ஞாயிறு

பட்டுப்பூச்சி வளர்ப்பு


திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளின் போது அனைவராலும் விரும்பி அணியப்படுவது பட்டுத் துணிகளே. நிகழ்ச்சியின் நாயகர்கள் பட்டாடை அணிந்து பங்குபெற்றால் அது அந்நிகழ்ச்சிக்கே அழகு சேர்க்கும்.
அப்படிப்பட்ட பட்டுத்துணிகள் நெய்வதற்கு பட்டுப்பூச்சிகள் முக்கிய காரணம். நன்கு வளர்நத பட்டுப் புழுக்கள் தங்களைச் சுற்றி, அவைகளின் வாயிலிருந்து வரும் ஒரு விதமான நூலினால் கூடுகளை அமைக்கும். அந்த நூல்களே பட்டு நூல்கள். அக்கூடுகளிலிருந்து பட்டுப்பூச்சிகள் வெளிவரும் முன்னரே அவற்றிலிருந்து பட்டினை நாம் தனியாக பிரித்தெடுக்க வேண்டும். இத்தகைய பட்டுப்பூச்சிகளை வளர்ப்பது ஒரு இலாபகரமான தொழிலாகும்.
இத்தொழிலுக்கு தேவையானவை:
பட்டுபூச்சி முட்டைகள், அவற்றிற்கு உணவான மல்பரி இலைகள், புழுக்கள் கூடுகட்டுவதற்கு தேவையான பிளாஸ்டிக் வலைகள், மற்றும் வளர்க்க தேவையான இடம்.
பட்டுப்பூச்சி முட்டைகளை அரசு விதைப்பண்ணையில் இருந்து நூறு முட்டைகளை ரூ.750 என்ற விலையில் வாங்கலாம், பின் அவற்றை பிளாஸ்டிக் வலைகளில் இட்டு 60 முதல் 80 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள சூழ்நிலையில் பராமரித்தால், அதிலிருந்து முதல் கட்டமாக புழுக்கள் வெளிவரும். அந்த புழுக்கள் நன்கு வளர்வதற்கு மல்பரி இலைகளை கொடுக்க வேண்டும். பின்னர் அவை பட்டுப்பூச்சிகளாக உருமாறி 21 முதல் 25 நாட்களில் கூடுகளை கட்ட ஆரம்பித்து விடுகின்றன. இந்த கூடுகளை அரசு விதைப் பண்ணைகளிலேயே விற்கலாம்.
100 முட்டைகளில் 40 சதவிகிதம் பட்டுப்பூச்சிகளை உருவாக்கலாம். வெள்ளை முட்டையில் உருவாகும் பட்டுப்பூச்சி கூடுகளை தரத்திற்கேற்ப ரூ.250 முதல் ரூ.280 வரை விற்கலாம். மஞ்சள் முட்டையிலிருந்து உருவாகும் கூடுகளை ரூ.150 முதல் ரூ.180 வரை விற்கலாம்.
நல்ல லாபம் கிடைக்கும் தொழில்களில் பட்டுப்பூச்சி வளர்ப்பு தொழில் முக்கியமான இடத்தை பிடிக்கின்றது...

பட்டுப்புழு வளர்ப்பு

பட்டுப்புழுவை அதன் வாழ்நாள் காலம் (30 நாட்கள்) முழுவதிலும் மிகக் கவனமாகப் பார்த்துக்கொள்ள வேண்டும். தரமான மல்பரி இலை வெற்றிகரமான புழு வளர்ப்பிற்கு வழிவகுக்கிறது. நல்ல சுத்தமான சுற்றுச்சூழலும், பூச்சிகள்மற்றும் நோய்களிடம் இருந்து பாதுகாப்பும் மிகவும் அவசியம். சீரான சுற்றுச்சூழலை ஏற்படுத்திக்கொடுக்க, ஒரு தனி புழு வளர்ப்பு மனையும் அதற்கு தேவையான வளர்ப்பு சாதனங்களும் அவசியமாகும். ஒரு வருடத்தில் சுகாதாரமான புழு வளர்ப்பு மனையில் 10-12 முறை புழு வளர்ப்பும், இயற்கை வளமான தோட்டத்தில் 5-6 முறை மல்பரி இலைஅறுவடையும் செய்யலாம். இதன் இடைவெளி 60-70 நாட்கள் ஆகும்.

மல்பரி நடவு முறை

இணை வரிசை நடவு முறையைப் பின்பற்றினால், தற்பொழுது உள்ள முறையைவிட நல்ல பலன் கிடைக்கும். இம்முறையில் தற்பொழுது உள்ள 90 செ.மீ X 90 செ.மீ மற்றும் 60 செ.மீ X 60 செ.மீ என்ற இடைவெளியை காட்டிலும், (90 + 150) செ.மீ X 60 செ.மீ இடைவெளி கடைப்பிடிக்கப்படுகிறது. இம்முறையில் இடைவெளி அதிகமாக இருப்பதால், விசைக்கருவி கொண்டு இடைஉழவு செய்வதற்கும், அறுவடை செய்த இலைகளை எடுத்துச் செல்வதற்கும், சொட்டு நீர்ப்பாசனம் அமைப்பதற்கும் ஏற்றதாக இருக்கும். இதனால்,
  • ஒரு ஏக்கரில் அதிகமான செடிகளை நடவு செய்யலாம்.
  • சுலபமாகவும், வேகமாகவும் இலைகளை எடுத்துச் செல்ல முடிவதால், ஈரப்பதம் குறைவதைத் தடுக்கமுடியும்
  • தண்டு அறுவடை செய்யப்படுவதால் 40% வேலையாட்கள் குறையும்.

[தொகு]வேதியியல் உரம் மற்றும் தொழு உரமிடுதல்

20 டன் தொழு உரத்தை, சமமாக இரண்டாகப் பிரித்து இருமுறை இடவேண்டும். ஒரு வருடத்திற்கு, வி1 இனத்திற்கு 350:140:140 கிலோ/எக்டர் என்ற அளவிலும் எஸ்36 இனத்திற்கு 300:130:120 கிலோ/எக்டர் என்ற அளவிலும் தழை, மணி மற்றும் சாம்பல் சத்தை சமமாகப் பிரித்து 5 முறை இடவேண்டும்.

[தொகு]நீர் மேலாண்மை

80-120 மி.மீ அளவிற்கு வாரம் ஒருமுறை நீர் பாய்ச்ச வேண்டும். நீர் தட்டுப்பாடு ஏற்படும் போது, விவசாயிகள் சொட்டு நீர்ப்பாசனம் முறையைப் பின்பற்றி 40 சதவீதம் நீரைச் சேமிக்க முடியும்.

[தொகு]களை நீக்குதல்

அதிகப்படியான களைகளால் தோட்டத்தில் உள்ள உரம் வீணாவதோடு மல்பரி இலைகளில் பூச்சிதாக்குதல் நேரிடும்.இலை அறுவடை முடிந்து அடிவெட்டுக்கு பின் மண்வெட்டியால் மண்ணை கொத்திவிட வேண்டும்.கூலி ஆட்கள் பற்றாக்குறை ஏற்படின் கிளைபோசேட் இரசாயன களைக்கொல்லியை கைத்தெளிப்பான் மூலம் தெளிக்க வேண்டும். சுற்றுசூழல் மாசு படாத வகையில் நவீன களை வெட்டும் இயந்திர உபயோகம் மிகுந்த பலன் தரும்.

[தொகு]நோய்த்தாக்குதல்

முசுக்கொட்டை இலைகளில் பூச்சி இனப்பெருக்க காலமான நவம்பர் முதல் பிப்ரவரி வரையுள்ள மாதங்களில் அதிக அளவு புழுத்தாக்குதலினால் இலைச்சேதம் ஏற்ப்படும். சேதத்தை கட்டுப்படுத்த டைக்குளோர்வோஸ் (Dichclorvos) இரசாயன பூச்சி கொல்லி மருந்தினை 1லி தண்னீரில் 2மிலி மருந்து என்ற விகிதத்தில் தெளிக்கவேண்டும்.

