சனி

வெள்ளாடு வளர்ப்பு

 வெள்ளாடு வளர்ப்பு

வெள்ளாடு வாங்குவது எப்படி
உள்ளூர் இனங்களையே வாங்கவேண்டும். காலம்காலமாக அந்த
பகுதியில் வளர்ந்து, சூழ்நிலைக்கு ஏற்ப வாழப்பழகி இருக்கும் உள்ளூர் ரகங்களை வாங்கி வளர்ப்பதே சிறந்தது.
பலமுறை குட்டிபோட்டவயதான ஆடுகளை வாங்கவேண்டாம். மாடுகளைப் போல ஆடுகளையும் பல்பார்த்து வாங்க வேண்டும். அதாவது கீழ்தாடை முன்பற்கள் விழுந்து முளைப்பதாகும். ஓராண்டு வரை 8 பால்பற்கள் இருக்கும். பின் இரண்டாண்டு பற்களாக விழுந்துமுளைக்கும். ஓராண்டு முடிந்தபின் இரு பற்கள் விழுந்து முளைக்கும். தோராயமாக எளிதாக நினைவில் வைத்துக்கொள்ள கீழ்க்கண்டபடி பல் பார்த்து வயது கணக்கிட்டு வாங்க வேண்டும். ஆடுகளுக்கு 2 பல் இருந்தால் 1 வயது. 4 பல் இருப்பின் 2 வயது. 6 பல் என்றால் 3 வயது. 8 பல் என்றால் 4 வயது என்று கொள்ளலாம். எனவே இளம் ஆடுகளையே வாங்க வேண்டும்.
ஓரிரு ஆடுகளை வாங்குபவர்கள் 3, 4 குட்டி போடும் ஆடுகளை அறிந்து வாங்க வேண்டும். முதுகு பிடித்து பார்த்து ஆட்டின் முதுகெலும்பின் தசை செழிப்பாக வளர்ச்சியடைந்திருக்கிறதா என்று பார்த்து வாங்க வேண்டும். பாலுக்கென்று ஆடு வாங்குவதானால் கால் சற்று குட்டையாகவும், மடி திரட்சியாகவும் இருக்க வேண்டும். நோயற்ற ஆடுகளைப் பார்த்து வாங்க வேண்டும். பட்டிகளில், பண்ணைகளிலிருந்து வாங்குவது சிறந்தது
சிறந்த இந்திய இனங்கள்
1.கன்னி ஆடுகள்  2.ஜம்நாபாரி  3.பீட்டல் 4.பார்பரி 5. தலைச்சேரி 6.மலபாரி 7.சுர்தி 8.காஷ்மீரி 9.வங்காள ஆடு 10.கலப்பின ஆடுகள்

1.கன்னி ஆடுகள்
காணப்படும் இடங்கள்: விருதுநகர் (சாத்தூர், வெம்பக் கோட்டை, ராஜ பாளையம்), தூத்துக்குடி (புதூர், கயத்தார், கோவில்பட்டி), திருநெல்வேலி (குருவிகுளம், சங்கரன்கோவில், வாசுதேவநல்லூர், மேலநீலிதநல்லூர்) முதலிய பகுதிகளில் அதிக அளவில் காணப்படுகிறது. தற்சமயம் பிற மாவட்டங்களிலும் இந்த கன்னி ஆடுகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. அதிகமான அளவில் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சங்கரன்கோவில் மற்றும் குருவிகுளத்திலும் விருதுநகர் மாவட்டத்தில் சாத்தூர், வெம்பக்கோட்டையிலும் காணப்படுகிறது.
சந்தை நிலவரம்: கன்னி ஆடுகளை கோவில்பட்டி அருகில் உள்ள திருவேங்கடம் என்ற கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமைதோறும் நடைபெறும் சந்தையில் வாங்கலாம்.

 கன்னி ஆட்டின் சிறப்பியல்புகள்

இவை கருமை நிறத்துடனும் முகத்திலும் காதுகளிலும் வெள்ளை அல்லது பழுப்புநிற கோடுகளுடனும், மேலும் அதன் அடிவயிறு, தொடைப்பகுதி, வால்பகுதி மற்றும் கால்களில் வெள்ளை அல்லது பழுப்பு நிறமுடன் காணப்படும். கருப்பு நிறத்தில் வெள்ளைநிற கோடுகள் காணப்பட்டால் அவை "பால்கன்னி' என்றும் பழுப்பு நிற கோடுகள் காணப்பட்டால் "செங்கன்னி' என்றும் அழைக்கப்படுகிறது. மேலும் இவற்றின் காது மற்றும் நெற்றியில் கோடுகள் காணப்படுவதால் இதனை வரி ஆடுகள் என்று அழைக்கிறார்கள். மற்ற நம்நாட்டு வெள்ளாடுளைவிட அதிகமான அளவில் 2 அல்லது மூன்று குட்டிகளை ஈனும் திறன் பெற்றவை. குட்டிகளை நன்றாக பேணி பாதுகாக்கும் பண்புடையவை. உயரமாகவும், திடகாத்திரமாகவும், ஒரே நிறமுடன் இருப்பதும் கூட்டமாக நடக்கும்பொழுது ஒரு "ராணுவ அணிவகுப்பு' போல கண்ணை கவரும் இந்த கன்னி ஆடுகள். இது இறைச்சிக்காக வளர்க்கப்படும் ஆடு ஆகும். கிடா மற்றும் பெட்டை ஆடுகளுக்கு கொம்புகள் உண்டு. பிறந்த கிடா குட்டிகள் 2.1 கிலோவும், பெட்டை குட்டிகள் 2.05 கிலோ உடல் எடையுடன் இருக்கும். ஒரு வருட வயதில் கிடாக்கள் 21.70 கிலோவும், பெட்டை ஆடுகள் 20.90 கிலோ எடையுடன் இருக்கும். மேலும் ஒரு வருட வயதில் கிடாக்கள் 76 செ.மீ. உயரமும், பெட்டை ஆடுகள் 72 செ.மீ. உயரத்துடனும் காணப்படும். கன்னி ஆடுகள் அதிக அளவில் 2 (46.36%), 3(3.43%) மற்றும் 4(0.37%) குட்டிகளை ஈனும் திறன் பெற்றவை. கன்னி ஆட்டிலிருந்து 48 சதவீத இறைச்சியை பெறலாம்.

கொட்டகை

ஆட்டுக் கொட்டகையை மேட்டுப்பாங்கான இடத்திலும் காற்றோட்டமுள்ள இடத்திலும் அமைக்க வேண்டும். கொட்டகையின் தரைப்பகுதி ஈரத்தினை உறிஞ்சக் கூடியதாகவும், எளிதில் உலரும் தன்மையுடையதாகவும், பள்ளமோ அல்லது குழியோ இல்லாமல் மணல் கொண்டு நிரப்பி சமமாக வைக்க வேண்டும். மேலும் ஆடுகளுக்கு தேவையான அளவில் அதாவது குட்டி ஆடுகளுக்கு (4 முதல் 5 சதுரடி), பெட்டை ஆடுகளுக்கு (10 முதல் 15 சதுரடி), வளர்ந்த கிடாக்களுக்கு (15 முதல் 20 சதுரடி) இடவசதி அளிக்க வேண்டும்.

இனப்பெருக்கம்

ஆடுகள் 21 நாட்களுக்கு ஒரு முறை சினைக்கு வரும். சினைக்கு வரும் ஆடுகள் வாலை ஆட்டிக்கொண்டும், கத்திக்கொண்டும், பிறப்புறுப்பு வீங்கியும் காணப்படும். அந்த சமயத்தில் பெட்டை ஆடுகளுடன் கிடாக்களை சேர்க்கலாம். 20 பெட்டை ஆடுகளுக்கு ஒரு கிடாவை கண்டிப்பாக பண்ணையில் வைக்க வேண்டும். பெட்டை ஆடுகளின் சினைக்காலம் 150 நாட்களாகும். வெள்ளாடுகள் 8 மாதத்திற்கு ஒரு முறை குட்டிகளை ஈனும். அதாவது 2 வருடத்தில் 3 குட்டிகளை ஈனும்.
நல்ல உயரமானவை
காதுகள் மிக நீளமனவை
ரொமானிய மூக்கமைப்பு கொண்டவை.
கிடா 65-85  கிலோ பெட்டை - 45-60 கிலோ.
பெரும்பாலான ஆடுகள் ஒரு குட்டியே மட்டும் ஈனும்
6 மாத குட்டிகளின் எடை 15 கிலோ.
தினம் 2- 2.5 லிட்டர் பால் கொடுக்கும் திறன்


தலைச்சேரி / மலபாரி

வெள்ளை , பழுப்பு மற்றும் கருப்பு நிறங்கள்
2-3 குட்டிகளை போடும் திறன்
கிடா - 40-50 கிலோ பெட்டை - 30 கிலோ.


 

இறைச்சிக்காக உலகம் முழுவதும் வளர்க்கப்படுகிறது.
வேகமான வளர்ச்சி திறன் கொண்டவை.
கிடா - 110-135 கிலோ பெட்டை - 90-100 கிலோ.  
குட்டிகள் 90 நாட்களில் 20-30 கிலோ இருக்கும்


 

வெள்ளாடுகளை தேர்வு செய்தல்

பெட்டை ஆடுகள்
2-3 குட்டிகள் ஈனும் திறன்
6-9 மாதங்களில் பருவமடையும் தன்மை
கிடாக்கள்
தோற்றத்தில் உயரமாகவும், நெஞ்சு பாகம் அகன்றதாகவும், உடல் பாகம் நீண்டதாகவும் இருக்கவேண்டும்
9-12 மாதங்களில் பருவமடையும் தன்மை
நல்ல எடையுள்ள குட்டிகளை 6 மாத வயதில் தேர்வு செய்யவேண்டும்
2-3 குட்டிகளை ஈனும் பெட்டையாட்டிலிருந்து
வெள்ளாடு மேய்ச்சல் மற்றும் அடர்தீவனம் கொண்டு பராமரித்தால் அதிக பட்சம் வளர்ச்சி கிடைக்கும்.
கொளுக்கட்டை புல் , ஸ்டைலோ மற்றும் கோ ரகத் தீவன பயிர்களை அளிக்கலாம்.
தீவன மர இலைகளான அகத்தி, சூபாபுல், கிளைரிசிடியா போன்றவற்றை வயல் ஓரங்களில் வளர்த்து அளிக்கலாம்.
ஒரு ஏக்கரில் வளரும் தீவன மரம் மற்றும் தீவனப் பயிர்களை கொண்டு 15-30 ஆடுகள் வரை வளர்க்கலாம்

அடர் தீவனம்


 

குட்டி தீவனம்
வளரும் ஆட்டு தீவனம்
பால் கொடுக்கும் ஆட்டு தீவனம்
சினை ஆட்டு தீவனம்
மக்காசோளம்
37
15
52
35
பருப்பு வகைகள்
15
37
---
---
புண்ணாக்கு
25
10
8
20
கோதுமை தவிடு
20
35
37
42
தாது உப்பு
2.5
2
2
2
உப்பு
0.5
1
1
1
மொத்தம்
100
100
100
100

குட்டிகளுக்கு தினம் 50-100 கிராம் வரை அடர் தீவனம் 10 வாரங்களுக்கு அளிக்க வேண்டும்
வளரும் ஆடுகளுக்கு தினம் 100-150 கிராம் வரை அடர் தீவனம் 3-10 மாதங்களுக்கு கொடுக்க வேண்டும்
சினை ஆடுகளுக்கு தினம் 200 கிராம் அடர்தீவனம் கொடுக்க வேண்டும்
தினம் ஒரு கிலோ பால் கொடுக்கும் ஆடுகளுக்கு 300 கிராம் வரை அடர்தீவனம் கொடுக்கலாம்.
அதிகம் தாமிர சத்து உள்ள வெள்ளாடுகளுக்கான தாது உப்பு கட்டிகள் கொட்டிலில் தொங்கவிட வேண்டும்

