சனி

இயற்கை முறையில் எள்ளு சாகுபடி

ஆமணக்கு, நிலக்கடலை, சூரியகாந்தி என ஏகப்பட்ட எண்ணெய் வித்துப் பயிர்கள் இருந்தாலும், அதிகப் பராமரிப்பு இல்லாமல் குறைந்த செலவிலேயே நல்ல வருவாய் தருவது எள் சாகுபடிதான். எள் சாகுபடிக்கு வைகாசி பட்டம் ஏற்றதாக இருக்கும்.
ஏக்கருக்கு 2 கிலோ விதை !
அனைத்து மண்ணிலும் எள் வளரும். என்றாலும், வண்டலும் செம்மண்ணும் கலந்த நிலத்தில் நன்றாக வளரும். எள்ளில் வெள்ளை, கருப்பு, சிவப்பு என மூன்று வகைகள் புழக்கத்தில் உள்ளன. சித்திரை மாதத்தில் இரண்டு முறை கோடை உழவு செய்து மண்ணைக் கலைத்துவிட வேண்டும். தொடர்ந்து 10 டன் தொழுவுரத்துடன், அடியுரமாக தழை, மணி, சாம்பல் சத்து கொண்ட 50 கிலோ உரத்தையும் கலந்து இறைத்து விட வேண்டும். பிறகு விதைப்புதான். ஒரு ஏக்கருக்கு, 2 கிலோ விதை தேவைப்படும். சலித்த சுத்தமான மணலை, விதையின் அளவுக்கு சம அளவு கலந்து, சீராக நிலத்தில் தூவி விட வேண்டும். எள் மிகவும் லேசாக இருப்பதால்தான் மணலுடன் கலந்து விதைக்க வேண்டும். பிறகு குச்சியை (கவைக்கோல்) நிலத்தில் இழுத்துச் சென்றால் விதைகள் மண்ணில் அழுந்தப் புதைந்து விடும்.
தண்ணீர் வசதி இருந்தால், விதைத்தவுடன் லேசாக ஒரு பாசனம் செய்யலாம். இல்லாவிட்டாலும், கவலையில்லை. கிடைக்கும் பருவ மழை நீரே போதுமானது. மானாவாரி விவசாயம் போல விதைகள் தூவப்படுவதால் செடிகள் இடைவெளி இல்லாமல், அடர்த்தியாக இருக்கும். இப்படி இருந்தால், செடிகளின் வளர்ச்சி ஒரே சீராக இருக்காது. அதனால், செடிக்குச் செடி 15 செ.மீ இடைவெளி இருப்பதுபோல், செடிகளைக் கலைத்து விட வேண்டும்.
120 நாளில் அறுவடை !
60-ம் நாளில் நன்றாகப் பச்சைகட்டி செடிகள் வளர்ந்து நிற்கும். வெள்ளை நிறப்பூக்கள் செடிகளில் பூத்துக் குலுங்கும். வெயில் சூடு மற்றும் நுண்ணூட்டக் குறைபாடு காரணமாக பரவலாக பூக்கள் உதிரலாம். 100 லிட்டர் தண்ணீரில் 3 லிட்டர் ஜீவாமிர்தக் கரைசலைக் கலந்து, அதிகாலை வேளையில் பனிப்புகை போல தெளிக்க வேண்டும். பத்து நாட்கள் இடைவெளியில், இரண்டு முறை இப்படித் தெளித்தால் பூக்கள் உதிர்வது நின்று, செடிகளில் பிஞ்சுகள் பிடிக்கும்.
நோய் தடுக்கும் அஸ்திரங்கள் !
70-ம் நாள் முதல் செடிகளில் காய்கள் குலுங்கத் தொடங்கும். இந்த சமயத்தில் சாறு உறிஞ்சும் பூச்சிகள் மற்றும் காய்ப்புழுக்களின் பாதிப்பு அதிகம் இருக்கும். இரண்டு முறை அக்னி அஸ்திரம் தெளித்தால், இவற்றைக் கட்டுப்படுத்தலாம். சில நேரங்களில், சாம்பல் நோயும் தாக்கலாம். இந்நோய் தாக்கிய செடிகளின் தண்டுகள் பழுத்து, பாதியாக ஒடிந்து விழும். 100 லிட்டர் தண்ணீரில் 2 லிட்டர் பிரம்மாஸ்திரம், 2 லிட்டர் கோமியம் ஆகியவற்றைக் கலந்து தெளித்தால், சாம்பல் நோய் கட்டுப்படும்.
90-ம் நாள் தொடங்கி… 120-ம் நாளுக்குள் அறுவடை செய்யலாம். செடிகளில் தொங்கும் காய்களில், ஒரு காயைப் பறித்து பிளந்து பார்த்தால், விதைகள் நிறம் மாறி, முதிர்ந்து காட்சி அளிக்கும். இதுவே அறுவடை செய்ய ஏற்ற தருணம். தகுந்த ஆட்களைக் கொண்டு செடிகளைப் பறித்து, கத்தை கட்டி, சுத்தம் செய்யப்பட்ட களத்துமேட்டில்அம்பாரக் குவியல்போட்டு அடுக்கி வைக்க வேண்டும். தொடர்ந்து 15 நாட்கள் வரை அம்பாரக் குவியலில் காயப் போட வேண்டும். அப்பொழுதுதான் நுனித்தண்டில் இருக்கும் இளம் காய்கள் காய்ந்து முதிர்ச்சி அடையும். பின்னர் அம்பாரக் குவியலைக் கலைத்து செடிகளை களத்துமேட்டில் பரப்பி காய வைக்க வேண்டும். ஒரு வாரத்தில் செடிகள் காய்ந்து விடும். பிறகு, களத்துமேட்டில் கோணி சாக்கு அல்லது தார்பாலினை விரித்து மரக்கட்டை அல்லது பலகை மீது, காய்ந்த செடிகளைத் தட்டினால் காய்களில் இருந்து பதருடன் கலந்து எள் பிரியும்.’