[தொகு]பட்டுப்புழு வளர்ப்புஐந்தாம்நிலை பட்டுப்புழு

[தொகு]பட்டுப்புழு கலப்பினங்கள்

இரு சந்ததி கலப்பினம் D1 x CSR2 (A multivoltine x bivoltine) மற்றும்
இருவழி வீரிய ஒட்டு CSR2 x CSR4 (மிதமான துணை வெப்ப மண்டல பகுதிகள்) மேலும்

[தொகு]இளம்புழு வளர்ப்பு

முட்டை பொரிப்பிலிருந்து நன்கு முதிர்ந்து கூடுகட்டும் வரை 5 பருவங்கள் உள்ளன. இரண்டாம் பருவம் வரை அவை இளம் புழுக்கள் பருவத்தைச் சேரும். புழு வளர்ப்பில் ஏற்படும் திடீர் தட்பவெப்ப மாற்றங்கள், நோய்களை உண்டாக்கும் என்பதால், அவற்றை சிறந்தமுறையில் கவனிக்க வேண்டும். நல்ல தரமான புழுவளர்ப்பிற்கு ஒரே சீரான வெப்பம் தேவை என்பதால், தனி புழுவளர்ப்பு மனை அவசியமாகும். இளம்புழு வளர்ப்பிற்கும், வளர்ந்த புழு வளர்ப்பிற்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு. முதிர்ந்த புழுக்களை வளர்க்குமிடங்களிலிருந்து கிருமித் தொற்றைத் தவிர்க்க இளம்புழு வளர்ப்பிற்கெனத் தனியாக ஒர் அறை வைத்திருக்க வேண்டும். ஒரு ஏக்கர் மல்பெரித் தோட்டத்திற்கு இளம்புழு வளர்ப்பிற்கு சுமாராக 150 சதுர அடி பரப்பும், நான்கு பக்கமும் ஜன்னல்கள் கொண்ட வளர்ப்பறைத் தேவை. வளர்ப்பறை 15 X 10 X 16 என்ற அளவில் அமைக்க வேண்டும்.

[தொகு]இளம்புழு வளர்ப்பு சாதனங்கள்

3 X 2 அடி அளவுள்ள நெகிழித் (பிளாஸ்டிக்) தட்டுகளை தாங்கிகளில் வைத்து புழுக்களை வளர்க்க வேண்டும்.

[தொகு]முட்டை பொரிப்பு முன்னேற்பாடுகள்

இளம்புழு வளர்ப்பறை மற்றும் புழு வளர்ப்புத் தளவாடங்களை 2.5 சதம் குளோரின் டை ஆக்ஸைடு திரவம் கொண்டு கிருமிநீக்கம் செய்ய வேண்டும்.

[தொகு]பட்டுப்புழு முட்டையை பாதுகாத்தல்

வித்தகத்திலிருந்து பட்டுப்புழு முட்டையை துளையிட்ட காகிதத்தில் சுற்றி வெயில் படாதவாறு காலை நேரத்தில் எடுத்துச்செல்ல வேண்டும். கிருமிநீக்கம் செய்யப்பட்ட அறையில் இளம்புழு வளர்ப்பு தட்டுகளில் பட்டுப்புழு முட்டையை ஒவ்வொன்றும் தனியாக இருக்குமாறு பரப்பி வைக்கவேண்டும் (தகுந்த வெப்ப தட்ப நிலையில்) முட்டையிட்ட தேதியிலிருந்து ஒருவார காலத்தில் முட்டையில் கரும்புள்ளி தோன்ற ஆரம்பித்ததும் (முட்டை பொரிப்பதற்கு 48 மணி நேரம் முன்பு) முட்டைகளில் கருவின் தலை உருவாகி நீல நிறம் அடையும் நிலையில் பட்டுப்புழு முட்டையை வெளிச்சம் படாதவாறு கருப்புதாளில் (கருப்புப்பெட்டி) சுற்றி இரண்டு நாட்கள் அடைகாக்க வேண்டும்.

[தொகு]கறுப்புப்பெட்டி அடைகாத்தல்

பட்டுப்புழு முட்டைகள் 25 செல்சியஸ் வெப்பநிலை மற்றும் 80 சத ஈரப்பதம் கொண்ட சூழ்நிலையில் பராமரிக்க வேண்டும். இதனால் முட்டை பொரிப்பது சீராக இருக்கும்.முட்டைகளின் மேல் கறுப்புக் காகிதம் மூடி இருளில் வைப்பதால் கரு முழுமையாக சீராக வளர்ச்சியடையும்.

[தொகு]முட்டை பொரிப்பு

பருவ நிலைக்கேற்ப முட்டைகள் 8 முதல் 10 நாட்களில் பொரித்து விடுகின்றன. முட்டைகள் பொரிக்கும் நாளன்று, காலைபொழுதில் கறுப்புப்பெட்டியை திறந்து பட்டுப்புழு முட்டையை ஒவ்வொன்றும் தனியாக இருக்குமாறு பரப்பி வைக்க வேண்டும். ஒன்றிரண்டு புழுக்கள் வெளிவருவதைக் கண்டவுடன், வெளிச்சத்தின் தூண்டுதலால் சீராக முட்டைகள் பொரித்து விடும்.

[தொகு]முட்டைகளிலிருந்து புழுக்களைப் பிரித்தல்

முட்டை அட்டையிலிருந்து, புழுக்கள் சீராக பொரித்து வந்தவுடன் புதிதாகப் பறிக்கப்பட்ட இளம் மல்பெரித் தழைகளை சிறுசிறு துண்டுகளாக வெட்டி இலைத் துணுக்குகளைப் பரவலாகத் தூவுதல் வேண்டும். முட்டை அட்டைகளின் மேல் ஒட்டியிருக்கும் ஒன்றிரண்டு புழுக்களை மெதுவாக இறகால், புழு வளர்ப்புத் தட்டுகளுக்கு மாற்றுதல் வேண்டும்.

[தொகு]இலையின் தரம்

மல்பெரிச் செடியின் துளிரின் கீழே உள்ள இரண்டாவது மற்றும் மூன்றாவது இலைகள் இளம்புழு வளர்ப்பிற்கேற்ற வகையில் புரதம் மற்றும் மாவுச்சத்து மிக்கதாய் உள்ளன. நன்கு பராமரிக்கப்பட்ட தோட்டங்களில் போதிய அளவு இயற்கை உரம் அளிப்பதால் சத்து மிக்க இலைகள் கிடைக்கின்றன. இளம்புழு வளர்ப்பில் தழைகளின் ஈரப்பதத்தை சரியான முறையில் பராமரிக்க வேண்டும். மல்பெரித் தழைகளை எப்போதும் இளங்காலை அல்லது மாலை நேரங்களில் பறிக்க வேண்டும். தழைகளைத் தகுந்த இலைப் பாதுகாப்பு பெட்டிகளில் வைத்து சுத்தமான ஈரத்துணியைக் கொண்டு மூடி பாதுகாக்க வேண்டும்.

[தொகு]உணவளித்தல்

பருவ நிலைக்கேற்ப இரண்டு அல்லது மூன்று முறை இளம்புழுக்களுக்கு சீரான கால இடைவெளியில் உணவளிக்க வேண்டும். புழுக்களின் வளர்ச்சிக்கேற்ப இலைத் துணுக்குகளின் அளவை அதிகமாக்கிக் கொள்ளலாம்.

[தொகு]சுத்தம் செய்தல்

தோலுரிப்பின் போது இளம்புழுக்களைக் தகுந்த முறையில் கையாள்வது அவசியம். இளம்புழுக்கள் மூன்று நாட்கள் கழித்து தோலுரிப்பும். அதற்கடுத்த மூன்று தினங்களில் இரண்டாம் தோலுரிப்பும் முடிந்து மூன்றாம் பருவத்தை அடையும். தோலுரிப்பு சமயத்தில் வளர்ப்பு படுக்கைகளை நன்கு உலர வைக்க வேண்டும். தோலுரிப்பின் போது நல்ல காற்றோட்டமாகவும். சலனமடையாமலும் வைத்திருக்க வேண்டும்.

[தொகு]கிருமி நாசினி

புழுக்களுக்கு தகுந்த இடைவெளியும், காற்றோட்டமும், சுகாதாரச் சுழலும் கிடைக்க வேண்டும். ஒவ்வொரு தோலுரிப்பின் போதும் உணவளிக்கும் முன் படுக்கை கிருமி நாசினித் தூளைத் தூவ வேண்டும். இதனால் நோய்க் கிருமிகளின் தொற்று பரவாது.

[தொகு]வளர்ந்த புழு வளர்ப்பு

மூன்று, நான்கு மற்றும் ஐந்தாம் நிலைப்புழுக்கள் முதிர்ந்த புழுக்கள் எனப்படுகின்றன. பொதுவாக இப்பருவத்தில் வெப்பநிலை 25 செல்சியஸ் அளவிலும் ஈரப்பதம் 70 வீதமும் இருக்க வேண்டும். வளர்ந்த புழு வளர்ப்பு மூன்றாம் பருவத்திலிருந்து தொடங்குகிறது. பட்டுப்புழுக்கள் மிகவேகமாகவும், அதிகமாகவும் இலைகளை உண்ணும்.

