செவ்வாய்

வெந்தயத்தில் மருத்துவம்.





வெந்தயத்தில் மருத்துவம்.
உணவில் அன்றாடம் நாம் பயன்படுத்தும் பொருட்களில் ஒன்று வெந்தயம். உணவுக்கு ருசியைக் கொடுப்பதோடு, அதில் உள்ள பல்வேறு மருத்துவக் குணங்கள் நம்மை நோய்களில் இருந்தும் பாதுகாக்கிறது.
எண்ணற்ற மருத்துவ குணங்களைக் கொண்டுள்ள வெந்தயத்தின் சிறப்புகளையும், வெந்தயத்தால் குணமாகும் நோய்களையும் பார்ப்போம்.
இரவில் தூங்குவதற்கு முன் ஒரு சிட்டிகை அளவு சுத்தமான வெந்தயத்தை எடுத்து, 200 மி.லி. அளவு தண்ணீரில் போட்டு மூடி வைத்து விடவும்.
காலையில் எழுந்ததும் வாய் கொப்பளித்த பின் தண்ணீரில் ஊறிய வெந்தயத்தை சாப்பிடுங்கள். பின் வெந்தயத் தண்ணீரை குடியுங்கள். தேவைப்பட்டால் கூடுதலாக குளிர்ந்த நீரினையும் குடிக்கலாம்.
வாரம் ஒருமுறை இதுபோன்ற வெந்தயத் தண்ணீர் குடித்து வர, உடல் சூடு, மலச்சிக்கல் என எந்த நோயும் உங்களை அண்டவே அண்டாது.
தவிர, உடலை வனப்புடன் வைப்பதில் வெந்தயத்தின் பங்கு அலாதியானது எனலாம். ஒரு தேக்கரண்டியளவு வெந்தயத்தை எடுத்துக் கொண்டு, வாணலியில் போட்டு வறுத்து, ஆற வைத்த பின் மிக்ஸியில் பொடி செய்து கொள்ளுங்கள். வெந்தயப் பொடியை ஆறிய பின் பாட்டிலில் போட்டு தேவைப்படும் போது தண்ணீரிலோ/மோரிலோ கலந்து பயன்படுத்தலாம்.
வெந்தயத்துடன், சிறிதளவு பெருங்காயத்தையும் போட்டு வறுத்து பொடி செய்த பின் ஒரு டம்ளர் வெந்நீரிலோ அல்லது மோரிலோ போட்டு பருகி வர வயிற்றுக் கோளாறுகள், அஜீரணம் போன்றவை ஏற்படாது.
மேலும் சர்க்கரை நோய் உள்ளவர்கள் தினமும் இந்த பொடியை தண்ணீர்/மோரில் கலந்து குடித்தால் சர்க்கரை நோய் கட்டுபாட்டில் இருக்கும்.வெறும் வயிற்றில் இதனைக் குடிக்க வேண்டும்.
வெந்தயத்தை நன்றாக வறுத்து பொடிசெய்து காபி பொடியுடன் கலந்து காபி போட்டு் குடித்தால், சர்க்கரை நோயாளிகளுக்கு சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும்.வயிற்றுப்போக்கு ஏற்படும் பட்சத்தில், வெந்தயம்பெருங்காயப் பொடியை ஒருமணி நேரத்திற்கு ஒருமுறை என 3 முறை குடிக்க வயிற்றுப்போக்கு கட்டுப்படுத்தப்படும்.
மூட்டுவலிக்கு வெந்தயத் தண்ணீர் மிகவும் அருமருந்தாகும். சர்க்கரை நோய் இல்லாதவர்கள் மூட்டு வலி ஏற்பட்டால், வெந்தயப் பொடியை சிறிய வெல்ல கட்டியுடன் கலந்து சிறு உருண்டையாக்கி தினமும்3 முறை சாப்பிட மூட்டு வலி குறையும்.எந்த வகை ஊறுகாயாக இருந்தாலும், வெந்தயப் பொடியையும், பெருங்காயப் பொடியையும் சேர்க்க, சுவை கூடுவதுடன், உடல் உபாதைகளையும் போக்கும்.இட்லி அரிசியுடன் உளுந்துக்குப் பதில்,வெந்தயம் சேர்த்து அரைத்து சிறிது நேரம் ஊறிய பின் தோசையாக ஊற்றி சாப்பிட்டால், சுவை கூடுவதுடன் உடலுக்கும் ஏற்றதாக அமையும்.
மோரில் ஊற வைத்த வெந்தயத்தை தினமும் காலையில் சாப்பிட்டால், நீரிழிவு,வயிற்றுப்புண், வாய் துர்நாற்றம் உட்பட பல நோய்கள் குணமாகும்.
வெந்தயக் களி உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடியது. கோடை காலத்தில் உடல் சூட்டில் இருந்து தப்பிக்க வாரம் ஒருமுறை வெந்தயக் களி செய்து சாப்பிடலாம்.ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்யவும் வெந்தயம் பயன்படுகிறது. பிரசவமான பெண்களுக்கு கஞ்சியில் வெந்தயத்தைச் சேர்த்து காய்ச்சிக் கொடுக்க பால் சுரக்கும்.