கலப்புத் தீவனத்தின் சிறப்பம்சங்கள்


எளிதில் செரிக்கக்கூடியது. சிறந்த தீவன மாற்றத்திறன். அதிகமான தினசரி வளர்ச்சி விகிதம். ஆடுகளின் உடல் ஆரோக்கியம் பாதுகாக்கப்படுகிறது. அனைத்து ஊட்டச்சத்துக்களும், தாது உப்புக்களும் நிறைந்துள்ளதால் எளிதில் கருத்தரிக்க உதவுகிறது. மிருதுவான மற்றும் பளபளப்பான தோல் உற்பத்தி. கலப்புத்தீவனம் நாளொன்றுக்கு ஒரு ஆட்டிற்கு 200 கிராம் முதல் 400 கிராம் வரை அளிக்க வேண்டும். இது தவிர உலர்தீவனம் ஒரு கிலோ வரையிலும், பசுந்தீவனம் 5 கிலோ வரையிலும் தவறாமல் தினசரி ஆடுகளுக்கு கிடைக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்

இனபெருக்கப் பாரமரிப்பு


இலாபகரமாக இருக்க ஆடுகள் 2 வருடத்தில் 3 முறை குட்டிகள் ஈன வேண்டும்
வேகமாக வளரும் தன்மை மற்றும் அதிக எடை கொண்ட ஆடுகளை இனபெருக்கத்திற்கு பயன்படுத்தவேண்டும்
பெட்டை ஆடுகளை 1 வருட வயதில் இனபெருக்கத்திற்கு பயன்படுத்தவேண்டும்
குட்டி போட்ட 3 மாதத்திற்கு பிறகு இனச்சேர்க்கை செய்யவேண்டும். அப்போது தான் 2 வருடத்தில் 3 முறை குட்டிகள் ஈனும்
சினை பருவ காலம் 18-21 நாட்கள் இடைவெளியில் வரும். அது 24-72 மணி காலம் நீடிக்கும்.
சினை பருவ காலத்தில் பெட்டை ஆடுகள் வலி இருக்க மாதிரி ஓங்கி கத்தும். மேலும் வாலை ஆட்டி கொண்டிருக்கும். இனப்பெருக்க உறுப்புகள் சிறிது வீங்கியும் சிவந்தும் காணப்படும். இனப்பெருக்க உறுப்பிலிருந்து திரவம் ஒழுகவதால் வாலை சுற்றி ஈரமாகவும் அழுக்காகவும் காணப்படும்.சில ஆடுகள் தீனி திங்காமலும் சிறுநீர் அடிக்கடி கழித்து கொண்டு இருக்கும். சில சமயங்களில் மற்ற ஆடுகள் மீது ஏறும் அல்லது ஏற அனுமதிக்கும்
சினை பருவ அறிகுறிகள் தென்பட்ட 12-18 மணி நேரத்தில் கிடாவுடன் சேர்க்கவேண்டும்.
சில ஆடுகளில் சினைபருவ காலம் 2-3 நாட்கள் இருக்கும் எனவே அவற்றை இரண்டாவது தடவையாக 1 நாட்கள் கழித்து மீண்டும் கிடாவுடன் சேர்க்கவேண்டும்
சினை காலம் 145-150 நாட்கள்

குடற் புழு நீக்கம்


ஒல்லியான மற்றும் பொலிவற்ற தோற்ற கொண்ட ஆடுகளில் குடற் புழு தாக்கம் இருக்கும். எனவே அந்த ஆடுகளை இனபெருக்கத்திற்கு முன் குடற் புழு நீக்கம் செய்யவேண்டும்.
சினை ஆடுகளை முதல் 2 மாத சினையில் குடற்புழு நீக்க செய்தால் கரு சிதைவு ஏற்பட வாய்ப்புண்டு.
சினை ஆடுகளை குட்டி போடுவதற்கு 2-3 வாரத்திற்கு முன் குடற்புழு நீக்கம் செய்ய வேண்டும்.
குட்டிகள் பிறந்த 30 நாட்களிலும் பிறகு 60 நாளிலும் குடற்புழு நீக்கம் செய்ய வேண்டும்

நோய்களும் தடுப்பு முறைகளும்

ஆடுகளை கொட்டகையில் அளவுக்கு மீறி அடைத்துவைப்பது, ஈரமிகுந்த சகதியான நிலத்தில் மேய்ப்பது, திடீரென மாறும் தட்பவெப்பநிலை, தீவனத்தில் ஏற்படும் திடீர் மாற்றம் இவைகளே ஆடுகளுக்கு வரும் நோய்களுக்கு முக்கிய காரணமாகும். சுத்தமான காற்றோட்டமான இடத்தில் வைத்து தேவையான தீவனங்களைத் தேவைக்கேற்ப அளிப்பதுடன் ஆடுகளுக்குப் போட வேண்டிய உரிய தடுப்பூசிகளை அதன் வயதுக்கேற்ப போடவேண்டிய காலத்தில் கால்நடை மருத்துவர் கொண்டு போட்டால் ஆடுகளை நோய்களிலிருந்து காப்பாற்றலாம். ஒட்டுண்ணிகளிலிருந்து ஆடுகளைக் காக்க ஒட்டுண்ணி நீக்க மருந்தை தண்ணீரில் கரைத்து ஆடுகளின் உடம்பை கால்நடை மருத்துவர் ஆலோசனைப்படி நனைக்க வேண்டும். மூன்று மாதத்திற்கு ஒரு முறை குடற்புழு நீக்க மருந்தை கால்நடை மருத்துவர் உதவிகொண்டு கொடுக்க வேண்டும். ஆடுகளுக்கு வரும் பிற நோய்களான வயிற்று போக்கு, சளி, அஜீரணக் கோளாறுகளுக்கு கால்நடை மருத்துவரின் ஆலோசனையின் பேரில் மருத்துவம் செய்ய வேண்டும்

ஆடுகளுக்கான தடுப்பூசி அட்டவணை



ஒன்றரை மாதம் கோமாரி நோய்
3 மாதம் துள்ளுமாரி நோய்
நாலரை மாதம் கோமாரி நோய்
5 மாதம் அடைப்பான் நோய்
6 மாதம் தொண்டை அடைப்பான் நோய்
12 மாதம் கோமாரி நோய்            

கிடாக்களுக்கு வருடம் ஒரு முறை துள்ளுமாரி நோய் மற்றும் டெட்னஸ் தடுப்பூசிகளை போடவேண்டும்
இதையடுத்து கோமாரி நோய்க்கான தடுப்பூசியை ஒவ்வொரு 6 மாதங்களுக்கு ஒரு முறையும், மற்ற நோய்களுக்கான தடுப்பூசிகளை ஒவ்வொரு வருடமும் மீண்டும் போட்டுக்கொள்ள வேண்டும்.

கொட்டகை பாரமரிப்பு


1.ஆழ்கூள முறை
தரையில் 6 செ.மீ. உயரத்திற்கு கடலைப்பொட்டு, மரத்தூள் மற்றும் நெல் உமி ஆகியவற்றை இட்டு வளர்க்கலாம்.
இரண்டு வாரத்திற்கு ஒரு முறை புது கூளம் போடவேண்டும்.
இம்முறையில் உண்ணி மற்றும் பேன் தாக்கம் இல்லாமல் கவனித்துக் கொள்ளவேண்டும்
ஆடு ஒன்றுக்கு 15 சதுர அடி இடம் தேவைப்படும்



 
2.உயர் மட்ட தரை முறை

தரையிலிருந்து 3-4 அடி உயரத்தில் மர பலகை அல்லது கம்பி வலைகளை கொண்டு அமைக்கலாம்
ஒட்டுண்ணி தொல்லைகள் மிகவும் குறைவாக இருக்கும்
       

                 

வளர்ப்பு முறைகள்

1.மேய்ச்சலுடன் கூடிய கொட்டகை முறை.
மேய்ச்சல் நிலங்கள் குறைவாக உள்ள இடங்களில் மேய்ச்சலுக்கு பிறகு கொட்டகையில் வைத்து பசுந்தீவனங்களையும், அடர் தீவனைத்தையும் அளிக்கலாம்.
2.கொட்டகை முறை.
வெள்ளாடுகளை நாள் முழுவதும் கொட்டகைக்கு உள்ளேயே அடைத்து தீவனம் அளித்து வளர்க்கப்படுகிறது.
கொட்டகையை ஆழ்கூளம் அல்லது உயர் மட்ட தரை முறையினால் அமைக்கலாம்
தடுப்பூசி போடுதல்
ஒரு பகுதியிலுள்ள அனைத்து மாடுகள், ஆடுகள் மற்றும் பன்றிகளுக்கு கோமாரி நோய்க்கு ஒருங்கிணைந்த முறையில் தடுப்பூசி போட வேண்டும்
கன்றுகளுக்கு முதலாவது தடுப்பூசி நான்காவது மாத வயதிலும் பின்னர் இரண்டாவது தடுப்பூசி ஐந்தாவது மாத வயதிலும் பிறகு ஒவ்வொரு நான்கு முதல் ஆறு மாதத்திற்கொரு முறை பூஸ்டர் தடுப்பூசி தவறாமல் போட வேண்டும்

இந்நோய் நச்சுயிரியால் உண்டாகிறது. இந்நோய் உயிர்ச்சேதம் அதிகம் இல்லை என்றாலும் உற்பத்தித் திறன் மற்றும் உழைக்கும் சக்தியைக் குறைத்துவிடுவதால் பண்ணையில் அதிக பொருளாதார இழப்பினை ஏற்படுத்தும்.

நோய் தடுப்பு முறைகள்


நோய் பாதிப்புக்குள்ளாகும் கால்நடைகளை நோய் தாக்கியுள்ள பகுதிக்கு ஓட்ட செல்லக்கூடாது
நோய் தாக்கியுள்ள பகுதிகளிலிருந்து கால்நடைகளை வாங்கக்கூடாது
புதிதாக கால்நடைகளை வாங்கும் போது அவற்றினை 21 நாட்களுக்கு மற்ற கால்நடைகளிலிருந்து தனியே கட்டி பராமரிக்க வேண்டும்

ஆடு வளர்ப்பு நன்மைகள்


ஆடு வளர்ப்பு அனைத்துச் சூழலுக்கும் ஏற்றதாகும். அதிகப் பராமரிப்பு தேவையில்லை. சிறிய இடம் மற்றும் எளிய கொட்டகை போதுமானது.
குறைந்த முதலீடு மற்றும் உடனடி வருவாய்
வெள்ளாட்டிலிருந்து பால் மற்றும் கறி ஆகிய இரண்டிலிருந்தும் வருமானம் கிடைக்கிறது.
ஒரு ஆட்டிலிருந்து சராசரியாக 22-30 கிலோ கறி கிடைக்கின்றது. அனைத்து விதமான மக்களும் உண்ணக் கூடிய இறைச்சி.
அதிகமான குட்டிகளை ஈனும் விகிதம். ஒவ்வொரு முறையும் சராசரியாக 2-3 குட்டிகளை ஈனுகிறது
நல்ல எரு கிடைக்கிறது.
வருடம்முழுவதும்வேலை
போயர்

இரத்த விருத்திக்கு பேரீச்சை

இரத்த விருத்திக்கு பேரீச்சை


இயற்கையின் கொடையான பழங்களில் சிலவற்றை நேரடியாக அப்படியே சாப்பிடலாம், சிலவற்றை காயவைத்து பதப்படுத்தி சாப்பிடலாம்.  பழங்கள் அனைத்தும் மருத்துவக் குணம் கொண்டவை.  அதில் பாலைவனப் பகுதி மக்களுக்கு வரப்பிரசாதமாக உள்ள பழங்களில் பேரீச்சம்பழம் முதலிடம் வகிக்கிறது.

இது மிகவும் சத்துள்ள பழமாகும்.  குழந்தைகள் முதல் பெரியவர்கள்  வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் பழம்.  இப்பழங்கள் அரபு நாடுகளிலிருந்து  இறக்குமதி செய்யப்படுகிறது.பதப்படுத்தப்பட்ட இந்த பழங்கள் எவ்வளவு ஆண்டுகள் ஆனாலும் கெட்டுப் போகாமல் இருக்கும்.


ஆயுர்வேத, யுனானி, சித்த மருத்துவத்தில் பேரீச்சம்பழம் முக்கிய இடம் வகிக்கிறது.   சூரிய சக்திகள் அனைத்தையும் தன்னுள்ளே கொண்ட பழம்தான் பேரீச்சம் பழம்.  இந்த பழத்தில் இரும்புச் சத்து, கால்சியம்சத்து, வைட்டமின் ஏ, பி, பி2, பி5 மற்றும் வைட்டமின் இ சத்துக்கள் நிறைந்துள்ளன.
 