[தொகு]

வளர்ப்பு மனை

மல்பெரி பட்டுப்புழு வளர்ப்பினை தனியே பேணி வளர்க்கும் போது அதற்கு குறிப்பிட்ட சுற்றுச்சூழல் மிகவும் அவசியம். 24-280சி வெப்பமும் 70-80% ஈரப்பதமும் தேவை.
நல்ல குளிர்ச்சியான காற்றோட்டமான வளர்ப்பு மனை மிகவும் அவசியம். வளர்ப்பு மனையின் கூறை அமைக்கும் போதும், கட்டிடத்தை வடிவமைக்கும் போதும், குளிர்ச்சியுடன் அமைப்பதற்கு ஏற்ற வழிகளை மேற்கொள்ள வேண்டும். இலைகளை சேமிப்பதற்கும், இளம்புழு வளர்ப்பிற்கும், வளர்ந்த புழு வளர்ப்பிற்கும், தோலுரிப்பிற்கும் வேண்டிய இடவசதிகளுடன் அமைக்க வேண்டும். சுத்தம் செய்வதற்கும் கிருமி நீக்கம் செய்வதற்கு ஏற்றவாறு வளர்ப்பு மனையைக் கட்ட வேண்டும்.
பட்டுபுழு வளர்ப்பின் வகை மற்றும் அளவைப் பொறுத்து வளர்ப்பு மனையின் அளவு வேறுபடும். 700 சதுர அடி தரையளவைக் கொண்ட வளர்ப்பு மனையில் 100 நோயற்ற முட்டைத் தொகுதிகளை (டி.எப்.எல்.) வளர்க்க முடியும் (1 டி.எப்.எல். = 500 புழுக்கள்).

[தொகு]புழு வளர்ப்புத் தாங்கிகள்

முதிர்ந்த புழுக்களை வளர்ப்பதற்கு, மர சட்டங்களால் ஆன தாங்கிகள் அமைக்கப்பட வேண்டும். இந்த தாங்கிகளில் வலைகளைக் கொண்ட 50 செ.மீ. இடைவெளில் மூன்று படுக்கைகளை, கட்டில் போன்று பின்ன வேண்டும்.]

[தொகு]வளர்ப்புச் சாதனங்கள்

அதிகமான வெப்பம் மற்றும் ஈரப்பதத்தையும், காற்றோட்டத்தையும் வளர்ந்த புழுக்களால் தாங்கிக்கொள்ளமுடியாது. வளர்ப்பு மனையின் வெப்பத்தைக் குறைக்கவும், புழுக்களின் கழிவிலிருந்து வெளியேறும் நச்சுக்காற்று மற்றும் சூடான காற்றை வெளியேற்றவும், நல்ல காற்றோட்ட கட்டமைப்புகள் அவசியம்.

[தொகு]கிருமி நீக்கம் செய்தல்

வளர்ப்பு மனையையும், வளர்ப்புச் சாதனங்களையும் இருமுறை கிருமி நீக்கம் செய்ய வேண்டும். அறுவடை முடிந்தவுடன் 5% பிளீச்சிங் பவுடரிலும், அடுத்து வளர்ப்பு தொடங்கும் 2 தினங்களுக்கு முன் 2.5% சேனிடெக் கொண்டும் கிருமி நீக்கம் செய்ய வேண்டும்.

[தொகு]தண்டு வளர்ப்பு - ஒரு சிக்கன வழி

இம்முறையில், கடைசி மூன்று பருவங்களில் உள்ள புழுக்களுக்கு இலைகளைத் தண்டோடு அறுவடை செய்து உணவளித்துப் புழு வளர்க்கலாம். தண்டு வளர்ப்பில் 40% வேலையாட்கள் குறைவதற்கு இது சிக்கன வழியாகும். இத்திட்டத்தின் பிற நன்மைகள்,
  • புழுக்களை கையால் தொடுவது குறைவதால் நோய் பரவுவது தடுக்கப்படுகிறது.
  • புழுக்களும், இலைகளும் புழுக்களின் கழிவிலிருந்து தனிமைப்படுத்தப்படுவதால், இரண்டாம் நிலைத் தொற்று நோய் பரவலைத் தடுக்க முடிகிறது நல்ல சுகாதாரமான சூழல் பராமரிக்கப்படுகிறது.
  • இலைகளின் தரம், அறுவடையின் போதும், புழுப்படுக்கையிலும் நன்கு காக்கப்படுகிறது.
  • புழுப்படுக்கையில் நல்ல காற்றோட்டம் உருவாக்கப்படுகிறது.
  • புழுக்கள் நோய் தாக்கத்திலிருந்து தப்பித்து நன்கு வளர்வதால் தரமான கூடுகள் கிடைக்கின்றன.
  • இம்முறையில் செலவுகள் குறைகிறது.

[தொகு]உணவளித்தல்

50-55 நாட்கள் வயதுடைய 3/4 அடி உயரத்தில் உள்ள தண்டுகளை காலையில் குளிர்ச்சியான சமயத்தில் அறுவடை செய்த தண்டுகளை நிழற்பாங்கான, குளிர்வான, ஈரப்பதம் உள்ள இடத்தில், சுத்தமான கிருமி நீக்கம் செய்யப்பட்ட கோணிப்பைகளைக் கொண்டு போர்த்திப் பாதுகாப்பாக வைக்க வேண்டும் தண்டுகளை படுக்கைகளில் நீளவாக்கில் போட வேண்டும். தண்டுகளின் நுனிகள் எதிரெதிராக அமையுமாறு மாற்றி அடுக்குவதால் அனைத்துப் புழுக்களுக்கும் தரமான இலை கிடைக்க ஏதுவாகிறது..தினமும் மூன்று முறை உணவளிக்க வேண்டும்.முற்றிய இலைகளையோ அல்லது மண்ணுடன் உள்ள இலைகளையோ கொடுக்கக்கூடாது. புழுக்களைப் படுக்கையில் சீராக கிடக்கச் செய்யவேண்டும்.100 நோயற்ற முட்டைத் தொகுதிக்கு, 5 ஆம் பருவ கடைசியில் 700 சதுரஅடி இடம் தேவைப்படும்.

[தொகு]புழு படுக்கைகளை சுத்தம் செய்தல்

ஒவ்வொரு முறை சுத்தம் செய்யும் போது, நோய் பரவுவதைத் தடுக்க, எடைகுறைவான புழுக்களையும், நோய் தாக்கம் இருக்கலாம் என்ற சந்தேகத்திற்குரிய புழுக்களை பற்றுக் குச்சிக்கொண்டு அகற்ற வேண்டும். பொறுக்கிய புழுக்களை 2 சதவீதம் பிளீச்சிங் பவுடர் உள்ள 0.3 சதவீதம் நீர்த்த சுண்ணாம்பில் போட வேண்டும். படுக்கையில் உள்ள கழிவுகளைத் தரையில் போட்டுவிடக்கூடாது. ஈரப்பதம் மூன்றாம் பருவத்திற்கு 80 சதவீதமும், நான்கு மற்றும் ஐந்தாம் பருவத்திற்கு 70 சதவீதமாகவும் இருக்கவேண்டும். வெப்பத்தையும் ஈரப்பதத்தையும் தேவைக்கேற்ப பராமரிக்க வேண்டும். குளிர் சாதன பெட்டி, வெப்பக்கருவி, கரிஅடுப்பு, ஈரக்கோணிப்பை, கொண்டு தேவைக்கேற்ப வெப்பத்தையோ, குளிர்ச்சியையோ பெறமுடியும். மேலும் கூரைமீது நீர் தெளித்தும், ஈரமணல் கொண்டும் பராமரிக்க முடியும். குறுக்காக காற்றோட்ட வசதி செய்து புழுக்களின் உடல் வெப்பத்தைக் குறைக்கலாம்.

[தொகு]தோலுரிப்பு நேரங்களில் கவனிக்க வேண்டியவை

தோலுரிப்பு நேரங்களில் வளர்ப்பு மனை காற்றோட்டமாகவும் ஈரப்பதமின்றி இருக்க வேண்டும். புழுக்கள் தோலுரிப்பிற்கு தயாரானவுடன், படுக்கை காய்ந்து இருக்க நீர்த்த சுண்ணாம்பு தூள் தூவ வேண்டும். திடீர் வெப்பம் மற்றும் ஈரப்பத மாற்றத்தையும், அதிவேகமான காற்றையும், அதிக சூரிய ஒளியையும் தவிர்க்க வேண்டும். 95 சதவீத புழுக்கள் தோலுரித்த பின்பு உணவளிக்க வேண்டும்.

[தொகு]சுகாதாரம் மற்றும் பராமரிப்பு

  • வளர்ப்பு மனைக்குள் செல்வதற்கு முன்பு, கை, கால்களை கிருமி நாசினி கரைசலில் கழுவ வேண்டும். *முதலில் சோப்பு போட்டு கழுவிய பின்பு கிருமி நாசினி கரைசலில் கழுவ வேண்டும் (2.5 சதவீதம் சேனிடெக் / செரிக்ளோர் உள்ள 0.5 சதவீதம் சுண்ணாம்பு கரைசல் அல்லது 2 சதவீதம் பிளீச்சிங் பவுடர் உள்ள 0.3 சதவீத சுண்ணாம்பு கரைசல்)
  • நோய்வாய்ப்பட்ட புழுக்களை நீக்கிய பின்பும், படுக்கையைச் சுத்தம் செய்த பின்பும், உணவளிக்கச் செல்லும் முன்பும் கிருமி நாசினிக் கரைசல் கொண்டு கையைக் கழுவ வேண்டும்
  • நோய்தாக்கப்பட்ட புழுக்களைத் தினமும் அகற்றி சுண்ணாம்புத்தூள் மற்றும் பிளீச்சிங் பவுடர் உள்ள தொட்டியில் போட வேண்டும். பின்பு அதனை எரிக்கவோ அல்லது தூரமான இடத்தில் குழி தோண்டிப் புதைக்கவோ வேண்டும்.
  • பட்டுப்புழு வளர்ப்பின் போது, வளர்ப்பு மனையைச் சுத்தமாகவும், காற்றோட்டமாகவும் வைக்க வேண்டும்.