அறுவடை முடிந்து அடித்த எள்ளை காற்றில் தூற்றினால் சுத்தமான எள் கிடைக்கும். ஒரு ஏக்கருக்கு 400 முதல் 500 கிலோ வரைக்கும் மகசூல் கிடைக்கும்.

இயற்கை முறை கத்தரி சாகுபடி

இயற்கை மற்றும் உயிர் ரக மருந்துகளைப் பயன்படுத்தி கத்தரி சாகுபடியில் விவசாயிகள் அதிக லாபம் பெறுவதற்கான வழிமுறைகள் குறித்து பெருந்தலைவர் காமராஜர் வேளாண் அறிவியல் நிலைய பூச்சியியல் வல்லுநர் என்.விஜயகுமார் விளக்கம் அளித்துள்ளார்.
உடல் நலனை பாதிக்காத, சுகாதாரமான சமுதாயத்தை உருவாக்குவதில் முக்கியப் பங்கு விவசாயிகளுக்கு இருக்கிறது. விஷத்தன்மையற்ற விளை பொருள்களை விளைவிப்பதன் மூலம், நோயற்ற சமுதாயத்தை உருவாக்க முடியும். பூச்சிக் கொல்லி மருந்துகளைப் பயன்படுத்துவதால் அவை விஷமாகி, பல்வேறு விதமான நோய்களை உண்டாக்கக் கூடிய சூழல் இப்போது நிலவுகிறது.
விஷத்தன்மை கொண்ட பூச்சிக் கொல்லிகளைப் புறக்கணித்து, இயற்கை மற்றும் உயிர்ரக மருந்துகளைப் பயன்படுத்துவதன் மூலம், கத்தரி, விஷத்தன்மை சேர்வதைத் தடுக்கலாம்.
கத்தரியில் தண்டு மற்றும் காய் துளைப்பான், இலை பேன், மாவுப்பூச்சி, எபிலாக்னான் பொறி வண்டு ஆகியவை தாக்கும்.
தண்டு துளைப்பானைக் கட்டுப்படுத்த ஒரு ஏக்கருக்கு 100 கிலோ வேப்பம் புண்ணாக்கை, கத்தரி செடியின் வேர்ப்பகுதியில் வைத்து, மண் அணைப்பு செய்தல் அவசியம்.
காய் துளைப்பானைக் கட்டுப்படுத்த ஒரு ஏக்கருக்கு ஒரு விளக்கு பொறி வைக்க வேண்டும். இதில் மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே விளக்கு எரிக்க வேண்டும். இதனால் தாய்ப் பூச்சிகள் விளக்கொளியால் கவரப்பட்டு, விளக்கில் சிக்கி இறக்கும். விளக்குப் பொறி ஒன்றின் விலை ரூ.100. மேலும், இனக் கவர்ச்சி பொறியை ஒரு ஏக்கருக்கு 5 வீதம் வைக்க வேண்டும். இதன் விலை ரூ.125.
முட்டை பருவத்தை அழிக்க, டிரைக்கோகிராமா கைலோனிஸ் எனும் ஒட்டுண்ணிகளை ஒரு ஏக்கருக்கு 2 சிசி எனும் அளவுக்கு பயன்படுத்த வேண்டும். இதில் ஒரு சிசி ஒட்டுண்ணி விலை ரூ.20.
பூ பூக்கும் பருவத்தில் ஒரு லிட்டர் தண்ணீரில் 2 மில்லி லிட்டர் வேப்ப எண்ணெய் கலந்து தெளிக்க வேண்டும். கத்தரிக்கு உள்ளே புழு தாக்கினால், பெவேரியா பேசியானா எனும் உயிர்ரக பூஞ்சாண மருந்தை ஒரு லிட்டர் தண்ணீருக்கு 4 கிராம் வீதம் கலந்து, அதிகாலை நேரத்தில் தெளிக்க வேண்டும்.
விசைத் தெளிப்பானாக இருந்தால் ஒரு ஏக்கருக்கு 100 லிட்டர் தண்ணீரும், கைத்தெளிப்பானாக இருந்தால் ஏக்கருக்கு 200 லிட்டர் தண்ணீரும் பயன்படுத்த வேண்டும். இலைப்பேன் தாக்கினால், 4 நாள்கள் புளித்த 2 லிட்டர் மோரில் 10 லிட்டர் தண்ணீர் கலந்து தெளித்தால் இலைப்பேன் கொட்டிவிடும். இதன் பயனாக, செடியில் பல புதிய துளிர்களும் வரும்.