பேரீச்சையின் பயன்கள்
கண்பார்வை தெளிவடைய
 
வைட்டமின் ‘ஏ’ குறைவினால்தான் கண்பார்வை மங்கலாகும்.  இதைக் குணப்படுத்த பேரீச்சம் பழமே சிறந்த மருந்தாகும்.  மாலைக் கண் நோயால் பாதிக்கப் பட்டவர்கள், பேரீச்சம் பழத்தை தேனுடன் கலந்து ஊறவைத்து சாப்பிட்டு வந்தால் உடலுக்குத் தேவையான எல்லா சத்துக்களும் கிடைக்கும்.  இதனால் கண் பார்வைக் கோளாறுகள் நீங்கும்.

பெண்களுக்கு

பொதுவாக பெண்களுக்கு அதிக கால்சியம் சத்தும், இரும்புச் சத்தும் தேவை.  மாதவிலக்கு காலங்களில் ஏற்படும் உதிரப் போக்கால் இத்தகைய சத்துக்கள் குறைகின்றன.  இதை நிவர்த்தி செய்யவும், ஒழுங்கற்ற மாத விலக்கை ஒழுங்கு படுத்தவும் பேரீச்சம் பழம் மருந்தாகிறது.  மெனோபாஸ் அதாவது 45 வயது முதல் 52 வயது வரை உள்ள காலகட்டத்தில் மாதவிலக்கு முழுமையடையும்.  அப்போது பெண்களின் எலும்புகள் பலவீனமாக இருக்கும். மேலும் கை, கால் மூட்டுகளில் வலி உண்டாகும்.   இதனை சரிசெய்ய, பேரீச்சம் பழத்தை பாலில் கலந்து கொதிக்க வைத்து பாலையும், பழத்தையும் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடல் என்றும் ஆரோக்கியமாக இருக்கும்.

சளி இருமலுக்கு

பேரீச்சம் பழத்தின் கொட்டைகளை நீக்கி பாலில் போட்டு காய்ச்சி ஆறியபின் பழத்தை சாப்பிட்டு பாலையும் பருகி வந்தால் சளி, இருமல் குணமாகும்.  நீரழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எலும்புகள் பலம் இழந்து காணப்படும்.  இவர்களுக்கு கால்சியம் இரும்பு சத்து தேவை.  இவர்கள் தினமும் ஒன்று அல்லது இரண்டு பழம் வீதம் சாப்பிட்டு வந்தால் உடலுக்குத் தேவையான சத்துக்கள் கிடைக்கும்.

நரம்பு தளர்ச்சி நீங்க

அதிக வேலைப்பளு, மன உளைச்சல், நீண்ட பட்டினி இருப்பவர்கள், அதிக வெப்பமுள்ள பகுதிகளில் வேலை செய்பவர்கள் நரம்புத் தளர்ச்சியால் பாதிக்கப் படுவார்கள்.  இவர்கள் பேரீச்சம் பழத்துடன் பாதாம் பருப்பு சேர்த்து பாலில் கலந்து கொதிக்க வைத்து சாப்பிட்டால் நரம்புத் தளர்ச்சி நீங்கி, ஞாபக சக்தி கூடும்.  கைகால் தளர்ச்சி குணமாகும்.

பேரீச்சம் பழத்துடன் சிறிது முந்திரி பருப்பு சேர்த்து நீரில் கொதிக்க வைத்து சாப்பிட்டால் உடலுக்குத் தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் கிடைக்கும்.

* இரத்தத்தைச் சுத்தப்படுத்தி விருத்தி செய்யும்.

* எலும்புகளை பலப்படுத்தும்.

* இளைப்பு நோயைக் குணப்படுத்தும்.

* முதியோருக்கு ஏற்ற மருந்தாக பேரீச்சம் பழம் உள்ளது.  அவர்களுக்கு ஏற்படும் உடல் ரீதியான இன்னல்களைக் குறைக்கும்.

* புண்கள் ஆறும்.  மூட்டு வலி நீங்கும்.

* பேரீச்சம் பழத்தை பசும்பாலில் வேக வைத்து அருந்திவந்தால் இதய நோய்கள் அண்டாது.

மாலை நேரத்தில் கண்பார்வைக் குறைபாடு கொண்டவர்களை கப உடம்பு சூலை நோய் என்பார்கள்.  சளியானது கண்ணில் படிந்து மாலைக்கண் நோய் ஏற்படச் செய்கின்றது.  இதற்கு தினமும் இரண்டு பேரீச்சம் பழம் சாப்பிடுவது சாலச் சிறந்தது.

கொளுத்தும் வெயிலுக்கு என்ன சாப்பிடலாம்?


கோடை விடுமுறை வந்துவிட்டாலே நமது மனம் கொண்டாட்ட 'மூடு' க்கு மாறிவிடும். உறவினர்களோடு அரட்டை, கூச்சல் கும்மாளத்தோடு டி.வி.யில் படம் பார்ப்பது, சீட்டுக் கச்சேரி என களை கட்டும் கோடை விடுமுறையில், பல குடும்பங்களில் பிக்னிக்கும் கட்டாயம் இடம் பெறும் 

ஆனால் இந்த கொண்டாட்ட நிகழ்ச்சிகளில் மட்டுமல்லாது, பிக்னிக் பேக்க்குகளிலும் நம்மவர்களின் மிக விருப்பமான நொறுக்கு தீனிகளாக சிப்ஸ் பாக்கெட்டுகளும், சாக்லேட்டுகளும், தாகம் தணிக்கும் பானங்களாக குளிர்பானங்களும் பயண பைகளுக்குள் கட்டாயம் திணிக்கப்பட்டிருக்கும். 



ஆனால் இந்த இடத்தில்தான் எச்சரிக்கை மணி அடிக்கின்றனர் ஊட்டச்சத்து நிபுணர்களும், மருத்துவர்களும்! 

இதுபோன்ற சிப்ஸ் மற்றும் சாக்லேட்டுகளுக்கு பதிலாக பழங்கள்,காய்கறி சாலட்டுகள் போன்றவற்றை நிறைய எடுத்துக் கொள்ளலாம் என்று அறிவுறுத்துகின்றனர். 

வழக்கமான உணவுகள் மற்றும் முறையான உடற்பயிற்சிகளோடு, மேற்கூறியபடி காய்கறி மற்றும் பழங்களை எடுத்துக் கொண்டால், கோடை கொண்டாட்ட குதூகலத்தில், உடல் எடை அதிகரிப்பதை தடுக்க முடியும் என்கின்றனர்.

தாகத்தை தணிக்க தண்ணீர்: 

கோடையில், குறிப்பாக வெயிலில் சுற்றி வந்தால் நாக்கு வறண்டு தாகம் அதிகமாக எடுப்பது சகஜம்தான். இந்த சமயத்தில் நம்மில் பலர் உடனடியாக தாகத்தை தணிக்க பாட்டிலில் அடைக்கப்பட்ட குளிர் பானங்களை வாங்கிக் குடிக்கிறார்கள்.இவ்வாறு செயற்கையாக தயாரிக்கப்படும் குளிர்பானங்களை வாங்கி குடித்தால், அது நமது உடலுக்கும் உபாதைகளை ஏற்படுத்துவதோடு, பர்ஸ்-க்கும் வேட்டு வைக்கிறது. 

அதற்கு பதிலாக தாகத்தை தணிக்க தண்ணீரே போதுமானது.அது நமது உடலை குளுமைபடுத்துவதோடு,உடலில் நீரிழப்பு ஏற்படுவதையும் தடுக்கிறது.மேலும் தேவையற்ற கூடுதல்கலோரிகள் உங்கள் உடலில் சேருவதையும் அது தடுக்கிறது.செயற்கை குளிர் பானங்கள் நமது உடலில் தேவையற்ற அதிக கலோரிகளை உருவாக்கி விடுகிறது.

ஒருவேளை சிலருக்கு வெறும் தண்ணீரை அருந்த விருப்பமில்லாமல் இருந்தால், அதற்கு பதிலாக புதிதாக தயாரிக்கப்பட்ட எலுமிச்சை பழ ஜூஸ், இளநீர் அல்லது மோர் போன்றவற்றை அருந்தலாம். இவை கோடையின் சிறந்த தாகம் தணிப்பு பானங்கள் என்றே சொல்லலாம்.


உணவில் பழங்கள்,காய்கறிகள்:

மற்ற காலங்களில் எப்படியோ கோடையில் கட்டாயம் உங்களது உணவில் குறைந்தது இரண்டு காய்கறிகள் மற்றும் இரண்டு வகை பழங்களாவது இடம்பெறுமாறு பார்த்துக் கொள்ளவேண்டும். 

ஒவ்வொரு சீசனிலும் ஒவ்வொரு வகை பழங்கங்கள் சந்தைக்கு விற்பனைக்கு வரும். அதுபோன்று கோடைக்கென்றே வரும் சில வகை பழங்கள் உள்ளன.தர்ப்பூசணி, வெள்ளரி பழம் போன்றவை தாகத்தை தணித்து, உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ளும் என்றால், மாம்பழம் போன்றவற்றை மில்க் ஷே செய்து அருந்தினால் அது உடலுக்கு ஏக தெம்பை கொடுக்கும். 

உணவை தவிர்க்காதீர்கள்: 

சிலர் கோடை விடுமுறையில் உடல் எடையை குறைத்து காட்டுகிறேன் பேர் வழி என்று சாப்பாட்டை தவிர்ப்பது உண்டு.ஆனால் மிக மோசமான ஆரோக்கிய கேடு என்பதோடு, பின் விளைவுகளையும் ஏற்படுத்தக் கூடியது என்று எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள் .உணவு அருந்தாமல் இருந்தால் உடலில் கலோரிகளை எரிக்கும் 'மெடோபாலிசம்' செயல்பாடு மந்தமாகி விடும்.எனவே சிறிது சிறிதாகவேனும் உணவை ஆறு வேளையாகவது எடுத்துக் கொள்ளுங்கள். 

கோடை வெப்பத்தை தகர்க்க நொங்கு சாப்பிடுங்க


முற்றாத பனங்காயை நுங்கு என அழைப்போம். நுங்கு மிகவும் சுவையான ஒரு பானம்.  நுங்குக்கு என ஒரு நுணுப்பமான பருவம் உள்ளது. இந்தப் பருவத்திலே நுங்கில் காணப்படும் வழுவழுப்பான, திரவநிலை கலந்த திண்ம விதையானது மிகவும் இனிப்பாகவும், உண்பதற்கு சுவையானதாகவும் இருக்கும். இந்தப் பருவம் தாண்டி சற்று முற்றி விட்டால் இதன் சுவை குன்றி விடும். 

பெண் பனையின் பாளையிலிருந்து உண்டாகும் இளம் பனங்காய்கள் கொத்தாக குலைகளில் தோன்றும். இவை சில குறித்த மாதங்களிலேயே தோன்றத் தொடங்கும். இக்காய்கள் பொதுவாக மூன்று கண்கள், என அழைக்கப்படும் குழிகளைக் கொண்டிருக்கும். சில இரண்டு கண்களையும் இன்னும் சில ஒரு கண்ணையும் உடையவை.

இவற்றில் ஜெலி போன்ற திரவப்பதார்த்தம் உண்டு. இது நுங்கு அல்லது நொங்கு என்று அழைக்கப்படும். இது சுவைப்பதற்கு ருசியானது. காயை வெட்டி நுங்கை உறிஞ்சிக் குடிப்பார்கள். நுங்கின் மேல்பகுதியில் மூன்று, கோது போன்ற செவியமைப்பையுடைய அமைப்புக்கள் உண்டு. இவை பணிவில் அல்லது பணுவில் என அழைக்கப்படும். நுங்கை குடிப்பதற்கு சிலர் இதனைப் பாவிப்பர். பணிவிலைப் பாவித்து சிலர் கஞ்சி, கூழ் போன்றவற்றையும் குடிப்பது உண்டு.