[தொகு]புழுப்படுக்கை கிருமிநாசினி பயன்படுத்துதல்

விஜேதா, விஜேதா கிரீன், அங்குஷ் ஆகியவற்றை புழு படுக்கையில் மற்றும் புழுக்களின் மேல் தூவியும் நோய்களைத் தடுக்கலாம். இவற்றைக் கீழ்க்கண்டவாறு பயன்படுத்தலாம். ஒவ்வொரு தோலுரிப்பிற்குப் பின்பும், 5 ஆம் பருவத்தில் 4 ஆம் நாளும் புழுப்படுக்கையின் மீது ஒரு சதுர அடிக்கு 5 கிராம் என்ற அளவில் ஒரு மெல்லிய வெள்ளைத் துணியில் கட்டி ஒரே சீராக எல்லா புழுக்களின் மீதும் படும்படி தூவவேண்டும்.

[தொகு]முதிர்ந்த புழுக்களைத் தட்டியில் விடுதல்

ஐந்தாம் பருவத்தின் 7 ஆம் நாளில் புழுக்கள் முற்றி, உணவு உண்பதை நிறுத்தி கூடு கட்ட இடம் தேடும். நல்ல தரமான கூடுகளைப் பெற, முதிர்ந்த புழுக்களை உரிய நேரத்தில், தரமான கூடு கட்டும் தட்டுகளில், விடவேண்டும். கூடு கட்டு தட்டின் அளவை மீறி புழுக்களைத் தட்டியில் விடக்கூடாது. புழுக்கள் கூடுகட்டிக் கொண்டிருக்கும் போது. 24சி வெப்பமும் 60-70 சதவீதம் ஈரப்பதமும் நல்ல காற்றோட்டமும் தேவை.

[தொகு]பட்டுக்கூடு அறுவடை மற்றும் பிரித்தல்

கூடு கட்டிய ஆறாம் நாளில் அறுவடை செய்ய வேண்டும். நலிந்த கூடுகளை அகற்ற வேண்டும். பின்பு கூடுகளின் தரத்தைப் பொறுத்து பிரிக்க வேண்டும். குளிர் காலத்தில் 1 நாள் தாமதித்து அறுவடை செய்ய வேண்டும்.

[தொகு]விற்பனை

அறுவடை செய்த கூடுகளை குளிர்ச்சியான நேரத்தில், 7 ஆம் நாளில் அனுப்பவேண்டும். 30-40 கிலோ தாங்கக்கூடிய நைலான்/சணல் வலைப்பைகளில் காற்றோட்டமாக நிரப்பி, அறைவசதி உள்ள வாகனங்களில் எடுத்துச்செல்ல வேண்டும்.பட்டுப்புழு கூடு மகசூல்
100 நோயற்ற முட்டைத் தொகுப்பிலிருந்து சராசரியாக 60-70 கிலோ கூடுகள் கிடைக்கும். ஒரு வருடத்தில், 1 ஏக்கர் மல்பெரி தோட்டத்தைக் கொண்டு 700-900 கிலோ கூடுகளைப் பெறமுடியும்.

பாகற்காய்

பாகற்காயின் கசப்புச் சுவைக்கு பயந்தே பலர் அதை ஒதுக்கி விடுகிறார்கள். ஆனால் கசப்புத் தன்மை அவர்கள் நினைப்பது போல விஷம் அல்லது. மாறாக அமுதத்துக்கு சமமானது. நம்முடைய உடம்பு தனக்கு வேண்டிய அளவு இந்தச் சத்தை உறிஞ்சிக் கொண்டு எஞ்சியவற்றை கழிவுப் பொருட் களாக வெளித் தள்ளிவிடும். பாகற்காய் சூடு உண்டாக்கும். கொம்பு பாகற்காய், மிதி பாகற்காய் என இரண்டு வகைகள் உண்டு. இரண்டுமே கறி சமைத்து உண்ணக் கூடியவை. இது கசப்புள்ளதாக இருந்தாலும் பருப்பு, தேங்காய் முதலியவற்றைச் சேர்த்து சமைத்தால் உண்பதற்கு சுவையாக இருக்கும். 
இது உணவுப்பையில் உள்ள பூச்சிகளைக் கொல்லும். பசியைத் தூண்டும். பித்தத்தை தணிக்கும். மலத்தை இளக்கும். பெண்களுக்கு பாலைக் கொடுக்கும். இதனுடன் சிறிது புளி சேர்த்துக் கொண்டால் நல்லது. பாகற் காயை அவ்வப்போது சேர்த்துக் கொண்டால் ஜூரம், இருமல், இரைப்பை, மூலம், வயிற்றுப்புழு ஆகியவை அகலும். நீரழிவு வியாதி உள்ளவர்கள் இதை சாப்பிட வேண்டாம். 

பாகற்காய் எளிதில் ஜPரணமாகாது என்றாலும் ஜடாராக் கினியை ஊக்குவிக்கும். கபம், பித்தம், ரத்த தோஷம், பாண்டு, குஷ்டம், மந்தம், காமாலை ஆகிய கொடிய நோய்களை எளிதில் போக்குவது இதன் இயல்பாகும். 

பாகற்காய் சிறந்த உணவுப் பொருளாக மட்டுமில்லாமல் மருந்துப் பொருளாகவும் பயன்படுகிறது. பாகற்காய் இலையின் சாறினை ஒரு அவுன்சு சிறிது வறுத்துப் பொடித்த சீரகத் தூளைக் கலந்து காலை, மாலை ஆகிய இரண்டு வேளையும் உட்கொண்டால் விஷ சுரம் நின்று விடும். இலையை அரைத்து உடம்பு முழுவதும் தடவி 1 மணி நேரம் ஊறியபின் குளிக்க வேண்டும். இது போன்று 3 நாட்கள் தொடர்ந்து செய்து வந்தால் நாய்க் கடியின் விஷம் உடம்பில் ஏறாது. 

பாகல் இலைச் சாற்றில் காசிக் கட்டியை சிறிது உரைத்து சிரங்கின் மேல் நல்ல தடிப்பாக தடவி வந்தால் ரத்தம் சுத்தம் செய்யப் பெற்று சிரங்கு உதிர்ந்து விடும். பாகற் காய் வேரை சந்தனம் போல அரைத்து நல்லெண்ணெய் - யில் குழைத்து ஜனனேந்திரியத்தின் உள்ளும் புறமும் தடவி வந்தால் பெண்களுக்கு கருப்பை நோய் தீரும். பிரசவத்துக்குப் பின்வரும் மண்குத்தி நோய்க்கு இது கண்கண்ட மருந்து. 

கொடி பாகல் இலையுடன் 500 மிளகைச் சேர்த்து காரமற்ற அம்மியில் அரைத்து கண்களைச் சுற்றிப் பற்று போட்டு வந்தால் மாலைக்கண் அகலும். 2 அவுன்ஸ் பாகல் இலைச் சாற்றிலே சிறிது வெல்லத்தைக் கரைத்து சாப்பிட்டால் வயிற்றிலிருக்கும் நாக்குப்பூச்சிகள் வெளியேறும். பாகல் சாற்றில் சிறிது குங்குமப் பூவை அரைத்துச் சாப்பிட்டால் பெருத்திருந்த வயிறு சிறுத்து விடும். பாகல் இலைச் சாற்றை குடிப்பதால் பாம்பு விஷம் நீங்கும். பாகல் இலையை உலர்த்தி பீடி போல சுற்றிக் கொண்டு அதன் புகையை உறிஞ்சினால் பல் நோய்கள் பறந்தோடி விடும். 

பாகல் இலைச் சாற்றை 1 அவுன்ஸ் எடுத்துக் கொண்டு அதில் 1_2 அவுன்ஸ் நல்லெண்ணெய் கலந்து உட் கொண்டால் காலரா உடனே நீங்கும். 1 அவுன்ஸ் பாகல் இலைச் சாற்றில் உளுந்தளவுக்கு பெருங்காயப் பொடியை கலந்து சாப்பிட்டு வந்தால் நீரழிவு நிரந்தரமாக குணம் ஆகும். 

அதுபோல 1 அவுன்ஸ் பாகல் இலைச் சாற்றுடன் அதே அளவு ஆட்டுப்பால் அல்லது பசுவின் மோர் கலந்து 3 நாட்கள் காலையில் சாப்பிட்டு வந்தால் காசநோயை மட்டுப்படுத்த முடியும்.

