக்கு தேவையான அளவை விட அதிகளவு ஹார்மோன் சுரப்பது ஹைப்பர் தைராய்டு என்றும் தேவையை விட மிகக்குறைந்த அளவு உருவாவது ஹைப்போ தைராய்டு என்றும் அழைக்கப்படுகிறது.