நுங்கு 10-11% வெல்லத்தையும், 2% புரதத்தையும், கொண்டுள்ளது. காயை நுங்குக்காக வெட்டியபின் சிறிது நேரத்தில் வெட்டிய மேற்பரப்பு மண்ணிறமாக மாறும். இதற்கு காரணம் இதிலுள்ள polyphenols  என்னும் பதார்த்தங்கள் காற்றிலுள்ள ஒக்சிஜனினால் ஒக்சியேற்றப்பட்டு மண்ணிறமான quinone என்னும் பதார்த்தங்களை தோற்றுவிப்பதினால். இவை விருத்தியடைந்து பனம்பழமாகவும் நுங்கு இருந்த பகுதி பனம் விதையாகவும் மாறும்.
நுங்கு சாப்பிட்டபின் மிகுதியாக இருக்கும் பகுதி கோம்பை என அழைக்கப்படும். இதனை சிறு துண்டுகளாக வெட்டி மாடுகளுக்கு உணவாகக் கொடுப்பார்கள்.

நன்கு முற்றி விட்ட பின் இதனை சீக்காய் என்பர். சீக்காய் திரவநிலை குறைந்து இறுக்கமாகக் காணப்படும். இதை உண்பதால் வயிற்றில் உபாதை ஏற்படும் என நம்பப் படுகிறது. சீக்காயை சிறுசிறு துண்டுகளாக்கி ஆடு, மாடுகளுக்கு உணவாகவும் கொடுப்பார்கள்.

சிறுவயதில் நொங்கு சாப்பிடுவது குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ஒன்று. நொங்கு இரு முறையில் சாப்பிடலாம் நொங்கை தனியாக எடுத்து தோல் நீக்கி சாப்பிடலாம். இரண்டாவது முறை நொங்கின் மேல் பகுதியை மட்டும் சீவி எடுக்கும் போது 2 அல்லது 3 கண்கள் இருக்கும். இந்த கண்களில் பெருவிரலை விட்டு கொஞ்சம் கொஞ்சமாக நோண்டி திண்கும்சுவை சொல்லி மாளாது அனுபவித்தால் தான் கிடைக்கும். 

நுங்கு வெய்யிலின் கொடுமையைக் குறைக்க மனிதனுக்குக் கிடைத்த அருமருந்தாகும். 

எல்லா வயதினருக்கும் ஏற்ற சிறந்த சத்துணவாகும். 

நுங்கின் நீரை வேர்க்குருவிற்குத் தடவ குணம் கிடைக்கும்.

பனை நொங்கு அம்மை நோயின் வேகத்தைக் குறைக்கும்

நுங்கை நாம்  தொழில் முயற்சியில் பயன்படுத்துவது இல்லை. 2 மில்லியன் பனைமரங்களே இருக்கும் தாய்லாந்தில் இருந்து நுங்கு தகரத்தில் அடைக்கப்பட்டு உலகம் எங்கும் ஏற்றுமதியாக அதிக பனைமர வளத்தை கோண்ட இந்தியா இலங்கை போன்ற நாடுகளில் இருந்து எந்த முயற்சியும் எடுக்கப்படாமை கொசுறு செய்தி.

மல்லிகை சாகுபடியில் பஞ்சகவ்யா

மல்லிகை சாகுபடியில் பஞ்சகவ்யா, அமுதக்கரைசல்களை பயன்படுத்தும்பொழுது பூக்கள் திடீரென சிவப்பு நிறமாக மாறிவிடுகின்றன. இலைகளும் கருகி விடுகின்றன. இதற்கு என்ன காரணம்?

இப்படி நேருவதற்கு காரணம், பஞ்சகவ்யா தயாரிப்பில் தவறு நிகழ்ந்திருக்கலாம். வழக்கமாக பஞ்சகவ்யா தயாரிப்பில் நெய்தான் பயன்படுத்தப்பட்டு வருகிறது. சமீபகாலமாக நெய்க்கு பதிலாக ஆமணக்கு எண்ணையை பயன்படுத்தும் முறை பரவி வருகிறது. ஆனால், அளவுக்கு அதிகமாக ஆமணக்கு எண்ணயை கலந்தால், மலர்கள் சிவப்பாவது, இலைகள் கருகவது போன்ற விளைவுகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. சாணத்துடன் நெய் அல்லது ஆமணக்கு எண்ணெய் கலக்கும்போது மூன்று முதல் ஏழு நாட்கள் வரை வைத்திருக்க வேண்டும். இப்படி செய்தால்தான் சாணத்தில் உள்ள மீத்தேன் வாயு வெளியே செல்லும். அப்படி இல்லாமல் விரைவாக பஞ்சகவ்யா கரைசல் தயாரித்திருந்தாலும், இது போன்ற விளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

மலர்களைப் பொறுத்தவரை 3-5% வரைதான் பஞ்சகவ்யா தெளிக்க வேண்டும். இந்த அளவுக்கு அதிகமா தெளித்தாலும்கூட வேறுவிதமான விளைவுகள் ஏற்படும். கரைசல் தெளித்துவிட்டு நீர்ப்பாசனம் செய்யாமல் இருப்பதும்கூட பிரச்சனைக்கு வழி வகுக்கும்.

ஞாயிறு

சனி

இந்த வாரம் - சிப்ஸ்

இந்த வாரம் - சிப்ஸ்
சாட் அயிட்டங்கள் ஆயிரம் வந்தாலும் இன்றைக்கும் மவுசு குறையாமல் சக்கை போடு போட்டுக்கொண்டிருக்கிறது நம்மூர் சிப்ஸ். கால மாறுதல்களில் புதிய சிப்ஸ் அயிட்டங்கள் பல ஃபிளேவர்களில் பல பேக்கிங்களில் வந்தாலும், வாழையடி வாழையாக தயாரிக்கப்படும் நேந்திரங்காய் சிப்ஸுக்கு இருக்கும் மார்க்கெட் அலாதியான ஒன்று! இத்தொழிலை ஆரம்பிப்பதும், லாபம் பார்ப்பதும் அப்படி ஒன்றும் கஷ்டமான விஷயமில்லை என்பதே இதன் பெரிய பிளஸ் பாயின்ட்.
சந்தை வாய்ப்பு!
எந்த இடத்திலும் இந்த தொழிலைத் தொடங்கலாம் என்பது இதற்கிருக்கும் தனிச் சிறப்பு. நல்ல வருமானம் தரக்கூடிய, பரவலான வியாபாரத்தைக் கொண்ட தொழில் என்பதால் உள்ளூர் அளவிலான தயாரிப்பாளர்கள் இதில் அதிகளவில் ஈடுபடுகின்றனர். சில்லறை வியாபாரம் மட்டுமல்லாமல், பள்ளி மற்றும் கல்லூரி கேன்டீன்கள், ஓட்டல்கள், மதுபான விடுதிகள், ரயில்வே மற்றும் விமான கேட்டரிங் ஒப்பந்தம் என பல இடங்களிலும் மொத்த விற்பனைக்கான வாய்ப்புகளும் இருக்கின்றன. பெரிய பிராண்டட் நிறுவனங் கள் இருந்தாலும் தரமாகவும், சுவையாகவும் இருக்கும் பட்சத்தில் மக்கள் தேடி வந்து வாங்கிச் செல்கிற நிலை இருக்கிறது.
தயாரிக்கும் முறை!
உருளைக்கிழங்கு மற்றும் நேந்திரன், மொந்தன் வாழைக்காய்களில் செய்யப் படும் சிப்ஸ்களே அதிக அளவில் விற்பனை யாவதால், இந்த காய்களில் நல்ல தரமான காய்களாகப் பார்த்து வாங்க வேண்டும். சிப்ஸ் செய்வதற்கு முன் காய்களை நன்கு கழுவி தோலை நீக்கி, இதற்கென பிரத்யேகமாக இருக்கும் இயந்திரத்தைக் கொண்டு தகுந்த அளவுகளில் நறுக்கி, மீண்டும் ஒருமுறை நன்கு கழுவி காய வைக்கவேண்டும். தரமான எண்ணெய்யில் பக்குவமாக பொறித்தால் சிப்ஸ் ரெடி. தேவையான அளவு உப்பு மற்றும் காரம் சேர்த்து, சூடு ஆறியதும் பேக்கிங் செய்யவேண்டும்.
தரக்கட்டுப்பாடு!
எல்லாத் தொழிலுக்கும் தரம் முக்கியம் என்றாலும், சிப்ஸ் தயாரிப்பு என்பது உணவு சம்பந்தப்பட்ட தொழில் என்பதால் கூடுதல் அக்கறையோடு தரமாகவும், சுகாதாரமாகவும் செய்ய வேண்டும். இத் தொழிலைத் தொடங்கும்முன் உணவு பதப்படுத்தல் மற்றும் உணவுக் கலப்படத் தடுப்புத் துறைகளிலிருந்து அனுமதி பெற வேண்டும். ஐ.எஸ்.ஐ. தரச் சான்றிதழைப் பெறுவதுபோல, உங்கள் தயாரிப்புக்கு பி.ஐ.எஸ். (பீரோ ஆஃப் இந்தியன் ஸ்டாண்டர்ட்) தரச் சான்றிதழ் வாங்குவது அவசியம். அதன் மூலம் உங்கள் தயாரிப்பு மீதான நம்பிக்கை மக்களிடம் அதிகரிக்கும்.
நிலம் மற்றும் கட்டடம்!
இத்தொழிலைத் தொடங்க சுமார் 250 சதுர அடி இடம் வேண்டும். இதில் 125 சதுர அடிக்கு கட்டடம் கட்டவும், 75-80 சதுர அடியில் குடோன் மற்றும் பேக்கிங் அறைக்கு என ஒதுக்கிக் கொள்ளலாம். நிலத்தின் மதிப்பு 75 ஆயிரம் ரூபாயாகவும், கட்டடம் கட்ட மதிப்பு 3.15 லட்சம் ரூபாயாகவும் திட்டமிடலாம். இது நீங்கள் தேர்ந்தெடுக்கும் இடத்தைப் பொறுத்தது.
இயந்திரம்!
300 வேலை நாட்களில் இரண்டு ஷிப்ட்களாக வேலை பார்த்தால் ஆண்டுக்கு 50 டன் சிப்ஸ் தயாரிக்க முடியும். இந்த இயந்திரங்கள் கவுஹாத்தி, கொல்கத்தா, கோயம்புத்தூர், சென்னை போன்ற இடங்களில் கிடைக்கிறது.
அத்தியாவசிய தேவைகள்!
தினசரி 10 ஹெச்.பி. மின்சாரம் மற்றும் 1500 லிட்டர் தண்ணீர் தேவைப்படும்.
மூலப்பொருட்கள்!
உருளைக்கிழங்கு தமிழ்நாட்டில் ஊட்டியில் கொள்முதல் செய்யலாம். நேந்திரன் வாழை கன்னியாகுமரி, திருச்சி, கேரளாவில் கிடைக்கிறது. மற்ற பொருட்களான உப்பு, காரம், எண்ணெய் அனைத்தும் சுலபமாக கிடைப்பதுதான். நமது ஆண்டு உற்பத்தி 50 டன் எனில் உருளைக்கிழங்கு 44 டன், நேந்திரன் 25 டன் தேவைப்படும். உருளைக்கிழங்கில் சிப்ஸ் தயாரிக்கும்போது 30 சதவிகிதமும், நேந்திரன் சிப்ஸில் 20 சதவிகிதமும் கழிவு ஏற்படலாம்.
வேலையாட்கள்!
சிப்ஸ் தயாரிக்கத் தெரிந்தவர்கள்- 2
பேக்கிங் வேலையாட்கள்- 2
உதவியாளர்கள் - 2
விற்பனையாளர் - 1
செயல்பாட்டு மூலதனம்!
முதல் வருடத்தில் 60 சதவிகித உற்பத்தித் திறனுக்கு செயல்பாட்டு மூலதனம் 1.40 லட்சம் ரூபாய் தேவைப்படும்.
சிறிய அளவிலும், கொஞ்சம் பெரிய அளவிலும் இத்தொழிலைச் செய்ய நினைப்பவர்கள் தாராளமாக இறங்கலாம். தரம், சுவை, வாடிக்கையாளர் சேவை என ஒவ்வொரு விஷயத்திலும் நீங்கள் கூடுதல் கவனம் செலுத்தினால் சிப்ஸ் தயாரிப்புத் தொழில் உங்களுக்கு லாபத்தை அள்ளிக் கொடுக்கும்.
-பானுமதி அருணாசலம்
படங்கள் : இரா. கலைச்செல்வன்
முகமது நிஷாத்,
கேரளா ஹாட் சிப்ஸ், சென்னை
''எல்லோரும் விரும்பி உண்ணும் பொருளாக இருக்கிறது. சுவையில் விட்டுக் கொடுக்காமல் இருந்தால்தான் மார்க்கெட்டில் நிலைக்க முடியும். முழுக்க முழுக்க கைகளாலும் இத்தொழிலை செய்யலாம்; இயந்திரங் களின் உதவியோடும் செய்யலாம். குறைந்த அளவிலான உற்பத்தி எனில் இயந்திரங்கள் தேவை யில்லை. கொஞ்சம் பெரிய அளவில் இத்தொழிலை செய்ய நினைக்கிறவர்கள் இயந்திரங்களின் உதவி இல்லாமல் செய்ய முடியாது.
குறைந்தபட்சம் ஒரு லட்ச ரூபாய் இருந்தால்கூட இத்தொழிலில் இறங்கி விடலாம். நல்ல தரமான எண்ணெய்யைப் பயன்படுத்தும் போதுதான் சிப்ஸ் சுவையாக இருக்கும். பாம் ஆயிலில் தயாரிக்கப்படும் சிப்ஸ்கள் மூன்று மாதம் வரை கெடாமல் இருக்கும். ரீஃபைன்ட் ஆயிலில் செய்தால், ஒரு மாதத்துக்குள் பயன்படுத்திவிட வேண்டும். எண்ணெய் கறுத்துவிட்டால் மேற்கொண்டு அந்த எண்ணெய்யைப் பயன்படுத்தக்கூடாது. புதிய எண்ணெய்யை பயன்படுத்த வேண்டும்.
எல்லா காலங்களிலும் உருளைக்கிழங்கு தாராளமாகக் கிடைக்கும். இதேபோல் நேந்திரம், மொந்தன், ரோபஸ்டா போன்ற வாழைக்காய்களும் எல்லா காலங்களிலும் கிடைக்கிறது. இதில் வாடிக்கையாளர்கள் அதிகம் விரும்புவது நேந்திரம்தான். சரியான பதத்தில் பொரித்தெடுத்து, தேவையான அளவு மசாலாக்களை சேர்த்து பேக்கிங் செய்தால் வியாபாரிகளே நம்மைத் தேடி வருவர். பத்து, இருபது ரூபாய் அளவில் பேக்கிங் இருந்தால் நிறைய விற்பனையாகும்; நல்ல லாபமும் கிடைக்கும்.''