அப்பளத் தயாரிப்பு

வருடத்தின் எல்லா நாட்களிலும் தேவையாக இருக்கிற பொருள் அப்பளம்! அவசர சமையலுக்கு கை கொடுப்பதிலாகட்டும், விருந்து சாப்பாட்டை முழுமையாக்குவதில் ஆகட்டும்... அப்பளத்தின் பங்கு மகத்தானது.

‘‘இப்ப வர்ற அப்பளமெல்லாம் சுவையா இருக்கிறதில்லை. பரந்து பொரியறதில்லை. வெள்ளையா இருக்கிறதில்லை...’’ -இப்படி ஏகப்பட்ட ‘இல்லை’ புகார்களைக் கேட்கிறோம் சமீபகாலமாக! அப்பளம் தயாராகிற சூழலைப் பற்றியும் அவ்வப்போது சர்ச்சைகள் கிளம்புவதுண்டு. ‘‘கொஞ்சம் மெனக்கெட்டா நாமளே சுகாதாரமான முறையில வீட்லயே தயாரிக்கலாம். செலவும் குறைவு. ருசியும் அதிகம்’’.


‘அப்பளம், வடாம் போடறதெல்லாம் அத்தை, பாட்டி காலத்து வேலையாச்சே’ என நினைக்கிறவர்களும், இதை சுலபமாக செய்யலாம்

என்னென்ன தேவை

‘‘அரிசி, ஜவ்வரிசி, உப்பு, மிளகு, சீரகம் உள்ளிட்ட மளிகைச் சாமான்கள், அச்சு, சப்பாத்திக் கல், குழவி, கொஞ்சம் பாத்திரங்கள்... 

எத்தனை வெரைட்டி என்ன ஸ்பெஷல்

‘‘அரிசி அப்பளம், மரவள்ளிக் கிழங்கு அப்பளம், டபுள் அப்பளம்,பப்படம், மிளகு அப்பளம்னு அப்பளத்துலயும், ஓமப்பொடி, ரிப்பன்,தட்டை, ஜவ்வரிசி, வெங்காயம், குழம்புன்னு வடகத்துலயும் ஏகப்பட்ட வெரைட்டி இருக்கு. கடைகள்ல வாங்கறது ஒரே மாதிரியான உப்பு, காரத்தோடதான் கிடைக்கும். ஆனா வீடுகள்ல பண்ணும்போது, ஆர்டர் கொடுக்கறவங்களுக்கு எவ்வளவு உப்பு, காரம் தேவையோ அப்படிச் செய்யலாம். கடை அப்பளங்கள்ல சோடா உப்பு சேர்ப்பாங்க. வீட்டுத் தயாரிப்புல அது கிடையாது. தேவைக்கேத்தபடி தயாரிக்கிறதால, பழைய ஸ்டாக்கை கஸ்டமர் தலையில கட்ட வேண்டிய அவசியமிருக்காது.’’


விற்பனை வாய்ப்பு லாபம்

‘‘வாய்வழி விளம்பரமே போதும். அக்கம்பக்கத்து வீடுகள்,தெரிஞ்ச ஆபீஸ், ஸ்கூல் மாதிரி இடங்கள்ல தொடர்ந்து ஆர்டர் எடுத்தாலே மாசம் முழுக்க விற்பனை இருக்கும். கடைகளுக்குக் கொடுக்க வேண்டிய அவசியமே இருக்காது. ஒரு நாளைக்கு ஒருத்தர் மட்டுமே 10 கிலோ வரைக்கும் செய்யலாம். 100 அப்பளம் போடலாம். 30 சதவீத லாபம் நிச்சயம்.’’

பூப்பூவாய் பூத்திருக்கும் அப்பளப் பூ!


விருந்துச் சாப்பாடு என்றால் நிச்சயம் அப்பளம் உண்டு. திருமண விழா, கோயில் அன்னதானம் ஆகியவற்றில் பெரிய அளவு அப்பளம் இடம் பெறும்.
அப்பளத்தை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லாருக்கும் பிடிக்கும். தமிழகத்தில் பல ஊர்களில் அப்பளம் தயாரிக்கப்படுகிறது. ஆனால் மதுரை அப்பளத்திற்கு சந்தையில் தனி இடம் உண்டு.
  அப்பளத்தில் ஒருவகை அப்பளப் பூ. வீடுகளில் மதிய உணவின்போது இடம்பெறுவது அப்பளப் பூ. இதைக் குழந்தைகள் மிகவும் விரும்புவார்கள். இத்தகைய சிறப்பு வாய்ந்த அப்பளப் பூவினை விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் உள்ள பூர்ணிமா மகளிர் மன்றத்தினர் வியாபாரரீதியில் தயாரித்து, வெற்றி
கரமாக விற்பனை செய்து வருகிறார்கள்.
இக்குழுவின் ஊக்குநர் பி.கலாமாலினி, பிரதிநிதிகள் டி.செல்வி, ஆர்.கார்த்தியாயினி ஆகியோரிடம் அப்பளப் பூ
தயாரிப்பு மற்றும் வியாபாரம் குறித்து
கேட்டோம்.
 நீங்கள் இந்தக் குழுவை எப்போது தொடங்கினீர்கள்?.
2002 ஆம் ஆண்டு இந்தக் குழுவைத் தொடங்கினோம். தொடக்கத்தில் 20 பேர் இருந்தோம். 2005-ம் ஆண்டு வரை ஒவ்வொருவரும் மாதம் ரூ.100 வீதம் செலுத்தி, அப்பணத்தை உறுப்பினர்களுக்கிடையே வட்டிக்கு கொடுத்து வாங்கிவந்தோம்.
  எப்போது அப்பளப் பூ தயாரிக்கத் தொடங்கினீர்கள்?
  20 பேரில் எட்டு பேர் குழுவைவிட்டு வெளியேறிவிட்டார்கள். மீதமுள்ள 12 பேர் சேர்ந்து 2006-ம் ஆண்டு அப்பளப் பூ தயாரிப்பைத் தொடங்கினோம்.
  இந்தத் தொழில் தொடங்க எப்படி யோசனை வந்தது?
  அருப்புக்கோட்டையில் ஆசாரிமார் தெருவில் 75 சதம் வீடுகளில் அப்பளப் பூ தயாரிப்புத் தொழில் குடிசைத் தொழில்போல நடந்து வருகிறது. குழுவில் உள்ள 12 பேரும் இதே பகுதியைச் சேர்ந்தவர்களாக இருந்ததால், அனைவரும் இணைந்து இந்தத் தொழிலைத் தொடங்கலாம் என்ற  எண்ணம் வந்தது.
தொடக்கத்தில் இதற்கு எவ்வளவு முதலீடு செய்தீர்கள்?
  12 பேரும் இணைந்து ரூ.20 ஆயிரம் முதலீட்டில் தொழிலை தொடங்கினோம். பின்னர் வங்கியில் ரூ.1.70 லட்சம், 2.50 லட்சம், 3 லட்சம் எனப் படிப்படியாகக் கடன் வாங்கினோம். சுழல் நிதி ரூ.60 ஆயிரம் கிடைத்தது. இவற்றை வைத்து எங்கள் தொழிலை விரிவாக்கினோம்.
 அப்பளத்திற்கும், அப்பளப் பூவிற்கும் என்ன வித்தியாசம்?
  மூலப்பொருள்கள் அனைத்தும் ஒன்றுதான். வடிவத்தில் மாற்றம் வரும். அப்பளம் என்றால் வட்ட அப்பளம்தான். அப்பளப் பூ என்றால் மோதிரம், சோவி, இலை வடிவங்களில் உள்ள அப்பளப்பூ என மூன்று வகை உள்ளது. இந்த மூன்று வகைகளையும் நாங்கள் தயாரிக்கிறோம்.
  இதை எப்படி சந்தைப்படுத்துகிறீர்கள்?
  இதற்கு எங்கள் குழுவில் உள்ள கார்த்தியாயினி இருக்கிறார். அவருடைய கணவர் ராஜபாண்டியன் உதவியாக உள்ளார்.
அருப்புக்கோட்டை, ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி, ராஜபாளையம் ஆகிய ஊர்களில் கடைகளில் ஆர்டர் பெற்று, தயாரிக்கப்பட்ட அப்பளப் பூவை லாரி மூலம் அனுப்பி வைத்து, வாரம் ஒருமுறை சென்று பணம் வசூலித்து வருகிறோம்.
  குழுவில் உள்ள 12 பேரில் அப்பளப் பூ தயாரிப்பில் எத்தனைபேர் ஈடுபட்டுள்ளீர்கள்?
  ஊக்குநர், பிரதிநிதிகள், உறுப்பினர்கள் உள்பட 6 பேர் இதில் ஈடுபட்டுள்ளோம். மேலும் இருவர் இட்லி மாவு தயாரித்து விற்பனை செய்து வருகிறார்கள். இருவர் சேலை வியாபாரம் செய்து வருகிறார்கள். இருவர் தனியே அப்பளப் பூ தயாரிக்கிறார்கள். குழுவில் உள்ள 12 பேரும் தொழில் செய்து வருகிறோம்.
  அப்பளப் பூ தயாரிப்பில் ஈடுபட்டுள்ள 6 பேருக்கும் மாதம் எவ்வளவு வருமானம் கிடைக்கும்?
  சராசரியாக மாதம் தலா ரூ.2500 வருமானம் வருகிறது. மேலும் நாங்கள் அப்பளப் பூ தயாரிக்க 8 பெண் தொழிலாளர்களை வேலைக்கு வைத்துள்ளோம்.
 ஒரு நாளைக்கு எவ்வளவு அப்பளப் பூ தயாரிக்கிறீர்கள்?
  தொடக்கத்தில் தினசரி 10 கிலோ தயாரித்தோம். இப்போது 40 முதல் 50 கிலோ வரை தயாரிக்கிறோம். நாங்கள் 50 கிராம், 100 கிராம், 250 கிராம், 500 கிராம் பாக்கெட் போட்டு கடைகளுக்கு அனுப்பி
வைக்கிறோம்.
  அப்பளப் பூ தயாரிக்க எங்கிருந்து மூலப்பொருள்களை வாங்குகிறீர்கள்?
  அப்பளப் பூ தயாரிக்க உளுந்தம் பருப்பு, பெருங்காயம், சோடா உப்பு, சீரகம், உப்பு ஆகியவை தேவை. இவற்றை மதுரையில் உள்ள மொத்த வியாபாரிகளிடம் வாங்குகிறோம். போன் செய்தால்போதும் சரக்கை அனுப்பிவிட்டு, பணத்தைப் பெற்றுச் செல்வார்கள்.
  ஆண்டு முழுவதும் தயாரிப்புத் தொழில் நடைபெறுமா?
  ஆண்டுக்கு 8 மாதம் வியாபாரம் நன்றாக நடக்கும். மீதம் உள்ள நான்கு மாதம் வியாபாரம் சுமாராக நடைபெறும். மழைக் காலங்களில் அப்பளப் பூவைக் காய  வைக்க இயலாது. அந்த சமயத்தில் தயாரிக்க முடியாது. மற்றபடி வியாபாரம் நன்றாக உள்ளது. பல சமயங்களில் ஆர்டர் அதிகமாக இருக்கும். சரக்கு தயாரிக்க இயலாதநிலை ஏற்படும்.