மாவுப்பூச்சி தாக்குதலைத் தடுக்க ஒரு லிட்டர் தண்ணீரில் 40 மில்லி மீன் எண்ணெய் கலந்து தெளிக்க வேண்டும்.தாக்குதல் மிக அதிகமாக இருந்தால், வெர்டிசிலியம் லீகானி எனும் உயிர்ரக பூஞ்சாணத்தை ஒரு லிட்டர் நீரில் 4 கிராம் வீதம் கலந்து தெளிக்க வேண்டும்.
எபிலாக்னான் பொறி வண்டு, இலையில் துளை போடும். அப்போது ஒரு ஏக்கருக்கு 12 கிலோ சாம்பலை ஆற்று மணலுடன் கலந்து, இலை மீது அதிகாலையில் தூவ வேண்டும். கரி, நிலக்கரி, அரிசி உமி என எந்த சாம்பாலாக வேண்டுமானாலும் இருக்கலாம். சாம்பலில் உள்ள சிலிக்கானை சாப்பிடுவதால், வண்டின் பல் உடைந்து, அவை இறந்து போகும்

வாய்ப்புண் குறையும்.



அறிகுறிகள்:
  • வாய்ப்புண்.
தேவையான பொருட்கள்:
  1. பலா இலை.
  2. பனங்கற்கண்டு.
செய்முறை:
பலா இலையை எடுத்து சுத்தம் செய்து சிறியதாக நறுக்கிக் கொள்ளவேண்டும். அந்த இலையை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி அதனுடன் பனங்கற்கண்டை கலந்து தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண் குறையும்.