நன்றி: நாணயம் விகடன்

வாரம் ஒரு தொழில்! இந்த வாரம் : ரெடிமேட் ஆடைகள்

முன்பெல்லாம் இரண்டு வேஷ்டி, இரண்டு சட்டை இருந்தாலே போதும், ஒரு வருட காலத்தை தாராளமாக ஓட்டி விடுவார்கள். ஆனால், இன்று? பீரோ நிறைந்தாலும்கூட மனது நிறைவதில்லை! பண்டிகை காலத்தில் மட்டுமே துணி எடுப்பது என்பதும் பழங்கதையாகி விட்டது. குடும்பத்தோடு வீட்டை விட்டு கீழே இறங்கினால் திரும்பும்போது இரண்டு டிரஸ்ஸாவது எடுத்துவிட்டுதான் வருவது என்ற நிலை இன்றைக்கு. மொத்தத்தில் இன்றைக்கு ரெடிமேட் தொழில் உச்சத்தில் இருக்கிறது.

பல நூற்றாண்டுகளாக ஜவுளித் தொழிலில் கொடிகட்டி பறக்கிறோம் நாம். நம் நாட்டில் மட்டுமின்றி உலகம் முழுக்கவும் நமது ஆயத்த ஆடைகளுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. அமெரிக்கா தொடங்கி ஆஸ்திரேலியா வரை நமது ஆயத்த ஆடைகளை வாங்காத நாடுகளே உலகில் இல்லை. ஆனால், அதிக வாய்ப்புகள் இருக்கும் அதேநேரத்தில் இந்தத் துறையில் அதிகளவில் ரிஸ்க்கும் இருக்கின்றன. அந்த ரிஸ்க்குகளைத் தாண்டி, சமாளித்து நின்றுவிட்டால் போதும், நீங்களும் ஒரு தொழிலதிபராகி விடுவீர்கள் என்பதில் சந்தேகமே இல்லை.

சந்தை வாய்ப்பு!

தமிழகத்தில் பல நகரங்களில் ஜவுளித் தொழிலுக்கு நல்ல வாய்ப்பு இருந்தாலும், சென்னை, ஈரோடு, சேலம், கோவை பகுதிகளில்தான் இதற்கான சந்தை வாய்ப்பு மிகப் பிரகாசமாக இருக்கிறது. ஆயத்த ஆடைகளை நாமே தயார் செய்து அதை நேரடியாக பெரிய கடைகளில் கொடுக்கலாம். அல்லது மொத்த வியாபாரிகளிடமிருந்து ஜாப் ஆர்டர் வாங்கி, அதை தயார் செய்தும் கொடுக்கலாம். இத்தொழிலுக்கு வெளிநாடுகளில் நல்ல வரவேற்பு இருப்பதால், இங்கு தயாராகும் ஆயத்த ஆடைகளை வெளிநாடுகளில் விற்பதற்கும் நல்ல வாய்ப்பு இருக்கிறது. கோயம்புத்தூர், திருப்பூரைச் சுற்றியுள்ள ஊர்களில்தான் இந்த தொழிலை தொடங்க முடியும் என்கிற கருத்து பலரிடம் இருக்கிறது. ஆனால், உண்மை என்னவெனில், தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் இந்த தொழிலைத் தொடங்க நிறையவே வாய்ப்பு இருக்கிறது.

மூலப் பொருட்கள்!

டையிங், பிளீச்சிங், பிரின்டிங் செய்யப்பட்ட காட்டன், சிந்தெடிக் துணி வகை மற்றும் தைப்பதற்கு நூல் ஆகியவை இத்தொழிலுக்குத் தேவையான முக்கிய மூலப் பொருட்களாகும். டெக்ஸ்டைல்ஸ் துறையில் கொங்கு மண்டலம் சிறந்த மாவட்டம் என்பதால் அங்கிருந்து மூலப் பொருட்களை வாங்கிக் கொள்ளலாம். ஆனால், தற்போது திருப்பூரைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஏற்பட்டிருக்கும் சாயப்பட்டறை பிரச்னை காரணமாக மூலப் பொருட்களை பவானி மற்றும் அகமதாபாத் போன்ற பகுதிகளிலிருந்து வாங்கிக் கொள்ளலாம்.

இயந்திரங்கள்!

இத்தொழிலுக்குத் தேவையான இயந்திரங்களை (தையல் மெஷின்கள் மற்றும் கட்டிங் மெஷின்கள்) ஜப்பானிலிருந்து இறக்குமதி செய்து கொள்ளலாம். இதற்கான டீலர்கள் கோவை, சென்னை நகரங்களில் இருக்கிறார்கள். அவர்கள் மூலம் இயந்திரங்களை வாங்கிக் கொள்ளலாம். தனித் தனியாக வரும் இயந்திரத்தின் பாகங்களை டீலர்களே அசெம்பிள் செய்து கொடுத்து விடுகிறார்கள்.

முதலீடு!

இத் தொழிலைச் செய்வதற் கான நிலம் மற்றும் கட்டடத்தை சொந்தமாகவோ அல்லது குத்த கைக்கோ எடுத்துக் கொள்ளலாம். இயந்திரத்திற்கு மூன்று லட்சம் ரூபாயும், செயல்பாட்டு மூலதனத்திற்கு மூன்று லட்சம் ரூபாயும் என மொத்தம் ஆறு லட்சம் ரூபாய் தேவைப்படும்.

ஃபைனான்ஸ்!

இத்தொழிலைத் தொடங்க நினைக்கிறவர் தனது முதலீடாக 5%, அதாவது 30,000 ரூபாய் வரை போட வேண்டும். மீதியை கடன் மூலம் பெற்றுக் கொள்ளலாம்.

மானியம்!

இந்த தொழிலானது பிரதம மந்திரியின் வேலை வாய்ப்புத் திட்டத்தின் கீழ் வருவதால் 2.10 லட்சம் ரூபாய் வரை மானியம் கிடைக்கும். இந்த மானியத் தொகையானது தொழில் தொடங்க வாங்கிய கடனுக்காக மூன்று வருடத்திற்கு பிறகு வரவு வைக்கப்படும்.

வேலையாட்கள்!

நல்ல திறமையான வேலையாட் கள் 20 பேரும், நடுத்தரமாக வேலை செய்யக்கூடிய பெண்கள் நான்கு பேரும், நிர்வாகம் மற்றும் விற்பனையை கவனித்துக் கொள்ள ஒரு நபரும், சூப்பர்வைசர் மற்றும் மெக்கானிக் ஒரு நபரும் தேவைப்படுவார்கள். எனவே மொத்தம் 26 நபர்கள் வரை தேவைப்படுவார்கள்.

தயாரிக்கும் முன்...

டையிங், பிளீச்சிங், பிரின்டிங் செய்யப்பட்ட காட்டன், சிந்தெடிக் துணிகளை வாங்கிச் சேகரித்துக் கொள்ள வேண்டும். துணிகளின் தரம் சரியாக இருக்கிறதா? கலர் மங்கியிருக்கிறதா? அல்லது வேறு வகையில் சேதம் ஏதும் ஏற்பட்டிருக் கிறதா என்பதைப் பார்த்து ஆய்வு செய்த பின்பே தைப்பதற்கு அனுமதிக்க வேண்டும். காரணம், நமது தயாரிப்பில் டேமேஜ் இருக்கும் பட்சத்தில் அது மீண்டும் நம்மிடமே வந்து சேரும். இந்த இழப்பு வராமல் இருக்க வேண்டுமெனில், தரத்தில் கவனமாக இருப்பது அவசியத்திலும் அவசியம்!

பிளஸ்!

ஏற்றுமதிக்கு அதிகம் வாய்ப்புள்ள தொழில். பெண்கள் தனியாகவோ அல்லது கூட்டாகவோ சேர்ந்து செய்வதற்கு ஏதுவானத் தொழில் என்பதால், ஒளிமயமான எதிர்காலம் இத்தொழிலால் உண்டு.

மைனஸ்!

திருப்பூர் சாயப்பட்டறை தொழில் சார்ந்த பிரச்னைகளும், தேவையான ஆட்கள் கிடைக் காமல் இருப்பதும், பருத்தி நூல் விலையில் ஏற்படும் ஏற்றத்தாழ்வு களும் இத்தொழிலில் இருக்கும் மிகப் பெரிய சவால்கள்.

ஆனால், இந்தப் பிரச்னைகளை மட்டும் சமாளித்து விட்டால் நிச்சயம் வெற்றி காணலாம்.

நன்றி -பானுமதி அருணாசலம்

வெங்கடேஷ், குளூம் ஓவர்சீஸ், கோவை.

நான் அடிப்படையில் ஒரு மெக்கானிக்கல் என்ஜினீயர். இத்தொழிலை ஆரம்பித்தபோது அதில் எனக்கு நிறைய அனுபவமில்லை. பிற்பாடு அனுபவத்தில்தான் தெரிந்து கொண்டேன். அதனால், இப்போது இருக்கக்கூடிய போட்டியிலும் சூழ்நிலையிலும் இத்தொழிலைப் பற்றி நன்கு தெரிந்து கொண்டு அதற்குபிறகு களத்தில் இறங்குவது நல்லது.

இத்தொழிலைத் தொடங்க குறைந்தபட்சம் 2,500 சதுரடி இடம் தேவைப்படும். தொடக்க முதலீடாக ஐந்து லட்சம் ரூபாய் தேவை. புதிதாக தொழில் தொடங்குபவர்கள் ஐந்து தையல் இயந்திரங்கள் போட்டு பெரிய மற்றும் நடுத்தர கம்பெனிகளில் இருந்து ஜாப் ஆர்டர் வாங்கிச் செய்வதில் ஆரம்பித்து, பின்பு மெள்ள விரிவுபடுத்திக் கொள்ளலாம். எடுத்த எடுப்பிலேயே ஏற்றுமதி ஆர்டர் என்று இறங்கத் தேவையில்லை. காரணம் ஏற்றுமதி செய்வதில் ரிஸ்க் அதிகம்.