மூலிகைத் தாவரங்களும் அதன் மருத்துவ குணங்களும்-15

வெள்ளரி. (CUCUMBER)





வெள்ளரி. (CUCUMBER)


மூலிககையின் பெயர் –: வெள்ளரி. (CUCUMBER)


தாவரப்பெயர் -: CUCUMIS SATIVS. 

தாவரக் குடும்பம் –:CUCURBITACEAE.

வெள்ளரி வகைகள் -: CITRULLUS LANATUSVAR LANATUS.

CUCMIS MELO.

CUCURBITA MAZIMA.

CUCURBITA MOSCHATA.

LAGENARIA SPP.

SICYOS ANGULATUS….. ஆகியவை.


பயன்தரும் பாகங்கள் -: கொழுந்து, பிஞ்சு, காய், பழம் மற்றும் வேர்.

வளரியல்பு -: வெள்ளரி படரும் கொடி வகையைச் செர்ந்த ஒரு காய் கறி வகை நல்ல மூலிகையும் கூட. இதன் முக்கிய மூன்று வகைகள்  SLICING, PICKLING & BURPLESS ஆகும். இதன் வேர் பூமிக்கடியில் இருக்கும்..இலைகள் அகலமாக இருக்கும் இலையின் அடி பாகத்தில் பூ விட்டு பிஞ்சுகள் உற்பத்தியாகும்.கொடிகள் படர்வதற்கு பக்க வாட்டில் சுருள் கம்பி போன்ற வேர்கள் இருக்கும் அதன் உதவியால் நிலத்திலோ மேல் நோக்கியோ பிடித்துப் படரும்.வெள்ளரியை சம வெளியிலும் குழங்களிலும், பசமை கூடாரங்களிலும் வளர்க்கலாம். இது வளர்வதற்கு நல்ல வளமான மண் வேண்டும்.வடிகால் வசதி இருக்க வேண்டும்.விதைகளை மண்ணில் ஒரு அங்குலத்திற்குக் கீழ் நடவேண்டும்.இடைவெளி இரண்டடி இருக்க வேண்டும்.ஈரப்பதம் இருந்து கொண்டே இருக்க வேண்டும்.காயின் நீளம் 60 செ.மீ.வரையும் அகலம் 10 செ.மீ. விட்டமும் இருக்கும். இது வகைக்கு வகை வேறு படும். காயிக்குள் இரு அடுக்காக விதைகள் இருக்கும்.வெள்ளரியில் 90 சதம் தண்ணீர் இருக்கும்.காய் கறி போல் சாப்பிடப் பயன் படுத்துவார்கள். பிஞ்சாக இருக்கும் போது பச்சையாக யாவரும் விரும்பிச் சாப்பிடுவார்கள். நட்ட 30 வது நாளில் பூக்க ஆரப்பிக்கும்.50 நாளிலிருந்து பறிக்க ஆரம்பிக்கலாம். பிஞ்சை 3 ரகமாகப் பிரிக்க வேண்டும். ஒரு ஏக்கருக்கு 600 குழிகள் தோண்ட வேண்டும்.2 அடி இடைவெளி விட வேண்டும். ஒரு குழிக்கு மூன்று விதைகள் போடவேண்டும். ஒரு வாரத்திற்கு ஒரு முறை தண்ணீர் பாச்சினால் போதும்.ஒரு ஏக்கருக்கு 150 கிராம் விதை தேவைப்படும்.பூக்கள் ஆண், பெண் இரு சம மாகப் பூக்கும்.மஞ்சள் நிறத்தில் இருக்கும்.தேனீக்கள் அதிகம் வருவதால் மகரந்தச் சேர்க்கை அதிகமாக ஏற்படும்.வெள்ளரியின் தாயகம் இந்தியா தான்.3000 வருடங்களுக்கு முற்பட்டது .பின் உலக நாடான ஐரோப்பா, கிரேக்கர்கள், ரோமானியர்கள், பயிரிட்டனர். 9 ம் நூற்றாண்டில் பிரான்சுக்குப் பரவிற்று. 14 ம் நூற்றாண்டில் இங்கிலாந்திலும்,  வட அமரிக்கா 16 ம் நூற்றாண்டிலும் பரவிற்று. பின் ஆப்பிரிக்காவிலும் தற்போது செர்பியாவிற்கும்.பரவிற்று. வெள்ளரி பயிரிடுவதில் உலக அளவில் சைனா 60 சதமும், அடுத்து துருக்கி, இரான், ரஸ்யா, அமரிக்கா, உக்ரைன், ஸ்பெயின், எகிப்து, ஜப்பான், இந்தோநேசியா என எப்.ஏ. ஓ. ன் அமரிக்க ஆய்வு கூறுகிறது. இந்த மாதத்தில் வெள்ளரி அதிகம் விளைவிக்கப்படுகிறது. மார்க்கட்டில் எல்லா இடங்களிலும் பழமுதிர் நிலையங்களிலும் கிடைக்கின்றது. வெள்ளரி விதை மூலம் உற்பத்தி செய்யப்படுகிறது.

மருத்துவப் பயன்கள் –; வெள்ளரியில் உள்ள நீர் சத்து நா வரட்சியைப் போக்குவதுடன் பசியை உண்டாக்கும். உடம்புக்குக் குளிர்ச்சியை உண்டு பண்ணும்.வெள்ளரியில் தாதுப் பொருட்களான சோடியம், கால்சியம், மக்னேசியம், இரும்பு, பாஸ்பரஸ், கந்தகம், சிலிகன், மற்றும் குளோரின் இதில் உண்டு .இரத்ததில் சிவப்பணுக்களை உற்பத்தி செய்யும் பொட்டாசியம் அதிகம் உண்டு. ஈரல், கல்லீரல் சூட்டைத் தணிப்பதால் நோய் குணமாகும். செரித்தல் அதிகம் ஏற்படுவதால் பசி அதிகமாகும். வெள்ளிரியை உண்பதால் 'பசிரசம்' எனும் ஜீரண நீர் சுரக்கிறது என்பது  விஞ்ஞானிகளின் கண்டு பிடிப்பு. இது மலத்தைக் கட்டுப்படுத்தும், பித்தத்தைக் குறைக்கும், உள்ளரிப்பு, கரப்பான் போன்ற சரும நோய்களைப் போக்கும் ஆற்றல் வெள்ளிரிக்கு உண்டு. வெள்ளிரிப் பிஞ்சை உட்கொண்டால் மூன்று தோசமும் போகும் என்று பழைய வைத்திய நூல்கள் கூறுகின்றன. புகை பிடிப்போரின் குடலை நிகோடின் நஞ்சு சீரளிக்கின்றது .அதையும் போக்க வல்லது. மூளைக்குக் கபால சூட்டைத் தணித்து குளிர்ச்சியூட்டி புத்துணர்ச்சி தரும்.கபம், இருமல் நுரையீரல் தொல்லையுள்ளவர்கள் வெள்ளரி சாப்பிடுவது நல்லதல்ல. 100 கிராம் வெள்ளரியில் 18 கிராம் கலோரிதான் இருக்கிறது. குறைந்த கலோரி உள்ள காய்கறியாகும். இது சிறுநீர் பிரிவைத் தூண்டக் கூடியது. இரைப் பையில் ஏற்படும் புண்ணைக் குணப்படுத்தும்.