1.
இலைகளை தணலில் வதக்கி இளஞ்சூட்டுல பத்துப் போட வீக்கம் தீப்புண் குணமாகும்.

2.
வெந்தயத்த நல்லா காயவச்சுப் பொடியாக்கி காலை மாலை ஒரு தேக்கரண்டி தொடர்ந்து சாப்பிட்டு வர மதுமேகம்(சர்க்கரை நோய்) குறையும்.

3.
வெந்தயம் 20 கிராம் எடுத்து350 கிராம் பச்சரிசியுடன் சேர்த்து சமைச்சு சாப்பிட இரத்தம் ஊறும்.

4.
கஞ்சியில் வெந்தயத்த சேர்த்துக் காய்ச்சிக் கொடுக்க பால் சுரக்கும்.

5.
வெந்தயத்த ஒரு கைப்பிடியளவு எடுத்து ஊறவச்சு நல்லா அரைச்சு தலைக்கு தேச்சு குளிக்க முடி உதிராம நல்லா வளரும்.

6. 5
கிராம் வெந்தயத்த நல்லா வேகவச்சுக் கடஞ்சு கொஞ்சம் தேன் சேர்த்துச் சாப்பிட தாய்ப்பால் பெருகும்.

7.
வெந்தயம், கோதுமை ரெண்டும் சேர்த்து வறுத்து கஞ்சியாக்கி சாப்பிட உடல் வெப்பம் நீங்கும்.

8.
வெந்தயம், கடுகு, பெருங்காயம், கறிமஞ்சள் சமமா எடுத்து நெய் விட்டு வறுத்துப் பொடியாக்கி சாப்பிட்டில் கலந்து சாப்பிட வயிற்றுவலி, பொருமல்,ஈரல வீக்கம் குறையும்.

9.
வெந்தயம், வாதுமைப் பருப்பு,கசகசா, உடைத்த கோதுமை,நெய், பால், சர்க்கரை சேர்த்து சாப்பிட உடல் வன்மையாவும், வலுவாவும் இருக்கும்.இடுப்பு வலி தீரும்.

10.
வெந்தயத்த சீமை அத்திப்பழம் சேர்த்து அரைச்சு கட்டிகளுக்குப் பத்துபோட்டா கட்டி உடையும். படைகளுக்கும் பூசலாம்.

11.
வெந்தயத்தையும் அரைச்சுத் தீப்புண்கள் மேல பூச எரிச்சல் குறையும்.பத்து கிராம் வெந்தயத்தை நெய்யில் வறுத்துச் சிறிதளவு சோம்பும் உப்பும் சேர்

வியாழன்

சகிப்புத் தன்மை

வாயில போடுமுன்னே
வளையல் போடணுமே..
வக்கணையா சமைச்ச கைக்குனு..
விழுங்கி முடிக்கும்....வீட்டுக்காரர்..
சகிப்புத் தன்மை தொடங்குமங்கே

வாரி இறைத்த புடவைக் குவியலில்..
வரிக் குதிரை டிசைன்..
வாங்கினதே இல்லனு..வாங்கி
விமர்சனமே இல்லையேனு..
வெந்த புண்ணில் வேல் பாய்ச்சல்..
சகிப்புத் தன்மை...உண்டிங்கே

amazon ..ஆடித் தள்ளுபடி.
அலுக்காமல்..ஆயிரம் தந்து
அதே செருப்பை வாங்கி..
அப்பா..எப்படி இருக்குனு
அருமை மகள் கேட்க..
அப்பா ..சகிப்புத் தன்மை..

மாப்பிள்ளைக்கு பிடிக்கும்னு
மாறாத மெனுவுடன்..
மாமியாரும் பறிமாற..
மண்டையாட்டி...
மாறாத அசடு வழிதலுடன்..
மாப்பிள்ளை..சகிப்புத் தன்மை..

senti போடாத..
சிரித்தே மழுப்பும்..
சகிப்புத் தன்மை..
சரிதானே..