லோக்கல் மார்க்கெட்டில் ஆண்கள் ஆடைகளில் மட்டுமே பிராண்டுகளின் ஆதிக்கம் இருக்கிறது. தவிர, பெண்கள் அணியும் ஆடைகளிலும், ஆண்களின் இரவு நேர மற்றும் குழந்தைகள் ஆடைகளிலும் இதுவரை பிராண்டுகளின் ஆதிக்கம் பெரிதாக இல்லை. முடிந்தால் நீங்களேகூட ஒரு பிராண்டை புரமோட் செய்யலாம். இதுபோன்ற அறியப்படாத வாய்ப்புகள் இதில் மிக அதிகம்.

இந்த தொழிலில் நமக்கு இப்போது மிகப் பெரிய போட்டியாக இருப்பது சீனாதான். ஆனால், சில விஷயங்களில் நாம் கொடுக்கும் தரத்தை அவர்களால் தர முடிவதில்லை. எனவே, அந்த போட்டியை நினைத்து நாம் பயப்படாமல் தரத்தை இன்னும் உயர்த்தி, விலையைக் குறைத்து கொடுத்தால் நமக்கு எப்போதும் நல்ல எதிர்காலம்தான்!.

திங்கள்

பேப்பர் கப் தயாரிக்கலாம் வாங்க!!

அதிகரித்து வரும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வால் யாருக்கு அதிக பலன் என்று கேட்டால் கண்ணை மூடிக்கொண்டு சொல்லிவிடலாம், பேப்பர் கப் தயாரிப்பவர் களுக்கு என்று! டீ கடையில் ஆரம்பித்து, கல்யாண வீடு வரை தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துவிட்டது பேப்பர் கப்கள்.
சுகாதாரத்திற்கு சுகாதாரம், சுற்றுச் சூழலுக்கும் நல்லது என்ற இரட்டைக் காரணத்தால் இதற்கான மவுசும் தேவையும் கூடிக்கொண்டே இருக்கிறது. திருமண வீடுகளில் மட்டுமல்ல, டீக்கடை களிலும் இதுதான் நிலைமை.
சந்தை வாய்ப்பு!
டீக்கடைகளில் கண்ணாடி கிளாஸ்களை பராமரிப்பதில் உள்ள சிரமத்தின் காரணமாக பேப்பர் கப்கள் மிகச் சிறந்த மாற்றாகி உள்ளது. பெரும் பாலான அலுவலகங்களும் பேப்பர் கப்களுக்கு மாறிவிட்டதால், இதற்கான சந்தை வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. எனவே புதிதாகத் தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கு சரியான தேர்வாக இருக்கிறது இந்த பேப்பர் கப் தயாரிப்பு. உள்ளூர் மட்டுமல்லாமல் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் அளவுக்கு இந்த பிஸினஸில் வாய்ப்புகளும் அதிகம்.
தயாரிப்பு முறை!
மூலப் பொருளான பேப்பர் ரோல்களை வாங்கி மெஷின் மூலம் எளிதாக தயாரித்து விடலாம். மெஷினை இயக்கத் தெரிந்தால் போதுமானது. தயாரான கப்களை பேக்கிங் செய்துவிட்டால் மார்க்கெட்டுக்கு ரெடி!
முதலீடு!
இத்தொழிலைத் தொடங்கும் முதலீட்டாளர் கள் கையிலிருந்து ஐந்து சதவிகிதத் தொகையை முதலீடு செய்தால் போதுமானது. மீதி 95 சதவிகித தொகையை வங்கிக் கடன் மூலம் பெற்றுக் கொள்ளலாம். குறைந்தபட்சம் ஆறரை லட்சம் ரூபாய் முதலீடாகக் கொண்டு இத்தொழிலைத் தொடங்கலாம்.
மூலப்பொருள்!
இதன் முக்கிய மூலப்பொருளான பேப்பர் தமிழ்நாட்டிலேயே கிடைக்கிறது. இந்த பேப்பர் ரோலின் தரத்தைப் பொறுத்துத்தான் பேப்பர் கப்பின் தரமும் இருக்கும். ஜி.எஸ்.எம். அளவு களைப் பொறுத்தே இதன் தரம் இருக்கும்.
கட்டடம்!
இந்த பிஸினஸுக்கு அதிகளவில் இடம் தேவைப்படாது. குறைந்தபட்சம் 350 சதுரடி இடம் போதுமானது. கப்களைத் தயார் செய்யும் இடமும் சொந்தமாகவே இருக்க வேண்டும் என்பதில்லை. வாடகைக்கு இடம் கிடைத்தால்கூட போதுமானது. வழியில்லை எனில் வீட்டிலேயேகூட இயந்திரத்தை நிறுவி தயாரித்துக் கொள்ளலாம்.
இயந்திரம்!
பேப்பர் ரோல்களை இயந்திரத்தில் கொடுத்தால் விரும்பிய அளவிலான கப்கள் கிடைக்கும். இந்த இயந்திரங்கள் தமிழ்நாட்டி லேயே கிடைக்கிறது என்பது கூடுதல் சிறப்பு.
மானியம்!
பேப்பர் கப் தயாரிப்பு பிரதமரின் சுயவேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் வருவதால் மானியம் கிடைக்கிறது. முதலீட்டு தொகையில் நகரம் எனில் 25%மும், கிராமம் எனில் 35 சதவிகிதமும் மானியம் கிடைக்கும். உதாரணமாக பத்துலட்ச ரூபாய் முதலீடு என்றால் இரண்டரை லட்ச ரூபாய் மானியமாக கிடைக்கும். இந்த மானியத் தொகையை நமது வங்கிக் கணக்கில் வரவு வைத்து விடுவார்கள். நான்கு வருடங்களுக்கு பிறகு இத்தொகையை நமது கடனில் வங்கி கழித்துக் கொள்ளும். மேலும் நாம் வங்கியில் வாங்கியிருக்கும் கடனில் மானியத் தொகை போக மீதமுள்ள தொகைக்கு வட்டி கட்டினால் போதுமானது. .
உற்பத்தித் திறன்!
ஆண்டுக்கு 300 நாட்கள், நாள் ஒன்றுக்கு ஒரு ஷிஃப்ட் வீதம் வேலை பார்த்தால், 75 லட்சம் கப்களைத் தயாரிக்கலாம். இதற்கான மூலப்பொருளான ஒரு டன் பேப்பருக்கு 74,000 ரூபாய் செலவாகும்.
வேலையாட்கள்!
திறமையான வேலையாட்கள் - 2, சாதாரண வேலையாட்கள் - 8, மேலாளர் - 1 , விற்பனையாளர் - 1 என மொத்தம் 12 ஆட்கள் தேவைப்படும்.
மின்சாரம்!
ஒரு நாளைக்கு 69 யூனிட் மின்சாரம் தேவைப்படும்.. ஆண்டுக்கு 300 நாட்கள் வேலை செய்தால், 90% உற்பத்தித் திறனுக்கு 18,662 யூனிட் வரை செலவாகும். ஒரு நாளைக்கு எட்டு மணி நேரம் இயந்திர பயன்பாடு இருக்கும்.
பிளஸ்!
* ஆண்டு முழுவதும் தேவை இருக்கும்.
* உடனடியாக விற்காவிட்டால் கெட்டுப்போய்விடும் என்ற பிரச்னை இல்லை. .
ரிஸ்க்!
* பலரும் இத்தொழிலில் இறங்க வாய்ப்புண்டு என்பதால் எதிர்காலத்தில் போட்டி அதிகமாகி, நாம் விற்கும் பொருட்களுக்கான விலை குறையலாம்.
* பேப்பர் விலை அதிகரிக்கும் பட்சத்தில் மூலப்பொருள் செலவு அதிகரித்து, விலை உயர்த்த வேண்டி வரும்.
* பேப்பர் கப்கள் மிக லேசானவை என்பதால் மிகுந்த ஜாக்கிரதையோடு கையாள வேண்டும்.
அதிகப்படியான நிலம் தேவையில்லை; வேலையாட்கள் தேவையில்லை; மிகப் பெரிய தயாரிப்பு முறையும் கிடையாது என்பதால் இளைஞர்கள், பெண்களுக்கு மிகவும் சாதகமான தொழில். குறிப்பாக சுயஉதவி குழுக்கள் மூலம் பொருட்களைத் தயாரிக்கும் பெண்கள் இத்தொழிலில் சுலபமாக இறங்கலாம்.
''படிப்பே தேவையில்லாத பிஸினஸ்!''
பிரசன்னா ஏ.வி.பி. பேப்பர்ஸ், திருச்சி
''இன்றைய தேதியில் பேப்பர் கப் தயாரிப்பு, போட்டியே இல்லாத தொழில் எனலாம். உள்ளூர் தேவையில் 5%கூட இன்னும் பூர்த்தியாகவில்லை. பெரிய டெக்னிக்கல் அறிவு தேவையில்லாத தொழில். படிப்பறிவு இல்லாத பெண்கள்கூட இதில் நுழைந்து லட்சக்கணக்கில் சம்பாதிக்கலாம். புதிதாக இந்தத் தொழிலில் இறங்குபவர்கள்கூட நல்ல லாபம் பார்க்க முடியும்.
சந்தை வாய்ப்பு என்று பார்த்தால் சாதாரண டீக்கடை முதல் பெரிய கார்ப்பரேட் நிறுவனம் வரை பேப்பர் கப்கள் பயன்படுத்தப்படுகின்றன. சாதாரணமாக ஒரு டீக்கடைக்கு ஒரு நாளைக்கு 1,000 முதல் 2,000 கப்கள் தேவைப்படும். வெறும் 10 லட்சம் ரூபாய் முதலீட்டில் மாதம் 60,000 வரை லாபம் பார்க்கலாம். மெஷின் ஆபரேட்டருக்கு 15 நாட்கள் பயிற்சி போதுமானது. ஒரு நாளைக்கு ஒரு மெஷினில் அறுபதாயிரம் கப்கள் வரை தயாரிக்கலாம். ஒரு கப்புக்கு 5 பைசா லாபம் என வைத்துக் கொண்டாலும் தினசரி லாபமாக 3,000 ரூபாய் வரை கிடைக்கும். ஒரே மெஷினில் எல்லா அளவு கப்களும் செய்யலாம்.
உள்ளூர் என எடுத்துக் கொண்டால் 185 ஜி.எஸ்.எம். தரமுள்ள கப்புகளே போதும். ஏற்றுமதி செய்யும்போது ஒவ்வொரு நாட்டுக்கும் இந்த தரம் மாறுபடும். உதாரணத்துக்கு, அமெரிக்காவுக்கு 330 ஜி.எஸ்.எம். கப்கள்தான் ஏற்றுமதி செய்ய முடியும்.''
- க.ராஜீவ்காந்தி
Thanks - பானுமதி அருணாசலம்.

வெள்ளி

மாணவர்களும் மன அழுத்தமும்.... ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட்...!


கல்வி கற்கும் வயதில் தமது பிள்ளைகள் அதிக மதிப்பெண்கள் எடுக்கவேண்டும் என்ற எண்ணத்தில் அவர்களை ஒரு பந்தயக்குதிரை போல பெற்றோர்கள் தயார் செய்யும் வேகத்திலும் அவர்களை மற்ற மாணவர்களோடு ஒப்பீடு செய்வதிலும் மறைமுகமாக அவர்களின் இரத்த அழுத்தத்தை அதிகரிக்க செய்கின்றனர்.

உளவியல் ரீதியாக பயணிக்கும் இக்கட்டுரைக்குள் செல்வோம் வாருங்கள்...



இது தேர்வுக் காலமும், அதன் முடிவுகளும் வரும் நேரம். பலருக்கு இது மகிழ்ச்சியானது தான். அவர்களுக்கு வாழ்த்துக்கள். இருப்பினும் ஒவ்வொரு வருடமும் அங்கொன்றும் இங்கொன்றுமாக மதிப்பெண்கள் குறைந்ததால் மாணவன்/மாணவி தற்கொலை என்று இப்படிப்பட்ட செய்திகளும் நம் காதுகளை வந்தடைவதோடு, நம் இதயத்தையும் கணக்கச் செய்கிறது.