நன்றி Face Book.
  1. காய்கறிகளுள்ளே குறைவான கலோரி அளவைக் கொண்டிருப்பது வெள்ளரிக்காய்தான். 100 கிராம் வெள்ளரிக்காயில் கிடைக்கும்கலோரி 18தான்.
2.விஞ்ஞானிகள் வெள்ளரிக்காயைப் பழவகையில் சேர்த்துள்ளனர்; ஆனால், மக்கள் இதைக்காய்கறிப் பட்டியலில் சேர்த்துள்ளனர்;பச்சையாகவும், சமையலில் சேர்த்தும் சாப்பிடுகின்றனர். 
3. வெள்ளரிக்காய், குளிர்ச்சியானது. அப்படியே உண்ணத்தூண்டும் அளவுக்குத் தனிச் சுவையுடையது.  நன்கு செரிமானம் ஆகக்கூடியது. சிறுநீர்ப் பிரிவைத் தூண்டச் செய்வது, இரைப்பையில் ஏற்படும் புண்ணையும் மலச்சிக்கலையும் குணப்படுத்தக்கூடியது.

  1. இக்காய் பித்தநீர், சிறுநீரகம் ஆகியன சம்பந்தப்பட்ட அனைத்துக் கோளாறுகளையும் குணமாக்குவதில் தலைசிறந்து விளங்குகிறது.
  2. அண்மைக்கால ஆராய்ச்சி முடிவுகளை,வெள்ளரிக்காய் கீல்வாதம் சம்பந்தப்பட்ட கோளாறுகளையும் குணமாக்குவதில் வல்லமைமிக்க உணவாகத் திகழ்வதையும் நிரூபித்துள்ளன.
  3. ஆந்திர உணவில் எப்போதும் வெள்ளரிக்காயும் பாசிப்பருப்பும் கலந்து தயாரிக்கப்படும் பச்சடி உண்டு. காரணம்,ஆந்திரசமையலில் காரம் அதிகம். 100கிராம் வெள்ளரிக்காயில் 96 சதவிகிதம் ஈரப்பதம் உள்ளது. அது உணவில் உள்ள காரத்தை மட்டுப்படுத்தி இடையில் அடிக்கடி தண்ணீர் அருந்தாமல் சாப்பிட வைக்கிறது. மீதி நான்கு சதவிகிதத்தில் உயர்தரமான புரதம், கொழுப்பு,மாவுச்சத்து, தாது உப்புகள், கால்சியம்,பாஸ்பரஸ், இரும்பு, வைட்டமின் ‘பி’ஆகியவை அமைந்துள்ளன; வைட்டமின்‘சி’யும் சிறிதளவுஉண்டு.
  4. சாதாரணமாக வெள்ளரிக்காயைப் பச்சையாகக்கடித்துச் சாப்பிடுவது வழக்கம். ஆனால், வெள்ளரிக்காய்களை மிக்ஸி மூலம் சாறாக்கியும் அருந்தலாம்.
  5. இளநீரைப் போன்றே ஆரோக்கிய ரசமாய் வெள்ளரிக்காய்ச் சாறு திகழ்கிறது.
  6. வெள்ளரியைச் சமைத்துச்சாப்பிடும் போது பொட்டாசியம், பாஸ்பரஸ் ஆகிய உப்புகள் அழிந்து விடுகின்றன. எனவே,வெள்ளரிச்சாறுக்கு முக்கியத்துவம் கொடுங்கள்.
  7. வயிற்றுப்புண் உள்ளவர்கள் இரண்டுமணி நேரத்திற்கு ஒரு தடவை ஆறு அவுன்ஸ் வீதம் வெள்ளரிச் சாறு அருந்தினால் குணம் தெரியும்.
  8. காலராநோயாளிகள் வெள்ளரிக்கொடியின் இளந்தளிர்களை ரசமாக்கி, அதனுடன் இளநீரையும் கலந்து, ஒருமணிக்கு இரண்டு அவுன்ஸ் வீதம் அருந்த வேண்டும்.
  9. வறண்ட தோல், காய்ந்து விட்ட முகம் உள்ளவர்கள், வெள்ளரிக்காய் சீசனில் தினமும் வெள்ளரிக்காய்ச் சாறு சாப்பிட்டு வறட்சித் தன்மையைப் போக்கலாம்.
  10. தினமும் மிகச்சிறந்த சத்துணவு போல் சாப்பிடத் தயிரில் வெள்ளரிக் காய்த்துண்டுகளை நறுக்கிப் போடவும்.அத்துடன் காரட், பீட்ரூட், தக்காளி,முள்ளங்கி ஆகியவற்றின் சிறிய துண்டுகளையும போட்டுவைத்து வெஜிடேபிள் சாலட் போல் பரிமாற வேண்டும். அது இல்லத்தில் உள்ள அனைவருக்கும் சத்துணவு கிடைக்கச் செய்கிறது. மேலும் இது நோய் எதிர்ப்புச் சக்தியை அளிக்கும் ஆற்றலையும் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்க ச்செய்யும்.
  11. இக்காயில் உள்ள சுண்ணாம்புச் சத்து இரத்தக் குழாய்களைத் தளர்த்தி உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்க வல்லது.
  12. மலச்சிக்கலுக்காகச் சிலர் ஏதாவது ஒரு பழம் சாப்பிடுவார்கள். அதற்குப்பதிலாகத் தினசரி இரண்டு வெள்ளரிக்காய்களைச் சாப்பிட்டால் மலச்சிக்கலின்றி எப்போதும் குடல் சுத்தமாய் இருக்கும்.
  13. முகத்தில் உள்ள கரும் புள்ளிகள்,வறண்ட தோல், பருக்கள் முதலியவை குணமாக வெள்ளரிக்காயை அரைத்து
  14. முகத்தில்பூசவேண்டும். பதினைந்து
  15. நிமிடங்கள் முகத்தில் இந்தப் பூச்சு இருக்கவேண்டும். தொடர்ந்து இந்த முறையில் பூசினால் முகம் அழகு பெறும். பெண்கள் இந்த முறையைத் தினசரி பின்பற்றலாம்.
  16. நீரிழிவு நோயாளிகள் எடை குறைய விதையுடன் சேர்த்தே வெள்ளரிக்காய் சாற்றை அருந்த வேண்டும். சிறிய வெள்ளரிக் காய் என்றாலும் பெரியவகை வெள்ளரிக்காய் என்றாலும், அதை விதையுடன் தான் அரைத்துச் சாறு அருந்தவேண்டும். இதனால் ஆண்மை பெருகும்.
  17. முடிவளர்ச்சிக்கு குறிப்பாகப் பெண்கள் வெள்ளரிச் சாற்றை அருந்த வேண்டும்.வெள்ளரியில் உள்ள உயர் தரமான சிலிகானும், சல்பரும் முடி வளர்ச்சிக்குப் பயன்படுகின்றன. இந்தச் சாற்றுடன் இரு தேக்கரண்டி காரட் சாறு,  இரு தேக்கரண்டி பசலைக் கீரைச்சாறு,பச்சடிக் கீரைச் சாறு போன்ற வற்றையும் சேர்த்து அருந்தினால் முடி நன்கு வளரும். முடிகொட்டுவதும் நின்றுவிடும்.
  18. காரட்கிழங்கைப் போலவே, வெள்ளரிக் காயில் தோல் பகுதி அருகில் தான் தாது உபபுகளும், வைட்டமின்களும் அதிக அளவில் உள்ளன. எனவே, தோல் சீவாமலேயே வெள்ளரிக்காய்களை நன்கு கழுவிப் பயன்படுத் துங்கள்.
  19. மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கூட இந்தியாவில் தோன்றிய வெள்ளரிக்காயின் தாவர விஞ்ஞானப் பெயர் குக்குமிஸ்ஸாடிவாஸ் என்பதாகும். இது மலைப்பகுதிகளில் நன்கு வளர்கிறது. இமயமலைப் பகுதியிலிருந்து வரும் சிக்கிம் வெள்ளரி15 அங்குலம் நீளமும் 6 அங்குலம் கனமும் உள்ளது.
  20. ஜமைகாநாட்டு வெள்ளரிக்காய் எலுமிச்சம்பழ அளவிலும், நிறத்திலும் இருக்கிறது. கிழக்கத்திய நாடுகளில் வாசனைக்காக வெள்ளரி அதிகம் பயிராக்குகின்றனர். பிரிஸ்ஜில் இரு வாரங்கள் வரை வைத்து வெள்ளரிக்காய் களை பயன்படுத்தலாம்.

