வெள்ளாடு வளர்ப்பு
உள்ளூர் இனங்களையே வாங்கவேண்டும். காலம்காலமாக அந்த பகுதியில் வளர்ந்து, சூழ்நிலைக்கு ஏற்ப வாழப்பழகி இருக்கும் உள்ளூர் ரகங்களை வாங்கி வளர்ப்பதே சிறந்தது.
வெள்ளாடு வாங்குவது எப்படி |
பலமுறை குட்டிபோட்டவயதான ஆடுகளை வாங்கவேண்டாம். மாடுகளைப் போல ஆடுகளையும் பல்பார்த்து வாங்க வேண்டும். அதாவது கீழ்தாடை முன்பற்கள் விழுந்து முளைப்பதாகும். ஓராண்டு வரை 8 பால்பற்கள் இருக்கும். பின் இரண்டாண்டு பற்களாக விழுந்துமுளைக்கும். ஓராண்டு முடிந்தபின் இரு பற்கள் விழுந்து முளைக்கும். தோராயமாக எளிதாக நினைவில் வைத்துக்கொள்ள கீழ்க்கண்டபடி பல் பார்த்து வயது கணக்கிட்டு வாங்க வேண்டும். ஆடுகளுக்கு 2 பல் இருந்தால் 1 வயது. 4 பல் இருப்பின் 2 வயது. 6 பல் என்றால் 3 வயது. 8 பல் என்றால் 4 வயது என்று கொள்ளலாம். எனவே இளம் ஆடுகளையே வாங்க வேண்டும்.
ஓரிரு ஆடுகளை வாங்குபவர்கள் 3, 4 குட்டி போடும் ஆடுகளை அறிந்து வாங்க வேண்டும். முதுகு பிடித்து பார்த்து ஆட்டின் முதுகெலும்பின் தசை செழிப்பாக வளர்ச்சியடைந்திருக்கிறதா என்று பார்த்து வாங்க வேண்டும். பாலுக்கென்று ஆடு வாங்குவதானால் கால் சற்று குட்டையாகவும், மடி திரட்சியாகவும் இருக்க வேண்டும். நோயற்ற ஆடுகளைப் பார்த்து வாங்க வேண்டும். பட்டிகளில், பண்ணைகளிலிருந்து வாங்குவது சிறந்தது
சிறந்த இந்திய இனங்கள்
1.கன்னி ஆடுகள் 2.ஜம்நாபாரி 3.பீட்டல் 4.பார்பரி 5. தலைச்சேரி 6.மலபாரி 7.சுர்தி 8.காஷ்மீரி 9.வங்காள ஆடு 10.கலப்பின ஆடுகள்
1.கன்னி ஆடுகள்
காணப்படும் இடங்கள்: விருதுநகர் (சாத்தூர், வெம்பக் கோட்டை, ராஜ பாளையம்), தூத்துக்குடி (புதூர், கயத்தார், கோவில்பட்டி), திருநெல்வேலி (குருவிகுளம், சங்கரன்கோவில், வாசுதேவநல்லூர், மேலநீலிதநல்லூர்) முதலிய பகுதிகளில் அதிக அளவில் காணப்படுகிறது. தற்சமயம் பிற மாவட்டங்களிலும் இந்த கன்னி ஆடுகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. அதிகமான அளவில் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சங்கரன்கோவில் மற்றும் குருவிகுளத்திலும் விருதுநகர் மாவட்டத்தில் சாத்தூர், வெம்பக்கோட்டையிலும் காணப்படுகிறது.
சந்தை நிலவரம்: கன்னி ஆடுகளை கோவில்பட்டி அருகில் உள்ள திருவேங்கடம் என்ற கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமைதோறும் நடைபெறும் சந்தையில் வாங்கலாம்.
கன்னி ஆட்டின் சிறப்பியல்புகள்
சந்தை நிலவரம்: கன்னி ஆடுகளை கோவில்பட்டி அருகில் உள்ள திருவேங்கடம் என்ற கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமைதோறும் நடைபெறும் சந்தையில் வாங்கலாம்.
கன்னி ஆட்டின் சிறப்பியல்புகள்
இவை கருமை நிறத்துடனும் முகத்திலும் காதுகளிலும் வெள்ளை அல்லது பழுப்புநிற கோடுகளுடனும், மேலும் அதன் அடிவயிறு, தொடைப்பகுதி, வால்பகுதி மற்றும் கால்களில் வெள்ளை அல்லது பழுப்பு நிறமுடன் காணப்படும். கருப்பு நிறத்தில் வெள்ளைநிற கோடுகள் காணப்பட்டால் அவை "பால்கன்னி' என்றும் பழுப்பு நிற கோடுகள் காணப்பட்டால் "செங்கன்னி' என்றும் அழைக்கப்படுகிறது. மேலும் இவற்றின் காது மற்றும் நெற்றியில் கோடுகள் காணப்படுவதால் இதனை வரி ஆடுகள் என்று அழைக்கிறார்கள். மற்ற நம்நாட்டு வெள்ளாடுளைவிட அதிகமான அளவில் 2 அல்லது மூன்று குட்டிகளை ஈனும் திறன் பெற்றவை. குட்டிகளை நன்றாக பேணி பாதுகாக்கும் பண்புடையவை. உயரமாகவும், திடகாத்திரமாகவும், ஒரே நிறமுடன் இருப்பதும் கூட்டமாக நடக்கும்பொழுது ஒரு "ராணுவ அணிவகுப்பு' போல கண்ணை கவரும் இந்த கன்னி ஆடுகள். இது இறைச்சிக்காக வளர்க்கப்படும் ஆடு ஆகும். கிடா மற்றும் பெட்டை ஆடுகளுக்கு கொம்புகள் உண்டு. பிறந்த கிடா குட்டிகள் 2.1 கிலோவும், பெட்டை குட்டிகள் 2.05 கிலோ உடல் எடையுடன் இருக்கும். ஒரு வருட வயதில் கிடாக்கள் 21.70 கிலோவும், பெட்டை ஆடுகள் 20.90 கிலோ எடையுடன் இருக்கும். மேலும் ஒரு வருட வயதில் கிடாக்கள் 76 செ.மீ. உயரமும், பெட்டை ஆடுகள் 72 செ.மீ. உயரத்துடனும் காணப்படும். கன்னி ஆடுகள் அதிக அளவில் 2 (46.36%), 3(3.43%) மற்றும் 4(0.37%) குட்டிகளை ஈனும் திறன் பெற்றவை. கன்னி ஆட்டிலிருந்து 48 சதவீத இறைச்சியை பெறலாம். |
கொட்டகை
ஆட்டுக் கொட்டகையை மேட்டுப்பாங்கான இடத்திலும் காற்றோட்டமுள்ள இடத்திலும் அமைக்க வேண்டும். கொட்டகையின் தரைப்பகுதி ஈரத்தினை உறிஞ்சக் கூடியதாகவும், எளிதில் உலரும் தன்மையுடையதாகவும், பள்ளமோ அல்லது குழியோ இல்லாமல் மணல் கொண்டு நிரப்பி சமமாக வைக்க வேண்டும். மேலும் ஆடுகளுக்கு தேவையான அளவில் அதாவது குட்டி ஆடுகளுக்கு (4 முதல் 5 சதுரடி), பெட்டை ஆடுகளுக்கு (10 முதல் 15 சதுரடி), வளர்ந்த கிடாக்களுக்கு (15 முதல் 20 சதுரடி) இடவசதி அளிக்க வேண்டும். இனப்பெருக்கம்
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||