இப்படித் தான் சமீபத்தில், மிகப் பெரிய தேசியக் கல்லூரியில், நெஞ்சை உலுக்கும் ஒரு நிகழ்ச்சி நடந்தது.அதாகப் பட்டது, ஒரு கிராமத்திலிருந்து தமிழ் வழிக் கல்வி மூலம் பயின்று,AIEEE தேர்வு எழுதி, இக்கல்லூரிக்கு வந்த ஒரு மாணவன் பற்றியது. இவ்விடத்தில் ஒரு விசயத்தை தெளிவு படுத்த விரும்புகிறேன். எத்தனையோ பேர் CBSE சிலபஸில் படித்தும், 2 laksh/year  கோச்சிங்கில் சேர்ந்தும் அந்த கல்லூரியின் ஷீட் கிடைக்காதவர்கள் ஏராளம் என்பதை நினைவில் கொள்க. Its purely on merit only.


சரி, இப்படியாக கஷ்டப்பட்டு அப்பெரிய கல்லூரிக்குள் நுழைந்து, படிப்பைத் தொடர்ந்தாலும், ஏனைய பிரச்சனைகள் விஸ்வரூபமெடுத்தன.தேர்வு முடிவுகள் வெளியான ஒரு நாள் மதியம், லெட்டர் எழுதி வைத்துவிட்டு, அவன் ஹாஸ்டல் ரூமின் மின்விசிறியில் தூக்கு மாட்டிக்கொண்டு, தன் வாழ்க்கையை     முடித்துக் கொண்டான் அம்மாணவன். இது கதை அல்ல நிஜம். இதன் பிண்ணனியை ஆராயும் பொழுது, அவனுடன் படித்த சில மாண்வர்கள் கொடுத்த தகவலின் பேரில், அவனுக்கு  அரியர்ஸ் என்றும், அத்தோடு, லேபில்(@ lab)  சக மாணவ மாணவிகளுக்கும் முன்பாக பேராசிரியர் திட்டி விட்டார் என்றும் காரணங்கள் வருகின்றன.

இப்பொழுது இதைப் பற்றி விவாதிக்கலாம் என்று தொடர்ந்தால், அம்மாணவன் செய்ததும் தவறு, அப்பேராசிரியர் திட்டியதும் தவறு என்றும் நாள் முழுதும் பேசலாம். ஆனால், அது எம் நோக்கமல்ல அதற்காக ஒரு உளவியல் நிபுணரிடம் கேட்டு சில ஆலோசனைகளை இங்கே வழங்குகின்றோம் மாணவர்களின் நலம் கருதி...தற்கொலை பள்ளி/கல்லூரி மாணவர்களின் இறப்பிற்கு இரண்டாவது முக்கிய காரணமாகும். பள்ளி/கல்லூரி மாணவர்களின் தற்கொலைகளுக்கு (மேலும் பெரும்பாலான தற்கொலைகளுக்கு) காரணம் சரி செய்யப்படாத மன அழுத்தமே ஆகும்.

பள்ளியிலிருந்து கல்லூரிகளுக்கு மாறுவது என்பது ஒரு மாற்றமடையும் நிகழ்வாகும். இங்கே மாணவர்களுக்கு தனிமை, குழப்பம், அமையின்மை, இழந்தது போன்ற உணர்வு, தன் திறமை மீது நம்பிக்கையின்மை, மன அழுத்தம் போன்ற பல வித உணர்வுகள் ஏற்படக் கூடும். மேலும் இந்த பிரச்சனைகள் மன அழுத்தத்திற்கு வழி வகுக்கலாம். இந்த மன அழுத்தம் சரி செய்யப்படாமல் போனால் அது தற்கொலைக்கு காரணமாகலாம்.

பொதுவாக தற்கொலைகளை இரண்டு விதமாக பிரிக்கலாம். ஒன்று தற்கொலை எண்ணம் நீண்ட நாட்களாக இருப்பது, ஒரு நாள் அது முற்றிப் போய் தற்கொலை செய்து கொள்வது. மற்றொன்று தற்கொலை எண்ணம் திடீரென தோன்றி அதை செயல்படுத்தி விடுவது.
தற்கொலை எண்ணம் கொண்ட மாணவர்கள், மிக அமைதியாகவும், தனிமையாக யாரோடும் அதிகமாக பழகாமலும், மன அழுத்தத்தோடும் காணப்படுவார்கள். தற்கொலை எண்ணம் உடையவர்களுக்கான சில அறிகுறிகள் உள்ளன.


 ஒரு சர்வே சொல்கிறது. ஐந்தில் ஒரு மாணவர் தங்கள் உண்மையான மனஅழுத்த நிலையை விட அதை பெரிய விசயமாக நினைத்துக் கொள்கிறார்கள். மேலும் வெறும் 6% பேரே அதற்கான தீர்வை காண முற்படுகிறார்கள். அப்படியானால் தீர்வை காணாவிட்டால் அந்த மன அழுத்தம் தற்கொலைக்கு வழி வகுக்கலாம்.
தற்கொலை எண்ணம் சில அறிகுறிகள்:
  • பெரும்பாலான நேரங்களில் சோகமாக இருப்பது.
  • தற்கொலை அல்லது இறப்பை பற்றி பேசுவது அல்லது எழுதுவது.
  • குடும்பம், நண்பர்களிடமிருந்து விலகிச் செல்லுதல்/பழகுவதை குறைத்துக் கொள்தல்.
  • நம்பிக்கையில்லாமல் இருத்தல்.
  • கைவிடப்பட்டவர் போன்ற உணர்வு.
  • அளவுக்கு மீறிய கோபம் அல்லது ஆவேசம்.
  • எதிலோ/எங்கேயோ மாட்டிக் கொண்ட உணர்வு.
  • அடிக்கடி மனநிலை மாறிக் கொண்டே இருக்கும்.
  • போதை மருந்து/ ஆல்கஹால் போன்றவை உபயோகித்தல் (இதுநாள் வரை இல்லாத வகையில்).
  • நடத்தை/பண்புகளில் மாற்றம் தெரிதல்.
  • திடீரென உணர்ச்சிவசப்படுதல்.
  • பெரும்பாலான செயல்களில் ஆர்வம் இல்லாமல் இருத்தல்.
  • தூங்கும் பழக்கவழக்கங்களில் மாற்றம் ஏற்படுதல்.
  • உணவுப் பழக்கவழக்கங்களில் மாற்றம் ஏற்படுதல்
  • ஒழுங்காக படிக்காமல் இருத்தல்.
  • ரொம்பவும் நேசிக்கும் விசயங்களை விட்டுக் கொடுத்தல்.
  • குற்ற உணர்வு/வெட்கப்படும் உணர்வோடு இருத்தல்.
  • அசட்டையாக இருத்தல்.


தற்கொலை எண்ணம் கொண்ட சிலருக்கு இந்த அறிகுறிகள் இல்லாமலும் இருக்கலாம்.ஆனால் தற்கொலை எண்ணம் கொண்டவர்களில் 75% பேர் சில அறிகுறிகளை நிச்சயம் கொண்டிருப்பார்கள். எனவே அவற்றை கண்டறிவது நல்லதாகும்.

இங்கே மேலே குறிப்பிட்ட சம்பவத்தில் தவறு யார் பக்கம் இருக்கிறது என்பது ஒரு பக்கம் இருக்கட்டும். எந்த ஒரு மனிதரும் கவலையில் இருக்கும்போது தனக்கு ஆறுதல் சொல்ல ஒரு மனிதரை எதிர்பார்ப்பார். அப்படி ஒருவர் இல்லாதபோதுதான் அந்த கவலை மன அழுத்தமாக மாறி பிரச்சனையாகிறது.

எனவே மாணவர்களுடன் மிகவும் நெருக்கமாக அவர்கள் பிரச்சனைகளை அறியும் வகையில் நடந்துகொள்ள வேண்டியது ஆசிரியர்களின் கடமையாகிறது. இங்கே சக நண்பர்கள் ஆறுதல் கூறுவதும் முக்கியமாகிறது.

திடீரென தற்கொலை முடிவு எடுக்கும்போது அருகிலுள்ளவர்கள் அவருக்கு ஆறுதல் கூறி உடன் இருந்தால் அதனை தடுக்கலாம். ஏனெனில் இப்படிப்பட்ட முடிவுகள் ஒரு முறை தடுத்த பின் மீண்டும் எழாது.

சுய தொழில் தொடங்குவோம் வாருங்கள்....!ஒரு வழிகாட்டும் தொடர்..IV

சென்ற பாகத்தைப் படித்துக் கொண்டு வந்தவர்களுக்கு, அது முடியும் தருவாயில், கோடிக்கணகில் பணம் வைத்திருப்பவர்கள் தான் இந்த டிரேடிங்வகையில் தொழில்முனைவோராக முடியுமா? என்ற ஐயம் வந்திருக்கும். அந்த ஐயம் படிப்பவர்களுக்கு (குறிப்பாக தொழில்முனைவோராகும்விருப்பத்துடன் படித்துக் கொண்டிருப்பவர்களுக்கு) ஒருவித மனச்சோர்வை ஏற்படுத்திவிடும் என்பதால் தான் வெறும் 25,000/- ரூபாய் முதலீடாகவைத்திருப்பவர்கள் கூட இந்த விநியோகச் சங்கிலியின் கடைசி வளையமாக தன்னை இணைத்துக் கொள்ளலாம் என்று ஒரு வரியில்எழுதியிருந்தேன். 

அது எந்தளவுக்கு சாத்தியம் என்று கூட சிலருக்கு சந்தேகம் வந்திருக்கலாம். ஆனால் இக்கட்டுரையை தொடர்ந்து வாசிக்கும் பொழுது, இந்தசந்தேகத்திற்கான விடை கிடைத்துவிடும். சரி இந்த விநியோகச் சங்கிலியின் முதல் வாய்ப்பில் இணைந்து கொள்ள் 30 கோடி ரூபாய் தேவைஎன்று பார்த்தோம். இதன் அடுத்தடுத்த நிலைகளையும் அதற்கு தேவைப்படும் முதலீடுகளையும் தொடர்ந்து பார்ப்போம்.

இந்த கிளியரிங் & ஃபார்வேர்டிங் நிலைக்கு அடுத்த படியாக இருக்கும் நிலை இதான் சூப்பர் ஸ்டாக்கிஸ்ட் எனப்படும், கிட்டத்தட்ட நேரடியாக,விற்பனைக் களத்தில் இறங்கும் தொழில் வாய்ப்பு. இப்பொழுது மார்கெட்டிங் துறையில் இருக்கும் நிறுவனங்கள் அனைத்துமே, இந்தியசந்தையைப் பொருத்தவரை ஒவ்வொரு மாநிலத்திற்கும் (யூனியன் பிரதேசங்கள் தவிர்த்து) குறைந்தபட்சம் ஒரு சூப்பர் ஸ்டாக்கிஸ்டையாவதுநியமித்து விடுகிறார்கள். முன்பெல்லாம் இது மூன்று அல்லது நான்கு மாநிலங்களுக்கு ஒன்று என்ற நிலையில் தான் இருந்தது. ஆனால்இப்பொழுது சந்தை விரிவடைந்திருப்பதால், ஒவ்வொரு மாநிலத்திற்கும் தனித்தனியாகவோ, அல்லது சில கம்பெனிகள் ஒரே மாத்நிலத்திற்குமூன்று எஸ்.எஸ் கள் வரையிலோ நியமித்து பொருள் விநியோக நடைமுறையை மிகவும் விரைவாகச் செய்கிறார்கள்.  


ஆக இந்த பிஸ்கட் கம்பெனிக்கு இந்தியாவைப் பொருத்தவரை குறைந்தது முப்பது முதல் தொண்ணூறு வரையிலும் சூப்பர் ஸ்டாக்கிஸ்டுகள்நியமிக்கப் படுகிறார்கள். நாம் தமிழகத்தில் இருக்கிறோம். இங்கு இந்த கம்பெனிக்கு இரண்டு எஸ்.எஸ். தேவைப்படுவாதாக் வைத்துக்கொள்வோம், அப்படியென்றால் ஒன்று சென்னையிலும் மற்றொன்றை மதுரை, திருச்சி அல்லது கோவையில் தான் அந்த கம்பெனி நியமிக்கும்.  