தகவல்கள்:--இணையத்திலிருந்து--
Thanks to Engr.Sulthan

மூலிகைத் தாவரங்களும் அதன் மருத்துவ குணங்களும்-20

நத்தை சூரி செடியின் மருத்துவ குணங்கள்:-

தமிழகம் எங்கும் மணற்பாங்கான இடங்களிலும், தோட்டங்களில் நீரோடைகளின் இரு பக்கங்களிலும் தானாகவே வளர்கின்றது. விதை, வேர், மருத்துவக் குணம் உடையது. வேர் நோயை நீக்கி உடலைத் தேற்றவும் தாதுப் பலத்தை அதிகரிக்கவும், விதை தாதுக்களின் எரிச்சலைத் தவிர்க்கவும், தாது வெப்பத்தைத் தணிக்கவும் பயன்படுகின்றது.

வேறு பெயர்கள்: சூரி, தாருணி, குழி மீட்டான்.

ஆங்கிலத்தில்: Spermacoce hispida; Linn; Rubiqceae
மருத்துவக் குணங்கள்: நத்தைச் சூரி இலையை நசுக்கி பழுக்காத கருணைக் கட்டி மீது பற்றுப் போட்டு வர கட்டி உடையும்.

நத்தைச் சூரி வேரை 10 கிராம் எடுத்து பசும்பாலில் அரைத்து 1 டம்ளர் பாலில் கலந்து வடிகட்டி இரண்டு வேளை குடித்து வர தாய்ப்பால் பெருகும். நத்தை சூரி வேரை 50 கிராம் எடுத்து ஒன்றிரண்டாக இடித்து அரை லிட்டர் நீரில் போட்டுக் கொதிக்க வைத்து, ஒரு கொதி வந்ததும் இறக்கி மூடி வைத்து 1 மணி நேரம் கழித்து வடிகட்டி 50 மில்லியளவு இரண்டு வேளை குடித்து வர சரும நோய்கள் குணமாகும்.

நத்தைச் சூரியின் சமூலத்தை அரைத்துப் பற்று போட கல் போன்ற வீக்கமும் கரைந்து ஓடிவிடும். நத்தைச் சூரி வேரை அரைத்து எலுமிச்சம் பழம் அளவு எடுத்து 30 மில்லி நல்லெண்ணெயுடன் கலந்து காலையில் மட்டும் 5 நாள் குடித்து வர அரையாப்புக் கட்டிகள் கரையும்.

நத்தைச் சூரியின் விதைகளை சட்டியில் போட்டு பொன் வறுவலாக வறுத்து விதைக்குத் தகுந்தவாறு கிணற்று நீரை ஊற்றி பாதியாகச் சுண்ட வைத்து வடிகட்டி 100 மில்லியளவு எடுத்து அத்துடன் 1 டம்ளர் பசும்பால் கலந்து 2 வேளை தொடர்ந்து குடித்து வர உடம்பில் பற்றியுள்ள ஊளைச் சதை குறையும். ஆண், பெண் இருவருக்குமுள்ள வெள்ளை நோய், வெட்டை நோய் குணமாகும்.

நத்தைச் சூரியின் விதையை வறுத்துப் பொடியாக்கி நீரில் போட்டுக் காய்ச்சி வடிகட்டி பால், கற்கண்டு சேர்த்து இரண்டு வேளை குடித்து வர உடல் சூடு தணியும். கல்லடைப்பு, சதையடைப்பு, வெள்ளை குணமாகும்.

நத்தைச் சூரியின் விதையைப் பொடியாக்கி அதேயளவு கற்கண்டை பொடி செய்து கலந்து 5 கிராம் அளவு 3 வேளையாகச் சாப்பிட்டு வர வெப்பக் கழிச்சல், சீதக் கழிச்சல் குணமாகும்.

நத்தைச் சூரி வித்தை அரைத்து நெல்லிக்காயளவு எடுத்து 1 டம்ளர் பாலுடன் கலந்து 2 வேளை சாப்பிட்டு வர உடல்பலம் அடையும். விந்து அதிகரிக்கும்.

நத்தைச் சூரி பூண்டை அரைத்து கல்லைப் போன்ற வீக்கத்திற்கு தடவிவர கரையும்..!!!

பசலை கீரை - Portulaca quadrifida

 

Common name: Chicken weed, Wild purslane,
Pasalai keerai (Tamil),
Goddu pavelli (Telugu)
Botanical name: Portulaca quadrifida      Family: Portulacaceae

பசலைக்கீரை போல் உடலுக்கு நன்மை செய்யும் சத்து உள்ள எளிய உணவு  வேறு இல்லை எனலாம் .

பசலைக் கீரை பொதுவாக மூன்று வகைப்படும். சிறு வெற்றிலை அளவில்  ந்நிறமுடையதாக இருக்கும் இலைகளுடன் கொடியாகப் படரும் பசலை கொடிப்பசலை எனப்படுகிறது. இதை வீட்டுத் தோட்டத்திலும் தொட்டிகளிலும் எளிதாக வளர்க்கலாம்.   

தரைப்பசலையின் இலைகள் மிகவும் சிறுத்து இளஞ்சிவப்பாகவும், பச்சையாகவும் இருக்கும். இது தரையில் படரும்.

இரும்புச் சத்து, பீட்டா கரோட்டின், ஃபோலிக் அமிலம், கால்சியம் எல்லாமே இதில் அதிகம்.
ஃபோலாசின் நோய்த் தடுப்புக்கு முக்கியம் என்பதால் இதயநோய் வராமல் தடுக்க உதவுகிறது.
அதே சமயம் இதிலிருக்கும் ஆக்ஸாலிக் அமிலம் உடலில் இரும்பு, கால்சியம் சேராமல் தடுக்கிறது. இதனால் இதய நோயாளிகள் இந்தக் கீரையை அளவுக்குமீறி சாப்பிடக் கூடாது.
இதிலுள்ள விட்டமின் ஏ பார்வைக் கோளாறை தடுப்பதோடு சோர்வை நீக்கி, ரத்த
விருத்திக்கும் உதவுகிறது.

இந்த கீரையில் வைட்டமின்   A, B C  சத்துகள் உள்ளது . சுண்ணாம்பு  சத்து  நார் சத்து  இரும்பு சத்து அடங்கியது . இது தாதுவை கெட்டிப்படுத்தும். மூளைக்கு சக்தி கொடுக்கும் .
உடல் வரட்ச்சியை அகற்றும். உள சூட்டை போக்கும். மருத்துவக் குணங்கள் இதில் மிக அதிகமாக உள்ளன . பச்சையம் கொழுப்பை கரைக்கும் தன்மையுள்ளது.

ரத்தத்தின் சிவப்பு அணுக்கள், ஹீமோகுளோபின் ஆகியவை அதிகமாக உற்பத்தியாக உதவுகிறது. ஹீமோகுளோபின் ரத்தத்தில் ஆக்ஸிஜனை ஏற்றிச் சென்று உடலின் செல்களுக்கு தந்து அங்கிருந்து கரியமிலவாயுவை வெளியேற்றுகிறது. இதனால் ரத்தம் சுத்தமாகி உடலில் பாக்டீரியா தாக்காமல் தடுக்கிறது. இக்கீரையில் இருக்கும் பொட்டாசியம் நரம்பு மண்டலத்துக்கு வலுவூட்டுகிறது. ரத்த அழுத்தம் சீராக இருக்கவும் பயன்படுகிறது.
 இதிலுள்ள விட்டமின் ஏ பார்வைக் கோளாறை தடுப்பதோடு சோர்வை நீக்கி, ரத்த
விருத்திக்கும் உதவுகிறது.

ஒரு கப் பசலைக்கீரையில் இருக்கும் உணவுச்சத்து: கலோரி 40, கொழுப்பு 0, சோடியம் 80 மில்லிகிராம், விட்டமின் ஏ 6800 IU (இது ஒரு நாளைக்கு தேவைப்படும் அளவை விட ஒன்றரை மடங்கு அதிகம்), விட்டமின் சி 28 மி.கிராம், ஃபோலாசின் 200 மி.கிராம், கால்சியம் 100 மி.கிராம், பொட்டாசியம் 560 மி.கிராம்.

இலையை நன்றாக அரைத்து கொப்புளம், கழலை, வீக்கம் ஆகியவற்றின் மீது பற்றிட்டால் அவை குணமாகும்.

இலையை அரைத்து நெற்றியில் பற்று போட்டால் சூட்டினால் உண்டான தலைவலி நீங்கும்.
பசலை கீரை ஏழைகளின் சத்துள்ள தாவர  டானிக் !
தகவல்:சித்த மருத்துவம்

Engr.Sulthan