சனி

பப்பாளி சாகுபடியும் அதன் பயன்களும்

  • சத்து நிறைந்த கனி வகைகளில் பப்பாளியும் ஒன்று. தொடர்ந்து காய்க்க கூடியது. இதன் ஆயுள் காலம் சுமார் இரண்டு ஆண்டுகள்.
  • பப்பாளி நாற்று விடும்போதே நடவு வயல் சுற்றி அகத்தி செடிகளை நெருக்கமாக விதைத்து விடுவதால் காற்றினால் ஏற்படும் பாதிப்பை தடுக்கலாம்.
  • தண்ணீர் தேங்காத அனைத்து மண் வகைகளிலும் வளரும் தன்மை உடையது. ஏக்கருக்கு கிட்டத்தட்ட 20கிராம் விதைகள் வரை தேவை. இடைவெளி ஆறு முதல் ஏழு அடி வரை. மண் அனைப்பது மூலம் செடிகள் சாயாமல் தடுக்கலாம்.
  • அதிகம் பயன்பாடு உள்ள ரகங்கள் ரெட் லேடிராயல் ரெட்ஜின்டா மற்றும் கோவை ஆராய்ச்சி நிலைய ரகங்கள். சொட்டு நீர் பாசனம் சிறந்தது. அனைத்து பட்டங்களிலும் நடவு செய்யலாம்.
  • பிளாஸ்டிக் பைகள் மற்றும் tray க்களில் நாற்று விடலாம். கண்டிப்பாக நாற்று விடும்போதே வேப்பம் புண்ணாக்கு தொழு உரத்தோடு கலந்து இடுவதால் வேர் அழுகலை தடுக்கலாம். மண்புழு உரம் இடுவதால் மகசூல் அதிகரிக்கும்.
  • நாற்பது முதல்  அறுபது நாள் நாற்று நடுவது சிறப்பு. தொடர்ந்து காய்ப்பதால்   நுன்னூட்ட சத்துக்கள் அதிகம் தேவை, ஆதலால் நாற்று விடும்போது, செடிகளை நடவு வயலில் நடும் போது மற்றும் மாதம் ஒரு முறை கண்டிப்பாக வேரில் இட வேண்டும். இதனால் அதிக திரட்சியான காய்கள் மற்றும் அதிக எண்ணிக்கையில் கிடைக்கும். உயிர் உரங்கள் கட்டாயம் இடவேண்டும் ஏழாம் மாதம் முதல் காய்ப்பு வர ஆரம்பிக்கும்.
  • சில ரங்களின் காய்களில் இருந்து பால் எடுக்க படுகிறது. இது சில கிரீம் களில் பயன் படுத்த படுகிறது. அதனால் உபரி வருமானம்.
  • ஏக்கருக்கு இருபது டன்கள் தொழு உரம் மற்றும் மண் புழு உரம் மாதம் ஒருமுறை இட வேண்டும். மேம்படுத்தப்பட அமிர்த கரைசல் வாரம் ஒரு முறை.
  • பதினைந்து நாள் ஒரு முறை சொட்டுநீர் பாசனத்தில் கோமியம், சுண்ணாம்பு தூள்  இவற்றை கலந்து விடுவதால் வேரில் ஏற்படும் நோய்களை முற்றிலும் தடுக்கலாம்.
  • இவற்றை அதிகமாக தாக்கும் நோய்கள் மஞ்சள் வைரஸ் மற்றும் மாவுப்பூச்சி. கற்பூரகரைசல்  வாரம் ஒரு முறை தெளிப்பதால் இவை நெருங்காது.
  • வாரம் ஒரு முறை அறுவடை. அதாவது ஆறு மாதங்களுக்கு பிறகு. ஏக்கருக்கு கிட்டத்தட்ட அறுபது டன்கள் வரை அறுவடை. இயற்கை முறை சாகுபடியால் மூன்று வருடங்கள் வரை மகசூல் கிடைக்க வாய்ப்பு.
  • இதன் பழங்களில் அதிக வைட்டமின் சத்துகள் உள்ளதால் நிலையான சந்தை வாய்ப்பு. வெளிநாடுகளில் அதிக தேவை.
  • தொகுப்பு: ஸ்ரீதர் ( இயற்கை வேளாண் ஆர்வலர், மேலும் பல இயற்கை வேளாண் முறைகளை அறிமுகப்படுத்தி அதன் மூலம் வெற்றியும் கண்டவர்)
    தொடர்புக்கு: 9092779779