மணலிக்கீரையின் மருத்துவக்குணம்


மணலிக்கீரை:
மணலிக்கீரையின் இலை, தண்டு, வேர் ஆகிய அனைத்துமே மருத்துவக்குணம் வாய்ந்தது.
மலச்சிக்கல் குணமாக:
மணலிக்கீரையை பாசிபருப்புடன் சேர்த்து கூட்டு தயார் செய்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் பிரச்சனை குணமாகும்.
ஞாபக சக்தி பெருக:
ஞாபக மறதிக்கு முக்கிய காரணம் பித்த அதிகரிப்பே காரணம் ஆகும். மேலும் மூளைக்குத் தேவையான சத்து குறைவதாலும் இப்பிரச்சனை ஏற்படுகிறது. இப்பிரச்சனை தீருவதற்கு மணலிக்கீரை‌யை மசியல் செய்து சாப்பிட வேண்டும்.
குடலில் உள்ள தட்டைப்புழுக்கள் குறைய:
மணலிக்கீரையின் வேர், இலைகளை நீர் விட்டு  நன்கு அரைத்து அதில் 70 கிராம் அளவு எடுத்து நீரில் கலக்கி அதிகாலையில் வெறும் வயிற்றில் பருகினால் குடலில் உள்ள தட்டைப்புழுக்கள் குறையும். மார்புசளி வயிற்றுப்புண் குணமாகும்.
மூளை நரம்புகள் பலம்பெற:
மணலிக்‌கீரை வதக்கி சாப்பிட்டால்  மூளை நரம்புகள் பலப்படும்.
ஈரல் பலம்பெற:
மணலிக்கீரையை கஷாயம் செய்து குடித்தால் ஈரல் பலப்படும்.

இத்தகைய மருத்துவக்குணங்களை வாய்ந்த மணலிக்கீரையை நாம் நம் உடல் ஆரோக்கியத்துக்காக பயன்படுத்துவோம்.

பெண்கள் உடல் எடை அதிகரிப்பதை தவிர்க்க வழிகள்

பெண்கள் உடல் எடையினை எளிதாக குறைக்க முடியாது. எனினும், பெண்கள் இந்த வாழ்க்கை முறை மாற்றங்கள் மற்றும் உணவு பழக்கத்தை செயல்படுத்தி நீங்கள் விரைவில் உங்கள் எடையை குறைக்க உதவும்!

– தொடர்ந்து ஒரு குறைந்த கால‌ உணவு திட்டம்
– பசிக்கும் போது மட்டும் உணவு. அதுவும் சரியான‌ இடைவெளியில்
– நல்ல‌ உணவு பழக்கம் மற்றும் தேவையற்ற‌ உணவு பழக்கத்தில் இருந்து விலகி இருத்தல்

– தினமும் எடையை பதிவு செய்து வைத்திருப்பது மற்றும் அதன் முன்னேற்றத்தை அளவிடுதல்
– மது மற்றும் காற்றடைக்கப்பட்ட‌ பானங்களை தவிர்ப்பது
– செயற்கை இனிப்பாலான‌ சர்க்கரைகளை தவிர்தல்

– தினமும் உடற்பயிற்சி– மருந்துகள் மறுஆய்வு
– குறைந்தது 8 மணி நேரம் தூக்க‌ம்– தியானம் செய்தல்
– பேக்கரி மற்றும் பால் பொருட்களை குறைவாக‌து உட்கொள்ளுவது

– போதுமான குடிநீர்
– கனிமங்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்த உணவுகள் அல்லது கூடுதல் உணவு
– இன்சுலின் அளவு குறைவாக உள்ள உணவுகள்
– அடிக்கடி ஹார்மோன்கள் சரிபார்க்கப்பட வேண்டும்.

பெண்களின் ஹார்மோன் ஏற்றத்தாழ்வு மற்றும் அதையொட்டிய உடல் எடையை அதிகரிப்பு இதை கொண்டே கண்டறியப்பட்டது. எனவே விரைவில் நீங்கள் ஹார்மோன் ஏற்றத்தாழ்வு அறிகுறிகளை கண்காணிக்கலாம்.

சிகிச்சை வாழ்க்கை முறை மாற்றங்கள், மருந்துகள் அல்லது செயற்கை ஹார்மோன்களும் இதில் அடங்கும். எடை அதிகரிப்பு மற்றும் ஹார்மோன் பிரச்சினைகளால் பெண்களுக்கு அதிக அளவில் பாதிப்படைவீர்கள்.

நீங்கள் உங்கள் ஹார்மோன் பிரச்சினை எல்லா இடத்திலும் இருக்கும் என்று சந்தேகம் இருந்தால்,மருத்துவரிடம் உங்கள் உடல் நிலையை காட்டி ஏற்படும் மாற்றங்களைக் கொண்டு விழிப்புடன் இருங்கள்.