இந்த வரிசையில், தமிழகத்திற்கு கிடைக்கும் முதல் தொழில் வாய்ப்பு இந்த இரண்டு சூப்பர் ஸ்டாக்கிஸ்டுகளும் தான். இதன் பிறகு தான்எண்ணிலடங்கா வாய்ப்புகள் வரவிருக்கின்றன. அதாவது இவர்களுக்கு கீழே, தமிழகம் முழுவதும் இந்த பொருளை விநியோகம் செய்யஒவ்வொரு நகரங்கள் வாயிலாக தனித்தனியாகவும், மாநகராட்சிகளைப் பொருத்தவரை நான்கிலிருந்து இருபது வரையிலும்டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் எனப்படும் விநியோகஸ்தர்கள் நியமிக்கப்படுகின்றனர். அப்படிப் பார்த்தால் தமிழகம் முழுமைக்கும் இந்த கம்பெனிக்குகிட்டத்தட்ட 300 விநியோகஸ்தர்கள் நியமிக்கப்படுவார்கள்.  


இந்த 300 பேரையும் தூரத்திற்கு தகுந்தாற்போல் இரண்டாகப் பிரித்து, இரண்டு சூப்பர் ஸ்டாக்கிஸ்டுகளும் இவர்களுக்குப் பொருட்களை சப்ளைசெய்யும் பொருப்பை ஏற்றுக் கொள்கிறார்கள். இந்த டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் செய்ய வேண்டிய வேலை என்ன? அதையும் கொஞ்சம் தெளிவாகப்பார்த்துவிடுவோம். 

இந்த டிஸ்ட்ரிபியூட்டர்கள் தான் ஒரு சந்தைப்படுத்தும் நிறுவனத்தின் முதுகெலும்பே. அந்த நிறுவனத்தின் சி & எஃப் மற்றும் சூப்பர்ஸ்டாக்கிஸ்டுகள் எல்லோருடைய பணியும் பொருட்களை அடுத்தடுத்த நிலையிலுள்ளவர்களிடம் கொண்டு சேர்ப்பதோடு நின்று விடுகின்றது.ஆர்டர் எடுப்பது, பேமெண்ட் பற்றிய கவலை இதுவெல்லாம் இவர்களுக்குக் கிடையாது. ஆனால் ஒரு டிஸ்ட்ரிபியூட்டரோட வேலைஅப்படிப்பட்டதல்ல. கிட்டத்தட்ட End Users எனப்படும் உபயோகிப்பாளருக்கு முந்திய நிலையிலுள்ள கடைக்காரர்களிடம் பொருளைக் கொண்டுசேர்ப்பது என்ற மிக முக்கியமான பணி அவர்களுடையது. 


உதாரணத்திற்கு, விழுப்புரம் என்ற தமிழ்நாட்டின் ஒரு டிபிகல் நகரத்தை எடுத்துக் கொள்வோம். இந்த விழுப்புரத்திற்கு ஒரு டிஸ்ட்ரிபியூட்டர்நியமிக்கப்படுகிறார் என்றால், அவர் விழுப்புரம் நகரம் மற்றும் அதைச் சுற்றி பதினைந்திலிருந்து இருபது கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ளகிராமங்களிலும் உள்ள பிஸ்கட் வைத்து விற்பனை செய்யக்கூடிய அனைத்து கடைகளுக்கும் இந்த பொருளை விற்பனை செய்து வசூல்செய்துகொள்ள வேண்டியது இவருடைய பொருப்பு. இவருக்கான இந்த ஏரியாவில் பெரிய டிபார்ட்மெண்ட் ஸ்டோர் முதல், சிறிய பெட்டிக்கடைவரையிலான, ஏ, பி, சி, டி எனற நான்கு வகையான கடைகளையும் மொத்தமாகச் சேர்த்து 300 கடைகள் வரை இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். இந்த 300 கடைகளுக்கும் இவர் தான் சப்ளை செய்ய வேண்டும்.


இதில் என்ன சிரமம் இருக்கிறது? எப்படி அந்த விநியோகஸ்தர் இந்த மார்க்கெட்டிங் கம்பெனியின் முதுகெலும்பாகப் பார்க்கப் படுகிறார்? என்பதுதானே உங்கள் சந்தேகம். ஒரு மார்க்கெட்டிங் கம்பெனியின் சி & எஃப் சப்ளை செய்யும் எஸ்.எஸ் ஆகட்டும், அல்லது அந்த எஸ்.எஸ் கள் சப்ளைசெய்யும் நம் டிஸ்ட்ரிபியூட்டர்களாகட்டும், அனைவருமே, இந்த மார்க்கெட்டிங் கம்பெனியால் நியமிக்கப் பட்டிருப்பவர்கள். இந்தப் பொருளின்(பிஸ்கட்) விற்பனையை மட்டுமே நம்பி பிழைப்பு நடத்த, முதலீடு செய்து உழைத்துக் கொண்டிருப்பவர்கள். இவர்களுக்குள்ளே ஆர்டர் எடுப்பது,சப்ளை செய்வது, பணம் வாங்குவது எல்லாம் ஒரு கட்டுப்பாட்டுடன் வரைமுறையோடு செயல்படும். அதில் ஓரிருவர் சரியில்லை என்றால்,அந்த மார்க்கெட்டிங் கம்பெனி அவர்களை நெறிப்படுத்திவிடும் அல்லது அவர்களை தூக்கியெரிந்துவிட்டு வேறொருவரை அந்த இடத்தில்நியமித்துவிடும். 


ஆனால் நம்முடைய விநியோகஸ்தர்கள் சப்ளை செய்யும் கடைக்காரர்கள் அதாவது அவர்களுடைய கஸ்டமர்கள் அப்படியல்ல. அவர்கள் இந்தநிறுவனம் தயார் செய்யும் பிஸ்கட்டை தன் கடையில் வைக்க வேண்டாம் என்று நினைத்தால், இதை வாங்க மாட்டார்கள். மற்ற பிராண்டுகளில்உள்ளதை வைத்துக் கொண்டு தங்கள் வாடிக்கையாளர்களை திருப்திப்படுத்தி விடுவார்கள். இதில் கடைக்காரர்களை கட்டுப்படுத்தவும்வழியிருக்கிறது, அதை சந்தைப்படுத்துதல் (Marketting) பற்றி எழுதும் போது விரிவாக அலசலாம். ஆனாலும் வாடிக்கையாளர்கள் தவிர்த்து,சப்ளையர்கள் அனைவருமே கடைக்காரர்களிடம் அனுசரித்துப் போக வேண்டியது தவிர்க்க முடியாத ஒன்று தான். 


எனவே நமது விநியோகஸ்தர், தங்களது பிராண்ட் பிஸ்கட்டுகளை இந்த 300 கடைகளிலும் வைப்பதற்குள் (Placement) தாவு தீர்ந்துவிடும்.முதலில் இரண்டு மூன்று முறை அலையவிட்டு, அதன் பிறகும் விடாது கருப்பாக தொடர்ந்து வந்தால், சரி.. வைத்து விட்டுப் போங்கள்,விற்றால் காசு இல்லையென்றால் சரக்கை திரும்ப எடுத்துக்கனும் ஓக்கேவா? என்று ஒற்றை வரியில் கேள்வி வரும். இதற்காகவே தவம்கிடந்தது போன்று நம் 'விநி' யும் சரிங்ணா..! என்று பவ்யம் காட்டி சரக்கை அந்தக் கடையில் அடுக்கிவிடுவார். இப்படியே தொடர்ந்து சென்று ஒரு150 கடைகளில் பிளேஸ்மெண்ட் வாங்கிவிட்டாலே, ஓரளவிற்கு இந்த துறையில் அவர் தன்னை நிலை நிறுத்திக் கொண்டுவிட்டார் என்று தான்அர்த்தம். 


நாம் ஏற்கனவே கூறியிருந்த படி இந்த மார்க்கெட்டிங் கம்பெனி நம் பிஸ்கட்டை ஓரளவிற்கு விளம்பரங்களின் மூலம் பிரபலமாக்கி,உபயோகிப்பாளர்களில் சிலரை ஒரு முறையேனும் வாங்கி உபயோகிக்கும் மனநிலைக்கு கொண்டு வந்திருந்தும், கடைகளில் பிளேஸ்மெண்ட்வாங்க, மார்க்கெட்டிங் கம்பெனியின் விற்பனை பிரதிநிதிகளும், நம் விநியோகஸ்தரும், தலையால் தண்ணீர் குடிக்க வேண்டும்.  


இந்த விற்பனை செய்வதின் சிரமங்களைக் கூட, அந்த மார்க்கெட்டிங் கம்பெனியும் அதன் விற்பனை பிரதிநிதிகளும் பொறுப்பெடுத்துக் கொண்டுசெய்து கொடுப்பார்கள். அது அவர்களுடைய கடமையும் கூட. ஆனால் பொருட்களை கடைகளுக்கு கொடுத்து, அதற்கான பணத்தை வசூல்செய்து, 300 கடைகளுக்கும் தேவையான சரக்குகளை எப்பொழுதும் கைவசம் வைத்திருந்து... இந்த சுழற்சி விட்டுப் போகாமல் சுழலச் செய்வதுதான் நம்முடைய விநியோகஸ்தர் என்ற தொழில் முனைவோருக்கான பொருப்பு. 


ஒரு பெட்டிக் கடையில் 50 ரூபாய்க்கு பொருளை சப்ளை செய்துவிட்டு, அதை பத்து பத்து ரூபாயாக வசூல் செய்வதற்குள்.... அடுத்த 50 ரூபாய்க்கு அந்த கடைக்காரர் ஆர்டர் கொடுத்து விடுவார். சரி இவ்வளவு மோசமாக பேமெண்ட் செய்யும் இந்த கடையை விட்டு விடலாம் என்றால், அந்தப் பகுதியில் உள்ள மக்களுக்கு இந்த பிஸ்கட் கிடைக்காமல் போய்விடும். மேலும் இதேப்போன்று பிரச்சினைகள் உள்ள கடைகளை எல்லாம் தவிர்த்துவிட்டால், சேல்ஸ் பாதித்துவிடும். இப்படி பல சங்கடங்களை சமாளித்து தொழில் செய்யும் நம் விநியோகஸ்தருக்கு முதுகெலும்பு பட்டம் சரி தானே? 


தற்பொழுது நாம் பார்த்துக் கொண்டிருக்கும், இந்திய சந்தையில் வருடத்திற்கு 100 கோடி ரூபாய் விற்றுமுதல் ஆகும் ஒரு பிஸ்கட் கம்பெனிக்கு, தமிழ் நாட்டில் சூப்பர் ஸ்டாக்கிஸ்ட் ஆக வேண்டும் என்றால் 50 லட்சமும், அல்லது ஏதாவது ஒரு தமிழக நகரத்திற்கான விநியோக உரிமை பெற்று தொழில்முனைவோராக வேண்டும் என்றால் ரூபாய் பதினைந்தாயிரம் ரூபாய் முதலீடு செய்தாலே போதும், அவர் தன்னுடைய வீட்டிலேயே ஒரு அறையை மட்டும் இதற்காக ஒதுக்கிக் கொண்டு தொழில்முனைவோராகிவிடலாம்! 

ஒரே குழப்பமாக இருக்கிறதே? இவ்வளவு குறைந்த முதலீடு தானா? அதுவும் நம்ப முடியவில்லையே?

சரி இவ்வளவு குறைவான முதலீடு என்றால் லாபம் எவ்வளவு கிடைக்கும்? அந்த லாபத்தில் குறைந்த பட்சம் ஒருவரின் மூன்று வேளை சாப்பாட்டிற்காவது மிஞ்சுமா? என்றெல்லாம் நிறைய கேள்விகளும், சந்தேகங்களும் இதைப் படித்துக் கொண்டிருப்பவர்களுக்கு ஏற்பட்டிருக்கும்.!... நியாயம்தான். ஆனால் இந்த குழப்பங்களும், சந்தேகங்களும் தவிடுபொடியாகி, உற்சாகத்துடன் இந்தத் தொழிலையே செய்யலாமே என்ற மனநிலைக்கு வந்துவிடுவீர்கள் அடுத்த பாகத்தை படித்து முடித்தவுடன்! 


 அது வரை கொஞ்சம் பொருத்திருங்கள். சில உள் விவகாரங்களைப் பற்றி அலசியதால், இந்த பாகம் சிலருக்கு விறுவிறுப்பாக கூட இல்லாமல் போயிருந்திருக்கலாம். ஆனால் ஒரு வெற்றிகரமான தொழில்முனைவோராவதற்கான சவாலில் இதெல்லாம் சாதாரணமப்பா...!
Thanks: Kaluku