அமுத கரைசல் தயாரிக்கும் முறை


நிலத்தில் உள்ள நுண்ணுயிர்களின் அளவை பெருக்கும் அமுத கரைசல்


நுணுக்கமான புரிதலுடனும் முழுமையான அர்ப்பணிப்புடனும் அணுகினால், விவசாயம் நிச்சயம் அபரிமிதமான லாபத்தை அள்ளிக்கொடுக்கும். கொட்டோ கொட்டு என்று லாபம் கொட்டக்கூடிய துறைதான். சந்தேகமேயில்லை. வயல் வெளியில் கால்களைப் பதிப்பதற்கு முன்னால் இந்தத் தகவலில் ஒரு முறை கண்களைப் பதித்துவிடுங்கள். இயற்கை உரத்தை எந்த அளவுக்கு நம்பலாம்? என்று மற்றவரிடம் கேட்காமல், மற்றவர் கேட்க நீங்களே முன்னுதாரணமாகுங்கள். இயற்கை நம் தாய். தாய் என்றுமே பிள்ளைகளை காக்கவே செய்வாள். அந்த தாய் பூமியைக் காப்பதில் முதல் அடி எடுப்போம் நம் அமுத கரைசலுடன்.
அமுத கரைசலை பொதுவாக நிலவள ஊக்கி என்று அழைப்பார்கள். அது நிலத்தில் உள்ள நுண்ணுயிர்களின் அளவை பெருக்கும். அமுத கரைசலை நிலத்தில் தெளித்த 24 மணி நேரத்தில் நுண்ணுயிர்கள் பெருகும். பயிர்கள் நோய் நொடி இல்லாமல் வளர உதவும்.
அமுத கரைசலை பொதுவாக 15 நாட்களுக்கு ஒருமுறை பயிர்களின் மேல் தெளிக்கலாம்.
தயாரிக்கும் முறை
நாட்டுப்பசு சாணம் = 10 கிலோ
நாட்டுப்பசு கோமியம் = 10 லிட்டர்
வெல்லம் = 250 கிராம்
தண்ணீர் = 200 லிட்டர்
முதலில் நாட்டுப்பசுஞ் சாணம்  மற்றும் நாட்டுப்பசு கோமியம் (பசும் சாணம் புதியதாக இருத்தல் வேண்டும், கோமியம் பழையதாக இருந்தால் வீரியம் அதிகமாக இருக்கும்) இவற்றை ஒரு வாளியில் எடுத்துக் கொண்டு அதில்  வெல்லம் மற்றும் தண்ணீரைச்  சேர்க்க வேண்டும். இந்தக்  கலவையை 24 மணி நேரம் நிழலான இடத்தில் வைக்க வேண்டும். மேலும் அந்த கலவையில் கொசுக்கள் முட்டையிடுவதைத் தவிர்க்க பிளாஸ்டிக் (அ) அட்டையை வைத்து மறைத்துக் கொள்ளலாம்.

பயன் படுத்தும் முறை
  • ஒரு பங்கு கரைசலுடன் 10 பங்கு தண்ணீர் சேர்த்து பயிர்களுக்கு தெளிக்கலாம்.
  • ஒரு ஏக்கருக்கு பத்து தெளிப்பான் (டேங்க்) அளவுக்கு தெளிக்கலாம்.
  • வாய்க்கால் மற்றும் சொட்டு நீரிலும் கலந்து விடலாம்.
  • அமுத கரைசலை நிலத்தில் தெளித்த 24 மணி நேரத்தில் நுண்ணுயிர்கள் பெருகும்.
  • பயிர்கள் நோய் நொடி இல்லாமல் வளர உதவும்.
  • பொதுவாக 15 நாட்களுக்கு ஒருமுறை இந்த கரைசலைத் தெளிக்கலாம்.
  • பயிர்கள் மிகவும் வளமாகக் காணப்பட்டால் வாரம் ஒருமுறை கூடத் தெளிக்கலாம்.
  • வசதி இருந்தால் தண்ணீர் பாய்ச்சும்போதெல்லாம் அதனுடன் கலந்துவிடலாம்.
  • இதனை 90 நாட்கள் வரை உபயோகிக்கலாம். மூன்று நாட்களுக்கு ஒருமுறை இந்த கலவையைக் கலக்குவதன்மூலம் நொதித்தல் அதிகமாகும். மேற்பரப்பில் இருக்கும் தெளிந்த நீரை உபயோகிக்க வேண்டும். மேலும் இக்கரைசலைத் தெளித்த 2 மணி நேரத்திற்கு அதன் மிதமான மணம் பயிர்களின் மேல் இருக்கும்.