சர்க்கரைவள்ளிக் கிழங்கின் மருத்துவப் பயன்கள்

சர்க்கரை வள்ளிக்கிழங்கு, ருசிக்க மட்டும் சுவையானதல்ல, இதயத்தின் செயல்பாட்டிற்கும் நன்மை பயக்கும். இதில் நிறைய ஸ்டார்ச்சத்தும், நோய் எதிர்பொருட்களும் உள்ளன.மாவுச் சத்து நிறைந்த சர்க்கரை வள்ளிக் கிழங்கு, சராசரியான ஊட்டம் தரக்கூடியது.

100 கிராம் கிழங்கில் 70 முதல் 90 கலோரி ஆற்றல் கிடைக்கும்.மிகமிக குறைந்த அளவே கொழுப்பு உள்ளது. சர்க்கரை வள்ளிக் கிழங்கில் நிறைய அளவு நார்ச்சத்து உள்ளது.ஆன்டி-ஆக்சிடென்டுகளும், வைட்டமின்கள் மற்றும் தாதுஉப்புக்களும் அதிகம் உள்ளது. மாவுச்சத்தில் கார்போஹைட்ரேட் மூலக்கூறுகளாக உள்ளது.

இது ரத்தத்தில் சர்க்கரையின் அளவை மெதுவாகவே உயர்த்தும்.எனவே நீரிழிவு பாதிக்கப்பட்டவர்கள் குறைந்த அளவு உண்ணலாம். மற்ற கிழங்கு வகைகளைவிட இதில் அதிக அளவில் பீட்டா கரோட்டின் மூலக்கூறுகள் உள்ளது. இவை இயற்கை நோய் எதிர் பொருட்களாகும். உடலில் வைட்டமின் ஏ ஆக மாறி தேக ஆரோக்கியம் மற்றும் தோல் - நரம்பு மண்டல செயல்பாட்டிற்கு உதவும்.

நுரையீரல் மற்றும் தொண்டை புற்றுநோய்க்கு எதிர்ப்புத் தன்மை கொண்டது. இரும்பு, கால்சியம், மக்னீசியம், மாங்கனீசு,பொட்டாசியம் போன்ற உடலுக்கு அவசியமான தாது உப்புக்களும் உள்ளது. இவை புரதம் மற்றும் கார்போஹைட்ரேட்களின் வளர்ச்சிதை மாற்றத்தில் பங்கெடுக்கும்.

நொதிகளின் செயல்பாட்டிற்கும் உதவும்.கிழங்கைவிட அதன் இலைகள் அதிக ஊட்டச்சத்து நிறைந்தது. 100 கிராம் புதிய இலைகளில் அதிக அளவில் இரும்பு,வைட்டமின் சி, வைட்டமின் கே, பொட்டாசியம், சோடியம், போரேட் ஆகியவை அடங்கி உள்ளது.

பூசணி–வெள்ளரிக்காய் புற்று நோயை குணப்படுத்தும்: புதிய ஆய்வில் தகவல்

புற்று நோயை குணப்படுத்த பலவித மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. தற்போது வெள்ளரிக்காய், பூசணிக்காய், தர்பூசணி மற்றும் பழச்சாறு புற்று நோயை குணப்படுத்தும் தன்மை வாய்ந்தது. இவை நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் திறன் படைத்தது என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதற்கான ஆய்வை கலிபோர்னியா பல்கலைக்கழகத்தை சேர்ந்த வில்லியம் லூகாஸ் மற்றும் சைனீஸ் அகாடமியை சேர்ந்த டேவிஸ், சான்வென் ஹூயாஸ் ஆகியோர் நடத்தினர்.
வெள்ளரி வகையை சேர்ந்த இந்த காய்கறிகள் மற்றும் பழ வகைகள் அவற்றின் இலைகளை பல ஆயிரம் ஆண்டுகளாக தங்கள் மருந்துகளில் இந்தியர்களும், சீனர்களும் பயன்படுத்தி வருகின்றனர்.
அதன் அடிப்படையில் இவர்கள் வெள்ளரி வகை காய்கறிகளில் ஆய்வு மேற்கொண்டனர். இக்காய்களில் பி.ஐ., பி.டி. என்ற இருவகை மரபியல் மூலக்கூறுகள் சிறப்பு தன்மையுடன் உள்ளன. இவை ‘டி.என்.ஏ’வுடன் தொடர்பு கொண்டவை.
இவைகள், புற்று நோய் செல்களை அழிக்கும் திறன் படைத்தவைகள் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.